Advertisment

Tamil News Today : சென்னையில் ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை.. 16 ரவுடிகள் பட்டியல் தயார் - போலீஸ் கமிஷனர்

தமிழகத்தில் இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : சென்னையில் ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை.. 16 ரவுடிகள் பட்டியல் தயார் - போலீஸ் கமிஷனர்

தமிழகத்தில் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி :

Advertisment

தமிழகத்தில் இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், 1,01,30,594 பேருக்கு இதுவரையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் :

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 374 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். சென்னையில் இரண்டாம் அலை கொரோனா தொற்றின் போது, நேற்று 1000-க்கும் கீழ் பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்; அமைச்சர் அன்பில் மகேஷ் :

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் நோக்கில், பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஜி 7 மாநாடு; சிறப்பு அழைப்பாளரான பிரதமர் மோடி உரை :

ஜி 7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்குபெற்ற பிரதமர் மோடி, உலக சுகாதாரத்தை கட்டமைக்க, ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கோட்பாடு தேவை என்பதை வலியுறுத்தி உரையாற்றியுள்ளார்.

நூறு ரூபாயை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை :

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 97.43-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.91.64-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:52 (IST) 13 Jun 2021
    சென்னையில் ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை.. 16 ரவுடிகள் பட்டியல் தயார் - போலீஸ் கமிஷனர்

    சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன; 16 ரவுடிகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.



  • 19:05 (IST) 13 Jun 2021
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 14,016 பேருக்கு கொரோனா; 267 பேர் பலி

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 14,016 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 267 பேர் உயிரிழந்தனர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 19:04 (IST) 13 Jun 2021
    புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, நாகை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

    புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, நாகை மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு நியமனம்

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ் நியமனம்

    தஞ்சை மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமனம்

    நாகை மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்



  • 18:06 (IST) 13 Jun 2021
    மாஸ்க் அணிந்தால் மட்டுமே டாஸ்மாக் கடையில் மது வாங்க அனுமதி - சென்னை போலீஸ் கமிஷனர்

    சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டாஸ்மாக் கடைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை தடுக்க தடுப்புகள் அமைத்துள்ளோம். மாஸ்க் அணிந்தால் மட்டுமே கடையில் மது வாங்க அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.” என்று கூறினார்.



  • 15:52 (IST) 13 Jun 2021
    தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

    தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், தஞ்சை கலெக்டர், குடிசை மாற்றுவாரிய இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



  • 14:50 (IST) 13 Jun 2021
    நடுக்கடலில் பஸ்களை மூழ்கடிக்கும் இலங்கை; தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு!

    கச்சத்தீவு பகுதியில், மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் பழைய பேருந்துகளை கடலுக்குள் மூழ்கடிக்கும் பணிகளை இலங்கை அரசு துரிதப்படுத்தி உள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு, பாரம்பர்ய மீன் பிடித்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளதாக தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



  • 13:59 (IST) 13 Jun 2021
    அரசியலுக்காக மதுக்கடைக்கு எதிராக பாஜக போராட்டம் - மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

    அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக்கொள்ளவும் மதுக்கடைக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்துவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பெட்ரோல் விலை உயர்வுக்கு பாஜக போராட்டம் நடத்தாத்து ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 13:30 (IST) 13 Jun 2021
    தமிழக அரசே டாஸ்மாக்கைத் திறக்காதே- வானதி ஸ்ரீனிவாசன் பதாகை போராட்டம்

    தமிழக அரசே டாஸ்மாக்கைத் திறக்காதே என்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தி, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தனது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.



  • 13:15 (IST) 13 Jun 2021
    நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 12:48 (IST) 13 Jun 2021
    சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்கு

    சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 12:17 (IST) 13 Jun 2021
    சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

    சென்னை, கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



  • 12:10 (IST) 13 Jun 2021
    கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

    கட்டுமான பணிகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல், கட்டுமான பொருட்களுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அலுவலகங்கள் செயல்படலாம்.



  • 12:09 (IST) 13 Jun 2021
    தேநீர் கடைகளுக்கு அனுமதி!

    தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம்.



  • 11:55 (IST) 13 Jun 2021
    தேநீர் கடைகளுக்கு அனுமதி!

    தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம்.



  • 11:11 (IST) 13 Jun 2021
    மதுக்கடைகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

    நாளை முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை அடுத்து, தமிழக அரசு வழிகாட்டு `நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கடைகளில் கூட்டத்தை தவிர்க்க தடுப்பு வேலிகள் அமைப்பது, முகக்கவசம் இல்லாமல் மது வாங்க வருபவர்களுக்கு மதுபானம் வழங்க கூடாது, வரிசையில் 6 அடி சமூக இடைவெளிவிட்டு நிற்க வேண்டும், மாலை 5 மணிக்குள் மது விற்பனையை முடிக்க வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.



  • 11:06 (IST) 13 Jun 2021
    சாலைகளில் பெண் போலீஸ் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டாம்; டிஜிபி திரிபாதி உத்தரவு!

    சாலைகளில் பெண் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டாம் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு பணியின் போது, பெண் காவலர்கள் காத்திருப்பதை தவிர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் டிஜிபி-க்கு அறிவுறுத்தியதை அடுத்து இந்த உத்தரவு வெளியாகி உள்ளது!



  • 10:59 (IST) 13 Jun 2021
    தடுப்பூசி கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை; தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

    அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.



  • 10:58 (IST) 13 Jun 2021
    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் முன்னேற்றம்; சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



  • 10:53 (IST) 13 Jun 2021
    ஹைட்ரோகார்பன் திட்டம்; நெடுவாசல் அதிர்ச்சி!

    நெடுவாசலில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளதால், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் போராட்டதிலும் ஈடுபட்டுள்ளனர்.



  • 10:42 (IST) 13 Jun 2021
    கரூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு!

    கரூரில் உள்ள கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நரிகட்டியூர் அரசு தொடக்கப்பள்ளி, க.பரமத்தி ஆரம்ப பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்து வருகிறார்.



  • 09:42 (IST) 13 Jun 2021
    இந்தியாவில் கொரோனா நிலவரம்!

    இந்தியாவில் மேலும் 80,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,94,39,989 ஆக அதிகரித்துள்ளது.



  • 09:24 (IST) 13 Jun 2021
    வேலூர் மாவட்டத்தில் 126 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று!

    வேலூர் மாவட்டத்தில் 126 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.



  • 09:22 (IST) 13 Jun 2021
    இந்தியாவில் 25 கோடியை நெருங்கிய தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை!

    இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 25 கோடியை எட்டியுள்ளது. இதுவரையில், 24.96 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • 09:20 (IST) 13 Jun 2021
    தமிழகத்தில் 1300 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்!

    தமிழகத்தில் இதுவரையில், 1300 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 08:38 (IST) 13 Jun 2021
    4 நாள்களுக்கு வறண்ட வானிலை!

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வின் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.



Tamilnadu Ops Eps Mk Stalin Tamil News Live Update Tamil News Update Tamilnadu Covid 19 Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment