Advertisment

Tamil news Highlights : தமிழ்நாட்டில்1,057 பேருக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 07 August 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news Highlights : தமிழ்நாட்டில்1,057 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 234, செங்கல்பட்டு 90, கோவையில் 122 பாதிப்புகள் பதிவாகின.

Advertisment

பெட்ரோல் - டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும். டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இடுக்கி அணை திறப்பு - எச்சரிக்கை

கேரளா தொடர் மழை காரணமாக இன்று இடுக்கி அணை திறப்பு. முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 4வது டி20 போட்டியில் அபார வெற்றிபெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியது இந்தியா. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

நிதி ஆயோக் கூட்டம்

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம். தேசிய கல்வி கொள்கை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று தகவல்.    

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 01:50 (IST) 08 Aug 2022
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி; இந்திய அணி அபார வெற்றி

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, கடைசி டி20 கிரிக்கெட் - இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 189 ரன்கள் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம், இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.



  • 01:47 (IST) 08 Aug 2022
    வெள்ளி வென்றது இந்திய மகளிர் அணி

    காமன்வெல்த் - இந்தியா மகளிர் அணி வெள்ளி வென்றது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி. 162 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 152 ரன்கள் எடுத்தது.



  • 20:15 (IST) 07 Aug 2022
    ‘செஸ் ஒலிம்பியாட்’ இந்திய ஓபன் பி அணி வீரர் பிரக்யானந்தா வெற்றி

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஓபன் பி அணி வீரர் பிரக்யானந்தா வெற்றி பெற்றார். இன்றைய ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய பிரக்யானந்தா, அஜர்பைஜானின் வாசிப் துரார்பெய்லியை 66வது நகர்வில் வீழ்த்தினார்.



  • 20:13 (IST) 07 Aug 2022
    காமன்வெல்த் - டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவுக்கு வெள்ளி

    காமன்வெல்த் - டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்திய வீரர்கள் சரத்கமல் - சத்யன் ஞானசேகரன் இணை வெள்ளி பதக்கம் வென்றனர்.



  • 19:54 (IST) 07 Aug 2022
    'காமன்வெல்த்' - மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் நிகாத் ஜரீன் தங்கம் வென்றார்

    காமன்வெல்த் போட்டியில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஜரீன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், காமன்வெல்த் போட்டியில் இன்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.



  • 18:56 (IST) 07 Aug 2022
    உயர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை

    உயர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதனை வலியுறுத்தினார்.



  • 18:54 (IST) 07 Aug 2022
    தோல்வியை கண்டிராத குகேஷ்

    சர்வதேச செஸ் போட்டிகளில் தொடர்ந்து 8 போட்டிகளில் இதுவரை குகேஷ் தோல்வியை சந்திக்கவில்லை.

    இந்த நிலையில், அஜர்பைஜான் வீரர் சக்ரியார் உடன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடி 34ஆவது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார்.



  • 18:04 (IST) 07 Aug 2022
    சென்னையில் அமெரிக்க கப்பல்

    சென்னை துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பல் முதல் முறையாக வந்தது.

    இந்தக் கப்பல் பழுது நீக்கம் பணிக்காக காட்டுப்பள்ளி துறைமுகம் வந்துள்ளது.



  • 17:33 (IST) 07 Aug 2022
    தமிழகம் வருகிறார் தோனி

    சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

    இந்தப் போட்டிகளின் நிறைவு விழா ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதில் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தமிழகம் வருகிறார்.



  • 17:16 (IST) 07 Aug 2022
    ஒரு விளம்பரத்துக்கு ஓரு கோடி!

    பாலிவுட் நடிகை ஆலியா பட் தான் சமூக வலைதளத்தில் வெளியிடும் ஒரு விளம்பர பதிவுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



  • 17:08 (IST) 07 Aug 2022
    மகளிர் ஈட்டி எறிதல் வெண்கலம்

    காமன்வெல்த் போட்டியில் மகளிர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ஆன்னு ராணி வெண்கல பதக்கம் வென்றார்.



  • 17:03 (IST) 07 Aug 2022
    ஆன்லைன் சூதாட்டம்- தமிழ்நாடு அரசு கருத்துக்கேட்பு

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக தங்கள் கருத்துகளை கூற பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    பெற்றோர், ஆசிரியர்கள், உளவியலாளர்கள் தங்கள் கருத்துகளை homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.



  • 16:59 (IST) 07 Aug 2022
    ஆமிர் கான் படத்தை பார்க்காமலே ஒப்புக்கொண்ட உதயநிதி

    ஆமிர் கானின் லால் சிங் சத்தா படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய உதயநிதி, “ஆமிர்கான் வீடியோ காலில் என்னைத் தொடர்பு கொண்டார். படத்தை பார்க்காமலே வெளியிடுகிறேன் என ஒப்புக்கொண்டேன்” என்றார்.



  • 16:54 (IST) 07 Aug 2022
    காமன்வெல்த் மும்முறை தாண்டுதலில் தங்கம்

    காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டுதல் என்னும் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர்.



  • 16:52 (IST) 07 Aug 2022
    சென்னை; வழிகாட்டி பலகை விழுந்து விபத்து

    சென்னை ஆலந்தூர் மெட்ரோ அருகே வழிகாட்டி பலகை விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சாலை வழிகாட்டி பலகை சரிந்து மாநகர பேருந்து, வேன் மற்றும் ஆட்டோ மீது விழுந்தது.

    இதில் இருவர் காயமுற்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.



  • 16:47 (IST) 07 Aug 2022
    கருமுட்டை விற்பனை- மருத்துவமனைக்கு சீல்

    கருமுட்டை விற்பனையில் ஈடுபட்ட ஈரோடு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து மருத்துவத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



  • 16:27 (IST) 07 Aug 2022
    காமன்வெல்த் - இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலம் வென்று அசத்தல்

    காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் பெற்றுள்ளது. பெனால்டி ஷூட் அவுட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது



  • 16:05 (IST) 07 Aug 2022
    காமன்வெல்த் குத்துச்சண்டை; இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

    காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து கங்காஸ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்



  • 15:42 (IST) 07 Aug 2022
    காமன்வெல்த் பேட்மிண்டன்; வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தார் பி.வி.சிந்து

    காமன்வெல்த் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். சிங்கப்பூரின் யோ ஜியா மின்னை வீழ்த்தி அவர் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்



  • 15:16 (IST) 07 Aug 2022
    SSLV D1 ராக்கெட் மிஷன் தோல்வி - இஸ்ரோ அறிவிப்பு

    SSLV D1 ராக்கெட் மிஷன் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தோல்விக்கு சென்சார் செயலிழப்பே காரணம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது



  • 15:05 (IST) 07 Aug 2022
    சி.எஸ்.ஐ.ஆர்-இன் முதல் பெண் தலைமை இயக்குனராக கலைச்செல்வி நியமனம்; ஸ்டாலின் வாழ்த்து

    இந்தியாவின் உயர் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்-இன் முதல் பெண் தலைமை இயக்குனராக கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்



  • 14:23 (IST) 07 Aug 2022
    ஃபிடே துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

    சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது



  • 14:04 (IST) 07 Aug 2022
    கிராண்ட் மாஸ்டரானார் தமிழக வீரர் பிரனவ் வெங்கடேஷ்

    இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்டரானார் தமிழகத்தை சேர்ந்த வீரர் பிரனவ் வெங்கடேஷ்.



  • 13:39 (IST) 07 Aug 2022
    மேட்டூரில் 1.20 லட்சம் கனஅடி நீர் திறப்பு

    மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.



  • 12:53 (IST) 07 Aug 2022
    அச்சரப்பாக்கம் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு

    செங்கல்பட்டு: தேர்தல் முன் விரோதம் காரணமாக அச்சரப்பாக்கம் பேரூராட்சி 13ஆவது வார்டு கவுன்சிலர் சுரேஷை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த சுரேஷ்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • 12:21 (IST) 07 Aug 2022
    ஆன்லைன் விளையாட்டு பொதுமக்கள் அரசுக்கு கருத்து தெரிவிக்கலாம்!

    ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்துவது குறித்து மக்கள் homesec@tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 12ம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.



  • 11:33 (IST) 07 Aug 2022
    தேர் விபத்தில் காயமடைந்த ஒருவர் பலி

    தேர் விபத்தில் காயமடைந்த ஒருவர் பலி புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த ராஜகுமாரி(52) உயிரிழப்பு .



  • 11:33 (IST) 07 Aug 2022
    தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கிவைக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்



  • 11:32 (IST) 07 Aug 2022
    மெயின் அருவியில் குளிக்க அனுமதி

    தென்காசி, குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.



  • 10:32 (IST) 07 Aug 2022
    செயற்கைகோள் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் - இஸ்ரோ தலைவர்

    ஸ்ரீஹரிக்கோட்டவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை. EOS 2 மற்றும் ஆசாதி-சாட் செயற்கைக்கோள்களின் சிக்னல் கிடைப்பதில் சிக்கல்

    என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.



  • 09:25 (IST) 07 Aug 2022
    கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் - கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



  • 09:24 (IST) 07 Aug 2022
    மெரினா வந்தடைந்த அமைதிப் பேரணி

    மெரினா வந்தடைந்த அமைதிப் பேரணி. ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து புறப்பட்ட திமுகவின் அமைதிப் பேரணி மெரினா வந்தடைந்தது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment