Advertisment

Tamil News Today: ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா? ஈ.பி.எஸ். தான் சொல்ல வேண்டும்- ஓ.பி.எஸ்!

Tamil Nadu News, Tamil News, Petrol price Today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
o panneerselvam, aiadmk, tamilndu, single leadership for aiadmk, no need single leadership for aiadmk, pm modi insist, o panneerselvam, eps, sasikala, ஒற்றைத் தலைமை தேவையில்லை, பிரதமர் வற்புறுத்தியதால் துணை முதல்வர் பதவி ஏற்றேன், ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி, அதிமுக, ஓபிஎஸ், இபிஎஸ், ஓபிஎஸ் முகாம், இபிஎஸ் முகாம்,

அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை தேவை இல்லாதது. எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் இந்த பிரச்சினை தேவையா? ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது. ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன் – ஓ.பி.எஸ்.

Advertisment

பாலியல் புகார்- தனிக் கமிட்டி அமைக்க உத்தரவு

பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும்  என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் இன்றும் போராட்டம்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிப்பு. நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை இன்று முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

அணை நீர் மட்டம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் - 82.66 அடி, நீர் இருப்பு - 17.1 டிஎம்சி, நீர்வரத்து - 1,988 கனஅடி, நீர் வெளியேற்றம் - 1,005 கன அடி.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் 25வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil



  • 21:51 (IST) 16 Jun 2022
    ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே - ஓ.பி.எஸ்

    ஓ.பி.எஸ் பேட்டி: “எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை தேவையா? நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றை தலைமை குறித்து பேசியது இல்லை; பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவிற்கு கொடுத்த பதவியில் வேறு யாரும் வரக்கூடாது. திமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு பொதுக்குழுவில் வைக்க வேண்டும் என்ற மரபுக்காகவே கூட்டம் நடத்தினோம்; பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை; ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என முடிவு செய்திருந்தோம்; மீண்டும் ஒற்றை தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்” என்று கூறினார்.



  • 20:58 (IST) 16 Jun 2022
    ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும் - ஓபிஎஸ் பேட்டி

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையால் உச்சக்கட்ட குழப்பம் நிலவும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி: ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்; 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு இபிஎஸ் உடன்பட வேண்டும்; ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது. சசிகலா விவகாரத்தில் தலைமை நிர்வாகிகளே முடிவு செய்வார்கள்; தொண்டர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கக் கூடாது என்பது எனது நோக்கம். | எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன்; இருவரும் இணைந்தபோது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை; தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன்; 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு ஈபிஎஸ் உடன்பட வேண்டும்” என்று கூறினார்.



  • 20:13 (IST) 16 Jun 2022
    அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்தோம் - ஓபிஎஸ் பேட்டி

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையால் உச்சக்கட்ட குழப்பம் நிலவும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி: டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்தோம்; 2016ல் அதிமுக ஆட்சி பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் அரசை காப்பாற்ற வாக்களித்தோம்; அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை உருவாக்க முடியும் என்பது கட்சி விதி; தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் எம்.ஜி.ஆர்; ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது” என்று கூறினார்.



  • 19:58 (IST) 16 Jun 2022
    அதிமுக, தொண்டர்கள் இயக்கம்; தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் - ஓபிஎஸ்

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையால் உச்சக்கட்ட குழப்பம் நிலவும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி: “அடிப்படை உறுப்பினர்கள்தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்; அதிமுக, தொண்டர்கள் இயக்கம்; தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும்; பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது; அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது.” என்று கூறினார்.



  • 19:23 (IST) 16 Jun 2022
    விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட் நாளை தீர்ப்பு

    விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.



  • 18:42 (IST) 16 Jun 2022
    மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே எழும் கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும்; ஸ்டாலின் மோடிக்கு கடிதம்

    பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும்; மத்திய, மாநில அரசுகளுக்கிடையே எழும் கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும்; கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.



  • 18:24 (IST) 16 Jun 2022
    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கல்வி நிறுவன மாணவர்கள் முகக்கவசம் அணிய உத்தரவு

    கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவன மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி திடீர் உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளோர் RTPCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.



  • 17:44 (IST) 16 Jun 2022
    அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது - அண்ணாமலை

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது; தமிழ்நாட்டில் வலுவான கட்சியாக அதிமுக உள்ளது என்று கூறினார்.



  • 17:23 (IST) 16 Jun 2022
    குயின்ஸ்லேண்ட் தீம்பார்க்கை காலி செய்ய அறநிலையத் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து - ஐகோர்ட்

    கோவில் நிலத்தில் அமைந்துள்ள குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய அறநிலையத் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள நிலத்தின் உரிமை குறித்த விவகாரம் நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 16:57 (IST) 16 Jun 2022
    இளைஞர்களின் குரல்களை பிரதமர் மோடி கேட்க வேண்டும் -ராகுல் காந்தி

    நாட்டின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் குரல்களை பிரதமர் மோடி கேட்க வேண்டும் அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு உறுதியான எதிர்காலம் இல்லை என அக்னிபத் திட்டம் குறித்து ராகுல் காந்தி ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.



  • 16:56 (IST) 16 Jun 2022
    எடப்பாடி பழனிசாமி உடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை

    சேலம் மாவட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடன் முக்கிய நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகினறனர்.

    அதேபோல் சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் ஈபிஎஸ் உடன் நிர்வாகிகள் சந்தித்து அலோசனை நடத்தி வருகின்றனர்.



  • 16:55 (IST) 16 Jun 2022
    எடப்பாடி பழனிசாமி உடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை

    சேலம் மாவட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடன் முக்கிய நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகினறனர்.

    அதேபோல் சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் ஈபிஎஸ் உடன் நிர்வாகிகள் சந்தித்து அலோசனை நடத்தி வருகின்றனர்.



  • 16:18 (IST) 16 Jun 2022
    அதிமுக தேர்தல் தோல்விக்கு காரணம் கூறும் பிரேமலதா விஜயகாந்த்

    தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பு வழங்குவது குறித்து விஜயகாந்த் முடிவு எடுப்பார் என்றும் தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காததே அதிமுக தோல்விக்கு காரணம் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.



  • 16:14 (IST) 16 Jun 2022
    8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களின் வாழ்க்கை மாறியுள்ளது - பாஜக தலைவர் அண்ணாமலை

    இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களின் வாழ்க்கை மாறியுள்ளது. ஊறுகாய், அப்பளம், கடலை மிட்டாய் விற்பவர்களின் நிலை உயர்ந்துள்ளது என கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • 15:46 (IST) 16 Jun 2022
    கோயில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல்

    ராஜபாளையம் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையால் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.



  • 15:43 (IST) 16 Jun 2022
    மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், ஆட்சியர் அலுவலகத்திலேயே மரணம்

    தென்காசி மாவட்ட புதிய கலெக்டரை வாழ்த்த வந்த மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், ஆட்சியர் அலுவலகத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்



  • 15:41 (IST) 16 Jun 2022
    குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய அனுப்பிய நோட்டீஸ் ரத்து

    கோவில் நிலத்தில் அமைந்துள்ள குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய அறநிலையத் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள நிலத்தின் உரிமை குறித்த விவகாரம் நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் உள்ளது என்று-நீதிமன்றம் கூறியுள்ளது.



  • 15:39 (IST) 16 Jun 2022
    மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், ஆட்சியர் அலுவலகத்திலேயே மரணம்

    தென்காசி மாவட்ட புதிய கலெக்டரை வாழ்த்த வந்த மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், ஆட்சியர் அலுவலகத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்



  • 14:52 (IST) 16 Jun 2022
    "பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்" - ஆர்.பி. உதயகுமார்!

    "தமிழகத்தின் தற்போதைய சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று ஆலோசித்தோம். அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசிட முடியாது. பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்." என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.



  • 14:41 (IST) 16 Jun 2022
    மாவட்ட கல்வி அலுவலர் மரணம்!

    தென்காசியில் புதிய மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் (56) மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



  • 14:40 (IST) 16 Jun 2022
    இலங்கைக்கு 40,000 டன் டீசல்!

    பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கடன் திட்டத்தின் கீழ் இந்தியா அனுப்பிய 40,000 டன் டீசல் கொழும்பு சென்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:16 (IST) 16 Jun 2022
    நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை!

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்துள்ள நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம், செம்மலை, பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.பி.உதயக்குமார், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.



  • 14:11 (IST) 16 Jun 2022
    நடிகை அமலாபால் புகார்!

    நடிகை அமலாபால் கொடுத்த புகாரில் தொழிலதிபருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:10 (IST) 16 Jun 2022
    கால் டாக்ஸி ஓட்டுநர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு!

    செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே கால் டாக்ஸி ஓட்டுநர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான செம்பியம் காவல்நிலைய காவலர் செந்தில்குமார், ஐசக் ஆகியோருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 13:43 (IST) 16 Jun 2022
    ஓட்டம் பிடிக்கும் அதிமுக நிர்வாகிகள்!

    அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரத்தில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த ஓ.பி.எஸ். வர இருந்ததாக வெளியான தகவலை அடுத்து, கட்சி அலுவலகத்தில் இருந்து சி.வி.சண்முகம் புறப்பட்டுச் சென்றார். இதேபோல், அங்கு நடந்துகொண்டிருந்த பொதுக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன் கூட்டியே முடிக்கப்பட்டு மூத்த நிர்வாகிகள் புறப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.



  • 13:40 (IST) 16 Jun 2022
    ஜெயக்குமாரின் கார் மீது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தாக்குதல்!

    அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமாரின் கார் மீது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அதிமுகவை ஜெயக்குமார் அழித்துக் கொண்டிருப்பதாக கட்சி அலுவலகத்தின் வெளியே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.



  • 13:35 (IST) 16 Jun 2022
    "தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும்" - ஓபிஎஸ் பேச்சு!

    சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு வந்தார் ஓ.பன்னீர்செல்வம். சற்று நேரத்திற்கு முன் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த நிலையில், தலைமை அலுவலகம் வந்துள்ளார்.

    "தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும்" என்று ஒற்றைத் தலைமை குறித்த கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.



  • 13:33 (IST) 16 Jun 2022
    ஒற்றைத் தலைமை கோரிக்கை செயல் வடிவம் பெறலாம், பெறாமலும் போகலாம் - ஜெயக்குமார்

    ஓபிஎஸ் வருவதால் ஆலோசனை கூட்டத்தை விட்டு வெளியே வரவில்லை. பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் திட்டமிட்டப்படி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். ஒற்றைத் தலைமை கோரிக்கை செயல் வடிவம் பெறலாம், பெறாமலும் போகலாம் என்று முன்னாள் அதிமுக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.



  • 13:32 (IST) 16 Jun 2022
    பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தல்!

    "ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக போஸ்டர் ஒட்ட வேண்டாம். பொதுச் செயலாளர் என முழக்கம் எழுப்ப வேண்டாம்" என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.



  • 13:26 (IST) 16 Jun 2022
    அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் - ஓபிஎஸ்!

    சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம். அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அவர் அதிமுக அலுவலகம் செல்கிறார்.

    முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ள நிலையில், சென்னையில் மூத்த நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.



  • 12:33 (IST) 16 Jun 2022
    பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும்!

    கொரோனா 2வது தவணை தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும். தொற்றில் இருந்து நம்மை தடுத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதம். காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.



  • 12:33 (IST) 16 Jun 2022
    பொதுத்தேர்வு முடிவுகள்!

    10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.



  • 11:57 (IST) 16 Jun 2022
    புதிய ஆட்சியர் பதவியேற்பு!

    திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக மா.பிரதீப்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



  • 11:57 (IST) 16 Jun 2022
    ஓ.பி.எஸ். இல்லத்தில் 3வது நாளாக ஆலோசனை

    ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக, ஓ.பி.எஸ். இல்லத்தில் 3வது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.



  • 11:56 (IST) 16 Jun 2022
    ஒற்றை தலைமை.. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வெவ்வேறு கருத்து!

    அசாதாரண சூழ்நிலையில் ஒற்றைத் தலைமை பற்றி பொதுக்குழு முடிவெடுக்கலாம். 23ம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவில் உறுப்பினர்களே ஒற்றைத் தலைமையை முடிவு செய்யலாம்- ஈ.பி.எஸ். தரப்பு!

    ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் உள்ளதால் தலைமை குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது – ஓ.பி.எஸ். தரப்பு!



  • 11:56 (IST) 16 Jun 2022
    அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை!

    வரும் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 11:18 (IST) 16 Jun 2022
    முதல்வரை விமர்சித்தவரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி!

    முதல்வர் மு.க.ஸ்டாலினை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்த திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமாரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • 11:18 (IST) 16 Jun 2022
    காங்கிரஸ் எம்.பி.க்கள் புகார்!

    டெல்லி, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் புகார் அளித்தனர்.



  • 10:42 (IST) 16 Jun 2022
    சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் உயர்வு

    புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ரூ 750 அதிகரிப்பு. சிலிண்டர் ஒன்றுக்கு டெபாசிட் தொகையாக 2,200 ஆக நிர்ணயம். 5 கிலோ சிலிண்டர் டெபாசிட் தொகையும் ரூ.800 உயர்வு.



  • 10:36 (IST) 16 Jun 2022
    மகளிர் காவல்நிலையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

    தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 20 மகளிர் காவல்நிலையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். அனைத்து உட்கோட்டங்களில் ஒரு மகளிர் காவல்நிலையம் என்று 20 காவல்நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.



  • 10:14 (IST) 16 Jun 2022
    ஒரே நாளில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. தற்போது 58,215 பேர் தொற்று பாதிப்பில் உள்ளனர்



  • 10:12 (IST) 16 Jun 2022
    மாற்றுத்திறனாளிகள் திருமணம்- புத்தாடை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

    திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் திருமணம் - மணமக்களுக்கு கோயில் சார்பில் புத்தாடை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு . ஏற்கனவே, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், கோயில் மண்டபங்களில் வாடகையின்றி திருமணம் நடத்த அனுமதிக்கப்படுகிறது



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment