Advertisment

News Highlights: இன்று தமிழக காங்கிரஸ் செயற்குழு; கூட்டணி பற்றி ஆலோசனை

Today's Tamil News Live கொரோனா தடுப்புக்கு புதிய சொட்டு மருந்து - பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டுபிடிப்பு

author-image
WebDesk
New Update
News Highlights: இன்று தமிழக காங்கிரஸ் செயற்குழு; கூட்டணி பற்றி ஆலோசனை

News In Tamil Live : சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது. 8 ஆயிரத்து 240 பேர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணலை நடத்த அதிமுக திட்டமிட்டிருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்தியலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

Advertisment

தன்னுடன் கூட்டணிக்கு வருபவர்கள் தாமதிக்க வேண்டாம் என்றும் மூன்று நாட்களுக்குள் வந்து இணையுமாறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்புவிடுத்திருக்கிறார். மேலும், ஸ்கோர் செய்வதுதான் தன்னுடைய இலக்கு என்றும் இனி அடிக்கப்போகும் ஒவ்வொரு பாலும் சிக்ஸர்தான் என்றும் கூறியிருக்கிறார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற பெயரில் கொரோனா தடுப்பு மருந்தை முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கியது. இந்த மருந்தின் முதல் 2 கட்ட சோதனைகள் வெற்றிகரமான முடிவைத் தந்த நிலையில் 25 ஆயிரத்து 800 பேருக்குக் கொடுக்கப்பட்டு 3-ஆவது கட்ட சோதனை நடத்தப்பட்டது. 18 முதல் 98 வரையிலான பல்வேறு வயது பிரிவினர், பல்வேறு இணை நோயுள்ளவர்கள் எனப் பல தரப்பட்டவர்களிடம் கொடுத்துச் சோதிக்கப்பட்டதில் இந்த மருந்தின் செயல் திறன் 81%-ஆக இருப்பதாக பாரத் பயோடெக் தனது இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் மோடியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வருகிற மார்ச் 25 ம் தேதி பிரதமர் வங்க தேசம் செல்வார் என்றும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் மோடி பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.



























21:56 (IST)04 Mar 2021










































பாஜகவின் புகாரை தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் - தினேஷ் குணடு ராவ்

ராகுல்காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை. அவது மீதான புகார் தவறானது என தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக தினேஷ் குணடு ராவ், பாஜகவின் புகாரை தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் கூறியுள்ளார்.

21:16 (IST)04 Mar 2021










































காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்க்குகொரோனா பாதிப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

21:06 (IST)04 Mar 2021










































கொரோனா தடுப்பூசி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செலுத்திக்கொண்டார்

தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்

20:57 (IST)04 Mar 2021










































தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுர்ணர்கள் தாஜ்மஹாலில் இருந்த பார்வையாளர்களை வெளியேற்றியதால், தாஜ்மஹால் வெறிச்சோடி காணப்பட்டது 

20:53 (IST)04 Mar 2021










































தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக அழைப்பு

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மார்ச் 6ஆம் தேதி வருமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

20:52 (IST)04 Mar 2021










































கட்சியினருக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவுரை

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கட்சியினருக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவுரை வழங்கினர்.

19:35 (IST)04 Mar 2021










































திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் கூட்டம் நடைபெறுகிறது என்றும், மார்ச் 7ல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

19:34 (IST)04 Mar 2021










































திமுக - மதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை

சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக - மதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை. அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் மதிமுக சார்பில் மல்லை சத்யா, செந்திலதிபன், சின்னப்பா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

19:33 (IST)04 Mar 2021










































திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிருப்தி - மதிமுக

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து மதிமுக அதிருப்தி உள்ளதாகவும், திமுகவின் நிலைப்பாட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், மீண்டும் திமுக அழைத்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றும் மதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

19:32 (IST)04 Mar 2021










































மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 234 தொகுதிகளிலும் மதிமுக பரந்து விரிந்து இருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

17:20 (IST)04 Mar 2021










































சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ஆலோசனை நடத்தி வருகிறார்.

16:31 (IST)04 Mar 2021










































அகமதாபாத் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா - இங்கிலாந்து இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் 

இங்கிலாந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இந்திய அணி தரப்பில், அக்சர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

16:18 (IST)04 Mar 2021










































இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆல்அவுட்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆல்அவுட்

15:59 (IST)04 Mar 2021










































திமுக தொகுதி பங்கீடு 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு

காங்கிரஸ் - திமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில், திமுக 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

15:24 (IST)04 Mar 2021










































அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளது. 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதால் பயன் இல்லை என்று நீதிபதி ஹேமலதா தீர்ப்பளித்துள்ளார்.

3வது நீதிபதியை நியமிக்கும் வகையில் ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்ப  பரிந்துரை செய்துள்ளனர். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக  7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக மனுதாரர் புகார்

14:33 (IST)04 Mar 2021










































தமிழகத்தின் நலன் கருதி 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம் - திருமாவளவன் 

திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதற்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்: “தமிழகத்தின் நலன் கருதி 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம்; வாக்குகள் சிதறினால் பாஜகவின் திட்டம் வென்றுவிடும்; கூட்டணியை உடைப்பதில் பாஜக கைதேர்ந்தது. சனாதன ஆபத்துகளில் இருந்து தமிழகத்தையும் மக்களையும் பாதுகாக்கும் யுத்தம் இந்த தேர்தல். திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார். 

14:27 (IST)04 Mar 2021










































தமிழகத்தில் இதுவரை ரூ.11 கோடி மதிப்பு பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் - சத்யபிரதா சாஹு

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு: “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

14:11 (IST)04 Mar 2021










































திமுகவின் கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதே விசிக-வின் எண்ணம் - திருமாவளவன்

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு,  செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்: “மதவாதம் தலைதூக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தி.மு.க கூட்டணி செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க-வை அழிக்கும் வேலையில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங். உடன் பாஜக பிரச்சினை செய்து வருகிறது. திமுக கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதே விசிகவின் எண்ணம்” என்று கூறினார்.

13:49 (IST)04 Mar 2021










































ஓடிடி தளங்களுக்கான ஒழுங்குமுறை விதிகள் - உச்சநீதிமன்றம் உத்தரவு

ஓடிடி தளங்களை முறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை விதிகளை நாளைக்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

13:48 (IST)04 Mar 2021










































தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

தி.மு.க- வி.சி.க இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தி.மு.க தரப்பில் கட்சி தலைவர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். 

மொத்தம் 234 தொகுதிகளில், 3 கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க 11 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதில் ஐ.யூ.எம்.எல். 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், தற்போது விசிகவுக்கு 6 தொகுதிகள்.

13:39 (IST)04 Mar 2021










































₹11 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் - சத்ய பிரத சாகு  

தமிழகம் முழுவதும் நேற்று வரை ₹11 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். 

13:08 (IST)04 Mar 2021










































மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தல் - திரிணாமுல் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

எதிர் வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்காக,வார்டு உறுப்பினர்கள்  மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. கல்கத்தாவில் உள்ள டி.எம்.சி பவனில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் அபிஷேக் பானர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்

12:57 (IST)04 Mar 2021










































கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்

12:54 (IST)04 Mar 2021










































இந்தியா - இங்கிலாந்து 4வது டெஸ்ட்: ரன்கள் சேர்க்க தடுமாறும் இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி,  உணவு இடைவேளைக்கு முன்பு வரை 74 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து, ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறது. 2 விக்கெட்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ரூட் 32 பந்துகளில் 2 பவுண்டரிகளை விளாசி 10 ரங்களில் ஆட்டமிழந்தார்  

12:49 (IST)04 Mar 2021










































கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வைகோ

மதிமுக கட்சியின் பொதுச்செயலர் வைகோ கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை  செலுத்திக்கொண்டார் 

12:47 (IST)04 Mar 2021










































தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் கொரோனா தடுப்பூசியை, வசந்த் குஞ்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார்.

12:42 (IST)04 Mar 2021










































தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது

தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் தற்போது சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டதிற்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமை வகிக்கிறார்.  இதில் தொகுதி பங்கீடு, சாதகமான தொகுதிகள், களநிலவரம், வேட்பாளர் தேர்வு குறித்து கருத்துக் கேட்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

12:28 (IST)04 Mar 2021










































"என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணியில் விரிசல் இல்லை" - புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் உறுதி

என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணியில் விரிசல் இல்லை எனவும், கூட்டணி கட்சி தலைவர்களுடன் நாளை பேச்சுவார்த்தை துவங்க உள்ளதாகவும், தொகுதி பங்கீடு குறித்து இரு தினங்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார் 

11:43 (IST)04 Mar 2021










































தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.34,000-க்கும் கீழ் குறைந்திருக்கிறது. சவரனுக்கு ரூ.208 குறைந்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,238-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.33,904-ஆக உள்ளது. கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி ரூ.5,420-க்கு ஒரு கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டிருந்தது. 8 மாதங்களில் சவரனுக்கு ரூ.9,456 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

11:41 (IST)04 Mar 2021










































திட்டமிட்டப்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கும் - தேர்வுத்துறை

திட்டமிட்டப்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை தகவல் தெரிவித்திருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை பணியில் ஆசிரியர்கள் பங்கு பெரிய அளவில் இல்லை என்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களிலும் பிரச்சினை இல்லை என்றும் கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் தேர்வுத்துறை மேலும் தெரிவித்திருக்கின்றது.

10:29 (IST)04 Mar 2021










































3-வது நாளாக திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், 3-வது நாளாக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

10:05 (IST)04 Mar 2021










































விசிக நிர்வாகிகள் அவசர ஆலோசனை

திமுகவுடன் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், சென்னை, அசோக்நகர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

10:04 (IST)04 Mar 2021










































இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது.

10:03 (IST)04 Mar 2021










































அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் தொடங்கியது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றுவருகிறது. விருப்ப மனு அளித்த 8,240 பேருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tamil News Today : "நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதாரத்திற்காகவோ ஆசைப்பட்டத்தில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலை விட்டு ஒதுங்கி, அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்" என அரசியலிலிருந்து விலகிய சசிகலா தெரிவித்துள்ளார்.

Admk Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment