Advertisment

Tamil news Updates: காலரா பரவல்.. காரைக்காலில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Tamil Nadu News, Tamil News, Petrol price Today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news Updates: காலரா பரவல்.. காரைக்காலில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

காலரா பரவல் எதிரொலியாக, பள்ளி, கல்லூரிகளின் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உள்ளதால், காரைக்காலில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பெட்ரோல் – டீசல் விலை

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

இன்று கூடுகிறது மகாராஷ்டிரா சட்டப்பேரவை

மகாராஷ்டிராவில் இன்று கூடுகிறது சிறப்பு சட்டப்பேரவை கூடுகிறது.  சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.   நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

கரூர் மற்றும் நாமக்கல்: முதல்வர் 2 நாட்கள் சுற்றுப்பயணம்  

கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்  மேற்கொள்கிறார். நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

கடைசி டெஸ்ட்- 84 ரன்கள் எடுத்த இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி தடுமாற்றம் முதல் இன்னிங்சில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.  இந்திய அணியை விட 332 ரன்கள் பின் தங்கியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



  • 22:21 (IST) 03 Jul 2022
    தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

    தமிழ்நாடு மீனவர்கள் 12 பேர் விசைப்படகுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



  • 20:16 (IST) 03 Jul 2022
    பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் நடவடிக்கை: ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை

    பேருந்தில் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணிகளை நடத்துநர்கள் மரியாதை குறைவாக நடத்துவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து போக்குவரத்து துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



  • 19:43 (IST) 03 Jul 2022
    பா.ஜ.க-வுக்கான ஆதரவு மக்களின் அன்பால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது - மோடி

    பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை: பா.ஜ.க-வுக்கான ஆதரவு மக்களின் அன்பால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; பாஜகவிற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும்; நாட்டின் பல பகுதிகளில் பாஜகவின் அரசு உள்ளது, அம்மாநிலங்கள் முன்னேற்ற பாதையில் உள்ளன” என்று கூறினார்.



  • 19:27 (IST) 03 Jul 2022
    காரைக்காலில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

    காலரா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால், காரைக்காலில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். காலரா பரவல் எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளின் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:25 (IST) 03 Jul 2022
    எஸ்.டி, ஓ.பி.சி-யினர் எண்ணங்களை பாஜக நிறைவேற்றும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - மோடி

    பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை: “பழங்குடியினர்கள்,பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணங்களை பாஜக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பாஜக அரசு அனைவருக்குமான சேவையை வழங்கி வருகிறது; கொரோனா காலத்திலும் மத்திய அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்தது.” என்று கூறினார்.



  • 18:56 (IST) 03 Jul 2022
    எதிர்க்கட்சி அரசுகளின் சமாதான அரசியல் வகுப்புவாதத்திற்கு வழிவகுத்தது - பாஜக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு

    எதிர்க்கட்சிகள் தலைமையிலான அரசுகள் நடத்தும் சமாதான அரசியலால் நாட்டில் வகுப்புவாதம் மற்றும் தீவிரமயமாக்கலுக்கு இட்டுச் சென்றுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நாட்டில் சாந்தப்படுத்துதல், வாரிசு அரசியல் மற்றும் சாதிவெறி அரசியல் முடிவுக்கு வரும் போது, ​​இந்தியா ‘விஷ்வ குரு’ ஆக முன்னேறும் என்றார்.

    பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தின் நிறைவு நாளில், வரவிருக்கும் தேர்தலுக்கு இலக்கை நிர்ணயித்து அரசியல் தீர்மானத்தை முன்வைத்த அமித்ஷா, வரும் 30-40 ஆண்டுகள் பாஜகவின் சகாப்தமாக இருக்கும். வளர்ச்சி மற்றும் செயல்திறனில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.



  • 17:27 (IST) 03 Jul 2022
    காலரா அறிகுறி - காரைக்காலில் 144 தடை உத்தரவு

    காரைக்கால்ல் சிலருக்கு காலரா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை முதல் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்; கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 16:58 (IST) 03 Jul 2022
    மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது - ஸ்டாலின்

    தமிழகத்தில் பல திட்டங்கள் ஓராண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்வதால் என்னை மக்கள் வரவேற்கின்றனர், பாராட்டுகின்றனர். மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது - முதல்வர் ஸ்டாலின் பேச்சு



  • 16:43 (IST) 03 Jul 2022
    மக்கள் சேவையாற்றவே அரசியலுக்கு வந்தேன் - ஸ்டாலின்

    மக்கள் சேவையாற்றவே அரசியலுக்கு வந்தேன். மிசா காலத்தில் அரசியலே வேண்டாம் என்று சிலர் எழுதி கொடுத்தபோது, நான் அப்படி எழுதிதர மறுத்தேன் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு



  • 16:42 (IST) 03 Jul 2022
    ஒரு கையெழுத்து மிக பெரிய மாற்றத்தை உருவாக்கும் - முதல்வர் ஸ்டாலின்

    பெரியார், அண்ணா, கருணாநிதி போன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் சேவையாற்ற வேண்டும். உங்களின் ஒரு கையெழுத்து மிக பெரிய மாற்றத்தை உருவாக்கும் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு



  • 16:16 (IST) 03 Jul 2022
    அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டம் நாமக்கல் - ஸ்டாலின்

    அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டம் நாமக்கல். கல்வியிலும் தலைசிறந்து விளங்கும் மாவட்டம் நாமக்கல். தற்போது நாமக்கல் திமுகவின் கோட்டையாக மாறி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேச்சு



  • 16:14 (IST) 03 Jul 2022
    மக்களுக்கு தொண்டாற்ற அருமையான வாய்ப்பு

    மக்களுக்கு தொண்டாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கிடைத்துள்ளது. பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது சாதாரணமானது அல்ல என முதல்வர் ஸ்டாலின் பேச்சு



  • 16:02 (IST) 03 Jul 2022
    உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களின் உயிர்நாடி - மு.க.ஸ்டாலின்

    உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களின் உயிர்நாடி. நானும் உள்ளாட்சி பொறுப்புகளில் பணியாற்றி உள்ளேன் என உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்



  • 15:47 (IST) 03 Jul 2022
    காரைக்காலில் காலரா நோயால் 2 பேர் உயிரிழப்பு

    புதுச்சேரி, காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது



  • 15:18 (IST) 03 Jul 2022
    பணத்திற்கும் பதவிக்கும் அடிமையானவர்கள் இ.பி.எஸ் பக்கம் உள்ளனர் - டி.டி.வி.தினகரன்

    பணத்திற்கும் பதவிக்கும் அடிமையானவர்கள் இ.பி.எஸ் பக்கம் இருக்கிறார்கள். அ.தி.மு.க பொதுக்குழுவிற்கு சென்று உண்மையை உடைத்த ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் ஆகியோரின் துணிச்சல் பாராட்டுக்குரியது என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்



  • 15:04 (IST) 03 Jul 2022
    சமாஜ்வாதி கட்சியில் அனைத்து அமைப்புகளும் கலைப்பு; அகிலேஷ் யாதவ் நடவடிக்கை

    சமாஜ்வாதி கட்சியில் தலைவர் பதவியை தவிர அனைத்து அமைப்புகளும் கலைக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த அகிலேஷ் யாதவ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்



  • 14:45 (IST) 03 Jul 2022
    இ.பி.எஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் - நத்தம் விஸ்வநாதன்

    அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும் என இபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்



  • 14:33 (IST) 03 Jul 2022
    அ.தி.மு.க பொதுக்குழு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும் - நத்தம் விஸ்வநாதன்

    அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்



  • 14:04 (IST) 03 Jul 2022
    44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் - 3வது இந்திய அணி அறிவிப்பு

    சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க உள்ள 3வது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் தமிழக வீரர்கள் கார்த்திகேயன், சேதுராமன் உள்ளிட்ட 5 பேர் பங்கேற்கின்றனர்



  • 13:51 (IST) 03 Jul 2022
    அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற உள்ள இடத்தில் இ.பி.எஸ் தரப்பு ஆய்வு

    வரும் ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் மண்டபத்தில் இ.பி.எஸ் தரப்பு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், வேலுமணி, அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்



  • 13:40 (IST) 03 Jul 2022
    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 13:26 (IST) 03 Jul 2022
    பொள்ளாச்சியில் பச்சிளம் குழந்தை கடத்தல்

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. குழந்தையை கண்டுபிடிக்க 6 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்



  • 13:10 (IST) 03 Jul 2022
    மெரினாவில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

    சென்னை, மெரினா கடற்கரை அருகே பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் இளமாறன் என்பவரை, 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கினர்



  • 12:55 (IST) 03 Jul 2022
    அ.தி.மு.க பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை - வைத்திலிங்கம்

    அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை. தலைமைச் கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, பிறகு இணைந்தபோதும் பொருளாளர் பொறுப்பில்தான் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கியது. தற்போது இரட்டை தலைமை சர்ச்சை உள்ளதால் பொருளாளருக்குதான் சின்னமும், கட்சியை வழிநடத்தும் அதிகாரமும் உள்ளது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்



  • 12:46 (IST) 03 Jul 2022
    அ.தி.மு.க நிர்வாகிகளுடன் இ.பி.எஸ் மீண்டும் ஆலோசனை

    பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் உடன் இபிஎஸ் ஆலோசனை செய்து வருகின்றனர்



  • 12:25 (IST) 03 Jul 2022
    மகாராஷ்டிரா சபாநாயகராக பா.ஜ.க.,வின் ராகுல் நர்வேகர் தேர்வு

    மகாராஷ்டிரா சபாநாயகராக பா.ஜ.க.,வின் ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 164 எம்.எல்.ஏ.,க்கள் வாக்களித்துள்ளனர்



  • 11:41 (IST) 03 Jul 2022
    மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் தொடங்கியது

    மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் தொடங்கியது . சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்வாக உள்ளார். சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டி நிலவுகிறது.



  • 11:40 (IST) 03 Jul 2022
    மாயமான 2 மீனவர்கள் சடலமாக மீட்பு

    ராமநாதபுரத்தில் கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான 2 மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கீழக்கரை அருகே உள்ள மங்களேஸ்வரி நகரில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள், கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்ததில் 2 மீனவர்களும் மாயமாகினர் என்பது குறிப்பிடதக்கது.



  • 09:48 (IST) 03 Jul 2022
    இந்தியா கொரோனா நிலவரம் - 31 பேர் உயிரிழப்பு

    இந்தியாவில் கொரோனாவால் 16,103 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 13,929 பேர் குணமடைந்துள்ளனர் . கொரோனாவுக்கு தற்போது 1.11 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 09:46 (IST) 03 Jul 2022
    தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு

    சென்னை, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள கட்டிடத்தில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் தீயில் கருகி உயிரிழப்பு.



  • 09:45 (IST) 03 Jul 2022
    இலங்கையில் இருந்து வந்த அகதி உயிரிழப்பு

    ராமநாதபுரம்; தனுஷ்கோடி அருகே கடந்த 27ம் தேதி இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 2 முதியவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரமேஸ்வரி என்ற அகதி சிகிச்சை பலனின்றி உயிரந்துள்ளார்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment