News Highlights: 50% இட ஒதுக்கீடு; அதிமுக அரசு சரியாக வாதாடவில்லை- ஸ்டாலின்

சென்னையில் 25 ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Updates: ஓபிசி மருத்துவ மாணவர்களுக்கு, 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கக்கோரிய மேல் முறையீட்டு வழக்கில், நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் இந்த ஆண்டே 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி உத்தரவிட முடியாது, எனத் தெரிவித்தது. இது குறித்து அதிமுக தரப்பில் சரியாக வாதாடவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உயிர் காக்கும் சிகிச்சைகள் மூலம், மருத்துவக்குழு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் 2-வது நாளாக 3000-க்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு. குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக குறைந்துள்ளது. வருகிற 29-ம் தேதி புதிய காற்றழுத்த பகுதி உருவாவதால், 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கும் வரை திமுக-வின் போராட்டம் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


22:32 (IST)26 Oct 2020

இந்தியா – ஆஸ்ட்ரேலியா  ஒரு நாள் போட்டிக்கான அணி விவரம்

இந்தியா – ஆஸ்ட்ரேலியா  ஒரு நாள் போட்டிக்கான அணி விவரம்:   

விராட் கோலி, ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல், சிரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, மாயங் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர்

22:23 (IST)26 Oct 2020

பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கடிதம்

தமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

21:05 (IST)26 Oct 2020

ஆஸி. சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. 

ஆஸி. சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. 

காயம் காரணமாக டெஸ்ட், t/20, ஒருநாள் போட்டி என அனைத்து தொடரிலும் இருந்து ரோகித் சர்மா  நீக்கப்பட்டார். 

டி. நடராஜன் கூடுதல் பவுலராக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். 

டெஸ்ட் போட்டி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், சஹா , ரிஷாப் பந்த் , பும்ரா,  ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது.சிராஜ்      

20:00 (IST)26 Oct 2020

திருமாவளவன் எதிர்ப்பு: பாஜக மகளிர் அணி போராட்டத்துக்குத் தடை

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கண்டித்து நாளை சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நடக்க திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த போராட்டத்தில், குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.   

19:39 (IST)26 Oct 2020

சுஜித், மறுமுறை பிறந்து வா நாங்கள் காத்திருக்கிறோம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

” சுஜித்,மீண்டு வருவாய் என கோடானுகோடி பிரார்த்தனைகளை புறந்தள்ளி புதைந்துபோன கருப்பு நாள் இது ஊண் உறக்கமின்றி உனக்காக உறுதியோடு காத்திருந்த எங்களை கண்ணீரில் மூழ்க வைத்து நீ மறைந்து போனது மாளாத சோகமாய் மனதில் இருக்கிறது! மறுமுறை பிறந்து வா நாங்கள் காத்திருக்கிறோம்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.   

18:24 (IST)26 Oct 2020

தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிக்கிறது – கே. எஸ் அழகிரி

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்

18:18 (IST)26 Oct 2020

உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் தருகிறது, ஏமாற்றம் தருகிறது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மத்திய அரசிடம் வழங்கிய தமிழக மருத்துவ கல்லூரி இடங்களில் 50% OBC இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டும் அமலாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதிகள் வளர்ச்சிகண்டுள்ள இந்தக் காலத்தில், இட ஒதுக்கீட்டை உடனே அமலாக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத கோரிக்கை அல்ல. மக்கள் விரோத முடிவுகள் என்றால் ‘அதிரடியாக’ அமலாக்கும் பாஜக, இட ஒதுக்கீட்டு உரிமையை காலம் தாழ்த்துவது உள்நோக்கத்துடன் கூடியதே. உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பாஜக நிலையை ஒட்டியே வந்துள்ளது, வருத்தம் தருகிறது ஏமாற்றம் தருகிறது” என்று தெரிவித்தார்.  

18:14 (IST)26 Oct 2020

ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்கும் நான்கு நாள் மாநாடு

ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்கும் நான்கு நாள் மாநாடு புதுதில்லியில் இன்று தொடங்கியது .
ராணுவ தலைமை தளபதி திரு எம் எம் நரவானே தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ராணுவத்தின் செயல்திறனை மேலும் அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது

18:12 (IST)26 Oct 2020

வந்தே பாரத் திட்டத்தின் 7 வது கட்டம் வரும் 29 ஆம் தேதி முதல் தொடக்கம்

வந்தே பாரத் திட்டத்தின் 7 வது கட்டம் வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 27 லட்சம் பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

18:09 (IST)26 Oct 2020

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை

தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.  தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  

18:07 (IST)26 Oct 2020

துரைக்கண்ணு அவர்கள் நல்ல உடல் நலம் பெற பிரார்த்திப்போம் – திருநாவுக்கரசர்

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தமிழக வேளாண்துறை அமைச்சர் அன்பு சகோதரர் துரைக்கண்ணு அவர்கள் நல்ல உடல் நலம் பெற்று குணம் அடைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தெரிவித்தார்.   

17:30 (IST)26 Oct 2020

50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை – ஸ்டாலின் குற்றச்சாட்டு

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “50%இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை. இதனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை அதிமுக கலைத்துள்ளது. இரட்டை வேடம் போட்டு, கண் துடைப்பு நாடகம் நடத்தாமல், இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெற பிரதமருக்கு முதலமைச்சர் அழுத்தம் தர வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தைப், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்திற்காகவும் பிரதமர் காட்ட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

16:24 (IST)26 Oct 2020

ஜெயராஜ், பென்னிக்ஸ் ரத்தம் படிந்த துணிகள்; தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், “
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் ரத்தம் படிந்த துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளனர் என்றும் இருவரின் ரத்தக் கறைகளும் காவல் நிலைய சுவர்கள், மேஜைகள், லத்திக் கம்புகள், கழிவறைகளில் படிந்துள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16:16 (IST)26 Oct 2020

50% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் மறுக்கப்பட்டதற்கு பாஜக அரசே முழு பொறுப்பு – திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன்: “மருத்துவப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் மறுக்கப்பட்டதற்கு பாஜக அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் தமிழகத்தின் ஒருமித்த நிலைபாட்டை மத்திய அரசுக்கு உணர்த்த உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

16:15 (IST)26 Oct 2020

50% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மறுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி தினகரன்

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்: “மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் 50% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மறுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்றுவதற்கு அரசு இனியாவது அக்கறையோடு செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

16:12 (IST)26 Oct 2020

அரசை குறை கூறுவதே எதிரிகளின் நோக்கம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழை விவகாரத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குட்டையை குழப்பி மீன் பிடிக்க விரும்புகிறார் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர் பி உதயகுமார் தேர்தல் நேரம் என்பதால் ஆளும் கட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே காணொளியில் அறிக்கை வெளியிடுகிறார். கமல்ஹாசன் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் நாம் இருக்கிற கட்டமைப்பை வைத்துதான் இந்த பேரிடரை எதிர்கொள்ள வேண்டும் என்பதை கவனிக்க வேண்டும. அறிக்கைகளை வெளியிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல களத்திலே நின்று காப்பாற்றுகிற பணியில் முதல்வர் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். எதில் எல்லாம் குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்று காத்திருப்பவர்கள் பெய்கிற இந்த வடகிழக்கு பருவ மழையிலும் குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.” என்று கூறினார்.

16:03 (IST)26 Oct 2020

திருமாவளவனுக்கு கருப்புக் கொடி… பாஜக – விசிக கட்சியினர் இடையே கைகலப்பு

ஈரோடு கவுந்தப்பாடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாஜகவினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கே பாஜக – விசிக இடையே கைகலப்பு ஏற்பட்டது.

15:37 (IST)26 Oct 2020

திமுக எதிர்க்கட்சி என்பதால் அரசியல்தான் செய்யும் – மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை கொளத்தூரில் திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக எதிர்க்கட்சி என்பதால் அரசியல்தான் செய்யும். காலம் கடத்தி 7.5% இடஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்று கூறினார்.

15:35 (IST)26 Oct 2020

கன்னியாகுமரி மக்களவை தொகுதி எங்கள் தொகுதி – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “கன்னியாகுமரி மக்களவை தொகுதி எங்கள் தொகுதி; இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும். 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் மறுக்கப்பட்டதற்கு அதிமுக அரசின் அலட்சியம்தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

15:33 (IST)26 Oct 2020

மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றோர் வெளியில் நடமாட முடியாது – எல்.முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றோர் வெளியில் நடமாட முடியாது; மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மாவிட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

15:19 (IST)26 Oct 2020

ராஜராஜ சோழன் 1035ஆவது சதய விழா- தமிழில் வழிபாடு

ராஜராஜ சோழன் 1035ஆவது சதய விழாவில் தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி தமிழில் வழிபாடு நடந்தது. மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவில் முதல்முறையாக தமிழில் வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.

14:55 (IST)26 Oct 2020

50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் மறுக்கப்பட்டதற்கு அதிமுக அரசின் அலட்சியம்தான் காரணம் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, “மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் மறுக்கப்பட்டதற்கு அதிமுக அரசின் அலட்சியம்தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

14:42 (IST)26 Oct 2020

விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டரில் மிரட்டல் விடுத்த இலங்கை இளைஞர் மன்னிப்பு கோரி வீடியோ

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக் 800 படம் சர்சையின்போது, அந்தப் படத்தில் நடிக்கவிருந்த விஜய் சேதுபதிக்கு இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபாச மிரட்டல் விடுத்திருந்தார். அவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய இண்டர்போல் மூலம் முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில், விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த இலங்கை இளைஞர், விஜய் சேதுபதியிடமும், தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்!

இது குறித்து அந்த இளைஞர், “என் வாழ்நாளில் இனி இதுபோன்ற தவறை நான் செய்ய மாட்டேன்; தங்கை குறித்த எனது தவறன ட்வீட்டிற்கு மன்னித்துவிடுங்கள் விஜய் சேதுபதி அண்ணா” என்று தெரிவித்துள்ளார்.

14:23 (IST)26 Oct 2020

50% இடஒதுக்கீடு பெற பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும்; முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க நடப்பாண்டில் உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி இந்த ஆண்டே 50% இடஒதுக்கீடு பெற பிரதமருக்கு உரிய அழுத்தம் தர வேண்டும். இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பாஜகவுடன் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

13:52 (IST)26 Oct 2020

மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது – விஜயகாந்த்

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி-க்கு 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

13:49 (IST)26 Oct 2020

அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும் – மு.க.ஸ்டாலின் விருப்பம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் “கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன்; அவர் முழு நலம் பெற்று அவர் மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

13:46 (IST)26 Oct 2020

மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்க முடியாது; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ கண்டனம்

மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது என்று தெரிவித்துள்ள வைகோ மத்திய அரசுக்கு மதிமுக சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

13:37 (IST)26 Oct 2020

அக். 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் – வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் அக்டோபர் 28ம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13:33 (IST)26 Oct 2020

தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு – விஜயகாந்த் மகன் பிரபாகரன்

தேமுதிக விஜயகாந்த் மகன் பிரபாகரன்: “தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு உள்ளது. தனித்து தேர்தலில் நிற்பதில் எந்த அச்சமும் இல்லை.” என்று தெரிவித்துள்ளர்.

13:31 (IST)26 Oct 2020

ரஜினிகாந்த் உடன் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சந்திப்பு

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் ரஜினிகாந்த்தும் ஏ.சி.சண்முகமும் சந்தித்து ஆலோசனை செய்துள்ளனர்.

12:16 (IST)26 Oct 2020

ஓபிசி இடஒதுக்கீடு – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

11:54 (IST)26 Oct 2020

கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி எங்கள் தொகுதி; இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

11:08 (IST)26 Oct 2020

மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடி – முதல்வர்

இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. அதிமுக அரசு பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,650 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என  முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

10:33 (IST)26 Oct 2020

தொடர்ந்து பின்னடைவில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற அமச்சர்கள் மருத்துவமனைக்கு விரைகிறார்கள். 

10:27 (IST)26 Oct 2020

ராஜராஜ சோழன் 1035ஆவது சதய விழா- தமிழில் வழிபாடு

தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடந்தது. மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவில் முதல்முறையாக தமிழில் வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. 

10:17 (IST)26 Oct 2020

திமுக அரசியல் தான் செய்யும் – மு.க.ஸ்டாலின்

திமுக எதிர்க்கட்சி என்பதால் அரசியல் தான் செய்யும் எனவும், காலம் கடத்தி 7.5% இடஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் எனவும் கொளத்தூரில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

09:49 (IST)26 Oct 2020

கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 79,09,050 லட்சமாக உயர்ந்துள்ளது. இதிலிருந்து குணமடைந்தவர்கள் 71,33,994 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,19,030-ஆகவும் அதிகரித்துள்ளது. 

09:11 (IST)26 Oct 2020

நீட் தேர்ச்சியின் காரணம்

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 70% பேர் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதியவர்கள் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பள்ளிகளைவிட பயிற்சி மையங்களுக்கு முக்கியத்துவம் தரும் சூழலை, 70% தேர்ச்சி காட்டுவதாக கல்வியாலர்கள் கருத்து. 

09:02 (IST)26 Oct 2020

உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓ.பி.சி.) 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 

Tamil News Today: தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,09,005 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30,606 ஆக குறைந்துள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live obc medical reservation case coronavirus duraikannu

Next Story
அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்: மருத்துவ அறிக்கை கூறுவது என்ன?Agricultural Minister Duraikannu is critical now
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com