Advertisment

Tamil Breaking News Highlights: கனமழை- புதுச்சேரியில் அனைத்து தனியார், அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு

Tamil News Live Updates-09-08-2024: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
School leave

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 143-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு

  • Aug 09, 2024 23:57 IST
    கலைஞரின் சாதனைகள் நெஞ்சில் நிழலாடுகிறது: மு.க.ஸ்டாலின்

    “ஒவ்வொரு ஊரிலும் கலைஞர் சிலையைத் திறக்கும்போது, அந்தந்த ஊர்களுக்கு அவர் செய்த சாதனைகள் நெஞ்சில் நிழலாடுகிறது” -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்



  • Aug 09, 2024 21:34 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பா.ஜ.க பால் கனகராஜிடம் விசாரணை நிறைவு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, பாஜக மாநில துணைத்தலைவர் பால் கனகராஜிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரவுடி நாகேந்திரனுடன் தொடர்பில் இருந்தீர்களா என விசாரித்தார்கள்" "தொழில் நிமித்தமாக நாகேந்திரனுடன் பேசி இருக்கிறேன் என கூறினேன்" என தெரிவித்துள்ளார்.



  • Aug 09, 2024 21:31 IST
    மாணவ மாணவியர் விடுதியில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு

    பொன்னேரி அரசு ஆதி திராவிடர் நல மாணவர்கள் மற்றும் மாணவியர் விடுதியில் எம்எல்ஏ துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவின் தரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், குறைகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்



  • Aug 09, 2024 21:30 IST
    வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து மாற்றம்

    வேளச்சேரி உள்வட்ட சாலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.11, 18, 25) HAPPY STREETS நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை ஒட்டி, அன்றைய தினங்களில் அதிகாலை 2 மணி முதல் காலை 10 மணி வரை சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது 



  • Aug 09, 2024 20:35 IST
    ஆடித் திருவிழாவை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு

    ஆடித் திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெரியபாளையத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு! 

    தடம் எண்கள் 514, 592, 57X, 547, 580 ஆகியவற்றில் நாளை (ஆக.10, 11) மற்றும் நாளை மறுநாள் சிறப்புப் பேருந்துகள்  இயக்கப்பட உள்ளன.



  • Aug 09, 2024 20:35 IST
    வயநாடு நிலச்சரிவு: கேரளா அரசு புதிய அறிவிப்பு

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ₹10,000 நிதி உதவி வழங்கப்படும் என கேரளா அரசு அறிவிப்பு



  • Aug 09, 2024 20:34 IST
    மதுரை பகுதியில் கனமழை

    மதுரை செல்லூர், தெப்பக்குளம், பைபாஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரவலாக காற்றுடன் மழை பெய்து வருகிறது



  • Aug 09, 2024 20:33 IST
    தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் நிற்காது என அறிவிப்பு

    தாம்பரம் ரயில்வே யார்டு பணிகள் நடைபெற்று வருவதால், வரும் ஆகஸ்ட் 15,16, மற்றும் 17 ஆகிய 3 தேதிகளில் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது என்றும், எழும்பூர் நோக்கி செல்லும் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பதிலாக மாம்பலம் ரயில் நிலையத்தில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Aug 09, 2024 20:08 IST
    "உள்ளே போனால் அவ்வளவுதான்... கதை முடிந்தது" - அமைச்சர் கே.என்.நேரு

    7 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட சிவகங்கை பூங்காவை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்கள். அப்போது, அமைச்சர் கே.என்.நேரு தஞ்சை பெரியகோயிலை காட்டி உள்ளே போனால் கதை முடிந்தது என்றதும் அமைச்சர் அன்பில் மகேஷ் அப்படியே சிரித்தார். 

    தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. சந்திரசேகரன், எவ்வளவோ சிரமப்பட்டு கோயிலுக்கு கூப்பிட்டார்கள், போகவே இல்லை என்றார். 2 தொகுதிகள் அவுட், பத்திரிக்கையில் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என போய்விட்டேன் என சிரித்தார். 



  • Aug 09, 2024 19:52 IST
    20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, தி.மலை, திருவாரூர், நாகை, திண்டுக்கல், மதுரை, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, வேலூர்,  நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது 



  • Aug 09, 2024 19:23 IST
    வயநாடு நிலச்சரிவு - மோடி நாளை நேரில் ஆய்வு

    கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்று நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.  காலை 11 மணியளவில் பிரதமர் கண்ணூர் சென்றடையும் மோடி, அங்கிருந்து வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வான்வழியாக ஆய்வு நடத்துகிறார். 

    மதியம் 12:15 மணியளவில், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் மோடி, அங்கு மீட்புப் பணிகள் குறித்து மீட்புப் படையினரால் விளக்கமளிக்கப்படுவார். அங்கு நடக்கும் சீரமைப்பு பணிகளை அவர் மேற்பார்வையிடுவார்.



  • Aug 09, 2024 19:03 IST
    வயநாடு நிலநடுக்கம் - நடந்தது என்ன ?

    "நிலச்சரிவினால் உண்டான மேடு பள்ளங்களை இயற்கைத் தாமாகவே சமன் செய்து கொள்ளும். வயநாட்டில் நில நடுக்கம் ஏற்பட்டதாக ரிக்டரில் எந்தவிதமான பதிவும் ஏற்படவில்லை. பாறைகளுக்கிடையே ஏற்படும் உராய்வினால் வரும் சத்தம் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று உணர்ந்து இருக்கலாம். ரிக்டரில் 3.5 அளவிற்கு பதிவானால் மட்டுமே அது நிலநடுக்கமாகக் கருதப்படும்" என்று இந்திய நில அதிர்வு மைய இயக்குநர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 



  • Aug 09, 2024 18:28 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக நிர்வாகியிடம் விசாரணை

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, பாஜக நிர்வாகி பால் கனகராஜிடம் போலீஸ் விசாரணை தொடர்ந்து வருகிறது. சுமார் ஆறரை மணி நேரத்திற்கும் மேலாக பால் கனகராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

     



  • Aug 09, 2024 18:27 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ரவுடி நாகேந்திரன் கைது

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை கைது செம்பியம் தனிப்படை போலீசார் செய்தனர். ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரனை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். 
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரனின் மகனும், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது



  • Aug 09, 2024 18:04 IST
    இறுதி வாக்காளர் பட்டியலை 2025 ஜனவரி 6-ம் தேதி வெளியிட வேண்டும் - இந்திய தேர்தல் ஆணையம்

     


    2025-ம் ஆண்டு ஜனவரி 1-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை மேற்கொள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை 2025 ஜனவரி 6-ம் தேதி வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



  • Aug 09, 2024 17:21 IST
    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Aug 09, 2024 16:55 IST
    நீட் பி.ஜி தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்

    ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் முதுநிலை நீட் தேர்வை  தள்ளி வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம்
    தள்ளுபடி செய்தது. தேர்வு மையங்கள் ஆகஸ்ட் 8-ம் தேதி தான் அறிவிக்கப்படுகிறது என்பதால் மையங்களுக்கு விரைவில் செல்ல முடியாத நிலை உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



  • Aug 09, 2024 16:22 IST
    எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வரை மாநிலங்களவை நடைபெற இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



  • Aug 09, 2024 16:19 IST
    சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தையை திருடிச் சென்ற பெண்; போலீஸ் வலை வீச்சு

    சேலம் அரசு மருத்துவமனையில், பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை மாஸ்க் அணிந்த பெண் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் 2வது தளத்தில் இருந்து குழந்தையை திருடி சென்ற பெண்ணை சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.



  • Aug 09, 2024 15:45 IST
    பள்ளிக்கல்வித்துறையின் வேலை நாள் அறிவிப்பு ரத்து

    ஆகஸ்ட் மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை (ஆக.10, 24) பள்ளிக்கல்வித்துறையின் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்



  • Aug 09, 2024 15:24 IST
    படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம்

    சூர்யா 44 படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சில நாட்கள் ஒய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்



  • Aug 09, 2024 15:10 IST
    பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு - கோயிலுக்கு சீல்

    திருவள்ளூர், வழுதலம்பேடு கிராமத்தில், கோயில் கும்பாபிஷேக விழாவில் இரு சமுதாயத்தினர் இடையே பிரச்சினை ஏற்பட்ட விவகாரத்தில், பட்டா வழிப்பாதை என கூறி பட்டியலின மக்கள் செல்ல அனுமதி மறுத்த நிலையில், வருவாய் துறையினர் கோயிலுக்கு சீல் வைத்தனர். 



  • Aug 09, 2024 14:49 IST
    ஆக. 19-ல் துணை முதல்வராகிறாரா உதயநிதி?

    ஆகஸ்ட் 19க்கு பிறகு அமைச்சர் உதயநிதியை துணை முதல்வர் என்று அழைக்கலாம் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார் 



  • Aug 09, 2024 14:24 IST
    சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் - ஐகோர்ட்

    சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்ததது. அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்போருக்கு எதிராக உரிய சட்டங்களின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது ஆரோக்கியமானது. மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன. அரசு அதனை முடக்க கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்



  • Aug 09, 2024 14:13 IST
    மதுரை அருகே அரசுப்பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் மரணம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசுப்பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்



  • Aug 09, 2024 14:00 IST
    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது



  • Aug 09, 2024 13:25 IST
    வயநாட்டில் திடீர் நில அதிர்வு

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு குத்தி மலை போன்ற பகுதிகளில் நில அதிர்வு

    பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை

    பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்



  • Aug 09, 2024 13:20 IST
    கோவை உக்கடம் மேம்பாலம் திறப்பு

    கோவையில் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையேயான மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.



  • Aug 09, 2024 12:41 IST
    எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல

    - எடப்பாடி பழனிசாமி



  • Aug 09, 2024 12:40 IST
    3.28 லட்சம் மாணவர்கள் பயன் பெற ரூ.360 கோடி ஒதுக்கீடு

    உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக தமிழ் புதல்வன்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    8 மற்றும் 10ம் வகுப்பு படித்து தொழிற் கல்வி மேற்கொள்ளும் மாணவர்களும் பயன் பெறலாம். 3.28 லட்சம் மாணவர்கள் பயன் பெற ரூ.360 கோடி ஒதுக்கீடு

    -  கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு                     



  • Aug 09, 2024 11:58 IST
    மூணாறு - கொச்சி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

    கேரளாவில் மூணாறு - கொச்சி நெடுஞ்சாலையில் கனமழையால் ராட்சத பாறைகள் உருண்டன. இதனால் அங்கு  5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலச்சரிவு ஏற்படும் போது வாகனங்கள் செல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.



  • Aug 09, 2024 11:55 IST
    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 72% கூடுதலாக பெய்துள்ளது

    - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Aug 09, 2024 11:55 IST
    'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்



  • Aug 09, 2024 11:21 IST
    யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து

    யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து சவுக்கு சங்கரின் தாய் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை - சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதை தடுக்கவே குண்டர் சட்டத்தில் அடைத்ததாக காவல்துறை வாதம்.



  • Aug 09, 2024 11:07 IST
    ஒன்றரை ஆண்டுக்குப் பின் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

    | மதுபானக் கொள்கை வழக்கில் கைதாகி 17 மாதங்களாக சிறையில் இருக்கும் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இரு அமைப்புகளும் தனித்தனியாக பதிவு செய்த வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்டதால் அவர் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்



  • Aug 09, 2024 10:42 IST
    வயநாடு நிலச்சரிவு - ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து

    கேரளம்: வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேளர அரசு; மேலும் மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வர வேண்டும் எனவும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.



  • Aug 09, 2024 10:42 IST
    ஆம்ஸ்ட்ராங் படுகொலை : பா.ஜ.க நிர்வாகிக்கு சம்மன்

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான பால் கனகராஜூக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்; இன்று காலை 11 மணியளவில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாகவும் தகவல்



  • Aug 09, 2024 10:25 IST
    ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் - பள்ளி தாளாளர் கைது

    படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய விவகாரத்தில் தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்



  • Aug 09, 2024 10:17 IST
    இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள், வாழ்த்துகள் நீரஜ் : ராகுல் காந்தி



  • Aug 09, 2024 09:47 IST
    அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் மரணம்

    திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படிக்கும் மாணவர் சக்தி (22), கல்லூரி விடுதியில் மரணம். உறங்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல். தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.



  • Aug 09, 2024 09:46 IST
    கோவை உக்கடம் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

    கோவை உக்கடம் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு நெடுஞ்சாலைகளுக்கு செல்லும் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ₹470 கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டது.



  • Aug 09, 2024 09:23 IST
    விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அற்புதராஜ் மரணம்

    விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அற்புதராஜ் மரணம். நேற்று கைதாகி இன்று உயிரிழந்ததால் போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு 2016ல் போடப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்ததை அடுத்து பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு அற்புதராஜை நேற்று போலீசார் கைது செய்தனர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மாலை 6 மணிக்கு விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார் அற்புதராஜ் சிறையில் சக கைதிகளுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்த அற்புதராஜ், இன்று காலை 6 மணிக்கு எழுப்பியும் எழுந்திருக்கவில்லை என தகவல் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே அற்புதராஜ் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள்.



  • Aug 09, 2024 09:21 IST
    நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் ரூ.1,001 பரிசு: அர்ஜூன் சம்பத்துக்கு ரூ.4,000 அபராதம்

    நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் ரூ.1,001 பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத்துக்கு ரூ.4,000 அபராதம் . இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அர்ஜூன் சம்பத்திற்கு 4000ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 



  • Aug 09, 2024 08:34 IST
    தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

     தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9-ந் தேதி) காலை 11.15 மணிக்கு கோவையில் தொடங்கி வைக்கிறார்.கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்கான பிரமாண்ட விழா இன்று நடைபெறுகிறது.



  • Aug 09, 2024 08:24 IST
    சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவர் பூமிக்கு திரும்ப இன்னும் 6 மாதங்கள் ஆகும் : நாசா

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவர் பூமிக்கு திரும்ப இன்னும் 6 மாதங்கள் ஆகும் என, நாசா தகவல் ஸ்பேஸ் எக்சின் ட்ராகன் விண்கலம் மூலமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு அழைத்துவர திட்டம். 



  • Aug 09, 2024 08:22 IST
    பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கம் வென்றார்

    ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கம் வென்றார் .இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2ம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.



  • Aug 09, 2024 08:11 IST
    பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

    பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  “நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு அவர் ஊக்கமாக இருப்பார். அவரால் தேசம் பெருமை கொள்கிறது” என பதிவிட்டுள்ளார்.



  • Aug 09, 2024 08:07 IST
    7 அடுக்கு பாதுகாப்பு அமல்: வரும் 20ம் தேதி வரை பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் வர வேண்டும்

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், வரும் 20ம் தேதி வரை பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் வந்து சேருமாறு அறிவுறுத்தல்.



  • Aug 09, 2024 08:01 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 நாட்டு வெடிகுண்டுகள் இன்று செயலிழக்கப்பட்டது

    ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 நாட்டு வெடிகுண்டுகள் இன்று செயலிழக்கச் செய்யப்படுகின்றன. புளியந்தோப்பு காவல் மாவட்ட போலீசார் முன்னிலையில் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்கின்றனர் நிபுணர்கள்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment