Advertisment

Tamil news Today: தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா சிறப்புத் தடுப்பூசி முகாம்

Tamil news Today, Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 17 september 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news Today: தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா சிறப்புத் தடுப்பூசி முகாம்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

பெரியார் 144வது பிறந்தநாள்

தந்தை பெரியார் 144வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியார் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

மோடி பிறந்தநாள்

இன்று பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள். பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு ரத்த தான முகாம் தொடங்கப்பட உள்ளது.

2023 ஆகஸ்டில் ஹைட்ரஜன் ரயில்

முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஹைட்ரஜன் ரயில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:54 (IST) 17 Sep 2022
    விமான நிலையத்திற்கு எதிர்ப்பு : மக்களுக்கு ஆதரவு அளித்த பி.ஆர்,பாண்டியன் கைது

    2வது பசுமை விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில், 53வது நாளான நடைபெறும் இந்த போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது...

    இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த மாநில விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வரும் வழியிலேயே கைது செய்யப்பட்டார்.

    ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தங்களிடம் கருத்து கேட்டு 80 சதவீத மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நிலம் எடுக்க அரசு முன் வர வேண்டும் இல்லாவிட்டால் மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • 19:50 (IST) 17 Sep 2022
    கனியாமூர் பள்ளியை சீரமைக்க அனுமதி வழங்கி ஆட்சியர் உத்தரவு

    கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவரத்தின் போது சிதைந்து போன பள்ளியை மறுசீரமைப்பு செய்ய அனுமதி அளிப்பது தொடர்பாக ஆட்சியருக்கு 10 நாட்கள் பரிசீலிக்க அனுமதி வழங்கி இருந்த நிலையில் பள்ளியை மறுசீரமைக்க அனுமதி வழங்கி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார், பெற்றோர், பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து, பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் கூறியுள்ளார்.



  • 18:52 (IST) 17 Sep 2022
    பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

    “வெளிநாட்டில் இருந்து சிறுத்தைகள் வந்துவிட்டன. 8 நாள்களில் 16 கோடி வேலை வாய்ப்புகள் எப்போது கிடைக்கும். இன்னமும் கிடைக்கவில்லை” எப்போது கிடைக்கும்? என ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.



  • 18:13 (IST) 17 Sep 2022
    ராணி எலிசபெத் இறுதிசடங்கு: லண்டன் புறப்பட்டார் திரௌபதி முர்மு

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இலண்டன் புறப்பட்டு சென்றார்.



  • 17:59 (IST) 17 Sep 2022
    அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்திக்

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு, சக வீரரான தினேஷ் கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 17:32 (IST) 17 Sep 2022
    இந்தியாவுக்கு வருகிறது MotoGP பந்தயம்!

    MotoGP பந்தய போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:51 (IST) 17 Sep 2022
    தென்காசி: ஊர் கட்டுப்பாடு: மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம்!

    தென்காசியில் தலித் மாணவர்களுக்கு ஊர் கட்டுப்பாடு எனக்கூறி, தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட அலுவலர், வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 16:48 (IST) 17 Sep 2022
    பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் பிறந்த நாள் வாழ்த்து!

    "இலக்கை அடைய, ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள். ஒரு நாள் விடுமுறை எடுத்து பிறந்தநாளை கொண்டாடுங்கள்" என்று பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ஷாருக்கான் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 16:30 (IST) 17 Sep 2022
    பாகிஸ்தான்: கனமழை, வெள்ளத்தால் 1.6 கோடி குழந்தைகள் பாதிப்பு - ஐ.நா. தகவல்!

    பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 1.6 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.



  • 16:01 (IST) 17 Sep 2022
    தேசிய ஜூனியர் தடகளம் போட்டியில் தமிழக அணிக்கு 53 பேர் தேர்வு..!

    17-வது தேசிய இளையோர் தடகள போட்டி இன்று முதல் 19-ந்தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார். 23 வீரர்களும், 30 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 53 பேர் ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.



  • 15:38 (IST) 17 Sep 2022
    தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

    பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கில் தேஜஸ்வி யாதவின் ஜாமினை ரத்து செய்யக்கோரி சிபிஐ வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



  • 15:13 (IST) 17 Sep 2022
    சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள்!

    சென்னை மாநகராட்சியில் நாளை 37-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.



  • 15:02 (IST) 17 Sep 2022
    'தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை' - அமைச்சர் மா.சு தகவல்!

    மருந்து இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை, மருந்து தட்டுப்பாடு இருப்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.



  • 14:50 (IST) 17 Sep 2022
    கேரளாவில் நாய்கள் படுகொலை: பிரபல கிரிக்கெட் வீரர் வேதனை!

    கேரளாவில் நாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதாக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் டுவிட் செய்து உள்ளார்.



  • 14:36 (IST) 17 Sep 2022
    லட்சக்கணக்கான தாயார்கள் என்னை இன்று ஆசீர்வதித்து வருகின்றனர்: பிரதமர் மோடி பேச்சு!

    இன்று தனது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில், லட்சக்கணக்கான தாயார்கள் என்னை இன்று ஆசீர்வதித்து வருகின்றனர் என்று பேசியுள்ளார்.



  • 14:35 (IST) 17 Sep 2022
    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 'தமிழ்நாடு அரசு தனது கடமையை செய்து வருகிறது' - ஓபிஎஸ்

    "முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் தமிழ்நாடு அரசு தனது கடமையை செய்து வருகிறது. தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும். " என்று முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



  • 13:25 (IST) 17 Sep 2022
    வானிலை மையம் அறிவிப்பு

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 12:34 (IST) 17 Sep 2022
    பெட்டிக்கடைக்கு சீல்

    தென்காசி, பாஞ்சாகுளம் கிராமத்தில், பட்டியல் இன சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் உத்தரவின் பேரில், வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.



  • 12:31 (IST) 17 Sep 2022
    சிறுத்தைகளை விடுவித்த மோடி

    பிரதமர் மோடி தனது பிறந்தநாளை ஒட்டி, நமீபியாவில் இருந்து, சரக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட 8 சீட்டா சிறுத்தைகளை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார்.



  • 12:28 (IST) 17 Sep 2022
    மாபெரும் பொதுக்கூட்டம்.. திருமாவளவன்

    செப்.28 இல் மதுரையிலும், அக்.8 இல் கோவையிலும் காங், திமுக மற்றும் இடதுசாரி தோழமை கட்சிகளுடன் சேர்ந்து சனாதன சக்திகளுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.



  • 11:26 (IST) 17 Sep 2022
    பெரியாரை எண்ணி வணங்குகிறேன்- கமல் ட்வீட்

    இறுதிவரைக்கும் எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்கப் போராடிய ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை எண்ணி வணங்குகிறேன்



  • 11:19 (IST) 17 Sep 2022
    தென்காசியில் சாதி பாகுபாடு

    தென்காசியில் பட்டியலின சிறுவர்களுக்கு தின்பண்டம் விற்க மறுத்த விவகாரத்தில், 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஊர் நாட்டாமை தலைமறைவாகி உள்ளார்.



  • 11:19 (IST) 17 Sep 2022
    பி.ஆர்.பாண்டியன் கைது

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உண்ணாவிரதத்தில் பங்கேற்க சென்ற விவசாய சங்கங்களில் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.



  • 10:54 (IST) 17 Sep 2022
    மின் கட்டண உயர்வால் பிற பொருட்களின் விலைவாசியும் உயர்வு

    மின் கட்டண உயர்வால் பிற பொருட்களின் விலைவாசியும் உயர்வு.

    மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விட குறைவானதுதான் என கூறுவதை ஏற்க முடியாது - ஜெயக்குமார்



  • 10:47 (IST) 17 Sep 2022
    பழமைவாத கருத்துகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவாளர் பெரியார் - இபிஎஸ்

    சமூகத்தில் நிலவிய பழமைவாத கருத்துகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவாளர் பெரியார்.

    பெண்களின் சம உரிமைக்காக போராடிய புரட்சியாளர், தன்னலமற்ற தலைவர் பெரியார்.

    பெரியாரின் 144வது பிறந்தநாளை ஒட்டி எடப்பாடி பழனிசாமி ட்வீட்



  • 10:16 (IST) 17 Sep 2022
    திருச்சியில் 'பெரியார் உலகம்' - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

    திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    சென்னை, பெரியார் திடலில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சிறுகனூரில் 30 ஏக்கர் பரப்பளவில், நூலகம், ஆய்வகங்களுடன் 'பெரியார் உலகம்' அமைக்கப்படுகிறது.

    பெரியார் உலகில் 95 அடி உயர பெரியார் சிலையும் நிறுவப்பட உள்ளது.



  • 10:00 (IST) 17 Sep 2022
    ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் குளிக்க அனுமதி

    நாமக்கல்: கொல்லிமலை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி - வனத்துறை



  • 09:53 (IST) 17 Sep 2022
    எலியட்ஸ் கடற்கரையில் தூய்மை பணி திட்டம் தொடக்கம்

    சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தூய்மை பணி திட்டம் தொடக்கம்

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.



  • 09:51 (IST) 17 Sep 2022
    பெரியார் படத்திற்கு ஸ்டாலின் மரியாதை

    பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை.

    அதேபோல், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திக தலைவர் கி.வீரமணி மலர்வளையம் வைத்து மரியாதை



  • 08:57 (IST) 17 Sep 2022
    குவாலியர் விமான நிலையம் கொண்டுவரப்பட்ட சிறுத்தைகள்

    ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து போயிங் 747-சிறப்பு ரக விமானம் மூலம் 8 சிறுத்தைகள் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசம் குவாலியர் விமான நிலையத்தில் காலை 7.50 மணியளவில் சிறுத்தைகள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அந்த சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கிறார். பிரதமர் மோடி பிறந்நாளையொட்டி அவர் சிறுத்தைகளை பூங்காவில் விடுவிக்கிறார்.



  • 08:35 (IST) 17 Sep 2022
    அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு

    பெரியாரின் 144வது பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாட்டம். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது.



  • 08:35 (IST) 17 Sep 2022
    மோடிக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து.

    மோடிக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் இறைவன் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்து.



  • 08:13 (IST) 17 Sep 2022
    பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மரியாதை

    பெரியாரின் 144வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி விழுப்புரம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment