Advertisment

Tamil News Updates: குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு சென்னை வருகை!

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 01 JULY 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
draupadi murmu

திரௌபதி முர்மு

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை மற்றும் புதுச்சேரி வருகை தருகிறார். அங்கு, கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோருகிறார்.

Advertisment

பெட்ரோல் - டீசல் விலை

சென்னையில் 40 -வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பான் – ஆதார் இணைக்காவிடில் இன்று முதல் அபராதம்

பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ₨1,000 அபராதம் வசூலிக்கப்படும்.  பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிகப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா – அவசர ஆலோசனை

தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு சென்றுகொண்டு இருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை  மேற்கொள்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.

வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து ₨2,186க்கு விற்பனை  செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ. 1018.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



  • 20:47 (IST) 01 Jul 2022
    குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவை வரவேற்க இ.பி.எஸ் ஒ.பி.எஸ்.க்கு அழைப்பு

    குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவை நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் சந்திக்க உள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் முதல்வர்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் என குறிப்பிட்டு இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ்க்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.



  • 20:43 (IST) 01 Jul 2022
    3டி தொழில் நுட்பத்தில் விக்ரம் - பா.ரஞ்சித் படம்

    விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவுள்ள படம், 18-ம் நூற்றாண்டு பின்னணியில் உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 19:35 (IST) 01 Jul 2022
    வேலூர், காட்பாடியில் அதிமுக - திமுக இடையே மோதல்

    வேலூர், காட்பாடியில் பாலம் திறக்கப்பட்டது தொடர்பாக அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலத்தை திறந்த அதிமுக பிரமுகர் எஸ்.ஆர்.கே.அப்புவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • 18:27 (IST) 01 Jul 2022
    பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை

    கோவில் சொத்துகளின் வருவாயை முறையாக வசூலித்தால் தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்று கோவில் சிலைகள், சொத்துக்கள் தொடர்பாக வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



  • 18:25 (IST) 01 Jul 2022
    சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர்

    சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்கிறார். அதன்பிறகு நாளை நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ளார்



  • 15:50 (IST) 01 Jul 2022
    அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ். மேல்முறையீடு

    எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ.பி.எஸ். இழந்துவிட்டார்; கட்சியில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது, ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவு அதனை முடக்குவது போல் உள்ளது.

    பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சித் தலைமை என்பது ஒற்றைத்தலைமையாக இருக்க வேண்டும் எனவும், மனுதாரர் எடப்பாடி பழனிச்சாமியை தலைவராக்க வேண்டும் என்று ஒரே குரலாக பேசினர்.

    ஓ.பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் அதிமுகவின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராகவும், கட்சியின் சட்டவிதிகளுக்கு புறம்பாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.



  • 15:29 (IST) 01 Jul 2022
    அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ். மேல்முறையீடு

    எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ.பி.எஸ். இழந்துவிட்டார்; கட்சியில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது, ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவு அதனை முடக்குவது போல் உள்ளது.

    பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சித் தலைமை என்பது ஒற்றைத்தலைமையாக இருக்க வேண்டும் எனவும், மனுதாரர் எடப்பாடி பழனிச்சாமியை தலைவராக்க வேண்டும் என்று ஒரே குரலாக பேசினர்.

    ஓ.பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் அதிமுகவின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராகவும், கட்சியின் சட்டவிதிகளுக்கு புறம்பாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.



  • 15:21 (IST) 01 Jul 2022
    இந்தியாவில் தங்க இறக்குமதி மீதான சுங்க வரி அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

    இந்தியாவில் தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரி

    10.75%-லிருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது மத்திய அரசு. இதனால், இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.



  • 15:03 (IST) 01 Jul 2022
    பழமையான பைபிள் கண்டுபிடிப்பு!

    தஞ்சை அருங்காட்சியகத்தில் காணாமல் போன பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    17வது நூற்றாண்டை சேர்ந்த தமிழில் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் கடந்த 2005ல் மாயமானது. பைபிளை மீட்க யுனெஸ்கோ உதவியை நாடியிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.



  • 15:01 (IST) 01 Jul 2022
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் கிரிக்கெட் - டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு!

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் (எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் கிரிக்கெட்) போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது. இதனால் தொடரை வெல்லும் முனைப்புடன் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது



  • 15:00 (IST) 01 Jul 2022
    மேகதாதுவில் அணை: பசவராஜ் பொம்மை கோரிக்கை!

    பெங்களூருவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சந்திப்பு நடத்திய நிலையில், மேகதாதுவில் அணை கட்ட விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 14:59 (IST) 01 Jul 2022
    தொழில்துறையில் மிகப்பெரும் வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி - பிரதமர் மோடி ட்வீட்

    ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தொழில்துறையில் மிகப்பெரும் வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி என்றும் ஒரே நாடு ஒரே வரி என்ற தொலைநோக்கு பார்வை நிறைவேறியுள்ளது என்றும் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.



  • 14:17 (IST) 01 Jul 2022
    வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு!

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.



  • 14:14 (IST) 01 Jul 2022
    தினசரி கொரோனா பாதிப்பு 2,000-ஐ தாண்டியது - மா.சுப்பிரமணியன்!

    உலகில் 110 நாடுகளுக்கு மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,000-ஐ தாண்டியுள்ளது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 14:12 (IST) 01 Jul 2022
    ஆர்டர்லிகளாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்பபெறப்பட்டது!

    சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து ஆர்டர்லிகளை காவல்துறை திரும்ப பெற்றுள்ளது.

    ஆர்டர்லிகளாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் 150 போலீசார் பணிக்கு திரும்பவில்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.



  • 12:58 (IST) 01 Jul 2022
    நாளை கனமழைக்கு வாய்ப்பு!

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது



  • 12:50 (IST) 01 Jul 2022
    நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்!

    நுபுர் சர்மா தனது தேவையற்ற வார்த்தைகளால் நாடு முழுவதும் வன்முறை தீயை பற்ற வைத்துள்ளார். அவரது சர்ச்சை பேச்சால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கு அவர் ஒருவரே பொறுப்பு. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நுபுர்சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சித்துள்ளது.



  • 12:18 (IST) 01 Jul 2022
    மகாராஷ்ராவில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

    மகாராஷ்ராவில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.



  • 11:27 (IST) 01 Jul 2022
    நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்!

    நுபுர் சர்மா தனது தேவையற்ற வார்த்தைகளால் நாடு முழுவதும் வன்முறை தீயை பற்ற வைத்துள்ளார். அவரது சர்ச்சை பேச்சால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கு அவர் ஒருவரே பொறுப்பு. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நுபுர்சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சித்துள்ளது.



  • 11:20 (IST) 01 Jul 2022
    தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை!

    தமிழக அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 11:05 (IST) 01 Jul 2022
    மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.



  • 10:20 (IST) 01 Jul 2022
    ட்விட்டரில் அதிமுக பொறுப்பை மாற்றிய இபிஎஸ்

    ட்விட்டர் பக்கத்தில் தனது அதிமுக பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி . அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு இருந்ததை தலைமை நிலைய செயலாளர் என மாற்றியுள்ளர் இபிஎஸ்.



  • 10:19 (IST) 01 Jul 2022
    காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனங்கள்

    காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் நடமாடும் மருத்துவ வாகனங்கள். சென்னை, நொச்சிக்குப்பத்தில் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . காசநோய் இல்லா தமிழ்நாடு-2025 என்ற இலக்கை எட்ட அரசின் சிறப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. காசநோய் கண்டறியும் டிஜிட்டல் ஆம்புலன்ஸ் சேவை ரூ. 10.65 கோடி மதிப்பிலான 23 ஆம்புலன்ஸ்கள் இயக்க திட்டம் . கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று காசநோய் கண்டறிய இத்திட்டம் உதவுகிறது.



  • 08:53 (IST) 01 Jul 2022
    மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

    கேரளா, திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • 08:52 (IST) 01 Jul 2022
    ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் - இன்று முதல் தடை

    நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை . பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment