பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் 23வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின்!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம். அமலாக்கத்துறையை பயன்படுத்தி நாட்டின் முக்கிய பிரச்சினைகளை திசை திருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் குரங்கு அம்மை
இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரிப்பு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி விவாதம் எழுந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஆர்.பி. உதயகுமார் இருவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். பின்னர், காரில் புறப்பட்ட ஆர்.பி. உதயகுமார், செய்தியாளர்களின் கேள்விக்கு தலைமை கருத்துதான் எங்கள் கருத்தும் என்று கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்தித்துவருகின்றனர். அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை என செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் சந்தித்து வருகின்றனர்.
நாடுமுழுவதும் கடந்த 8 ஆண்டுகளில் 11.23 கோடி கழிப்பறைகளை கட்டி பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வியூகம் குறித்து விவாதிக்க மம்தா பானர்ஜி கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுடெல்லி வந்த சரத் பவாரை இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரியும் டி ராஜாவும் சந்தித்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டு வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவெடுக்க பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இடையேயான ஆலோசனை செவ்வாய்க்கிழமை வேகமெடுத்துள்ளது.
நாட்டின் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை முக்கியமானது என்பதால், புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாக இடதுசாரி தலைவர்களிடம் சரத் பவார் கூறினார்.
“குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று எங்களிடம் கூறினார். அதையே நாளைய கூட்டத்தில் வெளிப்படையாக கூறுவார். மற்ற வேட்பாளர்களின் சாத்தியக்கூறுகளை நாம் ஆராய வேண்டும்” என்று டி. ராஜா indianexpress.com இடம் கூறினார். இந்தக் கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும் கலந்து கொள்வார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
புதன்கிழமை நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டு கூட்டத்திற்கு முன்னதாக, தலைநகர் டெல்லி வந்தடைந்த மம்தா பானர்ஜி, சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த கூட்டத்தில் என்.சி.பி ராஜ்யசபா எம்பி பிரபுல் படேலும் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க திமுக அக்கட்சியின் மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலுவை நியமித்துள்ளது. அன்றைய தினம் இடதுசாரி தலைவர்கள் டி.ஆர். பாலுவை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொடைக்கானலில் உள்ள டாஸ்மாக்குகளில் நாளை முதல் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக செலுத்த வேண்டும். காலி பாட்டில்களை கடைகளில் திரும்பக் கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீபத்தில் அதிகமாக உள்ளது பொறுத்துக்கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம்: “ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என 8 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் ஏமாற்றப்பட்டனர்; அது இப்போது 10 லட்சமாக மாறியுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை விட, வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை உருவாக்குவதில் பிரதமர் மோடி வல்லவராக இருக்கிறார்” என்று பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானது தொடர்பான வழக்கில், மயில் சிலை மாயமானது குறித்து 29 பேரிடம் உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 9 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவகாசம் வழங்க அறநிலையத்துறை கோரிக்கை வைத்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரிய வழக்கு விசாரணையை ஐகோர்ட் ஜூன் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
கோவையில் அரசு பொருட்காட்சி திறப்பு விழாவில்பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, பாதுகாப்பு பணியிலிருந்த காவலரின் துப்பாக்கியை வாங்கி சுடுவதை போன்று போஸ் கொடுத்த காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புதிய அக்னிபாத் திட்டத்தின் கீழ் மூன்று படைகளிலும் வீரர்கள் பணியமர்த்தப்படுதில் புதிய சீர்திருத்தங்களை அறிவித்தனர். மேலும் உடனடியாக நடைமுறைக்கு வரும். இத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதிமுக ஆலோசனை கூட்டத்தில்,”ஒற்றை தலைமையின் அவசியம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒற்றை தலைமை அவசியம் என வலியுறுத்தினர்” – ஒற்றை தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும்” என்று அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்
குடியரசு தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. வரும் 23ம் தேதி கூடவுள்ள பொதுக்குழு, செயற்குழு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் பனகல் மாளிகை அருகே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர். 4மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
பழனி முருகன் கோவிலில் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஜூன் 16 முதல் ஜூலை 30 வரை சேவை நிறுத்தப்படுகிறது
முப்படைகளின் தலைமைத் தளபதி விரைவில் நியமிக்கப்படுவார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
திருவண்ணாமலையில் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான தடை நீங்கியது. திருவண்ணாமலையில் கருணாநிதியின் சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கில், மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை, போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரிடம் நேரில் நலம் விசாரித்தார் கமல்ஹாசன். நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே எனவும் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்
திருச்சி சமயபுரம் அருகே கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசிய 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
'அக்னிபாத்' என்ற புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ராணுவ செலவுகளை குறைக்கும் வகையில் முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணி வழங்கப்படும்.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன், ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமைக் கோரி தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 முன்னாள் காவலர்களும் மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.
ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்திய ஆலோசனை கூட்டத்தில், வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா ஆதரவாளர்கள் நுழைவதை தடுக்க அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எடை நிர்ணய அளவை உருவாக்கி, அதனடிப்படையில் ஆற்று மணலை விற்பனை செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக தங்கதுரை பொறுப்பேற்றுக் கொண்டார்.
எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது? எஃப்.ஐ.ஆர். இல்லாமல் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க முடியாது. முதல் தகவல் அறிக்கையை எங்களுக்கு காட்ட முடியுமா? என நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாஜகவிற்கு காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளி மாணவர்கள் இடையே நடைபெறும் மோதலை தடுக்க ரோந்து பணிகள் அதிகரிக்கப்படும். பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர கிழக்கு மண்டல காவல் துணை ஆணையர் சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, ராகுல் காந்தியிடம் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் 2வது நாளாக விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி ஆஜரானார்.
வரும் 23ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு, செயற்குழு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தினர். அப்போது, செல்போனுக்கு அனுமதி மறுப்பால், முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்.
பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது. மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது என பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.95 குறைந்து ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 குறைந்து ரூ 66-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வட்டி விகிதங்களை அமெரிக்க மைய வங்கி அதிகரிக்க வாய்ப்பு என தகவல் வெளியானதால் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசுப் பணிகளில் சேர்க்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அனைத்துத்துறை அமைச்சகங்களில் பணியார்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு நடத்திய பிரதமர் உத்தரவு
இந்தியாவில் ஒரே நாளில் 6,594 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று 8,084 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6,594 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் 4,035 பேர் கொரோனா பாதிப்பிருந்து குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,26,61,370
இன்று முதல் துறைவாரியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையிடம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மின்சாரத்துறை சார்பாக நாளை அமைச்சர் செந்தில் பாலஜியுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
வரும் 23ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கூட இருப்பதை முன்னிட்டு இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்த உள்ளனர்.