scorecardresearch
Live

Tamil news Updates: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்

Tamil Nadu News, Petrol price Today – 07 Oct 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news Updates: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்

தென்காசியில் இன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 139-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Live Updates
22:42 (IST) 7 Oct 2022
தீபாவளி: சொந்த ஊருக்கு செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

22:30 (IST) 7 Oct 2022
பசு மாடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரெயில்

கடந்த இரண்டு நாள்களில் 2ஆவது முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் கால்நடை மீது மோதி விபத்துக்குள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று எருமை மாடுகள் மீது மோதிய நிலையில் இன்று பசு மாடுகள் மீது மோதியுள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

22:25 (IST) 7 Oct 2022
எஸ்.எஸ்.சி., தேர்வு.. குமாரசாமி கோரிக்கை

எஸ்.எஸ்.சி தேர்வை கன்னடம் உள்ளிட்ட இதர மொழிகளிலும் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

22:02 (IST) 7 Oct 2022
பிசிசிஐக்கு புதிய தலைவர்?

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சௌரவ் கங்குலியை தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

20:47 (IST) 7 Oct 2022
குற்றம், பயங்கரவாதம்… இந்தியாவுக்குப் பயணம் செய்யும்போது குடிமக்களுக்கு அதிக எச்சரிக்கை தேவை – அமெரிக்கா

குற்றம், பயங்கரவாதம் காரணமாக இந்தியாவுக்குப் பயணம் செய்யும்போது ‘அதிக எச்சரிக்கையுடன்’ செயல்படுமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய பயண ஆலோசனையில், அமெரிக்க வெளியுறவுத்துறை இந்திய பயண ஆலோசனை அளவை 2 ஆகக் குறைத்தது. இதற்குமுன் 4 ஆக இருந்தது.

குற்றம் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்தியாவிற்கு பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டது மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியது.

19:58 (IST) 7 Oct 2022
மதமாற்றம் நிகழ்ச்சிக்காக ஆம் ஆத்மி அமைச்சர் பதவி விலக வேண்டும் – பா.ஜ.க வலியுறுத்தல்

டெல்லியில் அக்டோபர் 5 ஆம் தேதி சுமார் 10,000 இந்துக்கள் புத்த மதத்தைத் தழுவிய நிகழ்ச்சியில் ராஜேந்திர பால் கௌதம் கலந்து கொண்ட வீடியோ வெளியானதையடுத்து, பாஜக அவரை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் அக்டோபர் 5 ஆம் தேதி சுமார் 10,000 இந்துக்கள் புத்த மதத்தைத் தழுவிய நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கலந்து கொண்ட வீடியோவை மேற்கோள் காட்டி அவர் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க கோரியுள்ளது.

19:14 (IST) 7 Oct 2022
பெங்களூருவில் OLA, Uber, Rapido ஆட்டோவுக்கு 3 நாட்கள் தடை – கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூருவில் OLA, Uber, Rapido ஆகிய நிறுவனங்கள் அடுத்த 3 நாட்களுக்கு ஆட்டோ சேவையை நிறுத்திக்கொள்ள கர்நாடக போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிகப்படியாக கட்டணத்தை வசூலிப்பது சட்டவிரோத நடவடிக்கை என அறிவித்துள்ளது.

18:58 (IST) 7 Oct 2022
திருப்பூர் மாணவர்கள் உயிரிழப்பு.. தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் திருமுருகபூண்டி அருகே உள்ள விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப் போன உணவை உண்ட 14 சிறுவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.

11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் திமுக சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உயிரிழந்த மாணவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

18:48 (IST) 7 Oct 2022
ஐ.நா.,வில் சீனாவுக்கு எதிரான தீர்மானம்.. வாக்கெடுப்பை தவிர்த்த இந்தியா!

ஐ.நா., மன்றத்தில் சீனாவுக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா தவிர்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் ஜின் ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது.

இந்த மாகாணத்தில் உள்ள உய்குர் இன இஸ்லாமியர்களிடம் சீனா மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டி ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீர்மானத்தில் கலந்துகொள்ளாமல் இந்தியா தவிரித்துவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

18:44 (IST) 7 Oct 2022
பட்டாசு கடை.. விதிமுறை அறிவிப்பு

தீபாவளி நெருங்கும் நிலையில், பட்டாசு கடை வைக்க விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் இடையே குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி கிடையாது” உள்ளிட்ட பல்வேறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

18:40 (IST) 7 Oct 2022
ட்விட்டரில் ஸ்கீரின்ஷாட் நீக்கம்?

ட்விட்டரில் ஸ்கீரின்ஷாட் வசதி நீக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

18:20 (IST) 7 Oct 2022
ஹைதராபாத்தில் 2.800 கிலோ தங்கம் பறிமுதல்

ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 2800 கிராம் எடையுள்ள 24 தங்க கட்டிகளை அதிகாரிகள் கைது செய்தனர்.

இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.48 கோடி ஆகும்.

17:58 (IST) 7 Oct 2022
ஆன்லைன் சூதாட்ட தடை- ஆளுநர் ஒப்புதல்

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

17:38 (IST) 7 Oct 2022
சுப்பக்கா.. திமுக வருந்த வேண்டும்.. சீமான்!

திமுகவில் இருந்து அண்மையில் வெளியேறிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “உங்களை இழந்ததற்கு திமுகதான் வருந்த வேண்டும். உங்களின் கொள்கை பிடிப்பை கண்டேன். புலிகள் உங்களை சுப்பக்கா என்றுதான் அழைப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

17:23 (IST) 7 Oct 2022
பரந்தூர் விமான நிலையம்.. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு திடீர் கோரிக்கை

பரந்தூர் விமான நிலையத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

17:11 (IST) 7 Oct 2022
அக்.17இல், தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்.17ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அதன்பின்னர் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

17:09 (IST) 7 Oct 2022
மதுரை; மது போதையில் தள்ளாடிய உதவியாளர்

மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியின்போது மது அருந்திவிட்டு தள்ளாடும் செவிலிய உதவியாளரின் காணொலி காட்சிகள் வைரலாக பரவிவருகின்றன.

16:48 (IST) 7 Oct 2022
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி

மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 138 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 124 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

16:39 (IST) 7 Oct 2022
அக்.17ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்”

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

16:16 (IST) 7 Oct 2022
மருத்துவ படிப்பில் சேர 53% மாணவர்கள் மட்டும் விண்ணப்பம்

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்ற மாணவர்களில் 53% மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 67,787 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தும், 36,100 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

16:04 (IST) 7 Oct 2022
அறநிலையத்துறையின் பெயர் மாற்ற திருமா கோரிக்கை

இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமய அறநிலையத்துறை என்றும், வைணவ சமய அறநிலையத்துறை என்றும் பெயர் மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

16:02 (IST) 7 Oct 2022
சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

15:13 (IST) 7 Oct 2022
அமைதிக்கான நோபல் பரிசு

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி-க்கு அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல், உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்ட்டிஸுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

15:10 (IST) 7 Oct 2022
அமைதிக்கான நோபல் பரிசு

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல், உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்ட்டிஸுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

14:09 (IST) 7 Oct 2022
11 சிறுவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கினர்

திருப்பூர் : திருமுருகன்பூண்டி காப்பகத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், சாமிநாதன் ஆகியோர் ஆய்வு . கெட்டுப் போன உணவை சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 11 சிறுவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கினர்

13:12 (IST) 7 Oct 2022
தனியார் காப்பகத்தை மூடி சீல் வைக்க உத்தரவு

கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் , தனியார் காப்பகத்தை மூடி சீல் வைக்க சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவு

13:11 (IST) 7 Oct 2022
9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு . சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் . திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி

12:45 (IST) 7 Oct 2022
முதலமைச்சர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் . அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

12:39 (IST) 7 Oct 2022
மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தின விளையாட்டு அரங்கம் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம் . தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

09:56 (IST) 7 Oct 2022
போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் . தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

09:50 (IST) 7 Oct 2022
இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் என்.ஐ.ஏ சோதனை

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் 3 இளைஞர்கள் கைதான விவகாரம். சேலம் செட்டிசாவடி பகுதியில் இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் என்.ஐ.ஏ சோதனை

09:49 (IST) 7 Oct 2022
உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் இறந்த விவகாரம்

திருப்பூர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் இறந்த விவகாரம். மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் தலைமையிலான குழு காப்பகத்தில் நேரில் விசாரணை

08:44 (IST) 7 Oct 2022
சென்னை – அதிகாலையில் பரவலாக மழை

சென்னை மாநகர பகுதிகளில் அதிகாலையில் பரவலாக மழை . பட்டினம்பாக்கம், மெரினா, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

08:43 (IST) 7 Oct 2022
திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்

திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல். நாளை மறுநாள் கூடவுள்ள திமுக பொதுக்குழுவில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது

08:43 (IST) 7 Oct 2022
அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

வரும் திங்களன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் . இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு

Web Title: Tamil news today live mk stalin eps ops biriyani death