Advertisment

News Highlights: வேல் யாத்திரைக்கு தடையா? திருமா, பொன்னார் கருத்து

மிலாதுன் நபி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

author-image
WebDesk
New Update
Thirumavalavan, Pon Radhakrishnan

Tamil News Today Updates: பாஜக வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என டிஜிபி அலுவலகத்தில் திருமாவளவன் எம்.பி. மனு அளித்துள்ளார். வேல் யாத்திரையை நிறைவு பெறும் போது பல விசயங்களுக்கு தானாக தெளிவு பிறக்கும்; வேல் யாத்திரை குறித்து தேவை இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் யாரும் எதையும் பேச வேண்டாம்! என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றவே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 7.5 உள் ஒதுக்கீடு குறித்த அரசாணையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இந்த ஆண்டே அதனை அமல்படுத்தி, கவுன்சிலிங் தேதியை அறிவித்து, மாணவர் சேர்க்கையை தொடங்கும்படி வலியுறுத்தல்.

தகுந்த நேரத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதில் மேலும் தாமதமா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். வெளிநாடுகளுக்கு வெங்காய விதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:50 (IST)30 Oct 2020

    முருகனுக்கு தமிழில் மட்டுமே வழிபாடு நடத்த நடவடிக்கை வேண்டும் - ரவிக்குமார் எம்.பி

    விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் எம்.பி-யுமான ரவிக்குமார், தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் மட்டுமே வழிபாடு நடத்த நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    20:49 (IST)30 Oct 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,608 பேருக்கு கொரோனா; 38 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 38 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    20:32 (IST)30 Oct 2020

    துருகியில் நிலநடுக்கம்; சுனாமியால் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது

    துருக்கி, கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருகி இஸ்மிர் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கம் 7.0 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. ஏஜியன் கடற்கரையோர பகுதிகளில் கட்டங்கள் இடிந்து விழுந்தன. துருக்கி இஸ்மிர் நகரில் சுனாமி ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

    18:59 (IST)30 Oct 2020

    7.5% உள் ஒதுக்கீட்டில் எந்தவிதத்திலும் திமுக உரிமை கொண்டாட முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

    நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “7.5% உள் ஒதுக்கீடு குறித்து ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தாரா இல்லை. அதனால், 7.5% உள் ஒதுக்கீட்டில் எந்தவிதத்திலும் திமுக உரிமை கொண்டாட முடியாது” என்று கூறினார்.

    18:03 (IST)30 Oct 2020

    எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய புதிய எண் அறிவிப்பு - இண்டேன் நிறுவனம்

    நாடு முழுவதும் மக்கள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதற்கு இண்டேன் நிறுவனம் 7718955555 என்ற புதிய எண் அறிவித்துள்ளது. இந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்று இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.

    17:37 (IST)30 Oct 2020

    ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

    நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்தார். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிக்கைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வருகிறார்.

    16:51 (IST)30 Oct 2020

    7.5% உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுனர் ஒப்புதல்: தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி - டாக்டர் ராமதாஸ்

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

    7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுனர் ஒப்புதல்: தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி! தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர்...

    Posted by Dr. S. Ramadoss on Friday, 30 October 2020

    16:46 (IST)30 Oct 2020

    முதல்வர் பழனிசாமி இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார்

    மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5.30 மணிக்கு ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார்.

    16:38 (IST)30 Oct 2020

    ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று, தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்று அறிக்கை வெளியிட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் ” என்று அறிவித்துள்ளார்.

    16:34 (IST)30 Oct 2020

    கோயம்பேடு மார்க்கெட் திறக்கும் தேதியை அறிவிக்க மறுத்தால் போராட்ட நடத்துவோம் - விக்கிரமராஜா

    கோயம்பேடு மார்க்கெட் திறக்கும் தேதியை அறிவிக்க மறுத்தால் போராட்ட நடத்துவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். மேலும், அவர் பண்டிகைக் காலங்களில் இரவு 12 மணி வரை செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என்ண்று என்று தெரிவித்துள்ளார்.

    14:51 (IST)30 Oct 2020

    ஸ்டாலின் நன்றி!

    வேறு வழியின்றி 7.5% மசோதாவுக்கு  ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி என ஸ்டாலின் ட்வீட். 

    14:05 (IST)30 Oct 2020

    நீட் தேர்வு!

    இந்தாண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    14:03 (IST)30 Oct 2020

    திருமாவளவன் மனு!

    பாஜக வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என டிஜிபி அலுவலகத்தில் திருமாவளவன் எம்.பி. மனு

    14:02 (IST)30 Oct 2020

    ஆளுநர் ஒப்புதல்.!

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதம் ஆன நிலையில் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

    12:47 (IST)30 Oct 2020

    மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி

    7.5% உள்ஒதுக்கீடுக்கு தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டதால் 4 நாட்களில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

    12:39 (IST)30 Oct 2020

    குஜராத் சென்றடைந்தார் பிரதமர்

    குஜராத் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் திரு நரேந்திர மோடி சற்று முன் அகமதாபாத் சென்றடைந்தார் அம்மாநில ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

    12:34 (IST)30 Oct 2020

    திருமாவளவன் பேச்சு

    ”திமுக கூட்டணியில் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜகவினர் செயல்படுகின்றனர். பெண்களைப் பற்றி நான் எப்போதும் அவதூறான கருத்துக்களை கூறியதில்லை. நாட்டில் வன்முறையை தூண்ட வேண்டும் என்ற நோக்கில் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர்” என திருமாவளவன் கூறியுள்ளார். 

    11:45 (IST)30 Oct 2020

    பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

    வேல் யாத்திரையை நிறைவு பெறும் போது பல விசயங்களுக்கு தானாக தெளிவு பிறக்கும்; வேல் யாத்திரை குறித்து தேவை இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் யாரும் எதையும் பேச வேண்டாம்! என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    11:04 (IST)30 Oct 2020

    நிர்வாகம் கெட்டுப்போய் உள்ளது - மு.க.ஸ்டாலின்

    தமிழக அரசின் நிர்வாகம் கெட்டுப்போய் உள்ளது. 7.5 உள்ஒதுக்கீடு அரசாணையை முன்பே கொண்டுவந்திருக்க வேண்டும் என தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி. 

    10:28 (IST)30 Oct 2020

    ராமதாஸ் ட்வீட்

    10:11 (IST)30 Oct 2020

    இந்தியாவில் இன்று முதல் பப்ஜிக்கு நிரந்தர தடை

    ஏற்கனவே பிளே ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருந்தவர்களும் விளையாட முடியாத வகையில் இன்று முதல் இந்தியாவில் பப்ஜி, நிரந்தர தடை செய்யப்படுகிறது. 

    10:07 (IST)30 Oct 2020

    அரசாணை வெளியிடப்பட்டதன் காரணம்

    மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, என ராமநாதபுரம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். 

    09:44 (IST)30 Oct 2020

    சபரிமலை கோயில் நடை 16-ம் தேதி திறப்பு

    கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்! எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    09:38 (IST)30 Oct 2020

    பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து

    மிலாதுன் நபி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்திருநாள் சகோதரத்துவத்தை மேலும் மேம்படுத்தும் என நம்புகிறேன் என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

    09:24 (IST)30 Oct 2020

    முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மரியாதை

    முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை. தொடர்ந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

    Tamil News: மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழு புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு மசோதா ஆளுநருக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு, இதுவரை தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. ஆளுநரிடம் இருந்து தற்போது வரை ஒப்புதல் வராததால், அரசியலமைப்பு பிரிவு 162ஐ பயன்படுத்தி நிர்வாக அதிகாரத்தின் படி கொள்கை முடிவெடுத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
    Coronavirus Corona Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment