Advertisment

Tamil news Highlights: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணி அசத்தல் வெற்றி

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 17 JULY 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news Highlights: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணி அசத்தல் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யாவின் அபார ஆட்டத்தால் 42.1 ஓவர்களில் இந்திய அணி260 ரன்கள் இலக்கை எட்டியது.

Advertisment

பெட்ரோல்- டீசல் விலை

பெட்ரோல் – டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பவானி சாகர் அணை நீர்மட்டம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.  பவானிசாகர் அணை நீர்மட்டம் - 96.70 அடி, நீர் இருப்பு - 26.2 டிஎம்சி, நீர்வரத்து - 10,277 கன அடி, நீர் வெளியேற்றம் - 905 கன அடி ஆக உள்ளது.

நீட் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது.  தமிழகத்தில் 18 நகரங்களில் நடைபெறும் தேர்வை 1 ½   லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



  • 22:25 (IST) 17 Jul 2022
    தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை பேச்சுவார்த்தை

    சென்னை, தலைமை செயலகத்தில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார். கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது



  • 21:44 (IST) 17 Jul 2022
    ஜெகதீப் தன்கருக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு

    குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு அளிப்பதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்



  • 21:36 (IST) 17 Jul 2022
    எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்-க்கு, அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்

    உள்கட்சி மோதலை திசை திருப்ப மாணவியின் மரணத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார்



  • 20:45 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி கலவரம்; காயம் அடைந்த காவலர்களுக்கு டிஜிபி நேரில் ஆறுதல்

    கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி நேரில் ஆறுதல் தெரிவித்தனர்



  • 20:08 (IST) 17 Jul 2022
    கள்ளகுறிச்சி மாணவி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் - டிஜிபி

    கள்ளகுறிச்சி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்



  • 19:27 (IST) 17 Jul 2022
    மாணவி மரணம்; உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது - டிஜிபி

    கள்ளகுறிச்சி மாணவி மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்



  • 19:13 (IST) 17 Jul 2022
    கொரோனா சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புகிறேன்; நலமுடன் பணியை தொடர்வேன் - ஸ்டாலின்

    கொரோனா சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்ப உள்ளேன்; நலமுடன் பணியை தொடர்வேன். கொரோனா தொற்றில் இருந்து குணமுடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி ‘என் பணி மக்கள் தொண்டாற்றுவதே’ என்று உறுதியேற்று தொடர்ந்து செயலாற்றி வருகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • 18:43 (IST) 17 Jul 2022
    தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது - கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு

    தமிழகத்தில் நாளை முதல் அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது. கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது



  • 18:01 (IST) 17 Jul 2022
    நீட் நுழைவுத் தேர்வு நிறைவு

    இளநிலை மருத்துவ படிப்பிற்காக நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவு பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 18 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் 80% பேர் தேர்வு எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன



  • 17:39 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் – இ.பி.எஸ்

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்



  • 17:14 (IST) 17 Jul 2022
    துணை குடியரசு தலைவர் தேர்தல்; எதிர்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு

    அடுத்த மாதம் நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சரும், கவர்னருமான மார்கரெட் ஆல்வா வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.



  • 16:38 (IST) 17 Jul 2022
    அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடக்கம்

    சென்னை, அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது



  • 16:22 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்; இதுவரை 30 பேர் கைது என கூடுதல் டிஜிபி தகவல்

    கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்த கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் கூறினார்



  • 15:50 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி கலவரம்: சுற்றுவட்டார மக்கள் திடீரென கூடியதால் போராட்டம் கைமீறி சென்றது - எஸ்.பி

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக உறவினர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி கூறியதாவது: கள்ளக்குறிச்சி போராட்டம் நடைபெற்ற பள்ளி வளாகத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது; சுற்றுவட்டார கிராம மக்கள் திடீரென கூடியதால்தான் போராட்டம் கைமீறி சென்றது என்று தெரிவித்தார்.



  • 15:18 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி போராட்டம்: வன்முறையைக் கைவிட்டு அமைதி வழியில் போராட மாணவியின் தாயார் வேண்டுகோள்

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக உறவினர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

    இதையடுத்து, வன்முறையைக் கைவிட்டு அமைதி வழியில் போராட மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 15:03 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி விரைந்தார் டிஜிபி சலேந்திரபாபு; 144 தடை உத்தரவு அமல்

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவியின் மரணத்துக்கு நீதிக்கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலர் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சி செல்கின்றனர். மேலும், அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.



  • 14:59 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக உறவினர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால், கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • 14:47 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி கலவரம்: போராட்டம் நடைபெறும் பள்ளி வளாகம் அருகே அதிரடிப்படையினர் குவிப்பு

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டக்காரர்கள், போராட்டக்காரர்களை அதிரடிப்படையினர் கலைத்து வருகின்றனர். போராட்டம் நடைபெறும் பள்ளி வளாகம் அருகே அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அதிரடிப்படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.



  • 14:37 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி விரைந்தார் டிஜிபி சலேந்திரபாபு; 144 தடை உத்தரவு அமல்

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவியின் மரணத்துக்கு நீதிக்கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலர் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சி செல்கின்றனர். மேலும், அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.



  • 14:25 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கு நாளை விசாரணை

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை, நாளை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.



  • 14:23 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சி.இ.ஓ-வுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



  • 13:27 (IST) 17 Jul 2022
    கள்ளக்குறிச்சி வன்முறை- வன்முறையை கைவிட மாணவியின் தாய் வேண்டுகோள்

    கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், வன்முறையை கைவிடக்கோரி உயிரிழந்த மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 12:38 (IST) 17 Jul 2022
    டிஜிபி எச்சரிக்கை

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

    மேலும் சமூக வலைதளங்களில் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். பொதுமக்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும். மாணவி உயிரிழப்பு தொடர்பான வழக்கு நாளை (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.



  • 12:30 (IST) 17 Jul 2022
    முதலமைச்சர் நாளை வீடு திரும்புகிறார்

    கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொற்றில் இருந்து குணமாகி நாளை (திங்கள்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புகிறார்.



  • 12:28 (IST) 17 Jul 2022
    டிஜிபி எச்சரிக்கை

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

    மேலும் சமூக வலைதளங்களில் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். பொதுமக்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும். மாணவி உயிரிழப்பு தொடர்பான வழக்கு நாளை (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.



  • 12:20 (IST) 17 Jul 2022
    குடியரசுத் தலைவர் தேர்தல்- திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை

    குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    அமைச்சரும் கட்சியின் மூத்தத் தலைவருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கொரோனா பாதிப்பு காரணமாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை.



  • 11:21 (IST) 17 Jul 2022
    குடியரசுத் தலைவர் தேர்தல்- திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை

    குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    அமைச்சரும் கட்சியின் மூத்தத் தலைவருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கொரோனா பாதிப்பு காரணமாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை.



  • 10:44 (IST) 17 Jul 2022
    மாணவி உயிரிழப்பு விவகாரம் ; போலிசார் தடியடி

    பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தை கலைக்க போலிசார் தடியடி நடத்தினர்.



  • 09:48 (IST) 17 Jul 2022
    தொழில்நுட்ப கோளாறால் விமானம் தரையிறக்கம்

    ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத் புறப்பட்ட இன்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறங்கியது.



  • 09:47 (IST) 17 Jul 2022
    ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் – 5வது நாளாக போராட்டம்

    ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் - போராட்டம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம். 5 வது நாளாக சடலத்தை வாங்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம்.



  • 09:45 (IST) 17 Jul 2022
    இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ?

    கொரோனா சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.



  • 09:44 (IST) 17 Jul 2022
    இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

    பரபரப்பான சூழலில், இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், அடையாறு நட்சத்திர விடுதியில் கூட்டம் நடைபெற உள்ளது.



  • 08:49 (IST) 17 Jul 2022
    ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் – 5வது நாளாக போராட்டம்

    ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் - போராட்டம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம். 5 வது நாளாக சடலத்தை வாங்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம்.



  • 08:35 (IST) 17 Jul 2022
    இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

    அண்ணா அறிவாலயத்தில் குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்க இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா காரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை . திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment