Advertisment

News Highlights: செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு

Tamil News : மிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
today weather today chennai

Tamil News Today Live suriya : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

அனைத்து ஆராய்ச்சி மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி டிச. 2 ஆம் தேதி திறப்பு. அண்ணா சாலை, மெரினா, சவுகார்பேட்டை, பட்டினப்பாக்கம், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை .

"ஸ்டெர்லைட் ஆலைக்கு அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியது பச்சை பொய் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழகத்துக்கான தண்ணீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.காவிரி ஒழுங்காற்று குழுவின் 38-வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் திருச்சி மண்டல நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர், உறுப்பினர் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:38 (IST)12 Nov 2020

    கொரோனா ரிப்போர்ட் தவறானது – சிரஞ்சீவி விளக்கம்

    மூன்று வெவ்வேறு மருத்துவர்கள் எனக்கு மூன்று வெவ்வேறு சோதனைகளை செய்தனர். அதில் எனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. முந்தைய முடிவு கொரோனா சோதனையில் ஏற்பட்ட தவறுதலால் வந்திருக்கலாம். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.’ எனத் தெரிவித்துள்ளார்

    முன்னதாக, சிரஞ்சீவி தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்தார்.   

    19:51 (IST)12 Nov 2020

    ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை - மோடி திறந்து வைத்தார்

    ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.   

    இந்த சிலை, தேசத்துக்கான மகத்தான அர்ப்பணிப்பை நமக்கு போதிக்கட்டும். எப்போதுமே சுவாமி விவேகானந்தர் அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கும் நமது தேசத்தின் மீதான தீவிரமான அன்பையும் போதிக்கட்டும். இந்த சிலை ஒற்றுமையின் தரிசனத்துக்காக தேசத்துக்கு ஊக்கமளிக்கட்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.  

    18:57 (IST)12 Nov 2020

    சு. வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு குடியரசு தலைவர் மாளிகை பதில்

    இராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல பத்தாண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் எழுவரையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி, ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி குடியரசு தலைவருக்கு சு. வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு, உள்துறை அமைச்சருக்கு தக்க நடவடிக்கைக்காக அனுப்பி வைத்திருப்பதாக குடியரசு தலைவர் மாளிகை பதில் தெரிவித்தது.

    18:51 (IST)12 Nov 2020

    2021 ஹஜ் பயண விண்ணப்பம்

    தமிழகத்தில் இருந்து 2021-ல் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்கள் தமிழ்நாடு ஹஜ் குழுவிடம் அடுத்த மாதம் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்தது.

    18:49 (IST)12 Nov 2020

    கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ்

    கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு

    18:47 (IST)12 Nov 2020

    சென்னை செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

    நவம்பர் 13 முதல் 18 வரை கன மழை எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதால், சென்னை செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    18:44 (IST)12 Nov 2020

    14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

    தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, சிவகங்கை,இராமநாதபுரம்,திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மாநில அரசின் பல்வேறு துறைகளிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    17:28 (IST)12 Nov 2020

    முதல்வர் பழனிச்சாமியுடன் எல்.முருகன் சந்திப்பு

    தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று மாலை 5:30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்திக்க இருக்கிறார். 

    முன்னதாக, யாத்திரையின் போது தமிழக அரசு நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. தினமும் போராட்டம் நடத்தும் திமுகவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாஜகவின் மீது மட்டும் தமிழக அரசு இந்த அடக்குமுறையை மேற்கொள்ள என்ன காரணம்? என்று எல்.முருகன் கருத்து தெரிவித்திருந்தார். 

    16:40 (IST)12 Nov 2020

    முதல்வர் ஆலோசனை

    சென்னை தலைமைச் செயலகத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உறவை மேம்படுத்த அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை பற்றி முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

    15:36 (IST)12 Nov 2020

    வரைவு வாக்காளர் பட்டியல்

    வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தி வருகிறார். நவம்பர் 16-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைப்பெறுகிறது. 

    14:49 (IST)12 Nov 2020

    எடப்பாடி பழனிச்சாமி ட்வீட்

    14:49 (IST)12 Nov 2020

    அவசர கால கடன் வசதி

    சிறு, குறு தொழில்களுக்கான அவசர கால கடன் வசதி மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

    13:51 (IST)12 Nov 2020

    இந்திய பொருளாதாரம் மீட்சியடைந்துள்ளது - நிர்மலா சீதாராமன்

    தற்போது இருக்கும் கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில், இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான தூண்டுதல் தொகுப்பு தொடர்பான சில புதிய நடவடிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தார். ஆரம்பத்தில் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை பற்றி பேசிய அவர், அக்டோபரில் எரிசக்தி நுகர்வு ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், வங்கி கடன் வளர்ச்சி 5.1 சதவீதம் உயர்ந்துள்ளது மற்றும் பங்குச் சந்தைகள் சாதனை அளவில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

    13:37 (IST)12 Nov 2020

    ஆ.ராசா கண்டனம்

    "ஏ.பி.வி.பி.-க்கு பயந்து அருந்ததி பாடத்தை நீக்குவதா?" என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்துக்கு மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். 

    13:19 (IST)12 Nov 2020

    திமுக ஆட்சியில் நீக்கப்பட்டதெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்ததும் சேர்க்கப்படும் - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

    அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டதெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்ததும் சேர்க்கப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

    12:37 (IST)12 Nov 2020

    கமல்ஹாசன் ட்வீட் !

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கமல்ஹாசன் ட்வீட் 

    12:27 (IST)12 Nov 2020

    108 புதிய ஆம்புலன்ஸ்கள்!

    108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ரூ.24.77 கோடியில் புதிய வாகனங்கள். 108 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. 

    11:50 (IST)12 Nov 2020

    மத்திய அரசு அறிவிப்பு!

    வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது மத்திய அரசு . வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட கூடாது .அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் வெளிநாட்டு நிதி உதவியினை பெற முடியாது.  

    11:49 (IST)12 Nov 2020

    இடி மின்னலுடன் கனமழை!

    தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை. சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல் . சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

    11:47 (IST)12 Nov 2020

    பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

    தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

    10:55 (IST)12 Nov 2020

    தமிழக அரசு அறிவிப்பு!!

    சமுதாய, அரசியல், மதம் உள்ளிட்ட கூட்டங்களுக்கான அனுமதி, மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது .தமிழக அரசு அறிவிப்பு!

    10:54 (IST)12 Nov 2020

    உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை . ஆபாசத்தை பரப்பும் வகையிலுள்ள பாலியல் பிரச்னை தொடர்பான மருத்துவ விளம்பரங்களுக்கும் இடைக்காலத் தடை  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 

    10:51 (IST)12 Nov 2020

    கனிமொழி கண்டனம்!

    மாணவர்கள் எதை படிக்க வேண்டும் என்பதை ஆட்சி அதிகாரமும், அரசியலும் முடிவு செய்வதா?"சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும். மாவோயிஸ்டுகள் பற்றி அருந்ததி ராய் எழுதிய புத்தகம் 'வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்' பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு திமுக எம்.பி கண்டனம். 

    10:36 (IST)12 Nov 2020

    Walking with Comrades நீக்கம்!

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அருந்ததிராய் எழுதிய Walking with Comrades என்ற புத்தகம் நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுபுத்தியுள்ளது.முதுகலை ஆங்கில இலக்கிய பாடத்தில் இடம்பெற்றிருந்தது, அருந்ததி ராயின் 'வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்' புத்தகம்.  பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி எதிர்ப்பு தெரிவித்ததால் பாடத்திட்டத்தில் இருந்து புத்தகம் நீக்கம். 

    10:33 (IST)12 Nov 2020

    பாஜக தொண்டர்கள் அதிருப்தி!

    தமிழகத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பதால் அதிமுக மீது பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்!" -என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். 

    10:32 (IST)12 Nov 2020

    விஜய் மக்கள் இயக்கம்!

    விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் நடிகர் விஜய்.  மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள் உள்ளிட்டோர் நியமனம். 

    10:10 (IST)12 Nov 2020

    ஆளுநர் ஒப்புதல்!

    புதுச்சேரியில் தீபாவளிக்கு பட்டியல், பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் இலவச உடைக்கு பதிலாக குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்க ஆளுநர் ஒப்புதல். 

    10:08 (IST)12 Nov 2020

    கல்லூரிகள் திறப்பு!

    கல்லூரிகள் டிச. 2 - ம் தேதி திறப்பு. டிச. 2 - ம் தேதி திறக்கப்படும் கல்லூரிகளுக்கு மட்டும் மாணவர் விடுதிகளை திறக்க அரசு அனுமதி! 9,10,11,12 வகுப்புகளுக்கு நவ. 16 - ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற உத்தரவு ரத்து.

    Tamil News Today  : டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். இதில் பா.ஜ.க. தலைவர் நட்டா, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்கள் நம்பிக்கை பா.ஜ.க.வினருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், வேலை செய்பவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பது தேர்தலில் நிரூபணமாகி உள்ளதாகவும், பா.ஜ.க. மீதான மக்களின் அன்பு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    நேற்றைய முக்கிய செய்திகள்

    உள்ளூர் பொருட்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என பொதுமக்களை மத்திய ஜவுளி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி, வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளிக்கான துணி வகைகள், கைவினைப் பொருட்கள் அல்லது பரிசுப்பொருட்களை புகைப்படம் எடுத்து அதை விற்பனை செய்பவரையும் குறிப்பிட்டு #Local4Diwali என்ற ஹேஷ்டேகை பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment