Advertisment

Tamil News Today : தமிழ்நாட்டில் புதியதாக 1,538 பேருக்கு கொரோனா; 22 பேர் பலி

Latest Tamil News : அடுத்த 3 நாட்களுக்குப் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,647 பேருக்கு கொரோனா; 19 பேர் பலி

Tamil News : டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

Advertisment

5 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது அடுத்த 3 நாட்களுக்குப் புதுக்கோட்டை, நாமக்கல், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 கிராமங்களுக்கு 144 தடை

புதுச்சேரியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி நடுக்கடலில் மீன் சிலர் பிடித்துள்ளனர். அப்போது அங்கேயே மீன்பிடித்துக் கொண்டிருந்த வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் ஆகிய மூன்று கிராமங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெறும் மாரத்தான் போட்டியை, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் 1300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:38 (IST) 29 Aug 2021
    தமிழ்நாட்டில் இன்று புதியதாக 1,538 பேருக்கு கொரோனா; 22 பேர் பலி

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் இன்று 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே நேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து மாநிலத்தில் இன்று 1,753 பேர் குணமடைந்தனர்.



  • 19:38 (IST) 29 Aug 2021
    செஞ்சி அருகே தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை கைது செய்தது தனிப்படை போலீஸ்

    செஞ்சி அருகே தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குழந்தையை கொடூரமாக தாக்கி செல்போனில் பதிவு செய்த தாய் துளசி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • 19:37 (IST) 29 Aug 2021
    டோக்கியோ பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

    டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நிஷாத் குமார், வெண்கலப் பதக்கம் வென்ற, வினோத் குமார் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



  • 18:39 (IST) 29 Aug 2021
    டோக்கியோ பாராலிம்பிக்ஸ் வட்டு எறிதலில் இந்தியாவுக்கு பதக்கம்

    டோக்கியோ பாராலிம்பிக்ஸ் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், பாராலிம்பிக்ஸில் இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது.



  • 17:18 (IST) 29 Aug 2021
    சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு!

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.



  • 16:00 (IST) 29 Aug 2021
    மத்திய அரசை அதிமுக ஆதரிக்கும் என முன்னாள் அமைச்சர் கருத்து

    ஒரே நாடு ஒரே தேர்தல்' என மத்திய அரசு அறிவித்தால் அதிமுக நிச்சயம் ஆதரிக்கும் என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறியுள்ளார்.



  • 15:09 (IST) 29 Aug 2021
    வெள்ளிவென்ற பவினாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பவினாவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் மகள் பவினாபென் படேலை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியையும் பெருமையையும் உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.



  • 15:04 (IST) 29 Aug 2021
    வெள்ளிவென்ற பவினாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பவினாவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் மகள் பவினாபென் படேலை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியையும் பெருமையையும் உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.



  • 14:55 (IST) 29 Aug 2021
    நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.



  • 13:43 (IST) 29 Aug 2021
    கோவையில் கொரோனா கட்டுப்பாடுகள்

    கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த வட்டாட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.



  • 12:22 (IST) 29 Aug 2021
    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:00 (IST) 29 Aug 2021
    சிவகங்கை மாவட்டம் பெருமை பற்றி பிரதமர் மோடி பேச்சு

    இன்றைய மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில், நாட்டு மக்கள் அனைவர்க்கும் கிருஷ்ணா ஜெயந்தி வாழ்த்தை தெரிவித்த பிரதமர் மோடி, கழிவுகளையும் செல்வமாக மாற்ற முடியும் என்பதற்கு சிவகங்கையில் உள்ள காஞ்சிரங்கால் கிராமம் ஓர் உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 10:48 (IST) 29 Aug 2021
    இயந்திரம் பழுது காரணமாக மேம்பால விபத்து - எ.வ.வேலு

    மதுரையில் மேம்பால விபத்து நடைபெற்ற பகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பாலம் இணைப்பு பணியின்போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் ஒப்பந்ததாரரின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.



  • 10:46 (IST) 29 Aug 2021
    கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி

    அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் மாணவர்களுக்கு தேவையான தடுப்பூசி கையிருப்பு இருக்கிறது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 09:53 (IST) 29 Aug 2021
    கெட்டுபோன 106 கிலோ மீன்கள் பறிமுதல்

    விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மீன் சந்தையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கெட்டுபோன ரூ.45 ஆயிரம் மதிப்பிலான 106 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



  • 09:52 (IST) 29 Aug 2021
    கேரளாவில் முழு ஊரடங்கு

    கேரளாவில் கடந்த சில நாட்களாக 30,000-க்கும் மேல் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.



  • 09:51 (IST) 29 Aug 2021
    பவினா பென்னுக்கு மோடி வாழ்த்து

    “நீங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளீர்கள். உங்கள் பெயரை வரலாற்றில் எழுதியுள்ளீர்கள்” என பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற பவினா பென்னுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



Stalin Taliban Tokyo Olympics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment