Advertisment

News Highlights: பேரிடர் நல நிதி பெற முடியாத அதிமுக.வுக்கு பாஜக.வுடன் கூட்டணி ஏன்? மு.க.ஸ்டாலின்

Tamil News Today : ஏப்ரல் வரை ஆன்-லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
mk stalin, dmk, mk stalin listed dmk did for hindu religious, மு.க.ஸ்டாலின், இந்து மதத்துக்கு திமுக செய்த பணிகள், mk stalin slams some used as tool hindu religious, nellai dmk meeting, காளாண்களுக்கு தெரியுமா

Tamil News : நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் சங்கர மடத்தில் கோ பூஜை நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து.  பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏப்ரல் வரை ஆன்-லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு . நாள் ஒன்றுக்கு 5 வகுப்புகள் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும் உத்தரவு .

Advertisment

சிஎம்எஸ் - 01 தொலை தொடர்பு செயற்கைகோளுடன் டிச.17ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி50 ராக்கெட்.

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணி 8 என சம பலத்தில் உள்ளன. 4 முறை நடைபெற்ற தேர்தலில் முடிவு ஏற்படாத நிலையில், இன்று நடந்த தேர்தலில், அதிமுக, திமுக வேட்பாளர்கள் சம வாக்குகளை பெற்றனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் மணி பாஸ்கரும், துணை தலைவர் பதவிக்கு சரஸ்வதி அண்ணாவும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:31 (IST)12 Dec 2020

    நாட்டில் குணமடைந்தோரின் வீதம் 94.89-ஆக இன்று பதிவாகியுள்ளது

    இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, தற்போது 3.6 லட்சத்திற்கும் குறைவானோர் (3,59,819) பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொடர்ந்து 15-வது நாளாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைந்தோரின் வீதம் 94.89-ஆக இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,006 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    22:29 (IST)12 Dec 2020

    உறுதியான நடவடிக்கைகள் காரணமாக கோவிட்-19 பரவல் கட்டுக்குள் உள்ளது

    அரசு செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். தொலைநோக்கு அடிப்படையில் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக கோவிட்-19 பரவல் கட்டுக்குள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.  

    19:36 (IST)12 Dec 2020

    ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும் - கமல்ஹாசன்

    அச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்பிற்குள்ளானது. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.   

    19:12 (IST)12 Dec 2020

    துறை ரீதியான விசாரணைக்கு சிபிஐ உத்தரவு

    சென்னை சுராணா நிறுவனத்தில் இருந்து சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ மாயம் தொடர்பான வழக்கில் துறை ரீதியான விசாரணைக்கு சிபிஐ உத்தரவிட்டது.  

    முன்னதாக, இந்த வழக்கில் எஸ்.பி. தகுதிக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    18:29 (IST)12 Dec 2020

    சிறப்புத் திட்டத்தின் பயன்களை தமிழகம் தவிர நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களும் பெற்றுள்ளன.

    மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தின் பயன்களை தமிழகம் தவிர நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களும் பெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை தற்சார்பு இந்தியா நலத் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார்.

    நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்தத் திட்டத்திற்கு மாநிலங்களிடையே சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 27 மாநிலங்களுக்கு ரூ. 9,879.61 கோடி மூலதன செலவினங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே முதல் தவணையாக ரூ. 4,939.81 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரம், ஊரக மேம்பாடு, தண்ணீர் விநியோகம், நீர்ப்பாசனம், எரிசக்தி, போக்குவரத்து, கல்வி, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன செலவினங்களுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.   

    18:25 (IST)12 Dec 2020

    கைவினை மற்றும் புவிசார் குறியீடு பொம்மைகளுக்கு தரக் கட்டுப்பாட்டு ஆணையிலிருந்து விலக்கு

    கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்கள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் பொருட்கள், இந்திய தர நிர்ணய அமைப்பின் தரக் குறியீட்டை உபயோகப் படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) இரண்டாவது திருத்தப்பட்ட ஆணை 2020, வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

    மேலூம், இந்திய பொம்மை தரக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதிலிருந்தும், தரக்குறியீட்டை பயன்படுத்துவதிலிருந்தும் புவிசார் குறியீடுகள் கொண்ட பொருட்களுக்கு திருத்தப்பட்ட ஆணை விலக்கு அளிக்கிறது

    18:19 (IST)12 Dec 2020

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,97,693 ஆக அதிகரித்தது.  

    18:16 (IST)12 Dec 2020

    முதல்வருக்கு வேளாண் மசோதாக்களால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்று எப்படிப் புரியும்? - ஜோதிமணி கேள்வி

    எட்டுவழிச் சாலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளை லாபத்திற்காக விவசாய நிலங்களை அழிக்கத் துடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வேளாண் மசோதாக்களால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்று எப்படிப் புரியும்? என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பினார். 

    17:33 (IST)12 Dec 2020

    வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் - ரஜினிகாந்த்

    17:00 (IST)12 Dec 2020

    தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக்கல்வி - செங்கோட்டையன் முக்கிய அரசிவிப்பு

    தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அரசுத்தொகை வழங்க இன்றே உத்தரவிடப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.  

    15:48 (IST)12 Dec 2020

    முக ஸ்டாலின் அறிக்கை

    அதிமுக ஆட்சியில் பேரிடர் நிதியாகக் கேட்கப்பட்ட ரூ. 1.14 லட்சம் கோடியில் வெறும் ரூ.6,187 கோடிதான் கிடைத்திருக்கிறது என்றும் தனிப்பட்ட நலனுக்காக பாஜகவுடன் கூட்டணியா என்றும் முக ஸ்டாலின் அறிக்கை 

    15:44 (IST)12 Dec 2020

    ஆ.ராசா நீதிபதி போல் கருத்து தெரிவிக்கிறார்

    வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆ.ராசா, நீதிபதி போன்றூ கருத்து கூறிவருகிறார் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

    14:53 (IST)12 Dec 2020

    டெல்லி செய்திகள்

    தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    14:16 (IST)12 Dec 2020

    காலநிலை இலக்கு மாநாட்டில் பேச இருக்கிறார் பிரதமர் மோடி

    ஐக்கிய நாடுகள் சபையில் காலநிலை இலக்கு மாநாட்டில் பேச இருக்கிறார் பிரதமர் மோடி. பாரீஸ் ஒப்பந்தத்தின் 5ம் ஆண்டை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், சிலி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் இந்நிகழ்வில் பங்கேற்கின்றன.

    14:14 (IST)12 Dec 2020

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆந்திராவில் போராட்டம்

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆந்திராவில் இடதுசாரி கட்சியினர் கிருஷ்ணா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று சட்டங்களையும் அரசு கைவிட வேண்டும். இது இந்திய விவசாயத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்துவிடும் என்று கவலை தெரிவித்தனர்.

    13:18 (IST)12 Dec 2020

    ஆ. ராசா மீது வழக்கு பதிவு

    முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய புகாரில் மக்களவை உறுப்பினர் ஆ. ராசா மீது 2 பிரிவுகளில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு.

    13:04 (IST)12 Dec 2020

    ஜம்மு காஷ்மீர் பகுதியில் முதல் பனிமழை

    இன்று இந்த பருவத்திற்கான முதல் பனிப்பொழிவை சந்தித்தது ஜம்மு ஜாஷ்மீர். உதம்பூரில் அமைந்திருக்கும் பட்னிடாப் பகுதியில் இன்று காலை காணப்பட்ட காட்சி.

    12:38 (IST)12 Dec 2020

    துரைமுருகன் அறிவிப்பு!

    வரும் 20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் .ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு சட்டமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என துரைமுருகன் அறிவிப்பு

    12:35 (IST)12 Dec 2020

    நாராயணசாமி பேட்டி!

    ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது . புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை ஆளுநர் கிரண்பேடி செய்து வருகிறார் .புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின்பு நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

    11:47 (IST)12 Dec 2020

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

    தமிழகம் முழுவதும் 17 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை சென்னை, ஓசூர், தேனி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.10 லட்சம் பறிமுதல்

    11:46 (IST)12 Dec 2020

    நடிகை சித்ரா தற்கொலை!

    சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்திடம் 4-வது நாளாக விசாரணை  தொடர்கிறது. 

    11:41 (IST)12 Dec 2020

    தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மற்றும் பல கோரிக்கைகளுடன் தஞ்சை பூதலூர் மற்றும் திருச்சியின் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    10:43 (IST)12 Dec 2020

    கொரோனா தடுப்பூசி!

    பைசர் கொரோனா தடுப்பூசியை, அவசர காலத்திற்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

    10:30 (IST)12 Dec 2020

    அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.!

    தமிழக அரசு அரையாண்டு தோ்வுகளை ஒத்திவைத்துள்ளது தனியாா் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

    09:13 (IST)12 Dec 2020

    எம்.ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசிகள்!

    கொரோனா பெருந் தொற்று பிரச்சனைக்கு தீர்வுக் காண எம்.ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசிகள் அறிவியல் பூர்வமாக சிறந்த தீர்வாக கருதப்படுகிறது என்றும், இது மிகவும் பாதுகாப்பானது எனவும், இவற்றை குறைந்த செலவில் விரைவாக உற்பத்தி செய்ய முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

    09:12 (IST)12 Dec 2020

    மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் தரிசனத்திற்கு அனுமதி!

    ஊரடங்கு காரணமாக திருப்தியில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது,. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை ஏற்று மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது,. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    08:40 (IST)12 Dec 2020

    முதல்வர் பழனிசாமி ஆய்வு!

    கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து டிச.16,17ஆம் தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு

    Tamil News : தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன முதலமைச்சர் பழனிசாமி பேட்டி.

    நேற்றைய செய்திகள்

    அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "டைம்' இதழ் 2020 ஆம் ஆண்டின் சிறந்த நபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசை தேர்வு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபராக இருக்கும் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்பை தோற்கடித்த ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசை, டைம்ஸ் இதழ் தன்னுடைய அட்டைப் படத்தில் 'அமெரிக்காவின் கதை மாறுகிறது' என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளது

    தமிழக அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் .சுப்பிரமணிய சாமி, செந்தில் பாலாஜி, செல்வகணபதி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள் ரத்து

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment