Advertisment

Tamil News Today: உலக கோப்பை செஸ் போட்டி- 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு அரசியல தலைவர்கள் வாழ்த்து

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today - 24 -08 -2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Prime Minister Modi congratulated Pragnananda who won the 2nd place in the World Cup Chess Tournament

Tamil news live

உலகக் கோப்பை செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு வீடியோ கால் மூலம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisment

மேலும் பிரதமர் மோடி, விஸ்வநாதன் ஆனந்த், கமல்ஹாசன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”


  • 22:12 (IST) 24 Aug 2023
    டி.எஸ்.பி.யை தள்ளிவிட்ட பாஜகவினர் கைது!

    பழனியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்க வந்த பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது டி.எஸ்.பி.யை பாஜக உறுப்பினர்கள் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது!


  • 22:10 (IST) 24 Aug 2023
    சர்ச்சைக்குரிய படத்திற்கு விருது : மு.க.ஸ்டாலின் கருத்து

    "சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலை விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட படத்திற்கு தேசிய ஒற்றுமைக்கான விருதா?" "சர்ச்சைக்குரிய படத்திற்கு NagisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூகவலைதளப் பதிவு


  • 22:09 (IST) 24 Aug 2023
    பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி ஆளுனர் ஆர்.என.ரவி வாழ்த்து

    செஸ் உலகக்கோப்பை தொடரில் 2வது இடம் பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து "பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக நாடு பெருமையடைகிறது" - பிரதமர் மோடி

    "பிரமிக்கவைக்கும் ஆட்டத்தால் இந்தியர்களின் இதயங்களை வென்று பிரக்ஞானந்தா நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்" - ஆளுநர் ஆர்.என்.ரவி


  • 20:48 (IST) 24 Aug 2023
    பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

    செஸ் உலகக்கோப்பை தொடரில் 2வது இடம் பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து


  • 20:46 (IST) 24 Aug 2023
    ஓபிஎஸ் உட்பட 4 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு ஓபிஎஸ் உட்பட 4 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு


  • 19:56 (IST) 24 Aug 2023
    சிறந்த கன்னட படம் 777 சார்லி

    தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ன. இதில் சிறந்த கன்னட திரைப் படத்திற்கான தேசிய விருதை 777 சார்லி என்ற படம் வென்றுள்ளது.


  • 19:54 (IST) 24 Aug 2023
    ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது

    தேசிய விருது எனக்கு அறிவிக்கப்பட்ட பின் இன்னும் பொறுப்பு கூடியுள்ளது, இனி மேலும் சிறப்பாக பணியாற்றுவேன் என இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கூறியுள்ளார்.


  • 19:53 (IST) 24 Aug 2023
    பல்லவி ஜோஷிக்கு சிறந்த துணை நடிகை விருது

    'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை பல்லவி ஜோஷி பெற்றுள்ளார்.


  • 19:20 (IST) 24 Aug 2023
    தயாநிதி மாறன் குற்றச்சாட்டு: ஆளுனர் மாளிகை மறுப்பு

    தயாநிதி மாறன் குற்றச்சாட்டுக்கு ஆளுனர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஆளுனர் மாளிகை விளக்கம் ஒன்று அளித்துள்ளது.


  • 19:01 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த பின்னணி பாடகர் விருது கால பைரவா

    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த பின்னணி பாடகர் விருது கால பைரவாவுக்கு அறிவிப்பு


  • 18:59 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: இரவின் நிழல் - ஸ்ரேயா கோஷலுக்கு விருது

    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் மாயவா சாயவா பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:57 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த மளையாள படம் - ஹோம்

    69வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த மளையாள படமாக ஹோம் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:56 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த இசையமைப்பாளர் - தேவிஸ்ரீ பிரசாத்

    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: புஷ்பா பாகம் 1 படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் - தேவிஸ்ரீ பிரசாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:55 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த இசையமைப்பாளர் - தேவிஸ்ரீ பிரசாத்

    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: புஷ்பா பாகம் 1 படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் - தேவிஸ்ரீ பிரசாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:54 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது - எம்.எம்.கீரவாணி

    69வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த பின்னணி இசைக்கான இசையமைப்பாளர் விருது - எம்.எம்.கீரவாணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:47 (IST) 24 Aug 2023
    நீட் தேர்வு குறித்து ஆளுநர் கூறியதில் எந்த தவறும் இல்லை - அண்ணாமலை

    தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “தமிழக ஆளுநர் அவரது பணியை திறம்பட செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வை பொறுத்தவரை குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும். நீட் குறித்து ஆளுநர் கூறியதில் எந்த தவறும் இல்லை. சம்பந்தம் இல்லாமல் ஆளுநரை வம்பிழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.


  • 18:40 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 777 சார்லி - சிறந்த கன்னட திரைப்படம்

    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த கன்னட திரைப்படமாக "777 சார்லி"-க்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:38 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு 4 விருதுகள்

    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சண்டை பயிற்சி, நடனம் உட்பட 4 பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு விருது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:36 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை ஆலியா பட், க்ரித்தி சனோன்

    சிறந்த நடிகைக்கான விருது நடிகைகள் ஆலியா பட், க்ரித்தி சனோன் இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:33 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரேயா கோஷல்

    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த பின்னணி பாடகிக்கான விருது பாடகி ஸ்ரேயா கோஷல்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:31 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சர்தார் உத்தம் - சிறந்த இந்தி படம்

    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த இந்தி திரைப்படமாக "சர்தார் உத்தம்"-க்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:27 (IST) 24 Aug 2023
    தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு தேசிய விருது

    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 2021-ம் ஆண்டுககன தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது ‘தி காஷ்மீஷ் ஃபைல்ஸ்’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:25 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள்: நடிகர் அல்லு அர்ஜூன் சிறந்த நடிகருக்கான விருது

    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: புஷ்பா -1 படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் அல்லு அர்ஜூன் வென்றார்.


  • 18:23 (IST) 24 Aug 2023
    69வது தேசிய திரைப்பட விருதுகள்: ராக்கெட்ரி - நம்பி விளைவு சிறந்த திரைப்படம்

    69வது தேசிய திரைப்பட விருதுகள்: ராக்கெட்ரி - நம்பி விளைவு சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:20 (IST) 24 Aug 2023
    இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது

    கருவறை ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லெனின் இயக்கிய 'சிற்பிகளின் சிற்பங்கள்' என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த கல்வியியல் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:19 (IST) 24 Aug 2023
    ஏக்காகவுன் திரைப்படத்திற்காக பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு தேசிய விருது அறிவிப்பு

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ஏக்காகவுன் திரைப்படத்திற்காக பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு தேசிய விருது அறிவிப்பு


  • 18:17 (IST) 24 Aug 2023
    தேசிய திரைப்பட விருது: உப்பெண்ணா - சிறந்த தெலுங்கு படம்

    விஜய்சேதுபதி நடித்த "உப்பெண்ணா" திரைப்படத்திற்கு சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:04 (IST) 24 Aug 2023
    69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; கடைசி விவசாயிக்கு படத்துக்கு 2 தேசிய விருது

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; கடைசி விவசாயிக்கு படத்துக்கு 2 தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    2021ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படம், சிறந்த தமிழ் திரைப்படமாகவும் `கடைசி விவசாயி' தேர்வு செய்யப்பட்டுள்ளது.


  • 17:40 (IST) 24 Aug 2023
    69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான, குறும்படங்களுக்கான சிறப்பு பிரிவில் ‘கருவறை’ படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 17:34 (IST) 24 Aug 2023
    உலகக் கோப்பை செஸ் - கார்ல்சன் சாம்பியன்

    உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். மேக்னஸ் கார்ல்சனுக்கு இறுதிவரை கடும் நெறுக்கடி கொடுத்து வந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியடைந்தார்.


  • 17:28 (IST) 24 Aug 2023
    நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது - ஆர்.எஸ். பாரதி

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி: “முடிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறித்து தி.மு.க விளக்கம் அளித்துள்ளது. நீதிமன்றம் மீது தி.மு.க-விற்கு எப்போதும் நம்பிக்கை உள்ளது. அமைச்சர் பொன்முடி வழக்கில் பல ஆண்டுகளா, விசாரணை நடைபெற்று, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காககவே விளக்கம் அளிக்கப்பட்டது.” என்று கூறினார்.


  • 17:01 (IST) 24 Aug 2023
    ஓணம் பண்டிகை; சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

    வார இறுதி நாட்கள், முகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 26, 27, 29ம் தேதிகளில், கோவையில் இருந்து கேரளா, மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை பகுதிகளுக்கு 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன


  • 16:43 (IST) 24 Aug 2023
    செஸ் சாம்பியன்ஷிப் டை-பிரேக்கர் சுற்று; முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவை வீழ்த்திய கார்ல்சன்

    செஸ் சாம்பியன்ஷிப் டை-பிரேக்கர் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்


  • 16:32 (IST) 24 Aug 2023
    செஸ் சாம்பியன்ஷிப் டை-பிரேக்கர் சுற்று; பிரக்ஞ்ஞானந்தாவுக்கு எதிராக திணறும் கார்ல்சன்

    செஸ் சாம்பியன்ஷிப் டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞ்ஞானந்தாவுக்கு எதிராக காய்கள் நகர்த்த மேக்னஸ் கார்ல்சன் திணறி வருகிறார்


  • 16:07 (IST) 24 Aug 2023
    நவீன யுக கட்டடம் 35 ஆண்டுகள் மட்டுமே பயன்படுகிறது என்றால் நாம் எங்கு செல்கிறோம் என தெரியவில்லை - ஐகோர்ட் வேதனை

    1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில்கள், அணைகள் கம்பீரமாக நிற்கையில், நவீன யுக கட்டடம் 35 ஆண்டுகள் மட்டுமே பயன்படுகிறது என்றால் நாம் எங்கு செல்கிறோம் என தெரியவில்லை. மதுரை திருமங்கலம் பேருந்து நிலைய கட்டடம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.


  • 15:49 (IST) 24 Aug 2023
    சென்னையில் நாளை முதல் செப். 2 வரை கழிவுநீர் தூர்வாரும் பணிகள் - மாநகராட்சி நிர்வாகம்

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை கழிவுநீர் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது


  • 15:42 (IST) 24 Aug 2023
    பாஸ்போர்ட் கோரி நளினி தொடர்ந்த வழக்கு; ஐகோர்ட் முக்கிய உத்தரவு

    பாஸ்போர்ட் கோரி நளினி தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனில் உள்ள மகளை காணச் செல்ல ஏதுவாக பாஸ்போர்ட் கோரி ஜூன் மாதம் விண்ணப்பித்தும், தற்போது வரை வழங்கப்படவில்லை என நளினி மனு தாக்கல் செய்துள்ளார். காவல்துறை சரிபார்ப்பு பணிகள் முடிந்து, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது


  • 15:30 (IST) 24 Aug 2023
    சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் 27-ம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தம்

    சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் 27 ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.279 கோடி செலவில் 4வது ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. 7 மாதங்களில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது


  • 15:17 (IST) 24 Aug 2023
    செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் டை-பிரேக்கர் சுற்று; பிற்பகல் 3.30 மணிக்கு தொடக்கம்

    ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் டை-பிரேக்கர் சுற்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இறுதிப்போட்டியின் முதல் சுற்றும், 2ம் சுற்றும் சமன் ஆனதால் வெற்றியாளரைத் தீர்மானிக்க டை-பிரேக்கர் சுற்று நடைபெறுகிறது


  • 15:01 (IST) 24 Aug 2023
    பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்க அதிபர் அறிவிப்பு

    பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அர்ஜென்டினா, எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 6 நாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து கூடுதலாக இணைய உள்ளது என தென் ஆப்பிரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.


  • 14:53 (IST) 24 Aug 2023
    உலக கவனம் ஈர்த்த தூத்துக்குடி மாணவி: நேரில் அழைத்து பாராட்டிய கனிமொழி!

    உலக டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி வீராங்கனை கே.எல்.மகிஷா பிரியங்காவுக்கு, திமுக எம்.பி., கனிமொழி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவி கே.எல்.மகிஷா பிரியங்கா, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற இந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    இதனிடையே, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு கே.எல்.மகிஷா பிரியங்காவை நேரில் அழைத்து எம்.பி., கனிமொழி பாராட்டு தெரிவித்தார்.


  • 14:31 (IST) 24 Aug 2023
    மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர்!

    அந்தரங்க விவரங்களை யூடியூப்பில் வெளியிடுவதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக, சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் மீது யூடியூப்பர் சித்ரா புகார் அளித்துள்ளார்.

    யூடியூப்பில் முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆபாச வார்த்தைகளால் பேசி பதிவிட்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானவர்கள் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது சிக்கா என்கிற சிக்கந்தர்.


  • 14:21 (IST) 24 Aug 2023
    கோவை ஈஷா யோகா ஆதியோகி சிலை: சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!

    "கோவை ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்களுக்கு முன் அனுமதியும்,தடையில்லா சான்றும் பெறவில்லை" என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

    இந்நிலையில், ஆவணங்களை ஆய்வு செய்து, அனுமதி பெற்றிருக்காவிட்டால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோவை நகர திட்ட இணை இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.


  • 14:18 (IST) 24 Aug 2023
    கேரளாவில் அதிகரிக்கும் வெப்ப அலை: வானிலை மையம் எச்சரிக்கை!

    கேரளாவில் இன்று வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை 45 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவீத மழை பொழிவு குறைந்துள்ளது. இதனால் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு உள்பட ஒன்பது மாவட்டங்களில் இன்று வெப்பநிலை மூன்று முதல் ஐந்து டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே மழை குறைந்து அணைகள் மூலம் மின் உற்பத்தி சரிந்துள்ளதால் மின் தடையும் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


  • 13:56 (IST) 24 Aug 2023
    ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி!

    ”எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை.. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்” என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேசியுள்ளார்.


  • 13:46 (IST) 24 Aug 2023
    இ.பி.எஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி பதில்!

    "நீட் தேர்வு போராட்டம் நாடகமாகவே இருந்தாலும் அதிலாவது ஈபிஎஸ் பங்கேற்று இருக்கலாமே?. நீட் தேர்வு போராட்டத்தின் போது இ.பி.எஸ் -க்கு 2 கோரிக்கைகளை முன்வைத்தோம். ஒருவேளை நீட் ரத்தானால் அதற்கான பாராட்டை இ.பி.எஸ் எடுத்துக் கொள்ளலாம் என கூறினோம்." என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி பதில் அளித்துள்ளார்.


  • 13:24 (IST) 24 Aug 2023
    கொடநாடு வழக்கு: ஸ்டாலினுக்கு கோரிக்கை!

    'கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்" என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜன் அண்ணன் தனபால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


  • 12:54 (IST) 24 Aug 2023
    6 கவுன்சிலர்கள் ஒரே நாளில் ராஜினாமா

    6 கவுன்சிலர்கள் ஒரே நாளில் ராஜினாமா கடிதம்- ராணிப்பேட்டையில் பரபரப்பு

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு ஒன்றியத் தலைவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி, 6 கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா கடிதம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அனிதா குப்புசாமி ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி, திமுக துணை தலைவர் முனியம்மா உட்பட 6 பேர், வட்டார வளர்ச்சி அலுவலர் சைபுதீனிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.

    இந்த சம்பவம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


  • 12:37 (IST) 24 Aug 2023
    காவிரி விவகாரம் - பிரமாண பத்திரம் தாக்கல்

    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு சார்பில் பதிலளிக்கும் வகையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    உச்சநீதிமன்றத்தில் நாளை காவிரி விவகாரம் தொடர்புடைய மனுக்கள் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தாக்கல்


  • 12:37 (IST) 24 Aug 2023
    மாநில கல்விக் கொள்கை: செப்டம்பர் மாதத்தில் அறிக்கை

    மாநில கல்விக் கொள்கை அறிக்கை - இறுதி கட்டப் பணிகள் முடிந்தன

    உறுப்பினர்களின் ஒப்புதல் கேட்பதற்கு 30 ஆம் தேதி கூட்டத்திற்கு ஏற்பாடு

    உறுப்பினர்களின் கருத்துக்களை தொடர்ந்து இறுதி செய்ய திட்டம்

    செப்டம்பர் மாதத்தில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கிறது முருகேசன் குழு


  • 12:36 (IST) 24 Aug 2023
    மதுரையில் திமுக உண்ணாவிரத போராட்டம்

    நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் மதுரையில் உண்ணாவிரத போராட்டம்

    திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம்

    உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி பங்கேற்பு

    கடந்த 20ம்தேதிக்கு பதில் ஒத்திவைக்கப்பட்ட ​போராட்டம் இன்று நடைபெறுகிறது


  • 12:35 (IST) 24 Aug 2023
    திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

    டெல்டா மாவட்டங்களுக்கு 4 நாட்கள் முதல்வர் சுற்றுப்பயணம் திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

    கும்பகோணம் சென்று ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின், மாலை திருவாரூர் செல்கிறார்

    நாளை திருக்குவளையில் முதல்வரின் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி றார் வைக்கி


  • 12:34 (IST) 24 Aug 2023
    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த கூட்டமைப்பு ரத்து செய்துள்ளது.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா சார்பில் விளையாடும் மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் அபாயம்.


  • 12:28 (IST) 24 Aug 2023
    நாளை சந்திரமுகி - 2 படத்தின் இசை வெளியீட்டு விழா

    'சந்திரமுகி-2' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை அறிவித்த படக்குழு.

    சந்திரமுகி-2 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ஜேப்பியர் கல்லூரியில் நடைபெறும் என படக்குழு அறிவிப்பு



  • 12:25 (IST) 24 Aug 2023
    சந்திரயான்-3 விஞ்ஞானிகளை சந்தித்து சித்தராமையா பாராட்டு

    சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டினார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!


  • 12:06 (IST) 24 Aug 2023
    "ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர்" - அண்ணாமலை

    நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவினர் தேவையில்லாமல் ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர். தொட்டுபார், சீண்டிப்பார் என்றெல்லாம் பேசுகிறார்கள். டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் சைலேந்திர பாபு பரிந்துரையை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது- பா.ஜ.க தலைவர் அண்ணாமலை


  • 11:43 (IST) 24 Aug 2023
    பைக் ஷோரூமில் தீ விபத்து

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், பைக் விற்பனை ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து

    2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.

    விபத்தில் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன


  • 11:41 (IST) 24 Aug 2023
    இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு

    நாகை, வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு போலீசார் 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

    வேதாரண்யம் மீனவர்கள் மீது கடந்த 2 நாட்களாக தாக்குதல் நடத்தி ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த நிலையில் வழக்குப்பதிவு


  • 10:51 (IST) 24 Aug 2023
    ஆளுநர் செல்லவிருந்த விமானம் தாமதம்

    |விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால், ஆளுநர் செல்லவிருந்த விமானம் தாமதம். சென்னையில் இருந்து கோவைக்கு காலை 8.25 மணிக்கு செல்ல வேண்டிய ஆளுநர் விமானம் 10.07 மணிக்கு புறப்பட்டு சென்றது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக கோவைக்கு புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் செல்லவிருந்த விமானத்தின், விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தாமதம் மாற்று விமானி வரவழைக்கப்பட்டு விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 10.07 மணிக்கு புறப்பட்டு சென்றது.


  • 10:43 (IST) 24 Aug 2023
    கழிவு நீருடன் புகுந்த மழை நீர்

    விடிய விடிய பெய்த மழை: கேளம்பாக்கம் ஸ்ரீநகர், லஷ்மி நகர் உள்ளிட்ட இடங்களில் கழிவு நீருடன் புகுந்த மழை நீர்


  • 09:39 (IST) 24 Aug 2023
    8 பேர் உணவு ஒவ்வாமையால் மருத்துமனையில் அனுமதி

    சென்னை ஆவடி அருகே வீட்டைச் சுற்றி முளைத்திருந்த காளானை சமைத்து சாப்பிட்ட 8 பேர் உணவு ஒவ்வாமையால் மருத்துமனையில் அனுமதி


  • 09:38 (IST) 24 Aug 2023
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டார்

    திருவாரூர், நாகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டார்


  • 08:51 (IST) 24 Aug 2023
    டைபிரேக் போட்டி இன்று நடைபெறுகிறது

    செஸ் உலகக் கோப்பையை வெல்வதற்கான டைபிரேக் போட்டி இன்று நடைபெறுகிறது. முன்னதாக 2 சுற்று ஆட்டங்களும் டிரா ஆனது.


  • 08:37 (IST) 24 Aug 2023
    டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறப்பு

    மேட்டூர் அணையின் நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 7978 கன அடியாக குறைந்தது; அணையின் நீர் மட்டம் 55.48 அடியாக உள்ளது டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறப்பு


  • 08:36 (IST) 24 Aug 2023
    அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment