Advertisment

News Highlights: சென்னைவாசிகளுக்கு சொந்த ஊர் திரும்ப இ-பாஸ் கேட்டு வழக்கு

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நிதி மன்றம் தமிழகஅரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Epass chennai

Epass chennai

Tamil News Today Updates :சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வாழ்வாதாரம் இழந்துள்ள தங்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நிதி மன்றம் தமிழகஅரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாக மீண்டு வருகிறார்கள். ஒரே நாளில் 5,000 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்தில் தொடர்ந்து 4000-க்கு மேல் புதிய கொரோனா தொற்றுகள் தினமும் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் நீடிக்கும் சமயத்தில், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் 2 மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்து கடவுள்களை அவமதித்த புகாரில் கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலை சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக-வின் கொள்கை யாரையும் புண்படுத்துவதில்லை என, கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:36 (IST)16 Jul 2020

    ரூ.4.28 லட்சம்

    சாத்தான்குளம் அருகே கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.4.28 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    22:28 (IST)16 Jul 2020

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 85.80% பேர் தேர்ச்சி - மேற்கு மாம்பலம் மேல்நிலை பள்ளி 100% தேர்ச்சி

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85 புள்ளி 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள 32 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் 4 ஆயிரத்து 248 பேர் தேர்வு எழுதினர். இதில் மூவாயிரத்து 988 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிணி மற்றும் அறிவியல் பாடத்தில் 6 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். 219 மாணவ, மாணவிகள் 450 மதிப்பெண்னுக்கு மேல் பெற்று உள்ளனர். மேற்கு மாம்பலம் மேல்நிலை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    22:28 (IST)16 Jul 2020

    மாநிலவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிரா-8,641

    தமிழகம்-4549

    கர்நாடகா-4169

    ஆந்திரா-2432

    உ.பி-2083

    மேற்குவங்கம்-1690

    டெல்லி-1652

    தெலங்கானா-1597

    குஜராத்-919

    ராஜஸ்தான்-737

    ம.பி-735

    கேரளா-722

    ஹரியானா-696

    காஷ்மீர்-490

    பஞ்சாப்-298

    உத்தரகண்ட் - 199

    புதுச்சேரி - 147

    21:59 (IST)16 Jul 2020

    மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் நன்றி

    திருக்குறள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் நன்றி

    * தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்துவிட்டதாக முதலமைச்சர் பாராட்டு

    * இனம்,மொழி, நாடு கடந்து அனைத்து தரப்பு மக்களையும் நெறிப்படுத்தும் நூல் திருக்குறள் - முதலமைச்சர்

    21:12 (IST)16 Jul 2020

    10,275 ஆக உயர்வு

    கேரளாவில் இன்று 722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,275 ஆக உயர்வு!

    20:47 (IST)16 Jul 2020

    மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    'பிளஸ்டூ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து'

    தமிழகத்தில் பிளஸ்-2 இல் வெற்றி பெற்றுள்ள மாணவ - மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள்! விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக!

    - மு.க.ஸ்டாலின்

    20:16 (IST)16 Jul 2020

    அமைச்சர் நிலோஃபர் கஃபிலுக்கு கொரோனா

    தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபிலுக்கு கொரோனா தொற்று உறுதியானது

    * ஏற்கெனவே அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு

    19:56 (IST)16 Jul 2020

    'கர்நாடகாவில் மேலும் 4,169 பேருக்கு கொரோனா'

    கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 4,169 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51,422 ஆக அதிகரிப்பு

    * மேலும் 104 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்த இறப்பு எண்ணிக்கை 1,032 ஆக உயர்வு

    19:37 (IST)16 Jul 2020

    சென்னையில் பதிவான கொரோனா

    ஜூலை 1 - 16 வரை சென்னையில் பதிவான கொரோனா பாதிப்பு!

    16: 1,157

    15: 1,291

    14: 1,078

    13: 1,140

    12: 1,168

    11: 1,185

    10: 1,205

    09: 1,216

    08: 1,261

    07: 1,203

    06: 1,747

    05: 1,713

    04: 1,842

    03: 2,082

    02: 2,027

    01: 2,182

    19:36 (IST)16 Jul 2020

    மாவட்ட வாரியாக இன்று அறிவிக்கப்பட்ட கொரோனா உயிரிழப்புகள்

    சென்னை-23

    திருவள்ளூர்-7

    மதுரை-5

    செங்கல்பட்டு-4

    வேலூர்-4

    திருச்சி -3

    காஞ்சிபுரம்-3

    தேனி-3

    விழுப்புரம்-3

    தூத்துக்குடி-2

    விருதுநகர்-2

    சேலம்-2

    குமரி-1

    சிவகங்கை-1

    தி.மலை-1

    தஞ்சை-1

    கோவை-1

    கரூர்-1

    கிருஷ்ணகிரி -1

    புதுக்கோட்டை-1

    19:35 (IST)16 Jul 2020

    முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

    விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

    சாலை விபத்துகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

    பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க உத்தரவு

    19:35 (IST)16 Jul 2020

    தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட்

    கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட்

    கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

    துறை ரீதியான விசாரணை நடைபெறும் எனவும் பினராயி விஜயன் அறிவிப்பு

    19:29 (IST)16 Jul 2020

    டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

    தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,712, மதுரையில் 679, திருவள்ளூரில் 450, செங்கல்பட்டில் 262, கோவையில் 256, வேலூரில் 246, காஞ்சிபுரத்தில் 239 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    18:58 (IST)16 Jul 2020

    மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு - பகுதி 2

    சிவகங்கை - 83

    தேனி-78

    க.குறிச்சி-71

    சேலம் -70

    காஞ்சிபுரம் - 67

    கோவை - 52

    புதுக்கோட்டை-50

    நீலகிரி-44

    திருப்பூர்-39

    தர்மபுரி - 27

    திருப்பத்தூர் - 27

    தஞ்சை-25

    கடலூர்-22

    கிருஷ்ணகிரி-21

    தென்காசி - 20

    திருவாரூர் -20

    நாமக்கல் - 18

    அரியலூர்-12

    பெரம்பலூர் - 10

    ஈரோடு - 8

    நாகை - 8

    கரூர்- 7

    18:56 (IST)16 Jul 2020

    மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு - பகுதி 1

    சென்னை - 1,157

    திருவள்ளூர் - 526

    மதுரை - 267

    வேலூர்-253

    தி.மலை - 212

    செங்கல்பட்டு - 179

    தூத்துக்குடி - 171

    குமரி - 146

    ராணிப்பேட்டை-145

    விருதுநகர் - 145

    நெல்லை - 130

    திண்டுக்கல் - 126

    விழுப்புரம்-105

    திருச்சி -94

    ராமநாதபுரம் - 90

    18:52 (IST)16 Jul 2020

    "கோவையில் முழு ஊரடங்கு தேவையில்லை" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி

    கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை என்றும் தேவை ஏற்படும் பட்சத்தில் மருத்துவக்குழுவினர் ஆய்வுக்கு பின் முடிவு எடுக்கப்படும் என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    18:39 (IST)16 Jul 2020

    சென்னையில் 1,157

    சென்னையில் மேலும் 1,157 பேருக்கு கொரோனா.

    சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,392 பேருக்கு கொரோனா

    தமிழகம் முழுவதும் இன்று 45,888 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை மாநிலம் முழுவதும் 17.82 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

    18:38 (IST)16 Jul 2020

    4549 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று 4549 பேருக்கு கொரோனா - 69 பேர் பலி

    அதிகபட்சமாக சென்னையில் 1157 பேருக்கு உறுதியாகி உள்ளது.

    இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 5106 பேர்.

    18:31 (IST)16 Jul 2020

    சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதிக்க கோரி வழக்கு - ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

    ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கக் கோரி, வழக்கறிஞர் சேசுபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.மனுவில் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, சொந்த ஊர் திரும்ப விரும்புபவர்களுக்கு இ- பாஸ் வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவி்ட்டது.

    18:30 (IST)16 Jul 2020

    மீண்டும் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு

    தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் மூன்று நாட்களாக நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன் உள்ளிட்ட எந்த கடன்களையும் வழங்கக்கூடாது என கடந்த 14ம் தேதி அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டிருந்தது.

    18:18 (IST)16 Jul 2020

    tndceonline.org

    கலை,அறிவியல் படிப்புகளில் சேர tngasa.in மற்றும் tndceonline.org என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம்

    * தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு tngptc.in,tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்

    18:08 (IST)16 Jul 2020

    ஜூலை 20ம் தேதி தொடக்கம்

    தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு ஜூலை 20ம் தேதி தொடக்கம்!

    18:01 (IST)16 Jul 2020

    2,061 பேருக்கு கொரோனா

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2,061 பேருக்கு கொரோனா உறுதி!

    தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,444 ஆக உயர்ந்தது.

    மேலும் 34 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 1,046 ஆக உயர்வு.

    17:47 (IST)16 Jul 2020

    காவலர்கள் முருகையன் மற்றும் கோபாலகுமார் சஸ்பெண்ட்

    புதுக்கோட்டையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பி ஓடிய விவகாரம்

    * மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் முருகையன் மற்றும் கோபாலகுமார் சஸ்பெண்ட்

    * மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அதிரடி உத்தரவு

    17:18 (IST)16 Jul 2020

    4 பேர் சிறைக்கு அனுப்பிவைப்பு

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் சிறைக்கு அனுப்பிவைப்பு

    3 நாள் சிபிஐ காவல் முடிந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவு

    காவலர் முத்துராஜ்-க்கு மட்டும் மேலும் 1 நாள் சிபிஐ காவல்

    4 பேருக்கும் 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

    17:06 (IST)16 Jul 2020

    ரூ.382. 89 கோடி நிதி

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த ஜூன் மாதம் 25 ம் தேதி வரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.382. 89 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது

    * சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

    17:00 (IST)16 Jul 2020

    ஊக்குவிப்பு நூலாகும்

    திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் - பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு

    * திருக்குறள் உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும் - பிரதமர் மோடி.

    16:52 (IST)16 Jul 2020

    வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    16:51 (IST)16 Jul 2020

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சயான், மனோஜ் ஜாமீன் கோரி மனு

    கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இருவரின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை மனுவை மனுதாரர் தரப்புக்கு வழங்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    16:50 (IST)16 Jul 2020

    வனிதா விஜயகுமார் மீது சூர்யாதேவி என்ற பெண் புகார் - தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாக மனுவில் குற்றச்சாட்டு

    நடிகை வனிதா விஜயகுமார் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாக சூர்யாதேவி என்ற பெண் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பீட்டர்பால் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்தது குறித்து சூர்யா தேவி, யூ ட்யூபில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இதில் தன்னை பற்றி அவர் அவதூறு பரப்புவதாக வனிதா விஜயகுமார் போரூர் காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் மீது சூர்யாதேவி புகார் அளித்துள்ளார். தன்னைப் பற்றி வனிதா பல்வேறு அவதூறுகளை பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    16:49 (IST)16 Jul 2020

    நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா

    நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று 131 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்து 229 ஆக உயர்ந்தது. இதில் ஆயிரத்து 250 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    16:49 (IST)16 Jul 2020

    செங்கல்பட்டு பாதிப்பு 8, 853 ஆக உயர்வு - புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, எட்டாயிரத்து 853 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 112 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இரண்டாயிரத்து 269 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆறாயிரத்து 299 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில், இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர்.

    16:48 (IST)16 Jul 2020

    நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: "மத்திய அரசு பதிலளிக்கவில்லை"- விஜயபாஸ்கர்

    செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், எழும்பூரில் பிறந்த குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார். கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனளிப்பதாக கூறிய அவர், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி அனுப்பிய கடிதத்துக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றார்.

    16:19 (IST)16 Jul 2020

    கந்த சஷ்டி கவசம் சர்ச்சை வீடியோ: கறுப்பர் கூட்டம் சுரேதிரன் காவல் நிலையதில் சரண்

    கந்த சஷ்டி கவசம் தொடர்பாக சர்ச்சையான கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    15:42 (IST)16 Jul 2020

    மறுத்தேர்வு முடிந்தவுடன் விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்களுக்கான மறுதேர்வு முடிந்தவுடன் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறினார்.

    15:13 (IST)16 Jul 2020

    மதுரை, விருதுநகரில் தினமும் 5000 பேருக்கு பரிசோதனை செய்ய காங். எம்.பி கோரிக்கை

    காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மதுரை, விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரிக்கிறது. அதனால், மதுரை, விருதுநகரில் நாள் ஒன்றுக்கு 5000 பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    14:48 (IST)16 Jul 2020

    சாத்தான்குளம் அருகே 8 வயது சிறுமி கொலை வழக்கு; உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

    சாத்தான்குளம் அருகே 8 வயது சிறுமி கொலை வழக்கில், நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி கொலை வழக்கில் முத்தீஸ்வரன், நித்தீஷ் ஆகிய 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    14:33 (IST)16 Jul 2020

    கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவு

    கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துவிதமான கடன்களையும் தங்கு தடையின்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    14:31 (IST)16 Jul 2020

    மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு பதில் மாற்று வழிமுறையை பின்பற்ற நாகை ஆட்சியர் பரிந்துரை

    நாகையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் மாற்று வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்று ஆட்சியர் பிரவீன் நாயர் பரிந்துரைத்துள்ளார்.

    நாகையில் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடந்துவரும் சூழலில் நாகை ஆட்சியர் பிரவீன் நாயர் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    14:28 (IST)16 Jul 2020

    சாத்தான்குளம் வழக்கு: முதல்வரை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல்வரையும் விசாரிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    14:12 (IST)16 Jul 2020

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்புர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    14:07 (IST)16 Jul 2020

    பாமக 32வது ஆண்டு; டாக்டர் ராமதாஸுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

    பாமக நிறுவப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் பழனிசாமி பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    14:00 (IST)16 Jul 2020

    ஜெயலலிதா வீட்டின் சாவியை கேட்டு ஜெ.தீபக் வழக்கு

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டின் சாவியை ஒப்படைக்க கோரி ஜே.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார்.

    13:56 (IST)16 Jul 2020

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா

    திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாவட்டத்தில் இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,048ஆக அதிகரித்துள்ளது.

    13:32 (IST)16 Jul 2020

    கொரோனா நிதி: முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது? 8 வாரத்தில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

    கொரோனா தடுப்பு நிதியாக முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது என்பதை 8 வாரத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுளது. மேலும், கொரோனா தடுப்பு பணிக்காக யார் யார் நிதி தந்தனர்? மற்றும்

    எவ்வளவு நிதி வந்தது? என்ற விவரத்தை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    13:13 (IST)16 Jul 2020

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    13:09 (IST)16 Jul 2020

    கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை

    சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனையை, ஒரு வாரத்தில் நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாடு அனைத்து வித மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வழக்குப் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    13:04 (IST)16 Jul 2020

    பிளாஸ்மா தானத்திற்கு 5000 பரிசு

    கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தங்களது பிளாஸ்மாவை தானமாக வழங்கினால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

    13:01 (IST)16 Jul 2020

    கர்நாடகாவில் பிளாஸ்மா நன்கொடைக்கு 5000 நன்கொடை

    கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தங்களது பிளாஸ்மாவை தானமாக வழங்கினால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

    12:28 (IST)16 Jul 2020

    திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    12:00 (IST)16 Jul 2020

    பொறியியல் விண்ணப்பம்

    பொறியியல் படிப்பில் சேர 10 மணி நேரத்தில் 5000 பேர் விண்ணப்பித்துள்ளதாக உயர்க் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    11:47 (IST)16 Jul 2020

    தங்கக் கடத்தல் வழக்கு

    கேரள முதல்வரின் தனிச்செயலராக இருந்த சிவசங்கரன் மீது அடுக்கடுக்காக விழும் குற்றச்சாட்டு. கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஷம்ஜூவை கைது சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கோட்டக்கல் பகுதியை சேர்ந்த அம்து என்பவர் தலைமறைவாகியிருக்கிறார். தலைமைச் செயலாளர் மற்றும் நிதிச்செயலாளரின் விசாரணை அறிக்கையை இன்று கேரள முதல்வரிடம் தாக்கல் செய்கிறார்கள். அறிக்கையின் அடிப்படையில் சிவசங்கரன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

    11:36 (IST)16 Jul 2020

    சாத்தான்குளம் வழக்கு

    தந்தை, மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ

    11:17 (IST)16 Jul 2020

    கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக சென்னையில் பாஜகவினர் போராட்டம்

    கந்தசஷ்டி கவச பாடலை அவமதித்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக சென்னையில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

    10:50 (IST)16 Jul 2020

    சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 17 பேர் பலி

    கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில், அங்கு ஒரே நாளில் கொரோனா தொற்றால் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தவிர, தொடர்ந்து தமிழகத்தில் தினமும் 4000-க்கும் அதிகமான தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது. 

    Tamil nadu news today:  முதல்வரை சந்தித்து கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க கோரிக்கை வைத்த கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறுகையில், “கோயம்பேடு வியாபாரிகள் சங்கள் கூட்டமைப்பு சார்பில் சென்று முதல்வரை சந்தித்து கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். முதல்வர் எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட பிறகு, மார்க்கெட்டை திறப்பது குறித்து வியாபாரிகள் சுகாதார அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைத்து விவாதித்து அதன் பிறகு திறக்கப்படும் என்று கூறினார். மழை வந்தால் திருமழிசையில் வியாபாரிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கூறினோம். காய்கறி ஏற்றிவரும் லாரிகள் சேற்றில் சிக்கிக் கொள்வதைப் பற்றி கூறினோம். எங்களின் கோரிக்கையை ஏற்று விரைவாக கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்” என்று கூறினார்.
    Coronavirus Corona Virus Exam Result Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment