Advertisment

Tamil News Today : சையத் முஷ்டாக் அலி டி20 - சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிசாதனை

News In Tamil Live தமிழகம் முழுவதும் இன்று  43 ஆயிரம் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைப்பு

author-image
WebDesk
New Update
Tamil News Today : சையத் முஷ்டாக் அலி டி20 - சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிசாதனை

Latest Tamil News Live : சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு சிறையில் இருந்துவந்தார். கடந்த 27-ம் தேதி இந்த வழக்கின் தண்டனைக் காலமான 4 ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், திடீரென்று சசிகலாவுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலும் குறைந்துள்ளதாகவும் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி அவர் தொடர்ந்து நல்ல முறையில் சுவாசிப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பெங்களூரில் ஓய்வெடுக்கும் சசிகலா, பிப்ரவரி 3 அல்லது 5-ம் தேதிதான் தமிழகம் திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 70 லட்சம் குழந்தைகளுக்குக் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

வேளாண் சட்ட மசோதாவை திரும்பப்பெறக் கோரி கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர் விவசாயிகள். அப்போது ஏற்பட்ட வன்முறையை அடுத்து 84 பேரைக் கைது செய்துள்ளனர்.  மேலும்,பொதுமக்கள் சார்பில் வன்முறை தொடர்பான 1700 மொபைல் போன் காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காந்தி நினைவுநாளான நேற்று, ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனர். இதனிடையே, டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தது தொடர்பாகத் தவறான தகவல்களைப் பதிவிட்டதாகக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் சில பத்திரிகையாளர்கள் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.88.82-க்கும், டீசல் ரூ.81.71-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Today's Tamil News Live : தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil



























Highlights

    22:56 (IST)31 Jan 2021

    தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளர் தேவை - கே.சி.பழனிசாமி

    அதிமுகவிற்கு தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளர் தேவை என்று தெரிவித்துள்ள கே.சி.பழனிசாமி, சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    22:55 (IST)31 Jan 2021

    மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம் - முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

    தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார் இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் மாதம் வரை டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    22:54 (IST)31 Jan 2021

    ராமதாஸ் செய்வது அரசியலுக்காக - திருமாவளவன் அதிரடி

    வன்னியர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு கோருவதில் யாருக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கடசித்தலைவர் திருமாவளவன், வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ராமதாஸ் செய்வது அரசியலுக்காக  என்று தெரிவித்துள்ளார்.

    22:52 (IST)31 Jan 2021

    சசிகலா மீது வழக்கு - அமைச்சர் சி.வி சண்முகம்

    அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம்  தெரிவித்துள்ளார்.

    22:51 (IST)31 Jan 2021

    எம்.ஜி.ஆர் எனது பெரியப்பா - மு.க.ஸ்டாலின்

    ஒரு பெரியப்பாவாக எம்.ஜி.ஆர் என்னை அரசியலில் ஈடுபட அறிவுறுத்தினார்என்று மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    22:47 (IST)31 Jan 2021

    சையத் முஷ்டக் அலி டி20 : தமிழக அணி சாம்பியன்

    38 அணிகள் பங்கேற்ற சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

    18:51 (IST)31 Jan 2021

    ஏரியை தூய்மை செய்யும் மாற்றுத்திறனாளி

    ஏரியை தூய்மை செய்யும் கேரள மாற்றுத்திறனாளி முதியவரை பாராட்டுவதாக பிரதமர் மோடி பெருமிததுடன் கூறியுள்ளார்.

    18:50 (IST)31 Jan 2021

    ராஜஸ்தான் நகராட்சித் தேர்தல் முடிவுகள்

    ராஜஸ்தான் நகராட்சித் தேர்தல் முடிவுகள்:காங்கிரஸ் 1174 இடங்கள், பாஜக 1123 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    18:48 (IST)31 Jan 2021

    ஜெயலலிதா நினைவிடத்தில், அலைமோதும் மக்கள் கூட்டம்

    கடந்த 27-ந்தேதி சென்னை மெரினாவில் திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தில், இன்று மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    18:46 (IST)31 Jan 2021

    பெண்களுக்கான புதிய இந்தியா

    பெண்களுக்கான புதிய இந்தியா உருவாக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

    18:45 (IST)31 Jan 2021

    ஜெயலலிதா மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர்

    ஜெயலலிதா மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எனறு தெரிவித்துள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அதிமுகவில் இணைக்ககோரி தினகரன் மன்னிப்பு கடிதம் அளித்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்  என தெரிவித்துள்ளார்.

    17:18 (IST)31 Jan 2021

    மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிரடி

    ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்தை அவமதிக்கும் ஒரு அரசியல் கட்சியில் எந்த ஒரு தேசபக்தரும் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

    16:13 (IST)31 Jan 2021

    அம்மா மினி க்ளினிக் சுவர் இடிந்து விழுந்த விவகாரம் - கமல்ஹாசன் அதிரடி கேள்வி

    கரூரில், திறப்பு விழாவின்போதே அம்மா மினி க்ளினிக் சுவர் இடிந்துவிழுந்திருக்கிறது. இதனை சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது? என்று தெரிவித்துள்ளார்.

    15:33 (IST)31 Jan 2021

    கோலியை அவுட்டாக்குவது எப்படி - புலம்பும் மொயின் அலி

    இந்திய அணி கேப்டன் 'கோலியை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை'' என இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி தெரிவித்துள்ளார். 

    15:31 (IST)31 Jan 2021

     சசிகலா காரில் அதிமுக கொடி - தினகரன கருத்து

    சசிகலா காரில் அதிமுக கொடி குறித்து பேசிய தினகரன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று தெரிவித்துள்ளார்.'' -

    15:30 (IST)31 Jan 2021

    முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

    எம்.ஜி.ஆரை என்றாவது பக்கத்தில் சென்று பார்த்திருக்கிறாரா முதல்வர் பழனிசாமி? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    15:20 (IST)31 Jan 2021

    புதுச்சேரியில் பாஜக ஆட்சி விரைவில் மலரும் - ஜெ.பி.நட்டா

    புதுச்சேரியில் பாஜக ஆட்சி விரைவில் மலரும் என்று தெரிவித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    14:18 (IST)31 Jan 2021

    ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு என் ஆதரவு உண்டு - பிரேமலதா

    சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது. இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது என்றும் கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் பலனில்லை எனவே உடனடியாக அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தன் ஆதரவு உண்டு என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.

    14:16 (IST)31 Jan 2021

    அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

    மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அதிமுக கட்சி கொடி ஏந்திய வாகனத்தில் பயணம் செய்துள்ளார். இதையடுத்து கட்சியில் இல்லாத ஒருவர் கட்சி கொடியை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் சசிகலா அதிமுக கோடியை பயன்படுத்தக்கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    13:41 (IST)31 Jan 2021

    சசிகலா ஒரு வாரத்திற்குள் சென்னை திரும்புவார் என தகவல்

    பெங்களூரூ அருகே விக்டோரியா மருத்துவமனையில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள ஹெப்பல் நகரில் தங்க இருக்கும் சசிகலா, வாரத்திற்குள் சென்னை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    13:37 (IST)31 Jan 2021

    9,11 வகுப்பு மாணவர்களுக்கு 8-ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்

    தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28 நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 9,11 வகுப்பு மாணவர்களுக்கு 8-ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம் என தமிழக அரசு கூறியுள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி வகுப்புகள் செயல்படும் என்றும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் தளர்வுகளுக்கு அனுமதி என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

    11:30 (IST)31 Jan 2021

    பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை!

    பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரவிருக்கிறார். சென்னை வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

    11:24 (IST)31 Jan 2021

    தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன்

    மத்திய மீன்வளம், கால்நடைத்துறையில் பணியாற்றி வந்த ராஜீவ் ரஞ்சன் நாளை காலை 7 மணிக்கு தமிழகத்தின் 47-ஆவது தலைமை செயலாளராக பதவியேற்கிறார். தலைமை செயலாளர் சண்முகம் ஓய்வு பெறுவதை அடுத்து ராஜீவ் ரஞ்சன் தற்போது நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

    11:12 (IST)31 Jan 2021

    7 நாள் தனிமையில் இருக்கவேண்டும்

    சசிகலா 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

    10:30 (IST)31 Jan 2021

    கொரோனா காரணமாக இந்த ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை ரத்து

    87 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை இந்த ஆண்டு ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடக்கவிருந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டியை ரத்து செய்துள்ளதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.

    09:09 (IST)31 Jan 2021

    போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி

    சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. சொட்டு மருந்து வழங்கிய குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பரிசாக வழங்கினார் இபிஎஸ். பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என் அறிவிப்பு. தமிழகத்தில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

    Tamil News Live : நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் ” எதிர்வரும் காலங்களில் பாஜக, அதிமுக மற்றும் ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்ட கட்சிகள் ஒன்றாக தேர்தலை சந்திக்கும்” என்று தெரிவித்தார்.
    Tamil Nadu Politics Sasikala
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment