பெட்ரோல் – டீசல் விலை
பெட்ரோல் லிட்டர் ரூ 102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அணை நீர் மட்டம்
பவானிசாகர் அணை நீர்மட்டம் – 82.48 அடி, நீர் இருப்பு – 17 டிஎம்சி, நீர்வரத்து – 926 கன அடி, நீர் வெளியேற்றம் – 905 கன அடி
யஷ்வந்த் சின்கா இன்று வேட்புமனு தாக்கல்
குடியரசுத் தலைவர் தேர்தல் :எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
நாடு தழுவிய போராட்டம்.
4 ஆண்டுகள் ஒப்பந்த அடைப்படியில் அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கும் திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. எதிர்புகள் எழுந்த நிலையிலும் இத்திட்டம் நடைமுறைபடுத்த உள்ள நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக நிர்வாகிகள் இன்று ஆலோசனை
சென்னையில் இன்று அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயர் இல்லாமல், தலைமை நிலைய செயலாளர் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தேனி சென்றிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமானநிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்ப அளித்தனர்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். “அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால், தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் சாதாரண பயண கட்டண பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என்று, அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து வசூல்படி அதிகரிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 6வது முறையாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பது தொடர்பான ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்
நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்' படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி – டாக்கியில் நடைபெற்ற ஊழலை உடனடியாக விசாரணை செய்ய கோரிய வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் மெல்ல மெல்ல ஒபிஎஸ் ஓரம் கட்டப்பட்டு வரும் நிலையில், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் திருமாறனுடன், ஆலோசனை நடத்தி வருகிறார்
அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஓபிஎஸ் படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது காலையில் ஓபிஎஸ் படத்துடன் இருந்த பேனர் கிழிக்கப்பட்ட நிலையில். இந்த பேனர் சரி செய்யப்படும் என அதிமுக நிர்வாகிகள் கூறியிருந்தனர் அதன்படி தற்போது பேனர் சரி செய்யப்பட்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத் துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அர்ச்சகர்கள் நியமனங்கள் தொடர்பான அறிவிப்புகளை எதிர்த்த வழக்குகளை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவன் செல்வ நவீன் உயிரிழந்த விவகாரத்தில், ஆட்டோ ஓட்டுனர் ராஜ் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தமிழக அரசு தீவர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில ஆளும் கட்சியான சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த ரிட் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 5 நாட்களுக்குள் பதில் அளிக்க மகாராஷ்டிரா சட்டமன்ற செயலர், துணை சபாநாயகர், சட்டமன்ற குழு தலைவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சிவசேனா தலைமை கொறடா, மகாராஷ்டிர அரசு, மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை வந்தடைந்தார். தேனி சென்றிருந்த ஓபிஎஸ், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகை. அவருக்கு விமானநிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கமாக வானகரத்தில் நடைபெறும் நிலையில், தற்போது வேறு இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை ஈசிஆரில் உள்ள விஜிபி இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக விவசாயிகளுக்கு மேலும் 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் 60 நாட்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிரான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடாதது ஏன்? என ஏக்நாத் ஷிண்டேவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை திட்ட தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று தமிழகத்திலேயே உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.
அதேநேரம், தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8 வரை படித்து பிறகு அரசு பள்ளியில் படித்தவர்களும் பயன் பெறலாம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தி.மலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மதுரையில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு புறப்பட்டார்
மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது என உச்சநீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 38 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் மகா விகாஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நில மோசடி வழக்கு விசாரணைக்கு நாளை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சிவசேனாவில் அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில் இந்த சம்மன் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடி தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும். உடனடி தேர்வுக்கு வரும் 29 முதல் ஜூலை 6 வரை அந்தந்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது
தமிழகத்தில் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு 2% இடஒதுக்கீடு வழங்கப்படும். பொறியியல் கல்லூரிகளில் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 18ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அதிமுக பொதுக்குழு மற்றும் இபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மாநகராட்சி டெண்டர் கோரியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 25க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
புதுச்சேரி, உப்பளம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலக பேனரில் ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியிலும் கிழிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சிக்கு எதிராக ஓபிஎஸ் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்து பேனரைக் கிழித்தனர்.
இலவச மின்சார வாக்குறுதி ஜூலை முதல் நிறைவேற்றப்படும் என பட்ஜெட்டில் பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா அறிவித்துள்ளார்
அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் சட்டரீதியாக நடைபெற்றது. கூட்டத்தை கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் உள்ளது . பொதுவான கட்சி நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். இன்று நடைபெற்ற கூட்டம் சட்ட ரீதியாக செல்லும் – பொன்னையன் பேட்டி
அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார் .துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்ட மாட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார் – ஜெயக்குமார் பேட்டி
நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர்.4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளனர் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து இன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழு முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் பேனரில் இருந்து ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்டது. ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பேனர்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
11ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடம் விருதுநகர் – 95.44%: 3வது இடம் மதுரை – 95.25% – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பிளஸ் 1 தேர்வு எழுதிய 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சியடைந்துள்ளனர்.பிளஸ் 1 பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை . 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
ஆன்லைன் ரம்மி தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழுவின் அறிக்கை இன்று சமர்பிக்கப்பட உள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்பிக்க உள்ளனர்.
அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் இ.பி.எஸ் இல்லத்திற்கு அதிமுக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி உள்ளிட்டோர் வருகை
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியாகும்.
இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது – ஓபிஎஸ் அறிவிப்பு