Advertisment

Tamil news today: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 26 August 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News live

Tamil News updates

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போயஸ் இல்ல பணியாளர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், சசிகலா உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

Advertisment

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கனல் கண்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி

 சண்டை கலைஞர் கனல் கண்ணனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொடநாடு வழக்கு இன்று விசாரணை

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. வழக்கு விசாரணைக்கு சயான் உள்ளிட்ட 10 பேரும் ஆஜராகின்றனர். ஜெயலலிதா மரணமடைந்த பின்னர், கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:49 (IST) 26 Aug 2022
    இலங்கை ஆளுநர் சாமி தரிசனம்

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் இலங்கை ஆளுநர் சாமி தரிசனம் செய்தார்.



  • 20:04 (IST) 26 Aug 2022
    அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான கல்வி - மு.க.ஸ்டாலின்

    இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 31 நிறுவனம் தமிழகத்தில் உள்ளது - அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான கல்வியை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்க வேண்டும் என்றும் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும், மாணவிகள் சிலரும் போதை பழக்கத்திற்கு அடிமையானது கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.



  • 20:02 (IST) 26 Aug 2022
    அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான கல்வி - மு.க.ஸ்டாலின்

    இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 31 நிறுவனம் தமிழகத்தில் உள்ளது - அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான கல்வியை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்க வேண்டும் என்றும் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும், மாணவிகள் சிலரும் போதை பழக்கத்திற்கு அடிமையானது கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.



  • 19:39 (IST) 26 Aug 2022
    இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி தட்டுப்பாடு

    இந்தியாவில் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கோவிஷீல்ட் அல்லது கோவேக்ஸின் எடுத்துக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 19:05 (IST) 26 Aug 2022
    ஓடிடி தளத்தில் கிச்சா சுதீப் படம்

    பிரபல நடிகர் கிச்சா சுதீப் நடித்துள்ள விக்ராந்த் ரோனா திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் செப்.2ஆம் தேதி வெளியாகிறது.



  • 19:02 (IST) 26 Aug 2022
    ஓபிஎஸ் தலைமையில் இணைந்தார் பாக்யராஜ்

    ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இயக்குனர் கே. பாக்யராஜ் அதிமுகவில் இணைந்தார்.



  • 18:41 (IST) 26 Aug 2022
    என்வி ரமணாவுக்கு பிரிவுபசார விழா

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு பிரிவுபசார விழா இன்று நடைபெற்றது.



  • 18:08 (IST) 26 Aug 2022
    ஓபிஎஸ் தலைமையில் இணைந்தார் பாக்யராஜ்

    ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இயக்குனர் கே. பாக்யராஜ் அதிமுகவில் இணைந்தார்.



  • 17:32 (IST) 26 Aug 2022
    ஓ.பன்னீர் செல்வத்துடன் பாக்யராஜ் சந்திப்பு

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ் சந்தித்து பேசினார்.



  • 17:15 (IST) 26 Aug 2022
    இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு

    இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் உயர்வுடன் வணிகமாகின. மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ குறியீட்டெண் 59.15 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ நிப்ஃடி 36.54 புள்ளிகளும் உயர்ந்து வணிகமாகின.



  • 17:14 (IST) 26 Aug 2022
    இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு

    இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் உயர்வுடன் வணிகமாகின. மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ குறியீட்டெண் 59.15 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ நிப்ஃடி 36.54 புள்ளிகளும் உயர்ந்து வணிகமாகின.



  • 15:51 (IST) 26 Aug 2022
    சென்னையில் திடீா் மழை: விமான சேவைகள் பாதிப்பு!

    சென்னையில் இன்று மதியம் பெய்த திடீா் மழையால் 10க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. விசாகப்பட்டிணத்திலிருந்து வந்த விமானம், தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பிச் சென்றது. கொச்சி, மதுரையில் இருந்து வந்த விமானங்கள் தாமதமாக தரையிறங்கின



  • 15:26 (IST) 26 Aug 2022
    கஞ்சா விற்பனை: குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதான ஸ்ரீகாந்த் (24), சஞ்சய் (23) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • 15:25 (IST) 26 Aug 2022
    குலாம் நபி ஆசாத் மீது விமர்சனம் வைத்த காங்கிரஸ் மூத்த தலைவர்!

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகியதோடு, தான் விலகிய காரணம் குறித்து தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், குலாம் நபி ஆசாத் மீது விமர்சனம் வைத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "காங்கிரஸ் தலைமையால் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்ட நபர், தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி உண்மை முகத்தை வெளிக்காட்டி துரோகத்தை செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.



  • 15:12 (IST) 26 Aug 2022
    கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு காவல் நீடிப்பு!

    கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளியின் நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் வரும் செப்டம்பர் 9ம் தேதி வரை காவலை நீடிக்க விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.

    சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை ஜாமின் வழங்கிய நிலையில், அது குறித்த ஆணை விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வராததால் சேலம் சிறையில் உள்ள 5 பேரையும் காணொளி காட்சி வாயிலாக நீதிமன்ற காவல் நீடிப்பு செய்து உத்தரவிட்டது விழுப்புரம் நீதிமன்றம்.



  • 14:40 (IST) 26 Aug 2022
    வருகிற 29ம் தேதி மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

    தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி மாலை 6 மணிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 30ம் தேதி கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



  • 13:33 (IST) 26 Aug 2022
    பாசி நிதி நிறுவன மோசடி: இருவர் கைது!

    திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறையும், 171.74 கோடி அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர் நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக தமிழ்நாடு முழுவதும் 52 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் ரூ. 930 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • 13:32 (IST) 26 Aug 2022
    பரந்தூர் விமான நிலையம்: 3.5 மடங்கு இழப்பீடு வழங்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு!

    பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "விமான நிலையத்துக்கான இடத்திற்கு மூன்றரை மடங்கு இழப்பீடு வழங்கப்படும். நிலத்துக்கு பணம் வழங்குவதோடு, வீடு கட்டவும் பணம் வழங்கப்பட உள்ளது." என்று விளக்கமளித்துள்ளர்.



  • 13:30 (IST) 26 Aug 2022
    பரந்தூரில் விமான நிலையம்: பொதுமக்கள் எதிப்பு - ஆய்வு செய்யம் நாம் தமிழர்!

    பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்களை கேட்டறிந்தார்.



  • 13:28 (IST) 26 Aug 2022
    உ.பி. முதல்வர் மீதான வழக்கு: தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு!

    வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்குத் தொடர உத்திர பிரதேச அரசு அனுமதி மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.



  • 12:28 (IST) 26 Aug 2022
    ராகுல் மீது குலாம் அதிருப்தி

    காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ராகுல்காந்தியின் நடவடிக்கைகள், அரசியலில் அவருடையை முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என சோனியா காந்திக்கு குலாம்நபி ஆசாத் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.



  • 12:17 (IST) 26 Aug 2022
    உச்சநீதிமன்றம் உத்தரவு

    உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவக் கல்வி மாணவர்கள், இந்தியாவில் படிப்பை நிறைவு செய்ய அனுமதி கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 11:42 (IST) 26 Aug 2022
    விலகினார் குலாம் நபி ஆசாத்

    காங்கிரசில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.



  • 11:37 (IST) 26 Aug 2022
    கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின்

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.



  • 11:10 (IST) 26 Aug 2022
    அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ. 752 கோடி நிதி ஒதுக்கீடு

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ. 752 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு



  • 11:06 (IST) 26 Aug 2022
    தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கு

    அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கில், விரிவான விவாதம் தேவை என்பதால் வழக்கை, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.



  • 09:20 (IST) 26 Aug 2022
    செப்.7ல் நீட் தேர்வு முடிவுகள்

    நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியீடு நீட் தேர்வு இறுதி விடைக்குறிப்பு ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகிறது - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு



  • 08:52 (IST) 26 Aug 2022
    ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

    ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. நீர்வரத்து ஒரே நாளில் 14,000 கன அடியிலிருந்து 55,000 கன அடியாக உயர்வு.



  • 08:51 (IST) 26 Aug 2022
    நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கு; 3 பேர் கைது

    நாமக்கல்லில் நிதி நிறுவன உரிமையாளர் கடத்தி கொல்லப்பட்ட விவகாரம். நிதி நிறுவன மேலாளர்கள் பிரகாஷ், குணசேகரன் உள்பட 3 பேரை கைது செய்தது தனிப்படை



  • 08:50 (IST) 26 Aug 2022
    விநாயகர் சதுர்த்தி; 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காசிமேடு, பட்டினப்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment