Advertisment

Tamil news today: சென்னை ரயில் விபத்து கோரம்; 233 பேர் பலி; 900 பேர் காயம்

Tamil News LIVE, 02 June 2023- ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்தனர் மற்றும் 900 பேர் காயமடைந்தனர். ரயில் விபத்து குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் இங்கே..

author-image
WebDesk
New Update
Coromandel Express accident

Coromandel Express accident

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. சனிக்கிழமை காலை நிலவரப்படி விபத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர். விபத்து நடத்த இடத்திலிருந்து காலையில் எடுக்கப்பட்ட காட்சிகள்.

Advertisment

இந்த விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சப்படுகிறது.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படும்

ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில், ஒடிசாவின் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டது, இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னா ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்தனர்.

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF நிதிலிருந்து ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும், என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 377-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 03:20 (IST) 03 Jun 2023
    சென்னை வந்த ரயில் ஒடிசாவில் விபத்து: பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு

    “120 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என ஒடிசா தீயணைப்பு டிஜி சுதன்சு சாரங்கி கூறினார்.



  • 03:13 (IST) 03 Jun 2023
    சென்னைக்கு செல்கிறோம்: உயிர் தப்பிய பெயிண்டர் பேட்டி

    சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் மற்றொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸில் பயணித்து உயிர் தப்பிய பயணி ஒருவர் கூறுகையில், “நாங்கள் S5 போகியில் இருந்தோம், S5-ல் இருந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை, சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.

    நாங்கள் சென்னைக்குப் போகிறோம். அங்கு பெயிண்டிங் தொழில் பார்ப்போம்” என்றார்.



  • 03:10 (IST) 03 Jun 2023
    முடிந்த உதவிகளை செய்வோம்!

    “விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுவோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்போம். முடிந்த உதவிகளைச் செய்வோம்” என மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்த மஜூம்தார் கூறினார்.



  • 03:10 (IST) 03 Jun 2023
    முடிந்த உதவிகளை செய்வோம்!

    “விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுவோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்போம். முடிந்த உதவிகளைச் செய்வோம்” என மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்த மஜூம்தார் கூறினார்.



  • 03:05 (IST) 03 Jun 2023
    சென்னை வந்த ரயில் ஒடிசாவில் விபத்து: பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு

    “120 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என ஒடிசா தீயணைப்பு டிஜி சுதன்சு சாரங்கி கூறினார்.



  • 01:31 (IST) 03 Jun 2023
    பிரதமர் அலுவலகம் இழப்பீடு

    “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRFஇல் இருந்து ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



  • 01:30 (IST) 03 Jun 2023
    பிரதமர் அலுவலகம் இழப்பீடு

    “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRFஇல் இருந்து ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



  • 01:20 (IST) 03 Jun 2023
    ஒடிசா ரயில் விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்

    ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இரவிலும் தொடரும் தீவிர மீட்பு பணி;உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம்



  • 01:20 (IST) 03 Jun 2023
    சென்னை ரயில் விபத்து: அண்ணாமலை வேதனை

    சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை ட்விட்டரில், “கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒதிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.

    விபத்து குறித்த விவரங்களுக்கு தென்னக ரயில்வே துறை அவசர கால உதவி தொலைபேசி எண்களான 044- 25330952, 044-25330953 & 044-25354771 இவற்றைத் தொடர்பு கொள்ளவும்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 01:18 (IST) 03 Jun 2023
    உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு

    “இந்த விபத்து எதனால் நடந்தது என்பதை அறிய உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளேன்... மூல காரணத்தை தெரிந்து கொள்வது முக்கியம்” என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏஎன்ஐயிடம் தெரிவித்தார்.



  • 01:17 (IST) 03 Jun 2023
    சென்னை ரயில் விபத்து: 60 பேர் பலி, 600 பேர் காயம்: தலைமை செயலர் தகவல்

    ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'இரவு 11:45 மணிக்கு சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, ரயில் விபத்தில் சுமார் 600 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-60 வரை இருக்கும்' எனவும் கூறினார்.



  • 01:16 (IST) 03 Jun 2023
    உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு

    “இந்த விபத்து எதனால் நடந்தது என்பதை அறிய உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளேன்... மூல காரணத்தை தெரிந்து கொள்வது முக்கியம்” என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏஎன்ஐயிடம் தெரிவித்தார்.



  • 01:15 (IST) 03 Jun 2023
    தமிழக காவல் துறை உதவி எண்கள் அறிவிப்பு

    ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய இளைஞர்கள் குவிந்துள்ளனர்.

    இதற்கிடையில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த எண்கள், 044-28447701,044-28447703 ஆகும்.



  • 01:11 (IST) 03 Jun 2023
    சென்னை ரயில் விபத்து: 60 பேர் பலி, 600 பேர் காயம்: தலைமை செயலர் தகவல்

    ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'இரவு 11:45 மணிக்கு சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, ரயில் விபத்தில் சுமார் 600 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-60 வரை இருக்கும்' எனவும் கூறினார்.



  • 01:11 (IST) 03 Jun 2023
    சென்னை ரயில் விபத்து: 60 பேர் பலி, 600 பேர் காயம்: தலைமை செயலர் தகவல்

    ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'இரவு 11:45 மணிக்கு சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, ரயில் விபத்தில் சுமார் 600 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-60 வரை இருக்கும்' எனவும் கூறினார்.



  • 00:58 (IST) 03 Jun 2023
    ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

    கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் முதலில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மேலும் 2 ரயில்கள சிக்கிக்கொண்ட நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில், இரவிலும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இதனால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.



  • 00:52 (IST) 03 Jun 2023
    30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

    ஒடிசாவில் கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்கள் மோதி விபத்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்; இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்



  • 00:52 (IST) 03 Jun 2023
    ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

    கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் முதலில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மேலும் 2 ரயில்கள சிக்கிக்கொண்ட நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது



  • 00:08 (IST) 03 Jun 2023
    ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

    கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் முதலில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மேலும் 2 ரயில்கள சிக்கிக்கொண்ட நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில், இரவிலும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இதனால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.



  • 23:52 (IST) 02 Jun 2023
    நாளை ஒடிசா செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    ஒடிசா ரயில் விபத்து; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த நாளை ஒடிசா செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவும் நாளை ஒடிசா செல்கின்றனர் கோரமண்டல் விரைவு ரயிலில் சென்னை வருவதற்காக சுமார் 800 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்



  • 23:51 (IST) 02 Jun 2023
    ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணியில் விமானப்படை குழு

    கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் முதலில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மேலும் 2 ரயில்கள சிக்கிக்கொண்ட நிலையில், மீட்பு பணியில் விமானப்படை குழு மீட்பு பணிக்கு விமானப்படை குழுவும் வரவழைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்



  • 23:49 (IST) 02 Jun 2023
    3 ரயில்கள் விபத்தில் சிக்கியது எப்படி?

    கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் முதலில் விபத்தில் சிக்கியது தடம்புரண்ட கோரமண்டல் ரயில் மீது எதிரே வந்த பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில் மோதியது மேலும் சரக்கு ரயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்



  • 23:31 (IST) 02 Jun 2023
    கோரமண்டல் ரயில் விபத்து : சிக்னல் கோளாறு தான் காரணமா?

    கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறு காரணமாக 2 ரயில்களும் ஒரே பாதையில் வந்து நேருக்கு நேர் மோதியதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.பஹானாகா வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது



  • 22:53 (IST) 02 Jun 2023
    30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

    ஒடிசாவில் கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்கள் மோதி விபத்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்; இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்



  • 22:51 (IST) 02 Jun 2023
    ரயில் விபத்து - அதிர்ச்சி தகவல்

    ஒடிசா ரயில் விபத்தில், மோதிய இரு ரயில்களும் விரைவு ரயில்கள் என புதிய தகவல் தடம்புரண்ட விரைவு ரயில் மீது எதிரே வந்த பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில் மோதி விபத்து



  • 22:46 (IST) 02 Jun 2023
    ரயில் விபத்து - தமிழ்நாடு அரசு உதவி எண் அறிவிப்பு

    கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்து; உதவி எண்கள் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே 044-25354771 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விபரங்களை கேட்கலாம்

    விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் மூலம் சென்னை வர முன்பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 869 பேர். முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு அதன்படி 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு. 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிப்பு



  • 22:45 (IST) 02 Jun 2023
    ரயில் விபத்து - பிரதமர் மோடி வேதனை

    ஒடிசா அருகே ரயில்கள் விபத்துக்குள்ளானது அதிர்ச்சி அளிக்கிறது" - பிரதமர் மோடி வேதனை. "உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் - காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" -மீட்பு பணிகளை கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கையை துரிதமாக எடுக்கவும் ரயில்வே அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன் - பிரதமர் மோடி



  • 22:42 (IST) 02 Jun 2023
    ரயில் விபத்து - ரூ.10 லட்சம் நிவாரணம்

    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.



  • 22:40 (IST) 02 Jun 2023
    மும்பை-கோவா வந்தே பாரத் தொடக்க நிகழ்வு ரத்து

    ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) நடைபெறவிருந்த மும்பை-கோவா வந்தே பாரத் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மும்பை-கோவா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி அலுவலகத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்க இருந்தார்.

    மட்கான் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.



  • 22:24 (IST) 02 Jun 2023
    ரயில் விபத்து - 6 ரயில்கள் ரத்து

    ஹவுராவில் இருந்து இயக்கப்படும் சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து. ரயில் விபத்து எதிரொலியாக மேலும் 5 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்



  • 20:28 (IST) 02 Jun 2023
    பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணம்

    அரசுமுறை சுற்றுப்பயணமாக இம்மாதம் அமெரிக்கா செல்ல உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் கடந்த 2016ம் ஆண்டிலும் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியிருந்தார் இந்திய பிரதமர்கள் நேரு, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் அங்கு உரையாற்றியுள்ளனர்



  • 20:10 (IST) 02 Jun 2023
    கோரமண்டல் விரைவு ரயில் விபத்து

    கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு பணிகளில் தொய்வு



  • 20:08 (IST) 02 Jun 2023
    எக்ஸ்பிரஸ் ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிப்பு

    தமிழ்நாட்டின் ரயில் போக்குவரத்து சேவையில் இணைந்தது போடிநாயக்கனூர்; சென்னையில் இருந்து மதுரைக்கு வாரத்திற்கு மூன்று முறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிப்பு மதுரையில் இருந்து தேனி வரை இயங்கும் முன்பதிவு இல்லாத தினசரி ரயிலும் போடி வரை நீட்டிப்பு; வரும் 15ம் தேதி முதல் இந்த அறிவிப்புகள் அமலுக்கு வருகின்றன



  • 19:52 (IST) 02 Jun 2023
    விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்து

    ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்து; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் தாமதம் ஏற்படுவதாக தகவல்



  • 18:59 (IST) 02 Jun 2023
    கழிவு நீர் தொட்டி சுத்திகரிப்பு: கே.என். நேரு எச்சரிக்கை

    கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் அதற்கு காரணமானவர்கள் மீது க்ரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு கூறினார்.



  • 18:50 (IST) 02 Jun 2023
    இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

    இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் முதல் போட்டியை ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.



  • 18:47 (IST) 02 Jun 2023
    இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

    இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் முதல் போட்டியை ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.



  • 18:47 (IST) 02 Jun 2023
    இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

    இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் முதல் போட்டியை ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.



  • 18:26 (IST) 02 Jun 2023
    நாடு முழுக்க போராட்டம் நடத்துவோம்!

    “மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்து, பிரிஜ் பூஷன் சிங்-ஐ கைது செய்ய வேண்டும், இல்லையெனில் ஜூன் 9ம் தேதி மல்யுத்த வீரர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தருக்கு பேரணி சென்று, நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்” என விவசாய சங்கங்களின் தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்துள்ளார்.



  • 18:19 (IST) 02 Jun 2023
    சென்னை மீனம்பாக்கத்தில் 108.32° F வெயில் பதிவு

    சென்னை மீனம்பாக்கத்தில் இன்று (ஜூன் 2) அதிகபட்சமாக 108.32° F வெயில் சுட்டெரித்தது.

    இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.



  • 18:00 (IST) 02 Jun 2023
    இந்திய மகள்கள் நீதி கேட்டு அழுகின்றனர்: ராகுல் காந்தி

    இந்தியாவுக்கு 25 சர்வதேச பதக்கங்களைக் கொண்டு வந்த 5 மகள்கள் நீதி கேட்டு தெருவில் கதறி அழுகின்றனர்.

    15 கொடூரமான பாலியல் குற்றச்சாட்டுகளுடன் எம்.பி., பிரிஜ் பூஷன் பிரதமரரின் பாதுகாப்பில் உள்ளார்.

    இந்திய மகள்களின் இந்த நிலைக்கு பாஜக அரசே காரணம்” என ராகுல் காந்தி இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.



  • 17:45 (IST) 02 Jun 2023
    தமிழக அரசு பேருந்து பைக் மீது மோதி விபத்து

    காரைக்கால் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு உயிர் காக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 17:30 (IST) 02 Jun 2023
    கரூரில் 8 நாட்களாக நீடித்த IT ரெய்டு நிறைவு

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 8 நாள்களாக நீடித்த IT ரெய்டு நிறைவு பெற்றுள்ளது.



  • 17:23 (IST) 02 Jun 2023
    கர்நாடகாவில் ரூ.2000 நிதியுதவிக்கு விண்ணப்பம்

    கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகைக்கான விண்ணப்பம்: சித்த ராமையா அதிரடி

    கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

    இந்த விண்ணப்பங்கள் ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.



  • 15:36 (IST) 02 Jun 2023
    கோகுல்ராஜ் கொலை வழக்கு - 8 பேருக்கு ஆயுள் உறுதி

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபு, கிரிதருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தலா 5 ஆண்டுகளாக குறைத்து சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.



  • 15:34 (IST) 02 Jun 2023
    சாட்சி பொய் சொல்லலாம்; சாட்சியம் பொய் சொல்லாது: கோகுல் ராஜ் வழக்குரைஞர்

    கோகுல் ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோகுல் ராஜ் வழக்குரைஞர் பவானி ப மோகன் பேட்டிளித்தார்.

    அப்போது, “சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது; உடற்கூராய்வு அறிக்கைதான் இது தற்கொலை அல்ல கொலை என தெளிவாக நிரூபித்துக் காட்டியது” எனக் கூறினார்.



  • 15:19 (IST) 02 Jun 2023
    கோவையில் கனமழை!

    கோவை மாவட்டம் காந்திபுரம், சித்தாபுதூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.



  • 15:18 (IST) 02 Jun 2023
    'தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாதாடினோம்': கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர்

    "கோகுல்ராஜ் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, வரலாற்று சிறப்பு மிக்கது. ஒரே சாட்சி பிறழ் சாட்சியாக மாறிவிட்ட பிறகும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாதாடினோம்" என்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறியுள்ளார்.



  • 15:10 (IST) 02 Jun 2023
    ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற அனுமதி; மாவட்ட ஆட்சியர் பேட்டி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், இதற்கான செயல்முறையை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்தார்.



  • 14:57 (IST) 02 Jun 2023
    தாம்பூல பையில் மது பாட்டில் - அபராதம் விதிப்பு

    புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் மது பாட்டில் விநியோகம் செய்யப்பட்ட விவகாரம். மதுபானம் வழங்கிய நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலால்துறை உத்தரவிட்டுள்ளது



  • 14:42 (IST) 02 Jun 2023
    கோகுல்ராஜ் கொலை வழக்கு - குற்றம் நிரூபணம்

    கோகுல்ராஜ் கொலை வழக்கு - குற்றம் நிரூபணம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் நிரூபணம் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு



  • 14:42 (IST) 02 Jun 2023
    கோகுல்ராஜ் கொலை வழக்கு - 10 பேருக்கு ஆயுள் உறுதி

    கோகுல்ராஜ் கொலை வழக்கு - 10 பேருக்கு ஆயுள் உறுதி யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு



  • 13:56 (IST) 02 Jun 2023
    பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் . வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு 1300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2200 பேருந்துகள் இயக்கம் . மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டம் .



  • 13:24 (IST) 02 Jun 2023
    7 மதுபான பார்களுக்கு சீல் வைப்பு

    செங்கல்பட்டு, பல்லாவரம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 7 மதுபான பார்களுக்கு சீல் வைப்பு



  • 13:24 (IST) 02 Jun 2023
    தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்



  • 13:23 (IST) 02 Jun 2023
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை . ஆலையில் அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பது தொடர்பாக ஆலோசனை



  • 13:01 (IST) 02 Jun 2023
    அன்பில் மகேஷ்

    தமிழகத்தில் உள்ள 2,381 பள்ளிகளில் 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்துள்ளனர்" - அமைச்சர் அன்பில் மகேஷ்



  • 12:54 (IST) 02 Jun 2023
    வானதி சீனிவாசன் கண்டனம்

    தமிழ்நாட்டையும், தமிழ்நாடு விவசாயிகளையும் வஞ்சிக்கும் விதமாக, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது- பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ட்வீட்



  • 12:34 (IST) 02 Jun 2023
    பிறந்த நாள் வாழ்த்துகள்

    தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்



  • 12:32 (IST) 02 Jun 2023
    வானதி சீனிவாசன் கண்டனம்

    தமிழ்நாட்டையும், தமிழ்நாடு விவசாயிகளையும் வஞ்சிக்கும் விதமாக, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது- பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ட்வீட்



  • 12:32 (IST) 02 Jun 2023
    மு.க.ஸ்டாலின் ட்வீட்

    இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்- இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்



  • 12:31 (IST) 02 Jun 2023
    எல்.கே.ஜியில் 40 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை

    தமிழ்நாட்டில் உள்ள 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் 40 ஆயிரம் மாணவ- மாணவிகள் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



  • 12:29 (IST) 02 Jun 2023
    தீ விபத்து

    சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், நெருப்பை கட்டுப்படுத்தினர்.



  • 12:05 (IST) 02 Jun 2023
    கருணாநிதி நிர்வாகத்தை கையாள்வதில் ஓர் கலைஞர்: கோபால கிருஷ்ண காந்தி பேச்சு

    மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, “நிர்வாகத்தை கையாள்வதில் ஓர் கலைஞர் (ஆர்டிஸ்ட்) எனக் கூறிய கோபால கிருஷ்ண காந்தி, இதனை உதய நிதிக்கும் இளம் அமைச்சர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.



  • 12:03 (IST) 02 Jun 2023
    கலைஞர் கன்வென்சன் சென்டர்

    சென்னையில் உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் அங்கு நடைபெறும். சிங்கப்பூர் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது இந்த எண்ணம் உதயமானது. மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையவுள்ளது- கருணாநிதி நூற்றாண்டு விழா லட்சினை வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • 12:02 (IST) 02 Jun 2023
    வைகோ கண்டனம்

    மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுகிறது; மத்திய அரசு மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கவே கூடாது; தமிழ்நாட்டின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக்கொள்வதை ஏற்கவே முடியாது- வைகோ கண்டனம்



  • 12:01 (IST) 02 Jun 2023
    கருணாநிதி புகைப்பட கண்காட்சி தொடக்கம்

    முன்னாள் முதலமைச்சரும்,மறைந்த தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதியின் புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது. இதனை தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

    இது தொடர்பாக தமிழக அரசின் ட்விட்டரில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:42 (IST) 02 Jun 2023
    இசைஞானிக்கு 81ஆவது பிறந்தநாள்: நேரில் சென்று வாழ்த்திய மு.க. ஸ்டாலின்

    இசைஞானி இளையராஜாவின் 81ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் சென்று வாழ்த்தினார்.



  • 11:39 (IST) 02 Jun 2023
    இசைஞானிக்கு 81ஆவது பிறந்தநாள்: நேரில் சென்று வாழ்த்திய மு.க. ஸ்டாலின்

    இசைஞானி இளையராஜாவின் 81ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் சென்று வாழ்த்தினார்.



  • 11:29 (IST) 02 Jun 2023
    2 பேர் கைது

    கோவை கருமத்தம்பட்டியில் பேனர் சரிந்து 3 தொழிலாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் பழனிசாமி, மேற்பார்வையாளர் அருண் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள நில உரிமையாளர் ராமசாமியை காவல்துறை தேடி வருகிறது.



  • 11:29 (IST) 02 Jun 2023
    கரூர் ஐ.டி. ரெய்டு

    கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.



  • 11:25 (IST) 02 Jun 2023
    ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை

    கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை; தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



  • 10:57 (IST) 02 Jun 2023
    பேனர் விபத்து - நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

    கோவை கருமத்தம்பட்டியில் பேனர் சரிந்து 3 தொழிலாளிகள் உயிரிழந்த விவகாரம்

    ஒப்பந்ததாரர் பழனிசாமி, மேற்பார்வையாளர் அருண் ஆகிய 2 பேர் கைது

    தலைமறைவாக உள்ள நில உரிமையாளர் ராமசாமியை தேடும் காவல்துறை

    பேனர் சாரம் சரிந்த இடத்தில் நகராட்சி ஆணையர் முத்துசாமி நேரில் ஆய்வு

    நில உரிமையாளர் ராமசாமி உள்பட 4 பேர் மீது 304ஏ ஆகிய பிரிவுகளில் வழக்கு



  • 10:41 (IST) 02 Jun 2023
    கருணாநிதி புகைப்பட கண்காட்சி தொடக்கம்

    முன்னாள் முதலமைச்சரும்,மறைந்த தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதியின் புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது. இதனை தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

    இது தொடர்பாக தமிழக அரசின் ட்விட்டரில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:30 (IST) 02 Jun 2023
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரிப்பு

    சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரிப்பு

    ஒரு கிராம் தங்கம் ரூ.5,638க்கும், சவரன் ரூ. 45,104க்கும் விற்பனை



  • 10:30 (IST) 02 Jun 2023
    இளையராஜாவுக்கு ஸ்டாலின் நேரில் வாழ்த்து

    இசையமைப்பாளர் இளையராஜாவின் 80வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

    சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவகத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்



  • 10:02 (IST) 02 Jun 2023
    ஸ்டெர்லைட் : கழிவுகளை அகற்றும் பணியை அரசே செய்யும்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே செய்ய உள்ளது.

    கழிவு அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்க வேண்டும்.

    இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைப்பு

    செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிராகரிப்பு



  • 09:30 (IST) 02 Jun 2023
    சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

    கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

    காங்கிரஸ் அறிவித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்தும் முடிவை எடுக்க வாய்ப்பு



  • 09:23 (IST) 02 Jun 2023
    பேனர் விபத்து - 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு

    கோவை கருமத்தம்பட்டியில் பேனர் பலகை சரிந்து விழுந்த விபத்து தொடர்பாக 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு.

    பேனர் விழுந்து 3 பேர் பலியானதில் ஒப்பந்ததாரர் பாலாஜி, பழனிச்சாமி, நில உரிமையாளர் ராமசாமி மீது வழக்கு.



  • 08:32 (IST) 02 Jun 2023
    மிதமான மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 08:12 (IST) 02 Jun 2023
    கோகுல்ராஜ் மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு

    கோகுல்ராஜ் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்

    ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பு வழங்குகிறது



  • 08:04 (IST) 02 Jun 2023
    இன்று வைகாசி விசாகம்

    முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகத்தில், முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள்

    வடபழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் ஏராளமானோர் சாமி தரிசனம்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment