Advertisment

Tamil News Highlights : சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் வாபஸ்; ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம்

Latest Tamil News : தொடர்மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம்

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் வாபஸ்; ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம்

Tamil News Highlights : தொடர் மழை காரணமாக அரியலூர், விழுப்புரம், வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், பெரம்பலூர், தருமபுரி, கடலூர், தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்திருக்கிறது.

Advertisment

மிக கனமழை - தயார்நிலையில் இருப்பதாக ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதியில் படகுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட மூவரை காணவில்லை - காவல்துறை விளக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறையினரால் 4 நாள்களுக்கு முன்பு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரைக் காணவில்லை என உறவினர்கள் புகார் கூறிவந்த நிலையில், அவர்கள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் முன்னிறுத்த காவல்துறையினர் அழைத்து வந்திருந்தபோது, அங்குக் கூடியிருந்த உறவினர்கள், காவல்துறை வாகனத்தை மறித்து, அவர்கள் மூவர் மீதும் பொய் வழக்குப் போட்டிருப்பதாகவும், கைது குறித்து தகவல் தெரிவிக்காமல் அலைக்கழித்ததாகவும் புகார் கூறி, சிறிது நேரம் போராட்டம் நடத்தினர்.

29-ம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

கொரோனா நோய் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறாத நிலையில், தற்போது 20 நாட்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 29-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறவிருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:53 (IST) 18 Nov 2021
    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

    கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்



  • 21:13 (IST) 18 Nov 2021
    சென்னை, திருவள்ளூருக்கு, ரெட் அலர்ட் வாபஸ்; ஆரஞ்ச் அலர்ட்- வானிலை மையம்

    சென்னை, திருவள்ளூருக்கு, ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது



  • 21:11 (IST) 18 Nov 2021
    சென்னை, திருவள்ளூருக்கு, ரெட் அலர்ட் வாபஸ்; ஆரஞ்ச் அலர்ட்- வானிலை மையம்

    சென்னை, திருவள்ளூருக்கு, ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது



  • 21:10 (IST) 18 Nov 2021
    அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

    கனமழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்



  • 20:16 (IST) 18 Nov 2021
    நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்



  • 19:59 (IST) 18 Nov 2021
    9ஆம் கட்ட முகாமில் 8.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி

    இன்று நடைபெற்ற 9ஆம் முகாமில் 8.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது



  • 19:25 (IST) 18 Nov 2021
    கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    தொடர் கனமழை காரணமாக கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது



  • 19:24 (IST) 18 Nov 2021
    பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்



  • 19:22 (IST) 18 Nov 2021
    கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    தொடர் கனமழை காரணமாக கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்



  • 19:04 (IST) 18 Nov 2021
    தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்



  • 18:34 (IST) 18 Nov 2021
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



  • 18:33 (IST) 18 Nov 2021
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



  • 18:32 (IST) 18 Nov 2021
    விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

    கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • 17:48 (IST) 18 Nov 2021
    மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு வருகிறது மத்திய அரசுக் குழு

    மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசுக் குழு தமிழ்நாடு வருகிறது. வேளாண்மை நிதி, மின்சாரம், உள்பட 6 அமைச்சரவைகளை சேர்ந்த அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 17:27 (IST) 18 Nov 2021
    சென்னை உட்பட 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

    வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்த 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



  • 17:02 (IST) 18 Nov 2021
    இன்னும் 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்னும்3 மணி நேரத்தில் திருவண்ணாமலை,சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 17:02 (IST) 18 Nov 2021
    7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

    தமிழகத்தில் செங்கல்பட்டு திருவண்ணாமலை சேலம் கள்ளக்குறிச்சி தர்மபுரி திருப்பத்தூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 16:57 (IST) 18 Nov 2021
    பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    ராணிப்பேட்டை அருகே வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்கு 20,000 ஆயிரம் கனஅடி நீர்வரத்து அதிகாரித்துள்ளதால் பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • 16:45 (IST) 18 Nov 2021
    கனமழை எதிரொலி : பகுதிவாரியாக 17 ரயில்கள் ரத்து

    கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், 4 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுதிவாரியாக 17 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



  • 16:27 (IST) 18 Nov 2021
    கனமழை எதிரொலி! சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

    சென்னையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பல இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே முடங்கியுள்ளனர். மழை மேலும் தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை கருதி, சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஜயராணி உத்தவிட்டுள்ளார்.



  • 15:30 (IST) 18 Nov 2021
    கன்னியாகுமரி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் மண்சரிவு

    கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் 4 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 17 ரயில்கள் பகுதிவாரியாக ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



  • 15:29 (IST) 18 Nov 2021
    மண்சரிவு: 4 ரயில்கள் முழுமையாக ரத்து

    கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் 4 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 17 ரயில்கள் பகுதிவாரியாக ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



  • 15:29 (IST) 18 Nov 2021
    மண்சரிவு: 4 ரயில்கள் முழுமையாக ரத்து

    கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் 4 ரயில்கள் முழுமையாக ரத்து . 17 ரயில்கள் பகுதிவாரியாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



  • 15:21 (IST) 18 Nov 2021
    9வது மெகா தடுப்பூசி முகாம்

    9வது மெகா தடுப்பூசி முகாமில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று மதிய நிலவரப்படி 14,118 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.



  • 15:13 (IST) 18 Nov 2021
    மண்சரிவு: 4 ரயில்கள் முழுமையாக ரத்து

    கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் 4 ரயில்கள் முழுமையாக ரத்து



  • 15:13 (IST) 18 Nov 2021
    கன்னியாகுமரி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் மண்சரிவு

    கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் 4 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 17 ரயில்கள் பகுதிவாரியாக ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



  • 15:01 (IST) 18 Nov 2021
    புதுச்சேரி - சென்னை இடையே நாளை கரையை கடக்கும்

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு 250 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.நாளை அதிகாலை வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 14:55 (IST) 18 Nov 2021
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகர்கிறது

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 250 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 220 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்தை நெருங்கி வருகிறது. மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 14:36 (IST) 18 Nov 2021
    செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீர் வெளியேற்றம் 3,000 கன அடியாக அதிகரிப்பு

    கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 2,000 கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால், உபரி நீர் வெளியேற்றம் 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



  • 14:09 (IST) 18 Nov 2021
    தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

    தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக நியமனம். சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பிரதிப் குமார், கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.



  • 13:49 (IST) 18 Nov 2021
    பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    தமிழ்நாட்டில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 13:41 (IST) 18 Nov 2021
    சென்னையில் இருந்து 260 கி.மீ. தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

    சென்னையில் இருந்து 260 கி.மீ. தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நீடிக்கிறதாகவும்,சென்னை அருகே நாளை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 13:40 (IST) 18 Nov 2021
    திருப்பத்தூரில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

    தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (நவ.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:15 (IST) 18 Nov 2021
    கோவில்களின் தணிக்கை 2 வாரங்களில் தாக்கல் செய்யப்படும்

    தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் தணிக்கை அறிக்கைகளும் இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 12:52 (IST) 18 Nov 2021
    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    காற்றின் வேகம் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் வீசும் மற்றும் மணிக்கு 65 கிமீ வேகத்தில் அவ்வப்போது காற்றின் வேகம் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



  • 12:41 (IST) 18 Nov 2021
    அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு

    நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 20ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.



  • 12:25 (IST) 18 Nov 2021
    6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

    அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.



  • 12:23 (IST) 18 Nov 2021
    16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    மற்றொரு தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்கும் நிலையில் வானிலை ஆய்வு மையம் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நாகை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



  • 12:06 (IST) 18 Nov 2021
    திருவண்ணாமலை ஜோதி - 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

    நாளை திருக்கார்த்திகை தினம் என்பதால், திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் விழா நடைபெறும். இந்த ஆண்டு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கில் இன்றும் நாளாஇயும் 20 ஆயிரம் பக்தர்களை மட்டும் அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது தமிழக அரசு.



  • 12:03 (IST) 18 Nov 2021
    6 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை

    காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி. திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை



  • 11:51 (IST) 18 Nov 2021
    நாளை கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    சென்னை அருகே நாளை அதிகாலை கரையை கடக்கிறது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். சென்னையில் இருந்து 310 கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.



  • 11:38 (IST) 18 Nov 2021
    கிரிப்டோகரன்சி மீது கவனம் : மோடி

    சிட்னி உரையாடலில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜனநாயக நாடுகள் கிரிப்டோகரன்ஸிகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவை எங்கள் இளைஞர்களைக் கெடுக்கக்கூடிய தவறான கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.



  • 11:36 (IST) 18 Nov 2021
    கார்த்திகை தீபத்தையொட்டி காய்கறிகளின் விலை அதிகரிப்பு

    நாளை கார்த்திகை தீபத்தையொட்டி காய்கறிகளின் விலை நேற்றைய விலையைவிட 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.



  • 11:05 (IST) 18 Nov 2021
    தமிழக அமைச்சரவை கூட்டம் 20-ம் தேதிக்கு மாற்றம்

    தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 நடைபெற இருந்த நிலையில், 20-ம் தேதி மாலை 6 மணிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. கனமழை எச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் இந்த தேதி மாற்றப்பட்டிருக்கிறது.



  • 10:27 (IST) 18 Nov 2021
    7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.



  • 09:30 (IST) 18 Nov 2021
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 09:29 (IST) 18 Nov 2021
    மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு

    கொரோனா காலத்தில் பணிபுரியும் மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இதனால் இவர்களுக்கு தனி அங்கீகாரம் மற்றும் சலுகைகள் கிடைக்கும்.



Coronavirus Stalin Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment