Advertisment

ராயபுரத்தில் அதிகபட்சமாக 3,859 பேருக்கு கொரோனா தொற்று

Tamil News Today : ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

Tamil News Today: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்த அரசு முனைப்பு காட்டி வருவதாக அதனை எதிர்த்து திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் ஜூன் 10 (நாளை) அன்று கூட்டு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

Advertisment

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,859 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Tamil News Today Live : இன்றைய முக்கிய செய்திகள்!

புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் 75 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 52 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மருந்துகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக பிசிஜி என்ற தடுப்பூசி வகையான மருந்து வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் தயார்

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:27 (IST)08 Jun 2020

    கூடுதல் இயக்குனர் நியமனம்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியாக ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குனர் குமார் நியமனம்

    22:01 (IST)08 Jun 2020

    10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக்கோரி வரும் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - திமுக தலைமையிலான 11 கட்சி கூட்டணி அறிவிப்பு

    கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்தப் பிறகே தேர்வு தேதியை குறிக்க வேண்டும் - திமுக கூட்டணி

    21:31 (IST)08 Jun 2020

    டெல்லியில் 30,000 த்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை.

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1007 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29,943-ஆக அதிகரித்துள்ளது.

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17பேர் உயிரிழப்பு; மொத்த பலி எண்ணிக்கை 874 ஆக அதிகரிப்பு.

    21:12 (IST)08 Jun 2020

    உத்தரப் பிரதேச அரசை பாராட்டிய பாகிஸ்தான் பத்திரிக்கை

    பாகிஸ்தானில் இறந்தவர்களின் எண்ணிக்கையை உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடும் வரைபடத்தைப் பகிர்ந்து, டவுன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஃபாஹத் ஹுசைன் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

    அதில், “இந்த வரைபடத்தை கவனமாக பாருங்கள். இது பாகிஸ்தான் மற்றும் இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் இறப்பு விகிதத்தை ஒப்பிடுகிறது. இரண்டுமே தோராயமாக ஒரே மக்கள்தொகை மற்றும் கல்வியறிவைக் கொண்டுள்ளன. பாகிஸ்தானில் ஒரு கிலோ மீட்டருக்கு குறைந்த அடர்த்தி மற்றும் அதிக உள்நாட்டு உற்பத்தி உள்ளது. ஊரடங்கு நடவடிக்கையை  உத்தரப் பிரதேச மாநிலம் கடுமையாக பின்பற்றியுள்ளது. ஆனால் நாம் அதனை முறையாக பின்பற்றவில்லை என பதிவிட்டுள்ளார்.

    20:53 (IST)08 Jun 2020

    நாளை ஆலோசனை

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நாளை ஆலோசனை

    20:43 (IST)08 Jun 2020

    அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது ஏன்?

    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் தமிழக அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது ஏன்? - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்

    தெலங்கானாவைப் போல தேர்வுகளை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் - தினகரன்

    20:39 (IST)08 Jun 2020

    சரத்குமார் வேண்டுகோள்

    10 -ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

    20:36 (IST)08 Jun 2020

    அரசுக்கு கேள்விகளால் குட்டு வைத்துள்ளது

    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் நடத்த துடிக்கும் அரசுக்கு கேள்விகளால் குட்டு வைத்துள்ளது உயர்நீதிமன்றம். மாணவர்கள் பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது என்ற, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கேள்விகளைதான் நீதிமன்றம் கேட்டுள்ளது - கனிமொழி எம்.பி

    19:56 (IST)08 Jun 2020

    மோசமாகும் ஜெ.அன்பழகன் உடல்நிலை

    இன்று காலையில் இருந்து ஜெ.அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது

    * ஜெ.அன்பழகனின் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன

    - ரேலா மருத்துவமனை

    19:46 (IST)08 Jun 2020

    தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா?

    3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே 10 ஆம் வகுப்புக்கு தேர்வு இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா?

    10ஆம் வகுப்பு தேர்வில் தெலங்கானா காட்டும் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்

    - மு.க.ஸ்டாலின்

    19:45 (IST)08 Jun 2020

    2 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம்

    தமிழகத்தில் 2 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் 10ம் வகுப்பு தேர்வை நடத்த இதுவே சரியான நேரம் என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    விரிவான தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

    19:36 (IST)08 Jun 2020

    ரயில்வே துறை சாதனை

    ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரை ரயில் விபத்து மூலம் ஒரு ரயில் பயணி கூட உயிரிழக்கவில்லை.

    1853ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்டு 166 ஆண்டுகள் ஆகும் நிலையில் 2019-2020ம் ஆண்டில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

    19:24 (IST)08 Jun 2020

    ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதராக மோனிகா கபில் மோஹ்தா நியமனம்

    ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதராக மோனிகா கபில் மோஹ்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக கடந்த 1985-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மோனிகா கபில் மோஹ்தா, தற்போது ஸ்வீடன் நாட்டில் இந்திய தூதராக உள்ளார். இவர் தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அவர் விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தெரிவித்துள்ளது.

    மோனிகா கடந்த 2011 முதல் 2015 ஜனவரி வரை போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளில் தூதராக பணியாற்றி உள்ளார். முன்னதாக இவர் நேரு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.

    வெளியுறவுத்துறையில், தெற்கு பகுதி கூடுதல் செயலர், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் இயக்குநர் மற்றும் பிரான்ஸ், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தூதரகங்களில் பல்வேறு பதவிகளில் மோனிகா கபில் மோஹ்தா பணியாற்றி உள்ளார். யுனெஸ்கோவின் நிரந்தர தூதுக்குழுவிலும் அவர் இடம்பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    18:52 (IST)08 Jun 2020

    குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 17,527

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 528 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 17,527 ஆக உயர்வு

    18:50 (IST)08 Jun 2020

    17 பேர் உயிரிழப்பு

    சென்னையில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 17 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 286-ஆக உயர்ந்துள்ளது.

    18:46 (IST)08 Jun 2020

    புதிதாக 1,562 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229 ஆக அதிகரிப்பு - தமிழக சுகாதாரத்துறை

    18:37 (IST)08 Jun 2020

    படப்பிடிப்புகளுக்கு அனுமதி

    தெலங்கானாவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி. படப்பிடிப்புகள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்க அனுமதி - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

    18:35 (IST)08 Jun 2020

    வெளிமாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை

    டெல்லி அரசு மருத்துவமனைகளில் வெளிமாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்

    - துணை நிலை ஆளுநர் உத்தரவு

    நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது

    18:24 (IST)08 Jun 2020

    91 பேருக்கு கொரோனா

    கேரள மாநிலத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது - முதல்வர் பினராயி விஜயன்

    கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,174ஆக அதிகரிப்பு

    18:18 (IST)08 Jun 2020

    அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

    தெலுங்கானாவில் 10 ஆம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

    * கொரோனா பரவும் நேரத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல - தெலுங்கானா முதலமைச்சர்.

    17:45 (IST)08 Jun 2020

    இதுவரை 1.5 லட்சம் பரிசோதனைகள்

    சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு ?

    * சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 6 அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்

    * சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் 38,198 ஊழியர்கள்

    * சென்னையில் இதுவரை 1.5 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

    சென்னையில் இயங்கிவரும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் 200 ஆக அதிகரிக்கப்படும்

    * 2 லட்சம் பேர்களுக்கு ஓமியோபதி மருந்து கொள்முதல் செய்ய ஆணை..

    17:31 (IST)08 Jun 2020

    அமைச்சர்கள் ஆலோசனையில் முடிவு

    சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள 3.47 லட்சம் பேர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர் என அமைச்சர்கள் ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    16:33 (IST)08 Jun 2020

    புதுச்சேரியில் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்

    புதுச்சேரியில் சவக்குழியில் கொரோனா நோயாளி சடலத்தை வீசிய விவகாரம். 3 ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி துறை ஊழியர்கள் 2 பேரும், சுகாதார துறை ஊழியர் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

    15:53 (IST)08 Jun 2020

    10-ம் வகுப்பு தேர்வு - அரசுத் தரப்பு வாதம்

    ”விஞ்ஞானிகள் அறிக்கைப்படி எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும். எனவே 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இதுவே சரியான தருணம். இந்தியாவில் 11 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துவிட்டன" என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் செய்து வருகிறது

    15:14 (IST)08 Jun 2020

    கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை

    மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சோதனை முயற்சியாக பிளாஸ்மா சிகிச்சை. பிளாஸ்மா சிகிச்சை மூலம் தீவிர நோய்த் தொற்றில் இருந்த 54 வயது நபர் குணமடைந்ததாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் சங்குமணி தெரிவித்துள்ளார். 

    15:14 (IST)08 Jun 2020

    கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை

    மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சோதனை முயற்சியாக பிளாஸ்மா சிகிச்சை. பிளாஸ்மா சிகிச்சை மூலம் தீவிர நோய்த் தொற்றில் இருந்த 54 வயது நபர் குணமடைந்ததாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் சங்குமணி தெரிவித்துள்ளார். 

    14:26 (IST)08 Jun 2020

    டிவி நடிகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    ”சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளன. டிவி நடிகர், பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார். வரதராஜன் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

    13:41 (IST)08 Jun 2020

    சென்னையில் கொரோனா சிகிச்சை

    சென்னையில் கொரோனா சிகிச்சைகளுக்கு படுக்கை வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த 70 தனியார் மருத்துவமனைகளை, ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 30 தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    13:26 (IST)08 Jun 2020

    தமிழகத்தில் மழை!

    தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்தியக்கிழக்கு வங்கக்கடல், ஆந்திர, கர்நாடக, கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுருத்தியுள்ளது. 

    12:55 (IST)08 Jun 2020

    உடனடி முடிவு எடுக்க உத்தரவு!

    ஜூன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 10 நிமிடத்தில் முடிவெடுக்காவிட்டால் தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது. ஜூலை 2வது வாரத்தில் பொதுத்தேர்வை நடத்தலாமா என்பது குறித்து மதியம் 2.30 மணிக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

    12:53 (IST)08 Jun 2020

    பொதுத்தேர்வை நடத்துவதில் அவசரம் ஏன்?

    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டுவது ஏன்..? தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ”கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா? 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம் 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா?” என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    12:49 (IST)08 Jun 2020

    வழிபாட்டுத தலங்கள் திறப்பு!

    தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஜூன் 8 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது. 

    12:08 (IST)08 Jun 2020

    அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

    அரசின் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுருத்தியுள்ளார். 

    12:07 (IST)08 Jun 2020

    கொரோனா தொற்று!

    அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

    12:04 (IST)08 Jun 2020

    மருத்துவமனையில் கொலை!

    மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை மர்ம நபர்கள் சிகிச்சை அறைக்குள் புகுந்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையிலேயே இந்த கொலை அரங்கேறி இருப்பதால் சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் அவசர அவசரமாக வீடு திரும்ப முடிவு செய்துள்ளனர். 

    12:02 (IST)08 Jun 2020

    பத்திரப்பதிவு டோக்கன்!

    பத்திரப்பதிவுக்கான டோக்கனை இ-பாஸ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு வழங்கப்படும் டோக்கனையே இ-பாஸ் ஆக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

    11:58 (IST)08 Jun 2020

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டுள்ளது. 

    11:17 (IST)08 Jun 2020

    புதிய மேம்பாலங்கள் திறப்பு:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.211.39 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் திறக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். 

    11:15 (IST)08 Jun 2020

    ராமதாஸ் ட்வீட்:

    ”கொரோனா ஆபத்து உச்சத்தில் இருக்கும் சூழலில் பொதுத் தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது மட்டுமின்றி கொடுமையானதும் கூட!" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஒரு மையத்தில் குறைந்தது 100 மாணவர் தேர்வு எழுதுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒற்றைப் பொதுக்கழிப்பறையைத் தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் 5 நாட்களுக்கு இவ்வாறு செய்வது மட்டுமே கொரோனா பரவுவதற்கு போதுமானது. எனவும் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

    11:10 (IST)08 Jun 2020

    அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

    10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பல்​வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்,கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன், இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். 

    Tamil News Today: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,86,008ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,59,972ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,06,107ஆக உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் 75 நாட்கள் கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர் இன்று வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. ஊரடங்கு மீறல் தமிழகத்தில் ரூ.10.90 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,99,315 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,55,375 வாகனங்கள் பறிமுதல்; 5,57,872 வழக்குகள் பதிவாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் திறப்பா ? : மத்திய அமைச்சர் பதில்

    உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்தை நெருங்கியுள்ளது.

    Tamilnadu Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment