Advertisment

Tamil News Today : திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே விசிக நிலைப்பாடு - வன்னி அரசு

Latest Tamil News : ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் இருபாலர் கூட்டுக் கல்வி முறைக்குத் தடை.

author-image
WebDesk
New Update
thirumavalavan, dr ramadoss, vanniyar reservation, mbc reservation, திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வன்னியர் இடஒதுக்கீடு, வன்னியர் உள் ஒதுக்கீடு

Tamil News : கொரோனா 2-வது அலை பரவல் அதிகமானதைத் தொடர்ந்து மே மாதம் தொடக்கத்திலிருந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அவ்வப்போது தளர்வுகள் அளிக்கப்பட்டபோதெல்லாம் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 மாதங்களாக அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.

Advertisment

இருபாலர் கூட்டுக் கல்வி முறைக்கு தாலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தாலிபான்கள், ஹெராத் மாகாணத்தில் இருபாலர் கூட்டுக் கல்வி முறைக்குத் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாயுள்ளது. பல்கலைக்கழக பிரதிநிதிகள், அரசு மற்றும் தனியார் கல்விக்கூடங்களின் பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவை தாலிபான்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

சென்னையில் மெட்ரோ ரயில்கள் நேரம் நீட்டிப்பு

நாளை முதல் சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்றும் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.99.32-க்கும் டீசல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.93.66-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:51 (IST) 22 Aug 2021
    கோடநாடு வழக்கு: ஓபிஎஸ் - இபிஎஸ்-ஐ சேர்க்க திட்டமிடுவதாக வீடியோ வெளியிட்டது அதிமுக

    அதிமுகவின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பற்றி குறிப்பிடுகையில், “டெல்லி பத்திரிக்கையாளர்” என இந்த காணொலியில் அடையாளம் காட்டபடுகிற மேத்யூஸ் சாமுவேலின் பிரதிநிதியான பிரதீப் என்பவர் தொடர் குற்றவாளிகள் சயன் & மனோஜ் ஆகியோரிடம் மாண்புமிகு ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரையும் கோடநாடு வழக்கு - சயன்-மனோஜ் செய்த குற்ற செயலுடன் இணைத்து நாடகமிட்டால்தான் அவர்கள் இருவரும் தப்ப முடியும் என்றும் அதன்முலம் மற்ற பயனும் அடைவார்கள் என்ற சதிவலை வகுக்கின்ற ஆதாரத்தை மக்களே காணுங்கள், சிந்தியுங்கள். அஇஅதிமுக விடியா அரசு புனைய முயலும் எந்த பொய் வழக்கையும் தகர்த்தெறியும்.”என்று குறிப்பிட்டுள்ளது.



  • 21:41 (IST) 22 Aug 2021
    திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே விசிக நிலைப்பாடு - வன்னி அரசு

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, வத்திராயிருப்பில் நடந்த கருத்தரங்கில், திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே விசிக நிலைப்பாடு என்று தெரிவித்தார்.



  • 21:37 (IST) 22 Aug 2021
    கொரோனாவால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு - மத்திய இணை அமைச்சர் ராவ் சாகேப் தன்வே

    கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் ராவ் சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.



  • 18:47 (IST) 22 Aug 2021
    தமிழ்நாட்டில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா; 23 பேர் பலி

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,630 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து 1,827 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.



  • 18:05 (IST) 22 Aug 2021
    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டம் - அமைச்சர் ரகுபதி உறுதி

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டம் நிறைவேற்றப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதியளித்துள்ளார்.



  • 17:41 (IST) 22 Aug 2021
    பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்; குறுவை நெற்பயிருக்கு நீட்டிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

    பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை குறுவை நெற்பயிருக்கும், தட்டைப் பயிருக்கும் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 15:50 (IST) 22 Aug 2021
    பிரிவினை ஏற்படுத்தப்படும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை - அண்ணாமலை

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சமமாக வளர்ச்சியைக் கொண்டு செல்ல மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும், இதுதான் பாஜகவின் நிலைப்பாடு பிரிவினை ஏற்படுத்தப்படும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • 15:08 (IST) 22 Aug 2021
    நெற்பயிருக்கான காப்பீடு குறித்து அவதூறு பரப்புகிறார்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    அரசு மீது காழ்புணர்ச்சியின் காரணமாக நெற்பயிருக்கான காப்பீடு குறித்து அவதூறு பரப்புவதாகவும், சம்பா பயிர் காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.



  • 15:06 (IST) 22 Aug 2021
    மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கனேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கனேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்! ” என தெரிவித்திருக்கிறார்.



  • 14:36 (IST) 22 Aug 2021
    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் தூத்துக்குடி,ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 14:23 (IST) 22 Aug 2021
    சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதல் தொடக்க வேண்டும் - கமல்ஹாசன்

    பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை  விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.



  • 13:44 (IST) 22 Aug 2021
    நிலக்கரி முறைகேட்டில் யாரை காப்பாற்ற முயற்சி? - அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

    அதிமுக ஆட்சியில் நிலக்கரி முறைகேடு பற்றி தெரிய வந்தும் யாரை காப்பாற்ற முயற்சி நடந்தது? அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நிலக்கரி முறைகேடு குறித்து இறுதி கட்ட ஆய்வுக்குப் பிறகே முழு விவரமும் தெரியும் என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.



  • 12:51 (IST) 22 Aug 2021
    தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    தமிழகத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 12:20 (IST) 22 Aug 2021
    மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டி

    மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுகிறார். செப்டம்பர் 13-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அப்துல்லாவை வேட்பாளராக அறிவித்துள்ளார்



  • 11:29 (IST) 22 Aug 2021
    மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன்

    மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.



  • 11:23 (IST) 22 Aug 2021
    தினமும் இரண்டு விமானங்களை இயக்க அனுமதி

    ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க தினமும் இரண்டு விமானங்களை காபூலில்லிருந்து இயக்க வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.



  • 11:22 (IST) 22 Aug 2021
    பற்றி எரியும் கலிபோர்னியா வனங்கள்

    கலிஃபோர்னியாவின் எல் டொராடோ மாவட்டத்தில் காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிந்து வரும் நிலையில், இதுவரை 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலானது. 245 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை அடுத்து தீயணைப்புத் துறையினர் காட்டுத் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.



  • 11:20 (IST) 22 Aug 2021
    ரக்ஷாபந்தனை முன்னீட்டு வெங்கையா நாயுடு வாழ்த்து!

    ரக்ஷாபந்தன் என்பது சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு என்றும் பெண்களின் பெருமையை நிலைநாட்டவும், பாதுகாப்பான சூழலை எப்போதும் உறுதி செய்யவும் சபதம் ஏற்போம் என்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.



  • 10:21 (IST) 22 Aug 2021
    தாலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயார்

    ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பாலான அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், தேவைப்பட்டால் தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.



  • 10:20 (IST) 22 Aug 2021
    மெட்ராஸ் டே முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

    சீர்மிகு, சிங்கார - வந்தாரை வாழவைக்கும் சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்குப் பார்வையுடன் சென்னை வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும் என்று மெட்ராஸ் தினத்தையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.



  • 09:33 (IST) 22 Aug 2021
    24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்கள்

    சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனரகத்தில், 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை தொடங்கிவைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி மையம் செயல்படும் என தெரிவித்துள்ளார்.



Stalin Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment