Advertisment

Tamil News Today : ரஜினிகாந்த்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து

சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51, ஒரு லிட்டர் டீசல் ரூ.79.21-க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : ரஜினிகாந்த்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து

Tamil News Today Updates : சமரச திட்டங்களை பரிசீலிக்கும்படி விவசாயிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள். பிரச்னைக்கு தீர்வுகாண உறுதுணையான கருத்துருவை வழங்கும் படி, விவசாயிகள் மத்திய அரசுக்கு பதில். புதிய நாடாளுமன்ற கட்டிடம் இந்திய சுயசார்பு தன்மைக்கு, சாட்சியாக விளங்கும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல்.

Advertisment

5 ஆண்டு ஆட்சியில் ஆண், பெண் என தலா இரண்டரை ஆண்டு ஏன் சமமாக ஆளக் கூடாது என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர்களின் கருத்துகளைக் கேட்டு, முதல்வர் முடிவெடுப்பார் எனத் தெரிவித்துள்ளார். அரக்கோணம் அருகே மழையில் நனைந்த 15000 நெல் மூட்டைகள் சேதம். நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:45 (IST)11 Dec 2020

    சாஹித்ய அகாதமி விருதை திருப்பித்தந்தால் ஏற்க முடியாது

    சாஹித்ய அகாதமி விருதை திருப்பித்தந்தால் ஏற்க இயலாது; 2015ல் இருந்து 50க்கும் மேற்பட்டோர் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளனர். அவர்களிடமே மீண்டும் விருது ஒப்படைக்கப்படும் என்று சாகித்ய அகாதமி அமைப்பு அறிவித்துள்ளது.

    20:57 (IST)11 Dec 2020

    ரஜினிகாந்த்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து

    நடிகர் ரஜினிகாந்த்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் ரஜினிகாந்த் அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    20:01 (IST)11 Dec 2020

    சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் முதல் பாடல் டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

    நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தின் முதல் பாடல் டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்.

    19:50 (IST)11 Dec 2020

    2021 ஏப்ரல் வரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் - அண்ணா பல்கலை அறிவிப்பு

    2021 ஏப்ரல் வரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    18:55 (IST)11 Dec 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 1,235 பேருக்கு கொரோனா; 17 பேர் பலி

    தமிழகத்தில் இன்று புதிதாக 1,235 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 17 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,311 பேர் குணமடைந்தனர்.

    18:45 (IST)11 Dec 2020

    சென்னையில் விதிகளை மீறிய சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் - ஸ்டாலின்

    சென்னையில் விதிகளை மீறிய சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “விதிகளை மீறி, சென்னை மாநகராட்சியில் 8 இடங்களில் சுங்கச்சாவடிகள்! சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன்

    ஏற்பாட்டில் நடைபெற்ற #Dont_Want_Tollgate என்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் இந்த ஆட்சி மீதான மக்களின் கோபத்தைக் காட்டுகிறது. சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்!” என்று தெரிவித்துள்ளார்.

    18:37 (IST)11 Dec 2020

    உலகப் தென்கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி-டுக் கொரோனா தொற்றால் மரணம்

    உலகப் புகழ்பெற்ற தென் கொரிய திரைப்பட இயக்குனர் கிம் கி-டுக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானார். அவருக்கு வயது 60.

    18:28 (IST)11 Dec 2020

    பெருங்குடி குப்பை கிடங்கில் 125 ஏக்கர் மீண்டும் சதுப்பு நிலமாக மாற்றப்படும் - சென்னை மாநகராட்சி

    சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் 125 ஏக்கர் மீண்டும் சதுப்பு நிலமாக மாற்றப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    17:01 (IST)11 Dec 2020

    பிரதமர் தலைமையிலான பாரதியார் பிறந்தநாள் விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

    பிரதமர் மோடி தலைமையில் காணொளி வழியாக நடைபெறும் பாரதியார் பிறந்தநாள் விழாவில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.

    16:54 (IST)11 Dec 2020

    பாரதியார் பிறந்தநாள் விழாவில் - பிரதமர் மோடி உரை

    பாரதியார் பிறந்தநாளான இன்று வானவில் பண்பாட்டு மையம் சார்பில் காணொளி வாயிலாக நடைபெறுகிற பாரதியார் சர்வதேச விழாவில் பிரதமர் மோடி தலைமை உரையாற்றுகிறார்.

    பாரதியாரிடம் இருந்து இன்றைய இளைஞர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    16:35 (IST)11 Dec 2020

    சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவி தேர்தலில் அதிமுக வெற்றி

    நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த பொன்மணி பாஸ்கர் ஏற்கனவே வெற்றி பெற்றார். இதையடுத்து, சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் வெற்றி பெற்றார்.

    15:40 (IST)11 Dec 2020

    ரஜினியின் செயல்பாடுகள் அனைத்திலும் பாஜக உள்ளது

    ரஜினி தனது ரசிகர்களை நம்பவில்லை. மாறாக அவர் பாஜகவினரையே நம்புகிறார். அவரின் செயல்பாடுகள் அனைத்திலும் பாஜக மட்டுமே உள்ளது என்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

    15:16 (IST)11 Dec 2020

    புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்

    மாற்று சந்தைகள் உருவாக்கப்பட்டால் அது விவசாயத்துறையை முற்றிலும் சிதைத்துவிடும் என்று பாரதிய கிஷான் சங்கம் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை விதித்துள்ளது.

    14:52 (IST)11 Dec 2020

    மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக தலைவர் ஆலோசனை

    மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் நாளை மறுநாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட உள்ளார். தேர்தல் நெருங்கி வருகின்ற நேரம் என்பதால் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    14:51 (IST)11 Dec 2020

    மின் வேலியில் சிக்கி யானை மரணம்

    நெல்லை பாபநாசம் அருகே பொட்டல்குண்டு என்ற இடத்திற்கு அருகே மின்வேலியில் சிக்கி 30 வயது மதிக்க தக்க பெண் யானை உயிரிழப்பு. நிலத்தின் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    14:08 (IST)11 Dec 2020

    இம்மாத இறுதியில் தமிழகம் வருகிறார் ஜே.பி. நட்டா

    டிசம்பர் 30 மற்றும் 31 தேதிகளில் பாஜக தேசீய தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வர வாய்ப்புகள் உள்ளதாக எல். முருகன் அறிவித்துள்ளார்.

    13:56 (IST)11 Dec 2020

    தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த விராட் கோலி

    ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரசை பட்டியலில் 870 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடம் பிடிட்துள்ளார்.  842 புள்ளிகளுடன் ரோகித் ஷர்மா 2ம் இடம் பெற்றுள்ளார். 

    13:51 (IST)11 Dec 2020

    பாரூரில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

    கிருஷ்ணகிரி பாரூர் ஏரியில் இருந்து 14ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

    13:42 (IST)11 Dec 2020

    சாந்தி கியர்ஸ் அறக்கட்டளை உரிமையாளர் சுப்ரமணியன் காலமானார்

    கோவை சாந்தி கியர்ஸ் அறக்கட்டளை என்ற பெயரில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவ சேவை, உணவு போன்ற அத்தியாவசிய சேவைகளை செய்து வந்தவர் மரணம்.

    13:24 (IST)11 Dec 2020

    அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் விதிமீறலா?

    அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று வழக்கு. தமிழக அரசு இதற்கு வருகின்ற ஜனவரி 6ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    13:00 (IST)11 Dec 2020

    ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய கூடாது - போராட்டத்தில் மருத்துவர்கள்

    ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று வழங்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஐதராபாத் நிலோஃபெர் மருத்துவமனை முன் மருத்துவர்கள் போராட்டம். 

    12:53 (IST)11 Dec 2020

    மீனாட்சி கோயிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் எப்போது?

    மீனாட்சி கோயிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பது எப்போது என்று கேள்வி எழுப்பிய மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தீயணைப்பு நிலையம் அமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. மக்கள் நலனில் அக்கறை கொண்டு வழக்கு பதிவு செய்த இஸ்லாமியருக்கு பாராட்டு.

    12:51 (IST)11 Dec 2020

    பாரதி குறித்து முதல்வர் ட்வீட்

    "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று அன்றே முழங்கிய முண்டாசுக் கவிஞன் பாரதியை அவர்தம் பிறந்தநாளில் வணங்கி போற்றுகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

    12:29 (IST)11 Dec 2020

    அதிமுக வெற்றி

    சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில், குலுக்கல் முறையில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

    12:12 (IST)11 Dec 2020

    மு.க.ஸ்டாலின் ட்வீட்

    பாரதியாரின் 138-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து. நாட்டின் இன்றைய நிலையை நினைக்கும்போது 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

    11:46 (IST)11 Dec 2020

    ஜெயலலிதா நினைவு இல்ல பணிகள்

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு. 

    11:15 (IST)11 Dec 2020

    ஸ்டாலின் விளக்கம்

    எனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறிது நேரம் ஓய்வெடுத்தேன் என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

    11:10 (IST)11 Dec 2020

    ரஜினி ஆலோசனை

    சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

    10:38 (IST)11 Dec 2020

    ஜெயக்குமார் கருத்து

    தன் உயிரை பொருட்படுத்தாமல், மக்களோடு மக்களாக இருப்பவரே தலைவர். 8 மாதங்களாக வெளியே வராத ஸ்டாலின், தற்போது ஓட்டுக்காக களம் இறங்கியுள்ளார். கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

    10:26 (IST)11 Dec 2020

    முன்னோனுக்கு முதல் வணக்கம் - கமல் ஹாசன்

    09:53 (IST)11 Dec 2020

    அமித்ஷா ட்வீட்

    பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி. இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார். பாரதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார் என, பாரதியாரின் 139-வது பிறந்த தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட்

    09:39 (IST)11 Dec 2020

    மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரணம்

    கொளத்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்.

    09:38 (IST)11 Dec 2020

    சித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்?

    நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே காரணம் எனவும், கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு அவரிடம் பிரச்னை செய்து வந்திருக்கிறார் எனவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    09:08 (IST)11 Dec 2020

    புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அம்சங்கள்

    08:51 (IST)11 Dec 2020

    பாரதியார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

    மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சர்வதேச பாரதி திருவிழாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, உரையாற்றுகிறார்.

    08:48 (IST)11 Dec 2020

    ஜே.பி.நட்டா தமிழகம் வருகை

    2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள, வரும் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா!

    08:47 (IST)11 Dec 2020

    மதுரையில் 31 கிலோ கஞ்சா பறிமுதல்

    மதுரை, சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் கிருஷ்ணா எனும் இருவரை, செல்லூர் காவல் துறையினர் கைது செய்து அவர்கள் இடமிருந்த சுமார் 31 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்!

    08:35 (IST)11 Dec 2020

    பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடக்கம்

    ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்கும் நிலையில் அரசுப் பேருந்துகளில் இன்று முதல் அதற்கான முன்பதிவு தொடங்குகிறது. 

    Tamil News: வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற் கட்ட பிரச்சாரம் குறித்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டது. வரும் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை முதல் கட்ட பிரச்சாரத்தை மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார். இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” சீரமைப்போம் தமிழகத்தை என்கின்ற மிக உன்னதமான நோக்கத்துடன் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கின்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை வருகின்ற டிசம்பர் 13, 14, 15, 18 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி , திண்டுக்கல் , விருதுநகர் , திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தவிருக்கிறார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    Coronavirus Corona Farmer Protest
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment