Advertisment

News Highlights: தமிழக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகள்- அரசு உத்தரவு

Latest Tamil News Live இந்தியப் பயணத்தைத் தவிர்க்க அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

author-image
WebDesk
New Update
News Highlights: தமிழக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகள்- அரசு உத்தரவு

News In Tamil Live : 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!

Advertisment

பூனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து இன்று சென்னை கொண்டு வரப்பட உள்ளது. சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தில் இந்த மருந்துகள் வைக்கப்பட்டு, பின்னர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகளவில் 14.26 கோடி பேருக்கு கொரோனா தொற்று

உலகளவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.26 கோடியாக அதிகரித்துள்ளது. 12.11 கோடி பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 30.42 கோடி பேர் இதற்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பயணத்தைத் தவிர்க்க வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியப் பயணத்தைத் தவிர்க்க அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

தொடர் போராட்டம்!

டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 144-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.92.43-க்கும், டீசல் லிட்டர் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:35 (IST) 20 Apr 2021
    இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களிடையே பேசுகிறார் பிரதமர் மோடி

    நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.



  • 19:37 (IST) 20 Apr 2021
    50% படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கவும் - தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு

    50 சதவீத படுக்கைகளை கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ஒதுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மற்ற சிகிச்சைகளுக்கு உள்புற நோயாளிகளை அனுமதிப்பதை தள்ளி வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.



  • 19:02 (IST) 20 Apr 2021
    டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்கள் இனி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் - தேர்வாணையம்

    டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்கள் இனி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்றுக்கொள்ளலாம் எனவும், தேர்வர்களின் மெய்த்தன்மையை உறுதி செய்ய தேர்வு நேரங்களில் மாற்றம் இருக்கும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.



  • 18:18 (IST) 20 Apr 2021
    தமிழகத்தில் இன்று 10,986 பேருக்கு கொரோனா உறுதி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.



  • 18:10 (IST) 20 Apr 2021
    ஆம்னி பேருந்துகள் பகலில் வழக்கம்போல் இயங்கும்

    இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஆம்னி பேருந்துகள் இரவில் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பகலில் வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பேருந்துகள் இயங்கும்.



  • 17:36 (IST) 20 Apr 2021
    தமிழகத்தில் தடுப்பூசி தடையின்றி கிடைக்க ஏற்பாடு - விஜயபாஸ்கர்

    வீணாகும் தடுப்பூசியின் அளவை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் தங்கு தடையின்றி தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.



  • 17:33 (IST) 20 Apr 2021
    ராகுல்காந்திக்கு ஸ்டாலின் வாழ்த்து

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று திமுக தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 16:45 (IST) 20 Apr 2021
    ஓட்டுநர், நடத்துனருக்கு தடுப்பூசி கட்டாயம்; சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்

    சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சென்னை முழுவதும் இயக்கப்படும் 3000 பேருந்துகளில் 6300 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் பொதுமக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பதால், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.



  • 16:33 (IST) 20 Apr 2021
    யுஜிசி- நெட் தேர்வுகள் ஒத்திவைப்பு

    பேராசிரியர் தகுதித் தேர்வான யுஜிசி- நெட் தேர்வுகள், கொரோனா பாதிப்பு உச்சநிலையில் இருப்பதால் ஒத்திவைக்கப்படுவதாக, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. கொரோனா பரவலால், தொடர்ந்து மூன்றாவது முறை நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



  • 16:29 (IST) 20 Apr 2021
    கொரோனா விதிமுறைகளை மீறினால் 10000 அபராதம்!

    உத்திர பிரதேசத்தில் மாஸ்க் அணியாவிட்டால் 1000 அபராதம் விதிக்கப்படும் எனவும், தொடர்ச்சியாக கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது, 10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.



  • 15:23 (IST) 20 Apr 2021
    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி!

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.



  • 14:45 (IST) 20 Apr 2021
    மனைவிக்கு கொரோனா; தனிமைப்படுத்திக் கொண்ட டெல்லி முதல்வர்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.



  • 14:39 (IST) 20 Apr 2021
    தடுப்பூசியை வீண் செய்வதில் தமிழகம் முதலிடம்!

    மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கிய 54,28,950 தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளதாகவும், நாட்டிலேயே தடுப்பூசியை வீண் செய்வதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.



  • 13:40 (IST) 20 Apr 2021
    தலைமை தேர்தல் அதிகாரியிடம் கமல் புகார்

    வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் மனு. வாக்கு எண்ணும் மையங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கமல் குற்றச்சாட்டு.



  • 13:35 (IST) 20 Apr 2021
    நதிகள் மாசு -நிபுணர் குழு அமைக்க உத்தரவு

    தமிழகம் முழுவதும் தொழிற்சாலை கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமராவதி நதி மாசடைவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.



  • 12:49 (IST) 20 Apr 2021
    ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

    சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களுடன் தொடர்பில் இருப்பதால், 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.



  • 12:39 (IST) 20 Apr 2021
    விபத்து- புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் பலி

    டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.



  • 12:36 (IST) 20 Apr 2021
    தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு அமல்

    தெலங்கானாவில் இன்று முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.



  • 12:26 (IST) 20 Apr 2021
    7 பேர் உயிரிழந்த விவகாரம்-அறிக்கை அளிக்க உத்தரவு

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவமனையில் ஆய்வு நடத்திய மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.



  • 12:18 (IST) 20 Apr 2021
    நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்கு

    கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 11:44 (IST) 20 Apr 2021
    வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு - ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை

    வழிபாட்டு தலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அனைத்து மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை செய்து வருகிறார்.



  • 11:30 (IST) 20 Apr 2021
    திமுக எம்.எல்.ஏ. மோகன் விடுதலை

    அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மோகன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.



  • 10:44 (IST) 20 Apr 2021
    தமிழகத்தில் கடற்கரை, பூங்கா மூடல்

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடற்கரை, பூங்கா, சரணாலயம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுகிறது.



  • 10:43 (IST) 20 Apr 2021
    பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

    பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு, தடுப்பூசி பணிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.



  • 10:23 (IST) 20 Apr 2021
    தங்கம் விலை குறைப்பு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.35,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,450-க்கு விற்பனை ஆகிறது.



  • 10:19 (IST) 20 Apr 2021
    2-ஆவது கொரோனா அலையில் ஆக்சிஜன் தேவை உயர்வு

    கொரோனா முதல் அலையின் போது இருந்ததை விட 2-ஆவது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதல் அலையின் போது 41.1% நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனால், அது 2ஆவது அலையின் போது இது 54.5% ஆக உயர்ந்துள்ளது.



  • 10:17 (IST) 20 Apr 2021
    மே-2 காலை 8.30-க்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

    தமிழகத்தில் மே 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.



  • 09:49 (IST) 20 Apr 2021
    தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

    மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6 மாணிக்கு ஆலோசனை செய்யவிருக்கிறார்.



  • 09:46 (IST) 20 Apr 2021
    சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை

    சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தனியார் மருத்துவமனையின் 3-வது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்த 51 வயது ஆண், கடந்த 16-ம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அச்சத்தால் தற்கொலையா என விசாரணை நடைபெற்றுவருகிறது.



  • 09:02 (IST) 20 Apr 2021
    மளிகை கடைகள் 4 மணி நேரம் மட்டும் செயல்படும்

    மகாராஷ்ட்ராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் மளிகை,காய்கறி, ரேசன் கடைகள் 4 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது.



  • 08:44 (IST) 20 Apr 2021
    அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

    முன்னதாக, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி, தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 3 நாட்கள் வீட்டில் முழு ஓய்வு எடுக்க வேண்டுமென முதல்வருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்துள்ளனர்.



Coronavirus Covaxin And Covishield
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment