Advertisment

Tamil news today : பில்கிஸ் பானு வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 24 August 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : பில்கிஸ் பானு வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

பெட்ரோல் –டீசல் விலை

Advertisment

பெட்ரோல் –டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழை நிலவரம்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. எழும்பூர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

வெளிநாடு செல்லும் சோனியா

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல உள்ளார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் செல்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:07 (IST) 24 Aug 2022
    ஜெய்பீம் படக்குழுவினர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு

    ஜெய்பீம் படத்தில் தங்கள் வாழ்க்கை சம்பவத்தை அனுமதியின்றி படமாக்கியதாக கொளஞ்சியப்பன் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜெய்பீம் படக்குழுவினர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • 20:24 (IST) 24 Aug 2022
    இலங்கை தமிழ்நாடு மீனவர்களை நடவடிக்கை எடுக்க கோரி ஸ்டாலின் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம்

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 20:20 (IST) 24 Aug 2022
    இந்திய அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லஷ்மண் நியமனம் - பிசிசிஐ

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லஷ்மண் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.



  • 19:41 (IST) 24 Aug 2022
    ‘சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம்.... எனது பாணி’ - மு.க.ஸ்டாலின் பேச்சு

    பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “திராவிடம் என்பது சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம், மொழிப்பற்று, இனவுரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம் ஆகியவை இணைந்தது. மொத்தத்தில் திராவிடம் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்லக் கூடிய கருத்துதான். நான் சொல்லி செய்கிறவன் அல்ல, சொல்லாததை செய்பவன்; கலைஞரின் முழக்கம் என்பது 'சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்'; எனது பாணி என்பது 'சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம்” என்று கூறினார்.



  • 19:27 (IST) 24 Aug 2022
    ராகுல் டிராவிட் இடத்தில் லட்சுமணன்?

    ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக லட்சுமணன் செயல்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.



  • 19:01 (IST) 24 Aug 2022
    திமுக கொள்கைகளின் கோட்டை- மு.க. ஸ்டாலின்

    திமுக என்பது அரசியல் கட்சி மட்டுமல்ல, அது கொள்கைகளின் கோட்டை என கோவையில் நடந்த மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.



  • 18:53 (IST) 24 Aug 2022
    எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

    கோவை மாவட்டத்தில் திருமண விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



  • 18:09 (IST) 24 Aug 2022
    கடலோர காவல் படை ஒத்திகை

    இந்திய கடலோர காவல் படை சார்பில் மீட்பு பணிகள் மற்றும் ஒத்திகை சென்னையில் நடைபெற்றது.

    இதில் 2 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன.



  • 18:02 (IST) 24 Aug 2022
    ஜெயபிரதீப்க்கு பாதுகாப்பு அளிக்க கோரி மனு

    ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயப்பிரதீப்க்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி அன்சார் என்பவர் டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.



  • 17:31 (IST) 24 Aug 2022
    திமுகவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ?

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 17:04 (IST) 24 Aug 2022
    ஷின்சோ இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார் மோடி?

    பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரும், ஜப்பான் முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே ஜூலை 8ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இவரது இறுதிச் சடங்கு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.



  • 16:35 (IST) 24 Aug 2022
    அ.தி.மு.க வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரிக்கை - நீதிமன்றம் கண்டனம்

    அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் சார்பில் மனு அளிக்கப்பட்டதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்



  • 16:06 (IST) 24 Aug 2022
    கள்ளக்குறிச்சி மாணவியின் ஜிப்மர் ஆய்வறிக்கை; பெற்றோர் தரப்பிடம் ஒப்படைக்க மறுப்பு

    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான ஜிப்மர் ஆய்வறிக்கையை பெற்றோர் தரப்பிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. விசாரணை நிலுவையில் உள்ளதால், ஜிப்மர் ஆய்வு அறிக்கையை தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது



  • 15:49 (IST) 24 Aug 2022
    பால் சாகித்யா புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிப்பு

    தமிழ் மொழிக்கான 2022ம் ஆண்டு சாகித்ய அகாடமி பால் சாகித்யா புரஸ்கார் விருது 'மல்லிகாவின் வீடு' என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது



  • 15:37 (IST) 24 Aug 2022
    யுவ புரஸ்கார விருது காளிமுத்துவுக்கு அறிவிப்பு

    2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார விருது, ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்ற கவிதை தொகுப்புக்காக, காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது



  • 15:18 (IST) 24 Aug 2022
    அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒப்பந்தத்தில் தற்போது உடன்பாடு - அமைச்சர் சிவசங்கர்

    அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒப்பந்தத்தில் தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு சிறப்பு நிதி அளிக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்



  • 15:12 (IST) 24 Aug 2022
    நிதீஷ் குமார் அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்குபதிவு தொடக்கம்

    பீகார் சட்டசபையில் நிதிஷ் குமார் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது.



  • 15:00 (IST) 24 Aug 2022
    சிலைகளை மீட்க கோரி கடிதம்

    அமெரிக்காவில் இருக்கும் 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த 6 சோழர் கால வெண்கல சிலைகளை மீட்பதற்கு ஒப்புதல் கோரி சிலை கடத்த தடுப்பு பிரிவு போலீசார், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.



  • 14:13 (IST) 24 Aug 2022
    ஊதிய ஒப்பந்தத்தை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

    போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் நடைபெற்ற 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இருந்து சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர். 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊதிய ஒப்பந்தத்தை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.



  • 13:58 (IST) 24 Aug 2022
    சவுரவ் கங்குலி தொடர்பான மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பான மனு, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



  • 13:25 (IST) 24 Aug 2022
    கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கு

    கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் சட்டவிரோதமாக கைதானவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



  • 13:20 (IST) 24 Aug 2022
    விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது

    விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, தொண்டர்கள் நாளை நேரில் அவரை சந்திக்க வரலாம் என பிரேமலதா கூறியுள்ளார்.



  • 13:01 (IST) 24 Aug 2022
    18 மாவட்டங்களில் கனமழைக்க வாய்ப்பு

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

    ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்



  • 12:59 (IST) 24 Aug 2022
    காலியாக உள்ள பதவிகள் - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

    தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் 6 மாதங்களுக்கு மேல் காலியாக உள்ள பதவிகளை நிரப்பக் கோரிய வழக்கு

    6 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



  • 12:31 (IST) 24 Aug 2022
    இலவச திட்ட வழக்கு - வேறு அமர்வுக்கு மாற்றம்

    இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

    டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி



  • 12:24 (IST) 24 Aug 2022
    இலவச திட்டங்கள் - அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கலாமே

    இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய வழக்கு

    அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு ஏன் ஆலோசிக்க கூடாது? - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி



  • 12:03 (IST) 24 Aug 2022
    தமிழகத்தை உற்றுநோக்கும் பிற மாநிலங்கள் - ஸ்டாலின்

    அனைத்து துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது

    தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் உற்றுநோக்கி வருகிறார்கள்

    கட்டணமில்லா பேருந்து, இலவச மின்சாரத்தை சுட்டிக்காட்டி கோவையில் முதல்வர் பேச்சு



  • 12:01 (IST) 24 Aug 2022
    திட்டங்களை தொடங்கி வைத்து ஸ்டாலின் உரை

    கோவை மாவட்டம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது

    கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்

    கோவையில் இதுவரை ரூ.1200 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது



  • 11:08 (IST) 24 Aug 2022
    புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்

    கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு, ஈச்சனாரி, இரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றவுள்ளார்.

    முடிவுற்ற திட்டப் பணிகள் - (ரூ.267.83 கோடி மதிப்பீட்டில் 226 பணிகள் )

    அடிக்கல் நாட்டும் திட்டப் பணிகள் - (ரூ.644.84 கோடி மதிப்பீட்டில் 761 பணிகள் )

    அரசு நலத்திட்ட உதவிகள் - (ரூ.587.68 கோடி மதிப்பீட்டில் 106641 பயணாளிகளுக்கு)



  • 11:01 (IST) 24 Aug 2022
    முதல்வர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி- பலத்த பாதுகாப்பு.

    கோவை ஈச்சனாரி பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அனைவரது உடைமைகளும் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் உடல் வெப்பநிலையும் சோதனை செய்யப்பட்டு முக கவசங்களும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

    மேலும் நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.



  • 10:30 (IST) 24 Aug 2022
    தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

    போக்குவரத்து சேவைக் கட்டணங்களை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும்

    என தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்



  • 10:30 (IST) 24 Aug 2022
    பத்திரிக்கைகள் தடை செய்யப்படும்

    தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் தடை செய்யப்படும். புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில்.



  • 10:29 (IST) 24 Aug 2022
    ஆபரண தங்கத்தின் விலை

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,440க்கு விற்பனை . ஒரு கிராம் தங்கம் ₨4,805க்கு விற்பனை



  • 10:28 (IST) 24 Aug 2022
    பள்ளி மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பேருந்து சேவை

    பள்ளி மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பேருந்து சேவை ஒரு வாரத்திற்குள் மீண்டும் அமலுக்கு வரும் .புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்



  • 09:09 (IST) 24 Aug 2022
    நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கிறார்

    கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு. கோவை, ஈச்சனாரி பகுதியில் இன்று நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.



  • 09:06 (IST) 24 Aug 2022
    பேருந்து ஓட்டுநர் கைது

    சேலம் - ஆத்தூர் பகுதியில் ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதி 6 பேர் உயிரிழந்த விவகாரம்- பேருந்து ஓட்டுநர் முத்துச்சாமி கைது.



  • 09:06 (IST) 24 Aug 2022
    ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை-2வது நாளாக பேச்சுவார்த்தை

    போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இழுபறி. 2வது நாளாக பேச்சுவார்த்தை இன்று தொடங்க உள்ளது.



  • 09:03 (IST) 24 Aug 2022
    ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு

    தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை



  • 09:02 (IST) 24 Aug 2022
    முதல்வர் மு.க.ஸ்டாலினை வரும் சனிக்கிழமை சந்திக்கிறார் ஸ்ரீமதியின் தாய் செல்வி

    முதல்வர் மு.க.ஸ்டாலினை வரும் சனிக்கிழமை சந்திக்கிறார் ஸ்ரீமதியின் தாய் செல்வி. மகளின் மரணத்துக்கு நீதி கோரி நடைபயணம் அறிவித்திருந்த நிலையில், நடைபயணம் ரத்து என தகவல். சென்னை தலைமை செயலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு முதல்வரை சந்திக்கிறார் ஸ்ரீமதியின் தாய்.



  • 09:02 (IST) 24 Aug 2022
    மழை நிலவரம்

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment