Advertisment

Tamil News: இந்தியாவில் 140 ஆக அதிகரித்துள்ளது ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை!

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 18th december 2021 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News: இந்தியாவில் 140 ஆக அதிகரித்துள்ளது ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை!

Tamil Nadu News LIVE Updates: அமேசான் நிறுவனத்திற்கு வர்த்தக போட்டி முறைப்படுத்துதல் ஆணையம் 202 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஃபியூச்சர் குழும நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை வாங்கியது தொடர்பான நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

சீரம் - நோவாவாக்ஸ் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பான கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது.

இங்கிலாந்தை மிரட்டும் கொரோனா

தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் இங்கிலாந்தில் அதிகபட்சமாக 93,045 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இன்னும் செப்டிக் டேங்க் குள்ள இறங்கிட்டு தான் இருக்கோம் | Manual Scavengers

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் கடந்த 45 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:41 (IST) 18 Dec 2021
    நடராஜர் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி

    கடலூர் - சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டிய பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி வழக்குவதாக அறிவித்துள்ளது. ஆனாலும் கொரோனா விதிகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களுடன் தேரோட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.



  • 21:10 (IST) 18 Dec 2021
    நகர்புற உள்ளாட்சி தேர்தல் - திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

    தமிழகத்தில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுளள நிலையில், சென்னை அண்ணா அறிவாலையத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு பூத் கமிட்டியிலும், 10 பேர் இடம்பெற வேண்டும். இதில் கட்டாயம் இரண்டு பெண்கள் 4 இளைஞர்கள் இடம்பெற வேண்டும். கட்சியில் அதிக அளிவிலான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் இடஒதுக்கீடு விஷயத்தில், கூட்டணி கட்சிகளுடன், மாவட்ட அளவில் மாவட்ட செயவாளர்களே பேசி உடன்பாடு எட்ட வேண்டும்



  • 21:05 (IST) 18 Dec 2021
    மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் நாளை முதல் விநியோகம்

    அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் நாளை முதல் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 6958 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 1925 இடங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.



  • 21:04 (IST) 18 Dec 2021
    மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் நாளை முதல் விநியோகம்

    அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் நாளை முதல் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 6958 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 1925 இடங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.



  • 20:03 (IST) 18 Dec 2021
    திருவாரூர் மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளிக்கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரம்

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாவடடத்தில், உள்ள பள்ளிகளில் பழுதடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத கட்டிடங்களை இடிக்கும்பணி தீவிரமடைந்துள்ளது.



  • 19:40 (IST) 18 Dec 2021
    திருவள்ளூர் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கால் 2 பேர் மரணம்

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்தக்கோட்டை பேராண்டூர் கிராமத்தில் வயிற்றுப்போக்கால் உயிரிழ்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் வயிற்றுப்போக்கு காரணமாக 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.



  • 18:26 (IST) 18 Dec 2021
    திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

    சென்னை அண்ணா அறிவாலையத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • 18:21 (IST) 18 Dec 2021
    பறவை காய்ச்சல் எதிரொலி : வாத்துகள் தீ வைத்து அழிப்பு

    கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆயிரக்கணக்கான வாத்துகள் தீவைத்து அழிப்பு அழிக்கப்பட்டு வரும்நிலையில், இதுவரை 31,371 வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



  • 17:26 (IST) 18 Dec 2021
    அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் - லக்ஷயாசென்!

    ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் லக்ஷயாசென்யை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெறும் வீரர் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்வார்.



  • 17:17 (IST) 18 Dec 2021
    சென்னையில் 11 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 100 கடைகளுக்கு சீல்!

    சென்னை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த100 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் 11 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



  • 17:04 (IST) 18 Dec 2021
    பதவியில் இருக்கும்போது செருக்கில்லாமல் இருக்க வேண்டும்: நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு

    சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் ஏற்புரையாற்றி பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், டெல்லியில் உள்ள குளிரை காட்டிலும், இங்குள்ள பாச மழையால் உடல் நடுங்குகிறது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், வழக்கறிஞர்கள் தவறிழைத்தாலும் நீதிபதிகள் கோபப்படக்கூடாது என தெரிவித்ததுடன், வழக்கு ஒன்றில் தன் நிலை மறந்து கோபப்பட்டதன் காரணமாக அந்த வழக்கை வேறு அமர்விற்கு மாற்றியதாக தெரிவித்தார். பதவி ஆடை மாதிரிதான், ஆனாலும் பதவியில் இருக்கும்போது செருக்கில்லாமல் இருக்க வேண்டுமென எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்



  • 16:44 (IST) 18 Dec 2021
    ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களித்தில் விசாரணை - உயர்நீதிமன்றம் கேள்வி!

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடம் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட விவகாரத்தில் “குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை எப்படி வேண்டுமானாலும் தேடிக்கொள்ளுங்கள். விசாரணை செய்யுங்கள். ஆனால் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்தது ஏன்?. குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் அவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம்.” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.



  • 16:39 (IST) 18 Dec 2021
    ரஷ்யாவில் புதிதாக 27,434 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,076 பேர் பலி

    உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. தற்போது 5-வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,01,86,823 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,076 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 180 ஆக உயர்ந்துள்ளது.



  • 16:22 (IST) 18 Dec 2021
    காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பெண் தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்

    காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் தனியார் விடுதியில் தரமற்ற உணவு விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோரின் பேச்சுவார்த்தையின் பேரில் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



  • 15:57 (IST) 18 Dec 2021
    ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி- அமைச்சர் மூர்த்தி

    "ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இந்தாண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

    கலப்பின மாடுகள் கொண்டு வருவோருக்கு டோக்கன் கொடுக்க மாட்டோம். தி.மு.க. ஆட்சியில் தான் ஜல்லிகட்டு முறையாக நடத்த அனுமதி பெற்று தரப்பட்டது. நாட்டு மாடுகள் இனத்தை காப்பாற்றுவதற்காகவே நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த கால ஆட்சியை போல் இல்லாமல் முறையாக ஜல்லிக்கட்டை நடத்துவோம். நாட்டு மாடு இனங்களை அபிவிருத்தி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.



  • 15:48 (IST) 18 Dec 2021
    'பிரதமரின் முடிவு நடுத்தர வர்க்கத்தை பாதிக்கிறது' - ராகுல்காந்தி

    உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் பேசியுள்ள ராகுல்காந்தி, "இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய கேள்விகளாக உள்ளன. பண நீக்கம், ஜிஎஸ்டி, கொரோனா நெருக்கடியின்போது கண்டுகொள்ளாததது ஆகியவையே வேலையின்மைக்கு முக்கிய காரணம். பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.



  • 15:31 (IST) 18 Dec 2021
    ஆபத்தான முறையில் பயணம்; தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன்!

    பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியளித்துள்ளார்.



  • 15:24 (IST) 18 Dec 2021
    மல்யுத்த வீரரை மேடையில் வைத்து அறைந்த பாஜக எம்பி!

    ராஞ்சி நடைபெறும் மல்யுத்த போட்டியை காண சென்ற உத்திர பிரதேச எம்பி மல்யுத்த வீரரை பல முறை மேடையில் வைத்து அறைந்துள்ளர். தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை தமிழக காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் பகிரபட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி, மற்றும் பாஜக தலைவர் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



  • 15:17 (IST) 18 Dec 2021
    கிரீசில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு

    கிரீஸ் நாட்டிற்கு உட்பட்ட கைத்திரா தீவு பகுதியில் இருந்து தென்மேற்கே 18 மைல்கள் தொலைவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என ஏதென்ஸ் பல்கலை கழகத்தின் நிலநடுக்கவியல் ஆய்வகம் தெரிவித்து உள்ளது.

    18.6 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்நிலநடுக்கத்தால், யாருக்கும் காயங்களோ அல்லது பொருளிழப்புகளோ ஏற்பட்டது பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.



  • 14:41 (IST) 18 Dec 2021
    594 கி.மீ நீளமுள்ள கங்கை விரைவுப் பாதைக்கு பிரதமர் மோடி அடிக்கல்

    உத்தரப்பிரதேசம், ஷாஜஹான்பூரில் 594 கி.மீ நீளமுள்ள கங்கை விரைவுப் பாதைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மீரட் முதல் பிரயாக்ராஜ் வரை ரூ.36,200 கோடி செலவில் கங்கை விரைவுப் பாதை அமைக்கப்பட உள்ளது



  • 14:35 (IST) 18 Dec 2021
    தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் துணை கேப்டனாக வாய்ப்பு

    தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக ரோகித் சர்மா விலகிய நிலையில் கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் என தெரிகிறது



  • 13:58 (IST) 18 Dec 2021
    ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இல்லை. உரிய சட்ட ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்



  • 13:44 (IST) 18 Dec 2021
    தொழிற்சாலைகளில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்

    தொழிற்சாலைகள், வணிக நிறுவன ஊழியர்களுக்கு விடுதிகளில் அடிப்படை வசதிகள், சத்தான உணவுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஊழியர்கள் நலனை கண்காணிக்க பல்துறை அதிகாரிகளை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்



  • 13:26 (IST) 18 Dec 2021
    அரக்கோணம் கொள்ளைச் சம்பவம் - கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையடித்தவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தியில் பேசியதாகவும், தங்களை ஆங்கிலத்தில் பேச வற்புறுத்தியதாகவும் வீட்டில் இருந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர்



  • 13:03 (IST) 18 Dec 2021
    பள்ளி விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

    நெல்லையில் பள்ளி விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், நான் பள்ளிகளில் ஆய்வு செய்யும்போது முதலில் கழிவறையத் தான் ஆய்வு செய்வேன். அடித்தளம் இல்லாமல் கழிவறை சுவர் கட்டப்பட்டதால் அது இடிந்து விழுந்துள்ளது. பள்ளி கட்டடங்களின் தன்மை குறித்து ஆராய ஏற்கனவே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்



  • 12:33 (IST) 18 Dec 2021
    சென்னை தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் கைது

    சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ்(48) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்



  • 12:29 (IST) 18 Dec 2021
    நவல்பட்டு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது குண்டர் சட்டம்

    திருச்சி, நவல்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த‌து. இதனையடுத்து புதுக்கோட்டை சிறையில் இருந்த மணிகண்டன் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்



  • 12:20 (IST) 18 Dec 2021
    பெண்கள் திருமண வயது – விஜயகாந்த் கருத்து

    பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் விவகாரத்தில் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பின் அரசாணை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேலும், இளம்பெண்களை வீட்டில் வைத்து காலம் தாழ்த்த கிராம‌ப்புறங்களில் விரும்புவதில்லை என்றும், ஆண்களுக்கான திருமண வயதும் 21 தானா என்பது குறித்தும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.



  • 12:01 (IST) 18 Dec 2021
    ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் கைது

    அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்



  • 12:00 (IST) 18 Dec 2021
    ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

    சென்னையில் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய தனியார் பள்ளி கணித ஆசிரியர் மதிவாணன் கைது செய்யப்பட்டுள்ளார்



  • 11:41 (IST) 18 Dec 2021
    இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில், தான் முன்னிலையில் இருப்பது மகிழ்ச்சி - முதலமைச்சர் ஸ்டாலின்

    இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில், தான் முன்னிலையில் இருப்பது மகிழ்ச்சி என இன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. சாலை விபத்துகளில் பெரும்பாலும் இளம் வயதினர் உயிரிழக்கின்றனர். எனவே உடனடியாக உதவக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இன்னுயிர் காப்போம் திட்டம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்



  • 10:43 (IST) 18 Dec 2021
    உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய நில நடுக்கோட்டுக்கு அருகே இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. தமிழ்நாடு கடற்பகுதியில் இருந்து எதிர்த் திசையில் இந்த தாழ்வு மண்டலம் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:30 (IST) 18 Dec 2021
    ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி - அமைச்சர் மூர்த்தி

    ஜல்லிக்கட்டில் கலப்பின மாடுகள் பங்கேற்க அனுமதி மறுப்பு. நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.



  • 10:29 (IST) 18 Dec 2021
    சென்னை வருகிறார் பிரதமர் மோடி

    தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க ஜன.12 ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • 10:14 (IST) 18 Dec 2021
    மதுரை: 120 வகுப்பறை கட்டிடங்கள், 80 கழிவறை கட்டிடங்கள் இடிக்க உத்தரவு

    மதுரை மாவட்டத்தில் 120 வகுப்பறை கட்டிடங்களும், 80 கழிவறை கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளதால், மாணவர்கள் செல்லாத வகையில் முன்னதாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முழுமையாக இடிக்க மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.



  • 09:31 (IST) 18 Dec 2021
    புதுக்கோட்டையில் ஆபத்தான 100 பள்ளிக்கட்டடங்களை இடிக்க உத்தரவு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளிக் கட்டங்களை இடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.



  • 08:44 (IST) 18 Dec 2021
    ராஜேந்திர பாலாஜியை தேட 6 தனிப்படைகள் அமைப்பு

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் அவரை கைது செய்ய ஏற்கனவே 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.



Tamil Nadu Omicron
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment