Advertisment

Tamil news Highlights: தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 31 August 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news Highlights: தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

பெட்ரோல் டீசல் விலை

Advertisment

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

இன்று விநாய்கர் துர்த்தி கொண்டப்படுவதால், நெல்லை, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. விநாய்கர் பூக்காளால் அலங்கரிக்கப்பட்டு, வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது.

விநாயகர் சிலைகளை கரைக்க தடை

தருமபுரி, ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  நீர்வரத்து அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 



  • 22:22 (IST) 31 Aug 2022
    கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் - மேலும் 3 பேர் கைது

    கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் மீது கல் வீசியது மற்றும் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதால் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.



  • 21:36 (IST) 31 Aug 2022
    கோலி, சூர்யகுமார் அரை சதம்; இந்தியா 192/2

    ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 192 ரன்கள் சேர்த்துள்ளது. கோலி மற்றும் சூர்யகுமார் அரை சதம் விளாசினர்



  • 20:38 (IST) 31 Aug 2022
    நீட் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு

    தேசிய தேர்வு முகமை (NTA) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET) ஆன்சர் கீ வெளியிட்டுள்ளது.



  • 19:47 (IST) 31 Aug 2022
    சோனியா காந்தி தாயார் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்



  • 19:33 (IST) 31 Aug 2022
    ஆசிய கோப்பை கிரிக்கெட்; இந்தியா பேட்டிங்

    ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹான்காங் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது



  • 19:19 (IST) 31 Aug 2022
    இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் கட்டாயம் - உயர் கல்வித்துறை உத்தரவு

    அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது



  • 18:46 (IST) 31 Aug 2022
    பழனி-கொடைக்கானல் சாலை சீரமைப்பு

    கனமழையால் சேதமடைந்த பழனி கொடைக்கானல் சாலையை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.



  • 18:21 (IST) 31 Aug 2022
    சோனியா காந்தி தாயார் காலமானார்

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, கடந்த 27ம் தேதி இத்தாலியில் காலமானார் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:14 (IST) 31 Aug 2022
    பணிப்பெண் சித்திரவதை- பாஜக பெண் நிர்வாகி கைது

    ஜார்க்கண்டில் பழங்குடியின பெண் பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட வழக்கில் பாஜக பெண் நிர்வாகி சீமா பத்ரா கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.



  • 17:55 (IST) 31 Aug 2022
    வைகை ஆற்றில் வெள்ளம்- 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • 17:37 (IST) 31 Aug 2022
    இந்தியா-பாக் வீரர்களுக்கு அபராதம்

    ஆசிய கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், அப்போட்டியில் இரு அணிகளும் பந்துவீச குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் இரு அணி வீரர்களுக்கும் போட்டி ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.



  • 17:17 (IST) 31 Aug 2022
    சென்னையில் திடீர் மழை

    சென்னையில் இன்று திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியுற்றனர்.

    இதற்கிடையில் அடுத்த 5 நாள்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் உள்ள நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, குமரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என முன்னறிவித்துள்ளது.



  • 17:02 (IST) 31 Aug 2022
    ரூ.1க்கு 3 வேளை உணவு- மு.க. ஸ்டாலின் பாராட்டு

    ஈரோட்டில் 1 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கும் தம்பதியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ஈரோடு அரசு மருத்துவமனை அருகே 1 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கும் உணவகத்தை வெங்கட்ராமன்-ராஜலட்சுமி தம்பதியர் நடத்திவருகின்றனர்.



  • 16:39 (IST) 31 Aug 2022
    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் ஆவணங்கள் மாயம்; கோர்ட் ஊழியர்களுக்கு மெமோ

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் ஆவணங்கள் மாயமான விவகாரம் - விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.



  • 16:36 (IST) 31 Aug 2022
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமபந்தி விருந்து; அண்ணாமலை பங்கேற்பு

    சென்னை, மயிலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நடத்தப்பட்ட சமபந்தி விருந்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.



  • 15:55 (IST) 31 Aug 2022
    ராகுல் காந்தியின் யாத்திரை - ஒற்றுமைக்கான யாத்திரை - ஜெய்ராம் ரமேஷ்

    முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்: “பாஜக மேற்கொண்ட ரத யாத்திரை நாட்டை பிளவுபடுத்துவதற்கான யாத்திரை; ஆனால், ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை; மக்களை ஒன்று சேர்க்கும் யாத்திரை” என்று தெரிவித்துள்ளார்.



  • 15:53 (IST) 31 Aug 2022
    கொண்டை கடலையை ரூ.8 குறைத்து மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும் மத்திய அரசு

    கொள்முதல் விலையை விட மத்திய அரசு ரூ.8 குறைத்து, மாநிலங்களுக்கு கொண்டை கடலை விநியோகம் செய்யவுள்ளது.



  • 14:59 (IST) 31 Aug 2022
    மாமனார், மாமியாரை துன்புறுத்தியதாக மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது - ஐகோர்ட் உத்தரவு

    மதுரையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தொடர்ந்த வழக்கில், அவரை வீட்டை விட்டு வெளியேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மாமனார், மாமியாரை துன்புறுத்தியதாகக் கூறி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது; மருமகள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 14:33 (IST) 31 Aug 2022
    போக்குவரத்து பாதிப்பு

    கொடைக்கானலில் நேற்று பெய்த கனமழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



  • 13:56 (IST) 31 Aug 2022
    மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

    சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் செப்.16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



  • 13:15 (IST) 31 Aug 2022
    4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:15 (IST) 31 Aug 2022
    கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    வைகை அணையில் இருந்து 4,006 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரமாக உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



  • 12:58 (IST) 31 Aug 2022
    ஓபிஎஸ் முதலில் வந்துள்ளார், இனி எல்லாம் சரியாகிவிடும்.. வி.கே.சசிகலா

    அதிமுக ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என சொல்லி வருகிறேன். ஓபிஎஸ் முதலில் வந்துள்ளார், போகப்போக எல்லாம் சரியாகிவிடும், நிச்சயம் நல்லபடியாக நடக்கும் என வி.கே.சசிகலா கூறியுள்ளார்.



  • 10:52 (IST) 31 Aug 2022
    அதிமுக அலுவலக வழக்கு - அதிகாரிகள் நியமனம்

    அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்



  • 10:52 (IST) 31 Aug 2022
    விநாயகர் சிலை ஊர்வலம் - நிபந்தனையுடன் அனுமதி

    மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி விநாயகர் ஊர்வலத்தில் எந்தவிதமான ஆபாச நடனமோ, பேச்சோ இருக்கக்கூடாது - உயர்நீதிமன்றம் மதுரை கிளை



  • 10:16 (IST) 31 Aug 2022
    விநாயகர் சதுர்த்தி - ராகுல் வாழ்த்து

    தடைகள் நீங்கி அனைவருக்கும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளைப் பொழிய வேண்டுகிறேன். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து



  • 09:17 (IST) 31 Aug 2022
    விநாயகர் சதுர்த்தி - பிரதமர் வாழ்த்து

    ஞானத்தையும், செல்வத்தையும் அளிக்கும் விநாயகரை அனைவரும் வணங்குவோம். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து



  • 09:15 (IST) 31 Aug 2022
    விநாயகர் சதுர்த்தி-சிறப்பு கண்காட்சி

    தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் சிறப்பு கண்காட்சி. இன்று முதல் 12 நாட்களுக்கு கண்காட்சி ஒரே இடத்தில் காணப்படும் விதவிதமான விநாயகர் சிலைகள்.



  • 08:59 (IST) 31 Aug 2022
    ஸ்ரீமதி வழக்கு - ஜாமினில் வெளிவந்த ஆசிரியைகள்

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஜாமினில் விடுவிப்பு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், மூவரும் சேலம் தனி கிளைச்சிறையில் இருந்து வெளிவந்தனர்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment