Tamil News Today Updates: கொரோனா தொற்றுக்கு இடையில் படிப்படியாக இயல்புநிலை திரும்பினாலும், பெற்றோர் மனநிலையைப் பொறுத்தே, பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அரியர் தேர்வு ரத்து தவறான முடிவு என்றும் இது குறித்து தமிழக அரசு தங்களுக்கு எந்த கடிதத்தையும் அனுப்பவில்லை எனவும், ஏஐசிடிஇ விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் 8 மாதங்களில் ஆளுங்கட்சியாக திமுக மாறும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு லீவு விடப்படுவதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பலத்த எதிர்ப்பையும் மீறி ’ஒய்’ பிரிவு பாதுகாப்புடன் மும்பைக்கு வந்தார் கங்கனா ரனாவத்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை – அமைச்சர்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை. திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.
விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக இன்று அவர் காலாமானர். அவரது மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக திறமை வாய்ந்த நபரான வடிவேல் பாலாஜியின் மறைவு செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரின் குடுமத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என வெளியான தகவல் தவறு; ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிபால் இன்று 64 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மொபைல் செயலி வழியாக வருகைப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜனவரி 15ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இரங்கல் . மாணவர்கள் துணிவுடன் எதையும் எதிர்கொள்ளும் தன்மையையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள்.
கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும. வியாபாரிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் குடும்பத்தினரை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். குடும்பத்தினரிடம் விக்னேஷ்-க்காக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
மீன்வளத்துறைக்காக MatsyaSampada திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார் மீன்வளத்துறையை நவீன படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் மீன்கள் பதப்படுத்தும் கட்டமைப்பை அதிகரிக்கும் திட்டம் கால்நடை பராமரிப்பை ஊக்குவிக்கும் வகையில் இ-கோபாலா செயலியையும் பிரதமர் தொடங்கிவைத்தார்
அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.
அறிகுறி இருந்தாலும் கொரோனா நெகட்டிவ் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் எனஅனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு . ரேபிட் கிட் பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தாலும் சிலருக்கு அறிகுறி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.
ஜிஎஸ்டி விவகாரத்தில், மாநில அரசுகள் கடன் வாங்க நிர்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே தூண்டாடப்பட்டுள்ள மாநிலங்களின் மூலதன செலவில் மேலும் துண்டு விழும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்,. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய பொருளாதார சூழலில் ஜிஎஸ்டி இழப்பீடு என்பது மாநிலங்களுக்கு உடனடியாக தேவைப்படும் நிதி எனவும், மத்திய அரசு அதற்கான நிதியை திரட்டவும், அதனை வழங்கவும் வேறு பல வளங்களை பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்,.
புதிதாக நியமிக்கப்பட்ட தி.மு.க நிர்வாகிகள், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்வின் போது, பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் புதிய நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவன் விக்னேஷ் குடும்பத்திற்கு பாமக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி . பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
விஜய் டிவி-யின் புகழ் பெற்ற நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார்..!
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் பதவி ஏற்ற பின், முதல் முறையாக அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர்.
நீட் தேர்வு மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதோடு இறந்த மாணவர் விக்னேஷின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கும் விழாவில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சமீபத்திய நாட்களில் நாட்டின் எல்லைகளில் உருவாகியுள்ள சூழ்நிலையைப் பொறுத்தே, ஐந்து ரஃபேல் போர் விமானங்களை விமானப்படையில் இணைப்பது முக்கியமானதாகப்பட்டதாக கூறினார். “சமீபத்திய நாட்களில் நம் எல்லைகளில் உருவாக்கப்பட்டுள்ள சூழ்நிலையைப் பொறுத்தே ரஃபேலின் தூண்டல் முக்கியமானது” என்றார் அவர்.
ஆகஸ்ட் 31 வரை கடன் தொகை செலுத்தாதவர்களை வாராக்கடன் பட்டியலில் சேர்ப்பதற்கான தடை தொடரும் எனக் கூறி, இஎம்ஐ வட்டிக்கு, வட்டி வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து, 39,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக-கேரள நதிநீர் பங்கீட்டு குழு திருவனந்தபுரத்தில் நாளை பேச்சுவார்த்தை. பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் தமிழக அதிகாரிகள் இதில் பங்கேற்கிறார்கள். ஆழியாறு, ஆணைமலையாறு, நல்லாறு அணை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து இதில் ஆலோசனை செய்யப்படுகிறது.
இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ரஃபேல் விமானத்துக்கு அனைத்து மதப்படி பூஜை செய்யப்பட்டது. அம்பாலா விமானப்படைதளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றுள்ளார்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 70 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர், சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 536 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 7 ஆயிரத்து 917 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 44,65,863 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 75,062 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவிலிருந்து 34.71 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்
சென்னை விமானநிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கியது. இதனைதொடர்ந்து பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மெட்ரோ செல்லும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் சேவை இன்று முதல்தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ். காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் பிரான்கோவாவை வீழ்த்தினார்
தேனி மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 14,495 ஆக அதிகரிப்பு
ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில்,அவற்றில், 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்து சேர்ந்தன. இந்த விமானங்கள், அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி இந்திய விமான படையில் இணைக்கப்படுகின்றன. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி , முப்படை தளபதிகள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.