Advertisment

Tamil news today: 2023 - 2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 31 January 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today: 2023 - 2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்

2023-24 நிதியாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்குகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றுகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

வேட்பு மனுத்தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. பல்வேறு கட்டுபாடுகளுடன் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/



  • 21:25 (IST) 31 Jan 2023
    டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் பதில்

    வரவு செலவு தொடர்பான விவரங்கள் அளிக்க கோரிய வழக்கில், PM Cares நிதியானது இந்திய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.



  • 20:43 (IST) 31 Jan 2023
    குடிநீர் தொட்டியில் இளைஞர் சடலம்

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்த குடிநீரை குடித்த கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 20:41 (IST) 31 Jan 2023
    கால்பந்து வீரர் மெஸ்ஸி இன்ஸ்டா கணக்கு முடக்கம்

    உலககோப்பை வெற்றிக்கு பிறகு இன்ஸ்டாவில் ரசிகர்கள் அனுப்பிய செய்திகளால் தனது இன்டாகிராம் கணக்கு நில நாட்கள் முடக்கி வைத்திருந்ததாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கூறியுள்ளார்.



  • 20:16 (IST) 31 Jan 2023
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்தது!

    வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து திரிகோணமலைக்கு 250 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. முன்னதாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், தற்போது மணிக்கு 7 கி.மீ. என வேகம் குறைந்தது



  • 19:57 (IST) 31 Jan 2023
    கொலை முயற்சி வழக்கு; அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு

    2011ஆம் ஆண்டு திமுக நகரச் செயலாளர் சுரேஷ் என்பவரை கொலை செய்ய முயன்றதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் அளிக்கப்பட்டது.

    இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில் வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் இன்று விடுவிக்கப்பட்டார்.



  • 19:45 (IST) 31 Jan 2023
    விஜய் படத்தில் மன்சூர் அலிகான்

    நடிகர் விஜய்யின் 67ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

    இந்தப் படத்தில் லோகேஷின் விருப்ப நடிகரான மன்சூர் அலிகான் நடிக்கிறார். அதேபோல் இயக்குனர் மிஷ்கினும் இணைந்துள்ளார்.



  • 19:34 (IST) 31 Jan 2023
    அந்த 4 பேர் மதிக்காவிட்டால்தான் என்ன? செல்வ ராகவன்

    இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில், “சொத்து இருந்தால்தான் நான்கு பேர் மதிப்பார்கள் என்கிறார்கள். அந்த 4 பேர் மதிக்காவிட்டாலும் என்ன?

    தங்கத் தட்டில் சாப்பிட்டாலும், இலையில் சாப்பிட்டாலும் சோற்றின் ருசி ஒன்றுதான்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 19:23 (IST) 31 Jan 2023
    மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

    பொருளாதாரத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்திய பிரிட்டன் அசீவர்ஸ் அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது.



  • 19:21 (IST) 31 Jan 2023
    மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

    பொருளாதாரத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்திய பிரிட்டன் அசீவர்ஸ் அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது.



  • 19:02 (IST) 31 Jan 2023
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாணவன் உடல்

    விருத்தாச்சலத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றில் என்ஜினீயரிங் மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.



  • 18:30 (IST) 31 Jan 2023
    டி.ஆர்.பாலு எம்.பி.யின் மூத்த சகோதரி பவுனம்மாள் மரணம்

    தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.யின் மூத்த சகோதரி பவுனம்மாள் (87) உடல்நலக்குறைவால் இன்று மன்னார்குடியில் காலமானார்; இறுதிச்சடங்குகள் நாளை மாலை (பிப்ரவரி 1) சொந்த ஊரான தளிக்கோட்டையில் நடக்க உள்ளது.



  • 18:26 (IST) 31 Jan 2023
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியில்லை; ஆதரவு யாருக்கு? அண்ணாமலை நாளை அறிவிப்பு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியில்லை

    சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    பா.ஜ.க ஆதரவு யாருக்கு என்பதை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை அறிவிக்கிறார்.



  • 18:22 (IST) 31 Jan 2023
    வருமானவரித் துறையின் நோட்டீசை எதிர்த்து எஸ்.பி வேலுமணி ஐகோர்ட்டில் வழக்கு

    2016 தேர்தலின்போது பல்வேறு தொகுதிகளுக்கு வழங்க, ரூ.7 கோடியை சேகர் ரெட்டிக்கு வழங்கியதாக எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வருமானவரித் துறையின் நோட்டீசை எதிர்த்து வேலுமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு; நோட்டீசுக்கு தடைவிதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 18:08 (IST) 31 Jan 2023
    போலி இணையதளங்களை முடக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

    போலி இணையதளங்களை முடக்க வேண்டும். கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 18:07 (IST) 31 Jan 2023
    அண்ணா என்றும் வாழ்கிறார்; இன்றும் ஆள்கிறார் - மு.க.ஸ்டாலின் கடிதம்

    அண்ணா நினைவுநாளையொட்டி தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “நமது அன்னை நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமகன்... தாய்க்குப் பெயர் சூட்டிய பெருமை படைத்த தனயன், பேரறிஞர் அண்ணா; அண்ணா என்றும் வாழ்கிறார்; இன்றும் ஆள்கிறார்; இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:03 (IST) 31 Jan 2023
    காவிரியிலிருந்து கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதாக தமிழ்நாடு அரசு புகார்

    காவிரியிலிருந்து கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதாக தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்துள்ளது. காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு மீறுகிறது. இதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.



  • 18:03 (IST) 31 Jan 2023
    காவிரியிலிருந்து கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதாக தமிழ்நாடு அரசு புகார்

    காவிரியிலிருந்து கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதாக தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்துள்ளது. காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு மீறுகிறது. இதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.



  • 18:00 (IST) 31 Jan 2023
    பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் பிரச்னைகளை எழுப்பும் காங்கிரஸ் - கார்கே

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை காங்கிரஸ் எழுப்பும் என்று டெல்லி விமானநிலையத்தில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.



  • 17:59 (IST) 31 Jan 2023
    விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கு: சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி கோர்ட்

    கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த புகாரில், மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா, ஜனவரி 7ம் தேதி அன்று பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.



  • 17:54 (IST) 31 Jan 2023
    எங்கள் முடிவுக்காக அ.தி.மு.க காத்திருக்கட்டும்; அது பற்றி கவலை இல்லை - பா.ஜ.க நாராயணன் திருப்பதி

    பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கபடவில்லை. ஓரிடு நாட்களில் எங்களது முடிவு தெரிவிக்கப்படும். அ.தி.மு.க-வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும்; அது பற்றி கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.



  • 17:37 (IST) 31 Jan 2023
    மேகதாது அணை விவகாம் : தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல்

    மேகதாது அணை விவகாரத்தில் - தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெங்களூரு குடிநீர் திட்டத்திற்கு காவிரியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.



  • 17:35 (IST) 31 Jan 2023
    ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை

    சிறுமி வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:59 (IST) 31 Jan 2023
    மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

    சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு வாலிபரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் துரத்தி அடித்தனர். ஒரு மாணவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



  • 16:45 (IST) 31 Jan 2023
    பாலியல் வன்கொடுமை வழக்கு; சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை

    பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் மாநிலம் காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபு தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளார்



  • 16:25 (IST) 31 Jan 2023
    ஈரோடு கிழக்கு தொகுதி; முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு

    ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை



  • 16:04 (IST) 31 Jan 2023
    இடைத்தேர்தலில் பா.ஜ.க.,வின் நிலைப்பாடு? – அண்ணாமலை தலைமையில் ஆலோசனை

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியா? கூட்டணி கட்சிக்கு ஆதரவா ? பாஜக நிலைப்பாடு குறித்து மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது



  • 15:46 (IST) 31 Jan 2023
    விஜய்காந்தை சந்தித்த எஸ்.ஏ.சி

    விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் நலம் விசாரித்தார். "என் உயிரை நான் சந்தித்த போது" என குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்



  • 15:25 (IST) 31 Jan 2023
    இலங்கை அதிபர் தேர்தல்; சிறிசேனா போட்டி

    இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது



  • 15:17 (IST) 31 Jan 2023
    தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா

    கொரோனா, மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தூய்மை பணியாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவருந்தினர்



  • 14:51 (IST) 31 Jan 2023
    இடைக்காலத் தடை

    ரூ.7986.32 கோடி வரி செலுத்த வேண்டுமென டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:50 (IST) 31 Jan 2023
    இலங்கை அதிபர் தேர்தல்

    இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.



  • 14:50 (IST) 31 Jan 2023
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் யாதவ், ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • 14:43 (IST) 31 Jan 2023
    ஆந்திரா தலைநகர்

    ஆந்திர மாநிலத்தின் தலைநகரை விசாகப்பட்டினம் ஆக மாற்றி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவிப்பு வெளியிட்டார்



  • 13:49 (IST) 31 Jan 2023
    கனமழைக்கு வாய்ப்பு

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை மாற்றம் காரணமாக, பிப். 2ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    பிப்.1ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு



  • 13:47 (IST) 31 Jan 2023
    நீதிமன்றம் உத்தரவு

    வருமான வரி வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 13:47 (IST) 31 Jan 2023
    கால அவகாசம்

    மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15 வரை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.



  • 13:14 (IST) 31 Jan 2023
    கடும் அமளி

    சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய கூட்டத்தில் திமுக, அதிமுக ஆதரவாளர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டது.



  • 12:57 (IST) 31 Jan 2023
    பேனா நினைவுச்சின்னம் அமைக்க சீமான் எதிர்ப்பு

    பேனா நினைவுச்சின்னம் அமைக்க சீமான் எதிர்ப்பு. 13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும்: சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன் என கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்.



  • 12:54 (IST) 31 Jan 2023
    தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்த கடுமையான நிலைப்பாடை பற்றி உலக நாடுகள் புரிந்துகொள்கிறது

    தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்த கடுமையான நிலைப்பாடை பற்றி உலக நாடுகள் புரிந்துகொள்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா சொல்ல வருவதை உலக நாடுகள் கேற்கிறது- குடியரசு தலைவர் திரெளபதி முர்மு



  • 12:34 (IST) 31 Jan 2023
    மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுக்கள்

    மழைக்காலங்களில் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு விழா மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் - முதல்வர் ஸ்டாலின்



  • 12:01 (IST) 31 Jan 2023
    கொரோனா காலத்தில் ஒரு ஏழைகூட வெறும் வயிற்றோடு உறங்கவில்லை

    கொரோனா காலத்தில் உலகம் முழுவதிலும் உள்ள ஏழை மக்கள் உணவின்றி தவித்தனர். ஆனால் இந்தியாவில் ஏழை மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கொரோனா காலத்தில் ஒரு ஏழைகூட வெறும் வயிற்றோடு உறங்கவில்லை- குடியரசு தலைவர் திரெளபதி முர்மு



  • 11:46 (IST) 31 Jan 2023
    ஒடுக்கப்பட்டவர்களின் கனவுகளை நினைவாக்கிய மத்திய அரசு

    எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஒபிசி மக்களின் கனவுகளை நினைவாக்கி உள்ளது மத்திய அரசு. அவர்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்துள்ளது. தற்போது அவர்கள் புதிய கனவுகளை காணலாம்-

    குடியரசு தலைவர் திரெளபதி முர்மு



  • 11:38 (IST) 31 Jan 2023
    ஏழ்மையற்ற நாடாக திகழ வேண்டும்

    2024-ஆம் ஆண்டுக்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக திகழ வேண்டும். அனைவருக்கும் வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. 9 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகள் பார்வை மாறியுள்ளது. – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு



  • 11:37 (IST) 31 Jan 2023
    ஏழ்மையற்ற நாடாக திகழ வேண்டும்

    2024-ஆம் ஆண்டுக்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக திகழ வேண்டும். அனைவருக்கும் வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. 9 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகள் பார்வை மாறியுள்ளது. – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு



  • 11:33 (IST) 31 Jan 2023
    முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது

    காஷ்மீர் 370-வது சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் ஒழிப்பு வரை முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்று குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.



  • 11:22 (IST) 31 Jan 2023
    பட்ஜெட் கூட்டத்தொடர்

    குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்



  • 10:56 (IST) 31 Jan 2023
    தேசிய கல்விக் கொள்கையால் தரமான கல்வி - ஐஐடி இயக்குநர்

    தேசிய கல்விக் கொள்கை மூலம் அனைவருக்கும் மிகவும் தரமான கல்வியை கொடுத்து வருகிறோம். புதிய கல்விக் கொள்ளை மூலம் இந்தியாவில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வி வழங்கப்படுகிறது - ஐஐடி இயக்குநர் காமகோடி



  • 10:55 (IST) 31 Jan 2023
    எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம் - பிரதமர் மோடி

    பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவது நாட்டுக்கே பெருமை. மிகப்பெரிய கவுரவம். எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம் - நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி



  • 10:29 (IST) 31 Jan 2023
    இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடக்கம்

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 203 புள்ளிகள் சரிந்து 56,296 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52 புள்ளிகள் சரிந்து 17, 596 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.



  • 10:24 (IST) 31 Jan 2023
    சென்னையில் ஜி-20 கல்வி கருத்தரங்கம் தொடங்கியது

    சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் 3 நாட்கள் நடக்கும் ஜி-20 கல்வி கருத்தரங்கம் தொடங்கியது. பிப்ரவரி 2 வரை நடக்கும் கருத்தரங்கில் ஜி-20 நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.



  • 09:47 (IST) 31 Jan 2023
    விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

    ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று (ஜனவரி 31) மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல தடை



  • 09:28 (IST) 31 Jan 2023
    ஜி20 கல்வியாளர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது

    ஜி20 கல்வியாளர்கள் மாநாடு இன்று சென்னையில் தொடங்குகிறது

    ஜி20 அமைப்பில் உள்ள 20 நாடுகளில் 16க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கின்றன

    ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு கல்விக் கொள்கைகள் குறித்த தகவல்களை பகிரவுள்ளன



  • 08:55 (IST) 31 Jan 2023
    ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் சஸ்பெண்ட்

    நாமக்கல் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் சஸ்பெண்ட்

    அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து நடவடிக்கை



  • 08:51 (IST) 31 Jan 2023
    வங்கக்கடலில் வலுவடையும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    வங்கக்கடலில் வலுவடையும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    தென் தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு

    இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 08:01 (IST) 31 Jan 2023
    இ.பி - ஆதார் எண் இணைக்க இன்றே கடைசி நாள்

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்

    இதுவரை 90% மின் இணைப்புகள் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது

    அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா என நுகர்வோர்கள் எதிர்பார்ப்பு



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment