Advertisment

Tamil News: தானியங்கி இயந்திரத்தில் மஞ்சப்பை - இன்று தொடக்கம்

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today, Tamilnadu Covid 19 Cases- 04 June 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News: தானியங்கி இயந்திரத்தில் மஞ்சப்பை - இன்று தொடக்கம்

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை!

கட்டாயப்படுத்தாத நிலையில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை. கட்டாய மதமாற்றம் குறித்து சமூக வலைதளங்களில் கூறப்படுவதை ஆதாரமாக ஏற்க முடியாது. தான் விரும்பும் மதத்தை பின்பற்ற அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் உரிமை உள்ளது என பணம், பரிசுகளின் மூலம் நடைபெறும் மத மாற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இந்த வழக்கில் கார்த்தியை அமலாக்கத்துறையினர் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

&t=108s

Tamil News Latest Updates

அதிகரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்!

சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாத 21,984 வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 18,035 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.21.98 லட்சம் அபராதம், பின் இருக்கையில் அமர்ந்தவர்களிடம் ரூ.18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:08 (IST) 04 Jun 2022
    கோவை: உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது

    கோவை,பீளமேட்டில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். டெலிவரி ஊழியர் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காவல்துறை கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தநிலையில், காவலர் சதீஸ் கைது செய்யப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது



  • 20:49 (IST) 04 Jun 2022
    சென்னை சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

    சென்னை, தரமணியில் சட்டக் கல்லூரி மாணவர் சேக் ரகுமான்(20) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதிய கடிதம் சிக்கியதை அடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்



  • 19:54 (IST) 04 Jun 2022
    நெல்லையில் காருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வீட்டின் முன்பு நின்ற காருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் காருக்குள் ஏறி விளையாடிய போது கதவு தானாக மூடிக் கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காருக்குள் சிக்கிய குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்



  • 19:11 (IST) 04 Jun 2022
    விக்ரம் திரைப்படம் முதல் நாள் வசூல் நிலவரம்

    விக்ரம் திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ23 கோடி, கேரளா மாநிலத்தில் ரூ5கோடி, கர்நாடக மாநிலத்தில் ரூ4.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது



  • 18:25 (IST) 04 Jun 2022
    ஆழ்கடல் சொகுசு கப்பல் சுற்றுலாத் திட்டம்; தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

    சென்னை துறைமுகத்தில், ஆழ்கடல் சொகுசு கப்பல் சுற்றுலாத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது



  • 17:29 (IST) 04 Jun 2022
    முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இலங்கை தூதர் சந்திப்பு

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலின்ட மொரகோடா சந்தித்து பேசினார். தமிழகம் - இலங்கை இடையிலான உறவு, மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்



  • 17:14 (IST) 04 Jun 2022
    கார்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த அனுமதி

    கார்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தியிருந்தாலும் கார்பேவாக்சை பூஸ்டர் டோஸாக பயன்படுத்தலாம் என இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு இயக்குநரகம் தெரிவித்துள்ளது



  • 16:42 (IST) 04 Jun 2022
    மத்திய குற்றப்பிரிவின் கீழ் 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

    கடந்த ஓராண்டில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ₨8 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்,190 கோடி சொத்துகள் மற்றும் ₨7.69 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.



  • 16:33 (IST) 04 Jun 2022
    தடுப்பணை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம்

    மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சீப்புலியூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி அறிவழகன் பலியாகியுள்ள நிலையில், அறிவழகன் மண்ணில் புதைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஜேசிபி வாகனம் மோதி உயிரிழந்ததாக குற்றம் சாட்டி உடலை வாங்க மறுத்து வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • 16:32 (IST) 04 Jun 2022
    தடுப்பணை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம்

    மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சீப்புலியூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி அறிவழகன் பலியாகியுள்ள நிலையில், அறிவழகன் மண்ணில் புதைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஜேசிபி வாகனம் மோதி உயிரிழந்ததாக குற்றம் சாட்டி உடலை வாங்க மறுத்து வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • 16:31 (IST) 04 Jun 2022
    உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய, போக்குவரத்து காவலர் பணிமாற்றம்

    கோவை பீளமேட்டில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய, போக்குவரத்து காவலர் போக்குவரத்து முதல்நிலை காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். ஊழியரை கன்னத்தில் அறையும் வீடியோ வெளியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • 16:30 (IST) 04 Jun 2022
    உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய, போக்குவரத்து காவலர் பணிமாற்றம்

    கோவை பீளமேட்டில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய, போக்குவரத்து காவலர் போக்குவரத்து முதல்நிலை காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். ஊழியரை கன்னத்தில் அறையும் வீடியோ வெளியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • 15:42 (IST) 04 Jun 2022
    தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு உள்ளதாக தகவல்

    தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், தி.மலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 15:39 (IST) 04 Jun 2022
    சட்டம், ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

    சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டம், ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.



  • 15:37 (IST) 04 Jun 2022
    தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு புதிய வசதி

    தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை உடனடியாக தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளார். நடப்பு ஆண்டில் 10ஆம் வகுப்பு தேர்வில் 2.25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளது.



  • 13:35 (IST) 04 Jun 2022
    தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை

    தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், நாமக்கல் மாவட்டங்களில் 2 நாள்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:43 (IST) 04 Jun 2022
    கனவை நிஜமாக்கிய இயக்குநர் லோகேஷூக்கு நன்றி - சூர்யா

    கமல்ஹாசன் உடன் இணைந்து திரையில் தோன்ற வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. என் கனவை நிஜமாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. விக்ரம் படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகர் சூர்யா ட்வீட்



  • 12:34 (IST) 04 Jun 2022
    தமிழ்நாட்டில் அதிமுகதான் எதிர்க்கட்சி - செல்லூர் ராஜூ

    தமிழ்நாட்டில் அதிமுகதான் எதிர்க்கட்சி. யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என சொல்ல அதிமுக தயார். மற்ற கட்சியினர் தயாரா? என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 12:09 (IST) 04 Jun 2022
    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்

    மோடி ஆட்சியை புகழ்வதற்காக பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டதாக, தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். அண்ணாமலை மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்



  • 11:46 (IST) 04 Jun 2022
    உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு

    சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்



  • 11:42 (IST) 04 Jun 2022
    உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு

    சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்



  • 11:27 (IST) 04 Jun 2022
    அண்ணாமலைக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்தது

    பாஜக மாநில தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்தார்.



  • 11:21 (IST) 04 Jun 2022
    சுற்றுச்சூழல் தினம் - பசுமை விருதுகள் அறிவிப்பு

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளும், 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு 'பசுமை முதன்மையாளர்' விருதுகளும் வழங்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்



  • 11:10 (IST) 04 Jun 2022
    வட சென்னையில் மின் உற்பத்தி பாதிப்பு

    வட சென்னை அனல் மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு. 1வது அலகில் கொதிகலன் குழாய் பழுது காரணமாகவும், 2வது அலகில் பராமரிப்பு பணிகளுக்காகவும் மின் உற்பத்தி நிறுத்தம்



  • 11:07 (IST) 04 Jun 2022
    மகாராஷ்டிராவில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்

    கொரோனா அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசிகளை செலுத்தவும் அறிவுறுத்தல்



  • 10:58 (IST) 04 Jun 2022
    1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

    வட சென்னை அனல் மின் நிலையத்தில் 1வது அலகில் கொதிகலன் குழாய் பழுது காரணமாகவும், 2வது அலகில் பராமரிப்பு பணிகளுக்காகவும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.



  • 10:32 (IST) 04 Jun 2022
    தங்கம் விலை!

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.38,200 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,775க்கும் விற்பனையாகிறது.



  • 10:32 (IST) 04 Jun 2022
    சென்னையில் கொரோனா!

    சென்னையில் 15 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:05 (IST) 04 Jun 2022
    கொரோனா!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,962 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் உயிரிழந்தனர். மேலும், 2,697 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.



  • 09:29 (IST) 04 Jun 2022
    சென்னையில் சொகுசு கப்பல் திட்டம்!

    தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை சென்னை துறைமுகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கார்டிலியா என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து, புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது.



  • 08:14 (IST) 04 Jun 2022
    தொழிலாளி உயிரிழப்பு.. இருவர் கைது!

    மதுரை, விளாங்குடி பகுதியில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஒப்பந்த பொறியாளர் சிக்கந்தர், கண்காணிப்பாளர் பாலு, ஓட்டுநர் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



  • 08:13 (IST) 04 Jun 2022
    சாமி சிலைகள் மீட்பு!

    அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து, இந்திய தொல்பொருள் துறை மீட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment