scorecardresearch

Tamil News Update: கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழக்கும் விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு

Tamil Nadu News, Tamil News T20 World Cup 2022, Virat kohli, Pro Kabaddi 2022- 29 October 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil News Update: கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழக்கும் விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News update

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணை

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அறிவிப்பாணை வெளியிட்டது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும். புகார் பெற்ற 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மு.க.ஸ்டாலின், ஜெய்சங்கருக்கு கடிதம்

மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுகிறது, வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருக்கிறது.  

எனவே மீனவர்கள் விவகாரத்தில் வலுவான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை என்று மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
22:43 (IST) 29 Oct 2022
புனித் ராஜ்குமாருக்கு விருது – ரஜினி பங்கேற்பு

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கும் விழா நவ.1ல் பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்

22:42 (IST) 29 Oct 2022
புனித் ராஜ்குமாருக்கு விருது – ரஜினி பங்கேற்பு

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கும் விழா நவ.1ல் பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்

22:42 (IST) 29 Oct 2022
புனித் ராஜ்குமாருக்கு விருது – ரஜினி பங்கேற்பு

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கும் விழா நவ.1ல் பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்

21:20 (IST) 29 Oct 2022
சீனாவன் ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு

சீனாவின் ஷாங்காய் நகரில் 13 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை முடிவுகள் தெரியும் வரை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என கூறி மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

18:54 (IST) 29 Oct 2022
அண்ணாமலை அவதூறு பரப்புகிறார்… டிஜிபி அலுவலகம் அறிக்கை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்பிவருகிறார் என டிஜிபி அலுவலக அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதில், அண்ணாமலை குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை பற்றி எந்தத் தகவலும் இல்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

18:51 (IST) 29 Oct 2022
தேர்தல் பத்திரங்கள்.. அசோக் கெலாட் குற்றச்சாட்டு

இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் 95 சதவீதம் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே கிடைக்கிறது.

காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு நிதியளிக்கும் நிறுவனங்கள் மிரட்டப்படுகின்றன என ராஜஸ்தான் முதல் அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

18:49 (IST) 29 Oct 2022
பிரேசிலில் நாளை அதிபர் தேர்தல்

பிரேசில் நாட்டில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

18:48 (IST) 29 Oct 2022
உலக கோப்பை கால்பந்து.. தொழிலாளர்கள் வெளியேற்றம்

கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து தொடங்கவுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுவருகின்றனர்.

18:47 (IST) 29 Oct 2022
திலகவதி மருமகள் கைது

பெண் மருத்துவரை தாக்கியதாக முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் ஷ்ருதி கைது செய்யப்பட்டுள்ளார்.

18:46 (IST) 29 Oct 2022
நடிகை சமந்தாவுக்கு உடல் நலக் குறைவு

நடிகை சமந்தாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனை சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்து உள்ளார்.

18:28 (IST) 29 Oct 2022
வடகிழக்கு பருவமழை தொடங்கியது

வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அடுத்த 5 நாள்களுக்கு மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

18:03 (IST) 29 Oct 2022
ஹைதராபாத்: இடைத்தரகர்கள் சரணடைய உத்தரவு

தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரிடம் பண பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இடைத்தரகர்கள் மூவர் சரணடைய ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17:52 (IST) 29 Oct 2022
ரூ.40 லட்சம் கேட்டு கமிஷன் ஏஜென்ட் கடத்தல்

சென்னை சென்னை பெரியமேட்டில் கமிஷன் ஏஜென்ட் விக்ரம் ஜெயின் ரூ.40 லட்சம் கேட்டு கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

17:38 (IST) 29 Oct 2022
மு.க. ஸ்டாலின் பயணம் ரத்து.. பசும்பொன் செல்கிறார் உதயநிதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், நாளை (அக்.30) பசும்பொன் சென்று உதயநிதி தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்டோரும் செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:23 (IST) 29 Oct 2022
கேரளாவில் காளை முட்டியதில் குழந்தையுடன் சென்ற பெண் உட்பட மூவர் காயம்

கேரள மாநிலம் குந்தமங்கலம் பகுதியில் சாலையில் தறிகெட்டு ஓடிய காளை முட்டியதில் குழந்தையுடன் சென்ற பெண் மற்றும் இருசக்கர வாகன ஓட்டி என மூவர் காயம் அடைந்துள்ளனர்

17:10 (IST) 29 Oct 2022
டி20 உலகக்கோப்பை; இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது

16:44 (IST) 29 Oct 2022
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதியின் மருமகள் கைது

பெண் ஒருவரை, குடும்பத்துடன் சேர்ந்து தாக்கிய புகாரில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதியின் மருமகள் ஸ்ருதி 4 மணி நேரம் வீட்டு காவலில் இருந்த நிலையில், திருமங்கலம் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், ஸ்ருதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

16:15 (IST) 29 Oct 2022
கனியாமூர் தனியார் பள்ளி மறுசீரமைப்பு பணிகள் 95% நிறைவு

கனியாமூர் தனியார் பள்ளி மறுசீரமைப்பு பணிகள் 95% பணிகள் முடிவுற்று, நுழைவு வாயிலில் பள்ளியின் பெயர் பலகை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியரின் அனுமதியை தொடர்ந்து, கடந்த 30 நாட்களாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது

15:55 (IST) 29 Oct 2022
டி20 உலகக்கோப்பை – இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு!

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் விளையாடி வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இலங்கைக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

15:44 (IST) 29 Oct 2022
போக்குவரத்து விதிமீறல் – ரூ.42 லட்சம் அபராதம்!

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

15:04 (IST) 29 Oct 2022
லிஃப்டில் சிக்கி தவித்த மருத்துவ கல்லூரி ஊழியர்கள்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பழுது காரணமாக லிஃப்டில் ஊழியர்கள் சிக்கித்தவித்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் சிக்கி தவித்த நிலையில் தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்டனர்

15:03 (IST) 29 Oct 2022
முல்லை பெரியாறு – கேரளா ஒத்துழைக்க மறுப்பு!

“முல்லை பெரியாறு அணையின் சமநிலையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்க மறுக்கிறது” என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

14:50 (IST) 29 Oct 2022
கோவை பந்த் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பு: பாஜக அறிவிப்பு!

கோவையில் பாஜாகவினர் கடையடைப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக மாவட்ட தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக பந்த் நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

13:58 (IST) 29 Oct 2022
காந்தாரா: ‘வராக ரூபம்’ பாடல் ஒளிபரப்ப தடை

'காந்தாரா' படத்தில் இடம்பெற்ற 'வராக ரூபம்' பாடலை தியேட்டரில் ஒளிபரப்ப தடை

திரைப்பட பாடல் திருட்டு வழக்கில் கோழிக்கோடு அமர்வு நீதிமன்றம் உத்தரவு

13:45 (IST) 29 Oct 2022
பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் – அண்ணாமலை

பாஜக மகளிரணி நிர்வாகிகளை பற்றி திமுக நிர்வாகி ஆபாசமாக பேசி உள்ளார்

உடனே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்;பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் – அண்ணாமலை

திமுக நிர்வாகியின் ஆபாச பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்.பி.கனிமொழிக்கு அண்ணாமலை பாராட்டு

13:43 (IST) 29 Oct 2022
கொடநாடு வழக்கு – சிபிசிஐடி விசாரணையில் புதிய தகவல்

கொள்ளை சம்பவத்தின் போது காவலாளி ஓம் பகதூரை கொள்ளையர்கள் தலைகீழாக கட்டிவைத்து கொலை கொலை செய்த மரம் வெட்டி அகற்றம்

காவலாளியை கட்டி வைத்த மரத்தை அகற்றிவிட்டு, புதிய மரக்கன்றை நட்டது விசாரணையில் கண்டுபிடிப்பு

வழக்கு விசாரணை நிறைவடையாத நிலையில், எஸ்டேட் நிர்வாகம் மரத்தை வெட்டியது ஏன் என சிபிசிஐடி விசாரணை

2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி கொடநாடு பங்களாவில் நுழைந்த கொள்ளையர்கள் 10-ம் நம்பர் கேட்டில் இருந்த ஓம் பகதூரை கொலை செய்தனர்.

12:56 (IST) 29 Oct 2022
கோவை சம்பவம்: 4 நாட்கள் தாமதம் ஏன்?

கோவை வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்காமல் 4 நாட்கள் தாமதப்படுத்தியது ஏன்?

மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என டிஜிபி கூறுகிறார

அக்.18ம் தேதியே மத்திய உளவுத்துறை மாநில அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது

18ஆம் தேதியே தகவல் வந்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை? – அண்ணாமலை

12:54 (IST) 29 Oct 2022
கோவையில் முழு கடையடைப்பு – பாஜக தலைமை நிர்பந்திக்காது

கோவையில் முழு கடையடைப்புக்கு பாஜக மாநில தலைமை நிர்பந்திக்காது

கோவை பந்த் குறித்து மாவட்ட பாஜக மற்றும் மக்கள் முடிவு செய்ய வேண்டும் – அண்ணாமலை

12:29 (IST) 29 Oct 2022
தவறாக சித்தரித்து பரப்புகின்றனர் – அண்ணாமலை

பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியதை தவறாக சித்தரித்து பரப்புகின்றனர் – அண்ணாமலை

12:00 (IST) 29 Oct 2022
“மோடியைவிட சிறந்த தேச பக்தர் ஒருவரை பார்க்க முடியாது”

“மோடியைவிட சிறந்த தேச பக்தர் ஒருவரை பார்க்க முடியாது”

என ரஷ்ய அதிபர் புதின் பாராட்டியதாக நுங்கம்பாக்கத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பேச்சு

11:59 (IST) 29 Oct 2022
‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ முறையில் கோவை சம்பவம் – போலீஸ் புதிய தகவல்

ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது, தீவிரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக சித்தாந்த்திற்காக தாக்குதல் நடத்தும் முறை ஆகும்.

இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல்கள் (IS) இஸ்லாமிய அரசு, அல் கொய்தா ஆகிய அமைப்புகளின் சித்தாந்தத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்த முபின் திட்டம்

கார் வெடிப்பு சம்பவத்திற்கு சில தினங்களுக்கு முன் கோயிலை நோட்டமிட்டு சென்றதாகவும் தகவல்

என்.ஐ.ஏ விசாரணையைத் தொடங்கும் முன்பாகவே, முக்கிய தகவல்களை திரட்டிய தமிழக போலீஸ்

11:13 (IST) 29 Oct 2022
திருவாரூரில் 4 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் போலீசாரின் விசாரணை தீவிரம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 4 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை

10:48 (IST) 29 Oct 2022
மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்திற்கு நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09:57 (IST) 29 Oct 2022
வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09:38 (IST) 29 Oct 2022
குண்டர் சட்டம்

திருவாரூரில் போலீசாரை தாக்கிய ஜீவநாதன், அசோக்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

09:01 (IST) 29 Oct 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா

தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

08:07 (IST) 29 Oct 2022
டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில், சிட்னியில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

08:07 (IST) 29 Oct 2022
மாநகர சபை கூட்டங்கள்

கிராம சபை கூட்டங்கள் போல, தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. இதில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

08:07 (IST) 29 Oct 2022
நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Web Title: Tamil news today live petrol price today t20 world cup 2022 pro kabaddi virat kohli 2022