Advertisment

Tamil News: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினுக்கு கொரோனா பாதிப்ப

Latest Tamil News : உத்தர பிரதேசம், மீரட்டில் ரூ.700 கோடி செலவில் அமைய உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

author-image
WebDesk
New Update
Tamil News: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினுக்கு கொரோனா பாதிப்ப

Tamil News : 17-வது மெகா தடுப்பூசி முகாம்

Advertisment

தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் 17-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த வரிசையில் சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதியில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நடைப்பயிற்சி செல்வோர் மற்றும் பிரத்தியேக நடைபாதையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

பெட்ரோல் - டீசல் விலை

சென்னையில் 59-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:15 (IST) 02 Jan 2022
    ஜனவரி 5ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; அரசு தலைமை கொறடா அறிவிப்பு

    சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.



  • 20:52 (IST) 02 Jan 2022
    தமிழகத்தில் ஜன. 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. 9 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 20:50 (IST) 02 Jan 2022
    அரியானாவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஜன. 12 வரை நேரடி வகுப்புகளுக்கு தடை

    அரியானாவில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஜனவரி 12 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.



  • 20:05 (IST) 02 Jan 2022
    தமிழகத்தில் இதுவரை 60.71% பேருக்கு 2ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சு

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமனியன், “17வது மெகா தடுப்பூசி முகாமில் 15,16,804 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 86.95% பேருக்கு முதல் தவணையும், 60.71% பேருக்கு 2ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.



  • 19:51 (IST) 02 Jan 2022
    பட்டாசு விபத்து தொடர்கதையாக நடக்க காரணத்தை கண்டறிய வேண்டும் - அண்ணாமலை

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பட்டாசு விபத்து தொடர்கதையாக நிகழ என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும் தீர ஆராய்ந்து பட்டாசு ஆலை விபத்தை தவிர்க்க செயல்திட்டம் உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.



  • 19:48 (IST) 02 Jan 2022
    தமிழகத்தில் இன்று 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் மேலும் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1,489ஆக இருந்த நிலையில் 1,594ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,51,128 ஆக உயர்ந்துள்ளது.



  • 19:46 (IST) 02 Jan 2022
    சர்வதேச அளவில் சென்னை விமான நிலையத்துக்கு 8வது இடம்

    லண்டனை தலைமையிடமாகக் கொண்ட சிரியம் நிறுவனம் ஆய்வு செய்ததில் குறித்த நேரத்தில் விமானம் புறப்படுவது பற்றிய கணக்கெடுப்பில் செனை விமான நிலையத்துக்கு 8 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விமான நிலையங்களை ஆய்வு செய்ததில் இந்திய அளவில் சென்னையைத் தவிர வேறு விமான நிலையங்கள் இடம் பெறவில்லை.



  • 19:44 (IST) 02 Jan 2022
    கேரளாவில் மேலும் 45 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி

    கேரளாவில் மேலும் 45 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது.



  • 19:38 (IST) 02 Jan 2022
    ஒமிக்ரன பரவல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

    கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  • 19:34 (IST) 02 Jan 2022
    நாளை முதல் 2 வாரங்களுக்கு காணொலி மூலமாக வழக்கு விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் 2 வாரங்களுக்கு காணொலி மூலமாக வழக்கு விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றம் பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.



  • 19:31 (IST) 02 Jan 2022
    மே. வங்கத்தில் கல்வி நிலையங்கள் மூடல்; புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

    மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகள், சலூன்கள் உள்ளிட்டரை நாளை முதல் மூடப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்கும் என்று மேற்கு வங்க மாநில அரசு அறிவித்துள்ளது.



  • 19:28 (IST) 02 Jan 2022
    அதிவேக காற்று வீசக்கூடும் மீனவர்களுக்கு எச்சரிக்கை

    மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நாளை 40 - 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 18:58 (IST) 02 Jan 2022
    கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - இ.பி.எஸ்

    கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். முழுமையாக சேதமடைந்த நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 என்பதை ரூ.40,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் .நெற்பயிர் மறு சாகுபடி செலவு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 என்பதை ரூ.12,000 ஆக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



  • 18:25 (IST) 02 Jan 2022
    திருவொற்றியூரில் குடியிருப்பு இடிந்ததில் வீடு இழந்தவர்களுக்கு புதிய குடியிருப்பு ஆணை வழங்கிய அமைச்சர்

    சென்னை, திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில் வீடுகளை இழந்த 28 குடும்பங்களில் 17 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.



  • 18:05 (IST) 02 Jan 2022
    கண்ணதாசன் வரிகளுக்கு எடுத்துக்காட்டு ராஜேந்திர பாலாஜி: காங். எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சனம்

    விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்: “ஆடிய ஆட்டம் என்ன? பேசிய பேச்சுகள் என்ன? என்ற கண்ணதாசன் வரிகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தவறு செய்தால் சட்டத்திற்கு முன்னால் நான் வந்து நிற்பேன் என்று சொல்ல தைரியம் இல்லாத புலி வேஷம் போட்ட பூனையாக, ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.” என்று விமர்சித்துள்ளார்.



  • 17:57 (IST) 02 Jan 2022
    கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா!

    அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியில் உள்ள மேலும் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக பி.எஸ்.ஜி கால்பந்து கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • 16:54 (IST) 02 Jan 2022
    கோலி செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தது குறித்து பயிற்சியாளர் டிராவிட் பதில்

    தனது 100வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு விராட் கோலி செய்தியாளர்களை சந்திப்பார். இதை அவரிடமே கேளுங்கள் என முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் செய்தியாளர் சந்திப்பை கோலி புறக்கணித்தது குறித்து பயிற்சியாளர் டிராவிட் பதில் அளித்துள்ளார்



  • 16:09 (IST) 02 Jan 2022
    15 - 18 வயதினருக்கான தடுப்பூசி திட்டம்; அரசுப் பள்ளியில் நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னை, மாந்தோப்பு அரசுப் பள்ளியில் 15 - 18 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்



  • 15:55 (IST) 02 Jan 2022
    தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? - சு.வெங்கடேசன் எம்.பி.

    குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று ரூ.1,000 கோடி அறிவிக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டப்போது பிரதமரோ உள்துறை அமைச்சரோ எட்டி பார்க்காதது ஏன்? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்



  • 15:44 (IST) 02 Jan 2022
    மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

    மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி

    அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும்

    புறநகர் ரயில்கள் நாளை முதல் இரவு 7 மணி வரை 50% பயணிகளுடன் மட்டும் இயக்கப்படும்

    மால்கள், திரையரங்குகளில் இரவு 10 மணி வரை 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி



  • 15:44 (IST) 02 Jan 2022
    ஒடிசாவில் மேலும் 23 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

    ஒடிசாவில் மேலும் 23 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 37ஆக உயர்ந்துள்ளது



  • 15:35 (IST) 02 Jan 2022
    மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

    மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி

    அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும்

    புறநகர் ரயில்கள் நாளை முதல் இரவு 7 மணி வரை 50% பயணிகளுடன் மட்டும் இயக்கப்படும்

    மால்கள், திரையரங்குகளில் இரவு 10 மணி வரை 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி



  • 15:28 (IST) 02 Jan 2022
    கடன் தொல்லை – சென்னையில் 4 பேர் உயிரிழப்பு

    சென்னை, பெருங்குடி பகுதியில் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தனியார் வங்கி அதிகாரி மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்



  • 15:18 (IST) 02 Jan 2022
    நீரில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்

    சென்னை அடுத்த மதுரவாயல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடையை மீறி தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது



  • 15:16 (IST) 02 Jan 2022
    நெல்லையில் ஒருவருக்கு S வகை தொற்று

    நெல்லையில் ஒமிக்ரான் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு S வகை மரபணு மாற்றம் கண்டறியபட்டுள்ளது



  • 15:00 (IST) 02 Jan 2022
    சென்னையில் 35% பேர் மட்டுமே முக கவசம் அணிகின்றனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    சென்னையில் 35% பேர் மட்டுமே முக கவசம் அணிகின்றனர் என்றும், சென்னையில் வீடுகளுக்கு சென்று பொதுமக்களை கண்காணிக்க வார்டுக்கு 5 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்



  • 14:57 (IST) 02 Jan 2022
    தயான் சந்த் விளையாட்டு பல்கலை.க்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்



  • 14:34 (IST) 02 Jan 2022
    மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக ஆலோசனை

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். சிறார் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், தொற்று பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது



  • 14:18 (IST) 02 Jan 2022
    33 லட்சம் பேருக்கு நாளை முதல் பள்ளிகளில் தடுப்பூசி - பள்ளிகல்வித்துறை

    தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் 33 லட்சம் பேருக்கு நாளை முதல் பள்ளிகளில் நேரடியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் . அனைத்து பள்ளி நிர்வாகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.



  • 14:18 (IST) 02 Jan 2022
    33 லட்சம் பேருக்கு நாளை முதல் பள்ளிகளில் தடுப்பூசி - பள்ளிகல்வித்துறை

    தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் 33 லட்சம் பேருக்கு நாளை முதல் பள்ளிகளில் நேரடியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் . அனைத்து பள்ளி நிர்வாகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.



  • 14:04 (IST) 02 Jan 2022
    மதியம் 1.30 மணி நிலவரப்படி 5,55,184 பேருக்கு கொரோனா தடுப்பூசி

    தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில், மதியம் 1.30 மணி நிலவரப்படி, 5,55,184 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது



  • 13:42 (IST) 02 Jan 2022
    மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒரு போதும் ஆதரிக்காது - திமுக எம்.பி., கனிமொழி

    மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒரு போதும் ஆதரிக்காது என்றும், மாநில திட்டங்களை தொடங்குவதற்காக தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பது நம் கடமை, அரசியல் கருத்தியல் என்பது வேறு என்றும் திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்



  • 13:34 (IST) 02 Jan 2022
    புதுச்சேரியில் பள்ளிகளை மூடுவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் நமச்சிவாயம்

    கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளை மூடுவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்



  • 12:09 (IST) 02 Jan 2022
    4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    தேனி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 11:54 (IST) 02 Jan 2022
    சென்னையில் 5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை - மா.சு தகவல்

    சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். அதிகமான மீனவ மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.



  • 11:54 (IST) 02 Jan 2022
    சென்னையில் 5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை - மா.சு தகவல்

    சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். அதிகமான மீனவ மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.



  • 11:37 (IST) 02 Jan 2022
    பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.3 லட்சம் நிவாரணம்

    விருதுநகர் களத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்குவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 10:59 (IST) 02 Jan 2022
    தமிழகத்தில் 3-வது அலையாக பரவுகிறது

    தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3-வது அலையாக பரவுகிறது என்றும் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 10:42 (IST) 02 Jan 2022
    தமிழக விவசாயிகளுக்கு ரூ.739 கோடி நிதி

    பிரதமரின் கிசான் நிதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 36 லட்சத்து 68 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 739 கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டது.



  • 10:41 (IST) 02 Jan 2022
    விதிமுறைகளை மீறி மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள்

    தமிழக அரசின் விதிமுறைகளை மீறி மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் சென்றிருக்கின்றனர்.



  • 10:27 (IST) 02 Jan 2022
    பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி

    10-ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது என்றும் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சைதாப்பேட்டையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 10:24 (IST) 02 Jan 2022
    காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லை - ஓபிஎஸ்

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து கொண்டே வருகிறது என்றும் திமுக ஆட்சியில் காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லை என்றும் கூறி திமுகவின் அராஜக செயலுக்கும், சட்ட விரோத செயலுக்கும் கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



  • 10:19 (IST) 02 Jan 2022
    இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1,525 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,431-ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,525-ஆக அதிகரிப்பு.



  • 10:18 (IST) 02 Jan 2022
    வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்

    கொரோனா பாதித்தவர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.



  • 10:17 (IST) 02 Jan 2022
    ரூ.1,640 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு

    தமிழகத்தில் இதுவரை ரூ.1,640 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுன்ன. மேலும், நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும் என்றும் அனைத்து நல்ல திட்டங்களையும் பாஜக எதிர்த்து வருகிறது, ஆக்கபூர்வமான பணிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை செயலாற்ற வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.



  • 10:13 (IST) 02 Jan 2022
    திண்டுக்கல்லில் தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீர்

    தொடர் மழையால் திண்டுக்கல்லில் தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துகொண்டது. தெருக்களில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழை நீரால் மக்கள் அவதி. இதையடுத்து, குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமானது.



  • 10:08 (IST) 02 Jan 2022
    கொத்தமங்கலத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

    கனமழை காரணமாக கொத்தமங்கலத்தில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவிக்கினறனர்.



Tamilnadu Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment