பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் 470-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தேங்கிய தண்ணீர் - வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தேங்கி நின்ற தண்ணீர் சேலையூர் - வேளச்சேரி சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி.
சனாதானம் பற்றி பேசியது சரியே
எப்போதுமே பொய் செய்திகளை பரப்புவது தான் பாஜகவின் வேலை. சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே;எனது பேச்சை பாஜகவினர் திரித்து கூறுகின்றனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:02 (IST) 04 Sep 2023மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - உதயநிதி உறுதி
தனது தலைக்கு உத்தரப் பிரதேச சாமியார் ரூ. 10 கோடி அறிவித்துள்ளதற்கு அமைச்சர் உதயநிதி கருத்து: “மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். 10 ரூபாய் சூப்பு இருந்தால் போதும், எனது தலையை நானே சீவிக்கொள்வேன்.” என்று கூறினார்.
- 20:43 (IST) 04 Sep 2023சீமான் கைதை எதிர்பார்க்கிறேன்: விஜயலட்சுமி
சீமான் கைதை பார்க்க ஆவலாக உள்ளேன் என நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
- 20:42 (IST) 04 Sep 2023உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த அயோத்தி சாமியார்
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி சனாதன தர்மத்தை கொசு, கரோனாவுடன் ஒப்பிட்டு பேசினார்.
இந்த நிலையில் அயோத்தியில் உள்ள சாமியார் பரமஹன்ஸ ஆச்சாரியா உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்துள்ளார்.
- 20:38 (IST) 04 Sep 2023உதயநிதி பேசியதில் தவறில்லை - கே. பாலகிருஷ்ணன்
சி.பி.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “சனாதனம், மனுநீதி, வர்ணாசிரமம் பெயரில் காலம் காலமாக திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை எதிர்த்து மாநாடு நடத்தப்பட்டது .சனாதனத்துக்கு எதிராக புத்தர், சித்தர்கள், ராமானுஜர், வள்ளலார், நாராயணக்ரூ, வைகுண்ட சாமிகள் போர் செய்துள்ளனர், மக்களை ஜாதிரீதியாக பிரித்து தனித்தனியாக வைத்திருப்பதுதான் சனாதனம் என உதயநிதி பேசியதில் தவறில்லை” என்று கூறியுள்ளார்.
- 20:26 (IST) 04 Sep 2023இஸ்ரோ ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளின் வர்ணனையாளர் வளர்மதி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
இஸ்ரோ ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்து வந்த விஞ்ஞானி வளர்மதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Mission Range Speaker வளர்மதி மிகவும் சவாலான பணியைத் திறம்படக் கையாண்டவர், முக்கிய திட்டப் பணிகளுடைய வெற்றித் தருணங்களில் குரலாக ஒலித்தவர், வளர்மதியின் மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், பணியிட தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல், அனுதாபம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 19:51 (IST) 04 Sep 2023புதிய ஆவின் நிலையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம். புதிய வகை ஆவின் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்க உள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- 19:46 (IST) 04 Sep 2023ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தக்கூடாது - மம்தா பானர்ஜி
சி.பி.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “சனாதனம், மனுநீதி, வர்ணாசிரமம் பெயரில் காலம் காலமாக திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை எதிர்த்து மாநாடு நடத்தப்பட்டது .சனாதனத்துக்கு எதிராக புத்தர், சித்தர்கள், ராமானுஜர், வள்ளலார், நாராயணக்ரூ, வைகுண்ட சாமிகள் போர் செய்துள்ளனர், மக்களை ஜாதிரீதியாக பிரித்து தனித்தனியாக வைத்திருப்பதுதான் சனாதனம் என உதயநிதி பேசியதில் தவறில்லை” என்று கூறியுள்ளார்.
- 19:40 (IST) 04 Sep 2023ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தக்கூடாது - மம்தா பானர்ஜி
சி.பி.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “சனாதனம், மனுநீதி, வர்ணாசிரமம் பெயரில் காலம் காலமாக திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை எதிர்த்து மாநாடு நடத்தப்பட்டது .சனாதனத்துக்கு எதிராக புத்தர், சித்தர்கள், ராமானுஜர், வள்ளலார், நாராயணக்ரூ, வைகுண்ட சாமிகள் போர் செய்துள்ளனர், மக்களை ஜாதிரீதியாக பிரித்து தனித்தனியாக வைத்திருப்பதுதான் சனாதனம் என உதயநிதி பேசியதில் தவறில்லை” என்று கூறியுள்ளார்.
- 18:28 (IST) 04 Sep 2023சீமான் கைதை எதிர்பார்க்கிறேன்: விஜயலட்சுமி
சீமான் கைதை பார்க்க ஆவலாக உள்ளேன் என நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
- 17:55 (IST) 04 Sep 2023உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த அயோத்தி சாமியார்
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி சனாதன தர்மத்தை கொசு, கரோனாவுடன் ஒப்பிட்டு பேசினார்.
இந்த நிலையில் அயோத்தியில் உள்ள சாமியார் பரமஹன்ஸ ஆச்சாரியா உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்துள்ளார்.
- 17:32 (IST) 04 Sep 2023கௌரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் உயர்வு
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ.25,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
- 17:15 (IST) 04 Sep 2023பல்லடம் படுகொலை - முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்
கொலைக்கு முன்விரோதமே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் பல்லடம் சாலையில் உணவகம் நடத்தி வந்திருக்கிறார் உணவகம் எதிரே இந்த வெங்கடேஷ் கோழிக்கடை நடத்தி வந்திருக்கிறார் உணவகத்தில் இருந்து சிலிண்டர், கோழிக் கூண்டுகளை வெங்கடேஷ் எடுத்துச் சென்றதால் முன்விரோதம்
- 16:38 (IST) 04 Sep 2023ஓ.பி.எஸ் ஆசிரியர் தின வாழ்த்து
அறிவொளி பெறுவதற்கு அடிப்படையாக விளங்கும் கல்வியை போதிக்கும் உன்னதமானப் பணியாம் ஆசிரியர் பணியைத் தொடங்கி இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமனிதர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளினை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
- 16:12 (IST) 04 Sep 2023பல்லடத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்
திருப்பூர்; பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல். பல்லடம் நால்வர் கொலை சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலை ஒட்டி நடவடிக்கை. பல்லடம் பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
- 16:12 (IST) 04 Sep 2023பல்லடம் படுகொலை - முதல்வர் நிதியுதவி
பல்லடம் நால்வர் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₨ 2 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின்
- 15:25 (IST) 04 Sep 2023உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர்
ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல். நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இன்று காலை 8 மணி நேரப்படி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. லேண்டரும், ரோவரும் செப்டம்பர் 22ல் விழிக்கும் எனவும் இஸ்ரோ எதிர்பார்ப்பு
- 15:00 (IST) 04 Sep 2023விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டது. சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டும் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
- 14:57 (IST) 04 Sep 2023மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை – ஆர்.டி.ஐ கேள்விக்கு பிரதமர் அலுவலகம்
பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தருமாறு RTI மூலம் கோரப்பட்டிருந்த கேள்விக்கு ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது
- 14:36 (IST) 04 Sep 2023ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை - தமிழக தேர்தல் ஆணையம்
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது என தேர்தல் ஆணைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- 14:13 (IST) 04 Sep 2023குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் - அண்ணாமலை
பல்லடத்தில் பாஜக நிர்வாகி குடும்பத்தோடு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல்துறையில் சட்டம் ஒழுங்கையும், குற்றப்பிரிவையும் பிரிக்க வேண்டும். காவல்துறையின் செயல்பாடுகளில் அரசியல் விமர்சனங்களை வைக்க விரும்பவில்லை. தென் தமிழகத்தில் வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
- 13:57 (IST) 04 Sep 2023தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 13:47 (IST) 04 Sep 2023தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 13:29 (IST) 04 Sep 2023பழனி கோயில் விவகாரம்; ஐகோர்ட் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு
பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க கோரும் வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
- 13:14 (IST) 04 Sep 2023சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி கருத்துக்கு காங்கிரஸ் பதில்
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்களது கருத்துக்களை கூற சுதந்திரம் உள்ளது. அனைத்து மதங்களும் சமம் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. அனைவரது நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம் என சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பதில் அளித்துள்ளார்
- 12:46 (IST) 04 Sep 2023செப்.16ம் தேதி, திமுக எம்.பி.க்கள் கூட்டம்
வரும் செப்.16ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவிப்பு;
செப்.18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி.க்கள் முக்கிய ஆலோசனை
- 12:42 (IST) 04 Sep 2023அப்பாவு பேட்டி
மாநில அளவில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது, ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கூட இந்த தீர்மானத்திற்கு இல்லை.
ஜனநாயக முறைப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொண்டுவரப்பட்டால் 100% வெற்றி பெறாது.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக பேசி உள்ளார். இந்தியா சனாதனத்தின் படி இயங்குகிறது' என்ற ஆளுநரின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் தான் உதயநிதி பேசியுள்ளார்- திருநெல்வேலியில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி
- 12:18 (IST) 04 Sep 2023ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக கடிதம்
சனாதானம் தொடர்பான தன் கருத்துக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். உதயநிதி தன் கருத்தை திரும்ப பெறாவிட்டால், இதற்கு பின்னால் முதலமைச்சராகிய நீங்களும் உள்ளீர்கள் என்று அர்த்தம்- மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக கடிதம்
- 11:56 (IST) 04 Sep 2023மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து அளவு விநாடிக்கு 6,430 கன அடியில் இருந்து 8,060 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு விநாடிக்கு 8000 கன அடியாக உள்ளது.
அணையில் நீர் இருப்பு 16.716 டி.எம்.சி. ஆக உள்ளது.
- 11:55 (IST) 04 Sep 2023முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்வு
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் கனமழையால் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.50 அடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 515 கன அடியாகவும், தமிழ்நாட்டுக்கு நீர் திறப்பு 300 கன அடியாகவும் உள்ளது.
- 11:54 (IST) 04 Sep 2023செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதே தவறு; அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவு
ஜாமின் மனுவையும் விரைந்து முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் - நீதிபதிகள்
- 11:43 (IST) 04 Sep 2023விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி இஸ்ரோ சோதனை
நிலவில் உள்ள சந்திராயன் 3ன் விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி தரையிறக்கி இஸ்ரோ சோதனை;
விக்ரம் லேண்டர் ஏற்கனவே நின்றிருந்த இடத்தில் இருந்து 30-40 செ.மீ உயரத்திற்கு மேலே எழுப்பி தரையிறக்கப்பட்டது; மேலும் லேண்டரின் பாகங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுவதாக இஸ்ரோ தகவல்
- 11:41 (IST) 04 Sep 2023திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 13-ம் தேதி நடைபெறுகிறது.
- 11:35 (IST) 04 Sep 2023அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம்- அன்பில் மகேஸ்
அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம் என்பது தொடர்ந்து நிரூபணமாகி கொண்டே வருகின்றது.
செங்கோட்டையில் உள்ள இராமமந்திரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற நிகர் ஷாஜி ஆதித்யா L1 திட்டத்தின் இயக்குநராக சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் பெருமையை நிலைநாட்டி நமது மாணவர்களுக்கு வழிகாட்டும் அரசுப் பள்ளி மாணவி நிகர் ஷாஜியின் சாதனையை பெருமிதத்தோடு கொண்டாடுவோம்- அமைச்சர் அன்பில் மகேஸ் X தளத்தில் பதிவு
- 11:35 (IST) 04 Sep 2023தமிழ்நாட்டில் முதன்முறையாக 'அனிமல் பாஸ் ஓவர்' மேம்பாலம்
தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை - திண்டுக்கல் இடையே 'அனிமல் பாஸ் ஓவர்' மேம்பாலம் கட்டமைக்கப்பட உள்ளது.
2 மலைகளுக்கு இடையே 210 மீட்டர் தூரம் வரை இந்த உயர்மட்ட பாலத்தை அமைக்க வனத்துறை அனுமதியளித்தது.
பூச்சம்பட்டி அருகே உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக பாறைகள் வெடி வைத்து அகற்றம். 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உயர்மட்ட பாலம் பணிகளை முடிக்க அரசு திட்டம்
- 11:34 (IST) 04 Sep 2023ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை- போலீசார் விசாரணை
திருப்பூர் : பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 11:34 (IST) 04 Sep 2023எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக ஒரு குடும்பத்தையே படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
- 11:02 (IST) 04 Sep 2023எம்லாட் முறையில் சிலைகளை இந்தியா கொண்டுவர நடவடிக்கை
வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் பழங்கால சிலைகளை எம்லாட் முறையில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை
பரஸ்பர ஒப்பந்த முறையில் மீட்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிரடி தனிப்படை நடவடிக்கை
சிங்கப்பூரில் 16, அமெரிக்காவில் 8, ஆஸ்திரேலியாவில் 7, ஜெர்மனியில் 2 பழங்கால சிலைகள் இருப்பது கண்டுபிடிப்பு
சிங்கப்பூரில் சோமாஸ் கந்தர், நடன சம்பந்தர், கருடன் உள்ளிட்ட 16 இந்திய பழங்கால சிலைகள் கண்டுபிடிப்பு
- 11:01 (IST) 04 Sep 2023ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம்?
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நாளை அவசர ஆலோசனை
டெல்லியில் உள்ள காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நாளை இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை
இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.,க்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம் என தகவல்
- 11:01 (IST) 04 Sep 2023ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம்?
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நாளை அவசர ஆலோசனை
டெல்லியில் உள்ள காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நாளை இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை
இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.,க்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம் என தகவல்
- 10:41 (IST) 04 Sep 2023பொறியியல் படிப்பு - 50,000 இடங்கள் காலி
பி.இ., பி.டெக் படிப்புக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 50,000 இடங்கள் காலி
11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்
263 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்
61 கல்லூரியில் 10%க்கும் குறைவாகவும், 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும் மாணவர் சேர்க்கை
- 10:33 (IST) 04 Sep 2023நாடாளுமன்ற தேர்தல்: மநீம தனித்து போட்டியா?
வெளிநாடு பயணத்தை முடித்து நாளை தமிழகம் திரும்பும் கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்த திட்டம்
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெறலாமா என்பது குறித்து ஆலோசிக்க முடிவு
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கிய மாநில செயற்குழு
- 10:28 (IST) 04 Sep 2023ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை
திருப்பூர் பல்லடம் அருகே கள்ளக்கிண்று நேற்று வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக் கேட்ட போது ஒரே குடும்பத்தை சேர்ந்த செந்தில் குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய 4 பேர் வெட்டிக் கொலை.
குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சாலை மறியல். அசம்பாவித நிகழ்வுகளை தடுக்க பாதுகாப்பு பணியில் நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட காவல்துறை குவிப்பு.
- 09:39 (IST) 04 Sep 2023இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மரணம்
இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் மரணம்.
கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய பல முக்கிய ராக்கெட் நிகழ்வுகளில் வர்ணனையாளராக பணியாற்றியவர். கடைசியாக கடந்த ஜூலை 30-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி 56 ராக்கெட் ஏவிய போது அவர் அறிவித்தார்.
- 09:22 (IST) 04 Sep 20238-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
ஆந்திரா, ஏனாம், கேரளா, மாஹே மற்றும் தெலுங்கானாவின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
- 09:21 (IST) 04 Sep 2023அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வாய்ப்பு - இந்திய வானிலை
- 09:19 (IST) 04 Sep 2023மாநிலங்களை அழிக்கும் நோக்கில் செயல்படும் பாஜக
மாநிலங்களை அழிக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது
எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி அமைந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது
மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு இழக்கும் நிதி அதிகரிப்பு.
தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவரவில்லை வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்.
இந்தியாவை மீட்டெடுப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Speaking for INDIA என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய ஆடியோ வெளியீடு
- 08:02 (IST) 04 Sep 2023இணையத்தில் வெளியீடு
Speaking for INDIA என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய ஆடியோ வெளியீடு தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ ரிலீஸ் ஆடியோ பதிவு http://speaking4india.com
என்ற இணையத்தில் வெளியீடு "இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க முயற்சிக்கிறது பாஜக" "2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை"
- 07:56 (IST) 04 Sep 2023முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ் வெளியானது
Speaking for INDIA என்ற தலைப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ் முதல் ஆடியோ தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் இன்று காலை 7 மணிக்கு வெளியானது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.