Advertisment

Tamil News: அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 19th december 2021 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News: அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை

Tamil Nadu News Updates: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

இங்கிலாந்தை துரத்தும் கொரோனா

கடந்த 15-ம் தேதி 78,610 பேருக்கும், 16-ம் தேதி 88,376 பேருக்கும், 17-ம் தேதி 93,045 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், 4-வது நாளாக நேற்றும் இங்கிலாந்தில் 90,418 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது

இன்னும் செப்டிக் டேங்க் குள்ள இறங்கிட்டு தான் இருக்கோம் | Manual Scavengers

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் கடந்த 45 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார் ஸ்ரீகாந்த்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த். ஆடவர் பிரிவில் முதல் முறையாக இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:34 (IST) 19 Dec 2021
    தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும் - திருமாவளவன்

    விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி: “ஆபத்தான தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைத்து கட்சிகளும் அறிமுக நிலையிலேயே எதிர்க்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணோடு இணைப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது. வாக்களிக்காத சிறுபான்மையினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



  • 20:50 (IST) 19 Dec 2021
    அம்மா வளாகம் பெயர் மாற்றப்படவில்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு

    அம்மா வளாகம் பெயர் மாற்றப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், அம்மா வளாகம் பெயர் மாற்றப்படவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தங்கம் தென்னரசு ஊடகங்களிடம் கூறுகையில், “ராணிமேரி கல்லூரி வளாக கட்டடத்தின் கலைஞர் மாளிகை என்ற பெயர் அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டது. அண்ணா நூலகத்தையும் புதிய சட்டமன்றத்தையும் சிதைத்தது அதிமுக அரசு; அதைப் போல, அம்மா வளாகம் என்ற பெயர் மாற்றப்படவில்லை. வளாகத்திற்கு ஒரு பெயரும் வளாகத்தில் உள்ள கட்டடங்களுக்கு தனித்தனிப் பெயரும் வைப்பது வாடிக்கைதான்.” என்று கூறினார்.



  • 20:02 (IST) 19 Dec 2021
    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை டிசம்பர் 31 வரை சிறையில் அடைக்க உத்தரவு

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 43 மீனவர்களை டிசம்பர் 31ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



  • 19:33 (IST) 19 Dec 2021
    தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொலைபேசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 18:29 (IST) 19 Dec 2021
    ‘அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள்; நான் மக்கள் ஊழியன்; அவ்வளவுதான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்; அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை” என்று கூறினார்.



  • 18:09 (IST) 19 Dec 2021
    மாங்காட்டில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை; கல்லூரி மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை

    மாங்காட்டில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கல்லூரி மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் செல்போன் எண்ணுக்கு அதிகமுறை பேசியதன் அடிப்படையில் கல்லூரி மாணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.



  • 18:07 (IST) 19 Dec 2021
    மீனவர்களை விடுவிக்க வேண்டும்; வெளியுறவுத்துறை அமைச்சருக்கு திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 16:58 (IST) 19 Dec 2021
    உதயநிதி அமைச்சராக வர விருப்பம் - கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

    உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. எங்கள் விருப்பமும் அதுவே என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்



  • 16:45 (IST) 19 Dec 2021
    தரமற்ற உணவு சமைத்து வழங்கிய மேற்பார்வையாளர்கள் இருவர் கைது

    தனியார் செல்போன் உதிரி பாகம் தயாரிப்பு ஆலை விடுதியில் தரமற்ற உணவு சமைத்து வழங்கிய 'சக்தி கிச்சன்' மேற்பார்வையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று போராட்டம் நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



  • 16:20 (IST) 19 Dec 2021
    மாவோயிஸ்ட் ஆதரவாளர் போலீசில் சரண்

    வேலூர் மாவட்டம் ஓடுக்கத்தூர் அருகே வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்த மாவோயிஸ்ட் ஆதரவாளர் பிரபா என்பவர் போலீசில் சரண் அடைந்துள்ளார்



  • 15:55 (IST) 19 Dec 2021
    மேலும் 12 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

    ராமநாதபுரம், மண்டபம் பகுதியில் இருந்து 2 படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏற்கனவே 43 மீனவர்களை சிறைப்பிடித்ததுடன், 6 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது



  • 15:43 (IST) 19 Dec 2021
    பாஜக ஆட்சியில் '7 பைசா ஊழல்' கூட இல்லை - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

    பிரதமர் மோடி தலைமையிலான 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் '7 பைசா ஊழல்' என்றுக்கூட காங்கிரஸ்காரர்களால் குற்றம்சாட்ட முடியாது என உத்தரகாண்டில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்



  • 15:34 (IST) 19 Dec 2021
    தரமற்ற கட்டிடம் இடிப்பு; மாணவர்களுக்கு அருகிலுள்ள பள்ளியில் கல்வி – அமைச்சர் அன்பில் மகேஷ்

    சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடிக்கும்போது அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களை அமரவைத்து கல்வி பயில வழிவகை செய்யப்படும். அருகில் பள்ளி இல்லையெனில் வாடகை கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்



  • 15:19 (IST) 19 Dec 2021
    கோவா விடுதலை நாள் கொண்டாட்டம் – பிரதமர் பங்கேற்பு

    கோவா மாநிலம் பனாஜியில் விடுதலை நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி ஃப்ளைபாஸ்ட் மற்றும் பாய்மர அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்



  • 14:21 (IST) 19 Dec 2021
    நிதித்துறை வளாகம் க.அன்பழகன் மாளிகை என பெயர்மாற்றம் - அதிமுக கண்டனம்

    நந்தனத்தில் உள்ள நிதித்துறை வளாகத்தின் பெயரை மாற்றியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 'அம்மா வளாகம்' என்ற பெயரை நீக்கிவிட்டு ’க.அன்பழகன் மாளிகை’ என பெயர் சூட்டுவதா? என ஓபிஎஸ், ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்



  • 12:34 (IST) 19 Dec 2021
    ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை

    அதிமுக 2-ம் கட்ட உட்கட்சி தேர்தல் தொடர்பாக ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.



  • 12:33 (IST) 19 Dec 2021
    வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

    கடந்த 15-ம் தேதி நடந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக வேலூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன்(27) என்பவரை கைது செய்தது தனிப்படை.



  • 11:47 (IST) 19 Dec 2021
    மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

    இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 43 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.



  • 11:08 (IST) 19 Dec 2021
    மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

    தமிழ்நாட்டில் எம்.பி.பிஎஸ் -பிடிஎஸ் படிப்புகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை தொடங்கியுள்ளது. ஜனவரி 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எம்பிபிஎஸ் படிப்பில் சேர 6,957 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் சேர 1,925 இடங்களும் உள்ளன. தகுதியான மாணவர்கள் www.tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.



  • 10:10 (IST) 19 Dec 2021
    பேராசிரியர் க.அன்பழகனின் உருவ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிதித்துறை வளாக கட்டிடத்திற்கு 'பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என பெயர் சூட்டப்படுகிறது



  • 10:09 (IST) 19 Dec 2021
    க.அன்பழகனுக்கு மார்பளவு சிலை திறப்பு

    சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிதித்துறை வளாக கட்டிடத்திற்கு 'பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என பெயர் சூட்டப்படுகிறது



  • 10:09 (IST) 19 Dec 2021
    பேராசிரியர் க.அன்பழகனின் உருவ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிதித்துறை வளாக கட்டிடத்திற்கு 'பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என பெயர் சூட்டப்படுகிறது



  • 09:55 (IST) 19 Dec 2021
    சிதம்பரம் நடராஜர் தேரோட்டம் தொடங்கியது.

    புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது



  • 08:27 (IST) 19 Dec 2021
    மருத்துவ படிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணிமுதல் இணையதளம் வாயிலாக பெறப்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



Corona Virus Omicron
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment