Advertisment

Tamil news Highlights: சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 15 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
BJP leader, wife, their two sons die by suicide

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ தற்கொலை.. குடும்ப பிரச்னை காரணமா?

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 117-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா : வெண்கலம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

காலை சிற்றுண்டி திட்டம்

பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. மதுரையில் இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உணவு விநியோகத்திற்கான வாகனங்கள் பயன்பாட்டை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:22 (IST) 15 Sep 2022
    மின்சார உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 20ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்

    ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் மின்சார உயர்வை கண்டித்து வரும் 20ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதியன்று மின்சார துறை அமைச்சரிடம் நேரில் சென்று வலியுறுத்தவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது



  • 20:05 (IST) 15 Sep 2022
    தி.மு.க அரசு அம்மா உணவகத்தை மூட நினைத்தால், மக்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள் – இ.பி.எஸ்

    திமுக அரசு அம்மா உணவக்கத்தை மூட நினைத்தால், மக்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள். கல்வியில் சிறக்கும் மாநிலம் தான் வளர்ச்சி அடையும். அதிக நிதி ஒதுக்கி எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் செய்த புரட்சியால் தான் தமிழகம் கல்வித்துறையில் சிறந்து விளங்குகிறது. அதிமுக ஆட்சியில் 7 சட்டக்கல்லூரிகள், 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது என 114வது அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • 19:39 (IST) 15 Sep 2022
    ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதை ஏற்க முடியாது - ஸ்டாலின்

    ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதை ஏற்க முடியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களை 54 தொகுப்புகளாக வெளியிட்டு உள்ளோம். தமிழகத்தை அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம் என திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு



  • 19:36 (IST) 15 Sep 2022
    தமிழ்நாடு என அண்ணா பெயரை கூறிய போது சட்டப்பேரவை உற்சாகத்தில் மிதந்தது - மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அண்ணா; தமிழ்நாடு என்ற பெயரை கூறிய போது சட்டப்பேரவை உற்சாகத்தில் மிதந்தது என திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • 19:24 (IST) 15 Sep 2022
    டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு

    டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். 'லாவர் கோப்பை 2022' தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.



  • 19:12 (IST) 15 Sep 2022
    விருதுநகரில் விருதுகளை பெறுவதில் பெருமை - டி.ஆர்.பாலு

    விருதுநகரில் விருதுகளை பெறுவதில் பெருமை. 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நகரில் கருணாநிதி எனக்கு முக்கிய பொறுப்பை வழங்கினார். தற்போது அவரது தனயன் ஸ்டாலின் கரங்களில் கலைஞர் விருது பெற்றதில் மகிழ்ச்சி என திமுக விழாவில் பொருளாளர் டி.ஆர்.பாலு பேச்சு



  • 19:11 (IST) 15 Sep 2022
    டி.ஆர்.பாலு எம்.பி.க்கு கலைஞர் விருது

    சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருது வழங்கி கெளரவித்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும், டி.ஆர்.பாலு எம்.பி.க்கு கலைஞர் விருதும், கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்



  • 19:10 (IST) 15 Sep 2022
    கருத்து வேறுபாடுகளை தாண்டி பிரதமர் மோடியின் நன்மதிப்பை பெற்றவர் ஸ்டாலின் - துரைமுருகன்

    கருத்து வேறுபாடுகளை தாண்டி பிரதமர் மோடியின் நன்மதிப்பை பெற்றவர் முதல்வர் ஸ்டாலின். 60 ஆண்டு காலத்துக்கு திமுக கட்சிக்கும், ஆட்சிக்கும் பயமில்லை. ஆட்சியையும் கட்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி வருகிறார். திமுகவை யாராலும் அசைக்க முடியாத. திமுக சார்பில் நடைபெற்று வரும் முப்பெரும் விழாவில் துரைமுருகன் பேச்சு



  • 17:02 (IST) 15 Sep 2022
    ‘என்னை கைது செய்யாவிட்டால் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்’- டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா காட்டம்

    பாஜக வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான மற்றொரு ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவை வெளியிட்டது. மதுபான ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பலன் கிடைக்கும் வகையில் இப்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கை வகுக்கப்பட்டது என்று கூறுகிறார்.

    இதற்கு பதிலளித்துள்ள டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறியதாவது: “எனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியும் எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் எனது லாக்கரையும் தேடினர். ஆனால், அங்கேயும் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது பாஜக இந்த வீடியோவைக் கொண்டு வந்துள்ளது. இதையும் சிபிஐ மற்றும் இடி விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் சரியாக இருந்தால் திங்கட்கிழமைக்குள் என்னை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், திங்கட்கிழமைக்குள் இந்தப் போலி குற்றச்சாட்டுக்காக பிரதமர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று காடமாகக் கூறியுள்ளார்.



  • 16:42 (IST) 15 Sep 2022
    தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கம்; ஐகோர்ட் புதிய உத்தரவு

    தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.



  • 16:39 (IST) 15 Sep 2022
    நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு; மோடிக்கு ஓ.பி.எஸ் நன்றி

    நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்புதற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்ததது குறித்து, சமூக நீதியை நிலைநாட்டியுள்ளதாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.



  • 16:11 (IST) 15 Sep 2022
    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க புதிய தலைவர், பொதுச் செயலாளர் தேர்வு

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவராக கே.எம். சுப்பிரமணியன், பொதுச் செயலாளராக என். திருக்குமரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாளர், துணைத் தலைவர், இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் 3 ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.



  • 16:10 (IST) 15 Sep 2022
    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க புதிய தலைவர், பொதுச் செயலாளர் தேர்வு

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவராக கே.எம். சுப்பிரமணியன், பொதுச் செயலாளராக என். திருக்குமரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாளர், துணைத் தலைவர், இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் 3 ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.



  • 16:06 (IST) 15 Sep 2022
    கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு; 3 நீதிபதிகள் அமர்வு ஐகோர் உத்தரவு

    கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அமர்வை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 15:01 (IST) 15 Sep 2022
    சிலைகளை மீட்க சிறப்பு குழு

    தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 60க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்க, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.



  • 14:29 (IST) 15 Sep 2022
    இன்ஃபுளுவென்சா காய்ச்சல்

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் இன்ஃபுளுவென்சா காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 282 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 14:07 (IST) 15 Sep 2022
    அதிமுகவில் தற்போது தலைமை சரியில்லை

    அதிமுகவில் தற்போது தலைமை சரியில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வைத்து இயக்கத்தை சீரழிக்கக் கூடாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.



  • 13:55 (IST) 15 Sep 2022
    சபரிமலை நடை நாளை திறப்பு

    கன்னி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யாதவர்களுக்கு, நிலக்கல்லில் முன்பதிவுவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • 13:45 (IST) 15 Sep 2022
    டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

    IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு அக்டோபருக்கு பதில் நவம்பர் 1, 2, 3, 4, 5 & 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும், விரிவான அட்டவணை http://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.



  • 13:14 (IST) 15 Sep 2022
    CUET யுஜி தேர்வு முடிவுகள்

    CUET யுஜி தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.



  • 13:05 (IST) 15 Sep 2022
    காலம் பதில் சொல்லும் - ஓபிஎஸ்

    அதிமுக அலுவலகத்தில் எனது புகைப்படத்தை அகற்றியதற்கு காலம் பதில் சொல்லும் - ஓபிஎஸ்



  • 13:05 (IST) 15 Sep 2022
    ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி

    போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதாக ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி. எந்த முகாந்திரமும் இல்லாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது - உயர் நீதிமன்றம்



  • 12:57 (IST) 15 Sep 2022
    ஓபிஎஸ் உள்பட அனைவரும் ஒன்றாக தான் உள்ளோம்.- சசிகலா

    ஓபிஎஸ் உள்பட அனைவரும் ஒன்றாக தான் உள்ளோம். நேரம் வரும் போது அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் - சசிகலா



  • 11:54 (IST) 15 Sep 2022
    புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.70.57 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகள் . 2.02 லட்சம் சதுரடி பரப்பளவில் 6 தளங்களுடன் அமைக்கப்பட உள்ள புதிய அலுவலகத்திற்கு அடிக்கல்., புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • 11:45 (IST) 15 Sep 2022
    பேரறிஞர் அண்ணா 114வது பிறந்தநாள்

    பேரறிஞர் அண்ணா சிலைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை /சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அண்ணா புகைப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை



  • 11:10 (IST) 15 Sep 2022
    பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது

    தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது . ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த நடவடிக்கை. இம்மாதம் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தல். - பள்ளிக்கல்வித்துறை



  • 11:00 (IST) 15 Sep 2022
    18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

    சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு. சாதாரண காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 282 ஆக உள்ளது. கொரோனா தாக்கத்துக்கு பிறகு தற்போது மீண்டும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் அதிகரித்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • 10:59 (IST) 15 Sep 2022
    லாரி மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

    ஆம்பூர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது கோர விபத்து . ஜெயஸ்ரீ,வர்ஷா ஸ்ரீ ஆகிய மாணவிகளின் தந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி



  • 09:40 (IST) 15 Sep 2022
    நிதிச்சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவதே முதல் இலக்கு

    "பசித்த வயிறுக்கு உணவு, தவித்த வாய்க்கு தண்ணீராக இருக்கும் திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம். எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவதே முதல் இலக்கு" - முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • 09:39 (IST) 15 Sep 2022
    இலங்கை தமிழர்கள் 8 பேரை கைது

    இலங்கை தமிழர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. இலங்கை, மன்னாரில் இருந்து ராமேஸ்வரம் வர முயற்சித்த நிலையில் கைது



  • 08:37 (IST) 15 Sep 2022
    காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்கம்

    மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறி ஊட்டிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 08:36 (IST) 15 Sep 2022
    1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை கவுரவித்தார் முதலமைச்சர்

    கோவையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 'ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி' என்ற நூலும் கமலாத்தாள் பாட்டிக்கு முதல்வரால் வழங்கப்பட்டது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment