Advertisment

Tamil News Today : News Highlights: இந்தியில் பதிலளித்த மத்திய அமைச்சர் மீது மதுரையில் வழக்கு

Tamil News Today : விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா

author-image
WebDesk
New Update
Dalit man to prostrate forcing, kayathar, thoothukudi, tuticorin, கயத்தாறு, தமிழ் நாடு, தலித் முதியவரை காலில் விழக் கட்டாயப்படுத்திய வீடியோ, 7 பேர் மீது வழக்குப்பதிவு, தூத்துக்குடி, kayathar police station, fir registered on 7 caste Hindus, Dalit man to prostrate forcing by caste Hindus, video, tamil nadu

Tamil News Today nivar cyclone : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகிய நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி மீண்டும் புதிய புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது தென் தமிழகத்தின் மேற்குப்பகுதி நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும், அடுத்த கட்ட நகர்வுகள் படிப்படியாக தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் . உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம் . சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபாகரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அக்கட்சி தலைவர் திருமாவளவன் குழந்தைகளுடன் கேக் வெட்டினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    23:06 (IST)27 Nov 2020

    பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்ற உதயநிதி; புகைப்படம் வைரல்

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்தநாளில் பாட்டி தயாளு அம்மாளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    23:03 (IST)27 Nov 2020

    பீகார் மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக சுஷில்குமார் மோடி தேர்வு

    பீகார் மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக சுஷில்குமார் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    21:51 (IST)27 Nov 2020

    நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

    பிரதமர் மோடி, நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    21:07 (IST)27 Nov 2020

    இந்தியில் பதில் அளித்த மத்திய அமைச்சர்; வழக்கு தொடர்ந்தார் சு.வெங்கடேசன் எம்.பி

    தமிழக எம்.பி.க்களின் கடிதங்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த எம்.பி சு.வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.

    20:28 (IST)27 Nov 2020

    நிவர் புயல் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

    முதல்வர் பழனிசாமி நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இன்று நிவாரணங்களை அறிவித்தார். நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவித்தார். உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.30,000, எருதுகளுக்கு ரூ.25,000, கன்றுக்கு ரூ.16,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

    19:35 (IST)27 Nov 2020

    வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - டி.ஆர். பாலு பேட்டி

    செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலும், “மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். ஆட்சியாளர்களிடம் தொலைநோக்கு பார்வை இல்லாததால் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் மக்கள் துன்பப்படுகின்றனர்; புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்” வலியுறுத்தியுள்ளார்.

    18:31 (IST)27 Nov 2020

    பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

    பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 18ஆயிரம் கனஅடியாக உள்ளதால், பூண்டி ஏரியில் முதற்கட்டமாக 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    18:29 (IST)27 Nov 2020

    நவம்பர் 29ம் தேதி திருவண்ணாமலை தீபத் திருவிழா; வெளியூர் பக்தர்களுக்கு தடை

    திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் நவம்பர் 29ம் தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் நவம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    18:26 (IST)27 Nov 2020

    டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை

    தொலைதூர கல்வியில் கற்று 20% இடஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் விபரங்களை தர தவறினால் ஊழல்துறை விசாரணைக்கு உட்படுத்த நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    17:46 (IST)27 Nov 2020

    முதல் ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    17:40 (IST)27 Nov 2020

    மத்திய மாநில சுகாதார செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - திமுக

    மத்திய, மாநில சுகாதார துறை செயலாளர்கள் உள்பட 9 பேருக்கு எதிராக திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    17:02 (IST)27 Nov 2020

    மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நீதிமன்றம்? - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கென தனி நீதிமன்றம் கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    16:47 (IST)27 Nov 2020

    ஆசியாவின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி

    ஆசியாவின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான QS பட்டியலில் மும்பை, டெல்லி மற்றும் சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. 37வது இடத்தை மும்பை ஐஐடியும், 47 மற்றும் 50வது இடத்தை டெல்லி, சென்னை ஐஐடிக்கள் பெற்றுள்ளன.

    15:42 (IST)27 Nov 2020

    இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன் - பழனிசாமி ட்வீட்

    15:35 (IST)27 Nov 2020

    மருத்துவக் கலந்தாய்வின் புதிய அட்டவணை வெளியீடு

    நிவர் புயலால் ஒத்திவைக்கப்பட்ட மருத்துவக் கலந்தாய்வு வருகிற நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்திருக்கிறது.

    15:15 (IST)27 Nov 2020

    அரசால் உதவ முடியாவிட்டால் சீட் ஒதுக்குங்கள் - ஸ்டாலின் ட்வீட்

    15:12 (IST)27 Nov 2020

    உதயநிதியின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை

    வேல் யாத்திரைக்குப் பெருகிய ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் என்றும் அதனை அவர்கள் கட்சி ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

    14:46 (IST)27 Nov 2020

    இன்று மாலை 5 மணி முதல் பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு

    பூண்டி ஏரியிலிருந்து இன்று மாலை 5 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. விநாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    14:30 (IST)27 Nov 2020

    மேற்குவங்க அமைச்சர் ராஜினாமா

    மேற்குவங்க மாநிலத்தில், மமதா பேனர்ஜியின் அமைச்சரவையில் இடம் பெற்ற போக்குவரத்து துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார்!

    14:28 (IST)27 Nov 2020

    பூண்டி நீர் தேக்கத்தில் நீர் திறப்பு

    பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு உபரி நீர் திறப்பு முதற்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. 

    14:21 (IST)27 Nov 2020

    வெள்ள அபாய எச்சரிக்கை

    மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் நிலையில் கிளியாற்றினை ஒட்டிய கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

    14:06 (IST)27 Nov 2020

    பிரேமலதா விஜயகாந்த் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார்.

    13:42 (IST)27 Nov 2020

    வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

    சென்னை அம்பத்தூரில் 2000 வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்ததால் மக்கள் தவிப்பு. பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கால்வாய் அமைத்துத் தர குடியிருப்பு வாசிகள் கோரிக்கை. 

    13:39 (IST)27 Nov 2020

    இந்திய அணிக்கு 375 ரன்கள் இலக்கு

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 375 ரன்கள் இலக்கு. ஆஸ்திரேலிய வீரர்கள் பின்ச் 114 ரன்கள் , வார்னர் 69 ரன்கள் , மேக்ஸ்வெல் 45 ரன்கள், ஸ்மித் 105 ரன்கள் எடுத்துள்ளனர். 

    13:20 (IST)27 Nov 2020

    கொரோனா தடுப்பூசி

    ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான Sputnik V கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்; கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் துவங்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. 

    12:37 (IST)27 Nov 2020

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

    தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.  புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும்.  டிச. 1 முதல் 3 வரை மழை பெய்ய வாய்ப்பு சென்னை  வானிலை மையம் தகவல். 

    12:25 (IST)27 Nov 2020

    பேரறிவாளனுக்கு பரோல்!

    உடல்நலக் குறைவால் பேரறிவாளனுக்கு ஏற்கெனவே ஒரு வாரம் பரோல் அளிக்கப்பட்ட நிலையில் மேலும் 1 வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு .  90 நாட்கள் பரோல் கேட்ட நிலையில் மேலும் 1 வாரம் பரோல் நீட்டிப்பு. 

    12:15 (IST)27 Nov 2020

    நீதிபதி கலையரசன்!

    அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீதான புகார்கள் குறித்து நாளை முதல் நேரடியாக புகார் அளிக்கலாம் . புகார் கொடுத்தவர்களுக்கு அடுத்த வாரம் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நீதிபதி கலையரசன் அறிவிப்பு 

    12:04 (IST)27 Nov 2020

    உச்சநீதிமன்றம் உத்தரவு!

    மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 % இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை. மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.  உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு.

    11:54 (IST)27 Nov 2020

    முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்!

    தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன் என முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்.  

    11:50 (IST)27 Nov 2020

    ஸ்டாலின் உதவி!

    சென்னை நொச்சிகுப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்

    10:48 (IST)27 Nov 2020

    தமிழகம் முதலிடம்!

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6-வது முறையாக தொடர்ந்து தமிழகம் முதலிடம். தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று விருது வழங்குகிறார் புதுக்கோட்டையில் இருந்து காணொலி மூலம் விருதை பெறுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்

    10:17 (IST)27 Nov 2020

    உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை!

    பொங்கல் பண்டிகையொட்டி உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை. 6 ஆண்டுகளுக்கு பிறகு 2020 பொங்கலுக்கு உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    10:13 (IST)27 Nov 2020

    புறநகர் ரயில்கள்!

    சென்னை புறநகர் ரயில்கள் முதல் வழக்கம் போல் இயங்கும். புறநகர் ரயில்களில் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் மகளிர் பயணிக்கலாம் . 

    10:11 (IST)27 Nov 2020

    விவசாயிகள் போராட்டம்.!

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம். டெல்லியை நோக்கி செல்லும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தடுத்து நிறுத்தம் கண்ணீர் புகைக்குண்டு வீசி விவசாயிகளை கலைக்கும் காவல்துறை. 

    Tamil News Today : இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு.

    80-வது அகில இந்திய நாடாளுமன்ற - சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய அரசியலமைப்பின் மீது, ஒவ்வொருவரும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்க தொடர்ச்சியான பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

    நேற்றைய முக்கிய செய்திகள்

    ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மூ காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் போலீஸார் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த 3 பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment