Advertisment

Tamil News : ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வலியுறுத்தல்; மத்திய சுகாதாரத்துறை கடிதம்

Latest Tamil News : டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil News : ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வலியுறுத்தல்; மத்திய சுகாதாரத்துறை கடிதம்

Tamil News Live : தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட சுமார் 14 மாவட்டங்களில் மிதமான மழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையில் நேற்று பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று (31.12.2021) ஒரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், அத்தியாவசிய சேவைகள் தவிர, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தீவுத்திடலில் பொருட்காட்சிக்கு அனுமதி

சென்னை, தீவுத்திடலில் நடைபெறவுள்ள 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சிக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசுத் துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், பிற மாநில அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அரங்குகளுக்கு நிதி ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறை சார்ந்த அரங்குகள் ரூ.1.26 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளன என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் புதிதாக 5.44 லட்சம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் புதிதாக 5,44,067 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 1,329 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மொத்தம் 5.25 கோடி பேருக்குத் தொற்று பாதிப்பு இதுவரை உறுதியாகி உள்ளது. அதில் 8,45,712 பேர் உயிரிழந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:15 (IST) 31 Dec 2021
    சென்னை மெரினா கடற்கரை சாலை, பெசண்ட் நகர் கடற்கரை சாலைகள் மூடப்பட்டன

    சென்னை மெரினா கடற்கரை சாலை, பெசண்ட் நகர் கடற்கரை சாலைகள் மூடப்பட்டன. நீலாங்கரை, திருவான்மியூர் கடற்கரை செல்லும் சாலைகளும் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளன.



  • 21:44 (IST) 31 Dec 2021
    புத்தாண்டை முன்னிட்டு இரவு சென்னையில் 13,000 போலீசார் பாதுகாப்பு பணி

    புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு முதல் சென்னை மாநகரம் முழுவதும் 13,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்; இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனை நடைபெறும் என தகவல்.



  • 21:42 (IST) 31 Dec 2021
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல், துணை கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • 21:40 (IST) 31 Dec 2021
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் நேரம் நீட்டிப்பு; இரவு 11 மணி வரை நடை திறக்கப்படும் என அறிவிப்பு

    கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளதால் தரிசன நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நடை இரவு 11 மணி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 21:10 (IST) 31 Dec 2021
    தமிழ்நாடு அரசின் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? அனைத்து பொருட்காட்சி, புத்தகக் கண்காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு

    சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

    மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயலபட அனுமதி இல்லை; பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை.

    அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு

    திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி; சலூன்கள், அழகு நிலையங்களுக்கும் இதே கட்டுப்பாடு தொடரும்

    வழிபாட்டுத் தளங்களில் தற்போதைய நடைமுறையே தொடரும்.

    9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்.

    உணவகங்கள் விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி

    மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி; பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை.

    துணிக்கடைகள், ஜிம்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு ஒரே நெரத்தில் அனுமதி

    திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர்கள் வரையிலும் இறப்பு நிகழ்ச்சிகளில் 50 பேர்களுக்கு மேல் கூடக்கூடாது.



  • 21:01 (IST) 31 Dec 2021
    தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

    தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து 66 பேர் குணமடைந்தனர்.



  • 20:02 (IST) 31 Dec 2021
    உணவகம், விடுதிகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் ஜனவரி 10, 2022 வரை நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவகம், விடுதிகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.



  • 19:53 (IST) 31 Dec 2021
    தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு

    தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் ஜனவரி 10, 2022 வரை நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 19:41 (IST) 31 Dec 2021
    பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விசிக துணை நிற்கும் - திருமாவளவன் உறுதி

    மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன், “திரைத்துறை உள்பட பண்பாட்டு தளத்தை சாதியவாதிகள் ஆக்கிரமித்திருந்தனர்; பா.ரஞ்சித் இன்று தன் துணிவால் திரைத்துறையில் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விசிக துணை நிற்கும். மனிதன் உருவாக்கிய முதல் இசைக்கருவி பறைதான்; அதுதான் தவில், கோயில் மேளம் உள்ளிட்ட வடிங்களை பெற்றது.” என்று தெரிவித்துள்ளார்.



  • 19:40 (IST) 31 Dec 2021
    பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விசிக துணை நிற்கும் - திருமாவளவன் உறுதி

    மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன், “திரைத்துறை உள்பட பண்பாட்டு தளத்தை சாதியவாதிகள் ஆக்கிரமித்திருந்தனர்; பா.ரஞ்சித் இன்று தன் துணிவால் திரைத்துறையில் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விசிக துணை நிற்கும். மனிதன் உருவாக்கிய முதல் இசைக்கருவி பறைதான்; அதுதான் தவில், கோயில் மேளம் உள்ளிட்ட வடிங்களை பெற்றது.” என்று தெரிவித்துள்ளார்.



  • 19:35 (IST) 31 Dec 2021
    தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு

    தஞ்சையில் தொன்மையான கோயில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தஞ்சையில் சாமியப்பன் வசம் பழமையான பச்சை மரகதலிங்கம் இருப்பதைக் கண்டுபிடித்து. வங்கி லாக்கரில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை மீட்டனர்.



  • 19:25 (IST) 31 Dec 2021
    ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வலியுறுத்தல்; மத்திய சுகாதாரத்துறை கடிதம்

    இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் சற்று காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.



  • 18:42 (IST) 31 Dec 2021
    சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 18:10 (IST) 31 Dec 2021
    விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரலில் வெளியீடு - படக்குழு அறிவிப்பு

    இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரலில் வெளியீடு - படக்குழு அறிவித்துள்ளது.



  • 17:41 (IST) 31 Dec 2021
    ஒருநாள் மழைக்கு மிதக்கும் சென்னை; 8 மாதங்களாக என்ன சாதித்தது அரசு? இ.பி.எஸ் கேள்வி

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “ஒருநாள் மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. 8 மாதங்களாக திமுக அரசு என்ன சாதித்தது, மழைநீரால் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலகச்சொன்னவர், அமைச்சர் செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்ய சொல்வாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 17:12 (IST) 31 Dec 2021
    திருச்செந்தூர் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுப்பு!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இன்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:53 (IST) 31 Dec 2021
    மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர்!

    கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சவாலான 2021 ஆம் ஆண்டில் மன உறுதியுடன் பணியாற்றிய மருத்துவர்கள், விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்தியாவில் 145 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததாக கூறியுள்ளார்.



  • 16:39 (IST) 31 Dec 2021
    கொய்யாக்காய் என நினைத்து விஷ காய்களை சாப்பிட்ட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    சத்யமங்கலம் அருகே கொய்யாக்காய் என நினைத்து காட்டாமணக்கு செடியில் உள்ள விஷ காய்களை சாப்பிட்ட 4 சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.



  • 16:31 (IST) 31 Dec 2021
    18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், சேலம் உள்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 16:24 (IST) 31 Dec 2021
    மாணவி உடல்கருகி உயிரிழந்த சம்பவம்: 3 ஆசிரியர்கள் இடமாற்றம்!

    திண்டுக்கல், பாச்சலூர் பகுதியில் 5-ம் வகுப்பு மாணவி உடல் கருகி உயிரிழந்த சம்பவத்தில், தலைமையாசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் மணிவேல் ராஜ், ராஜா துரை ஆகியோரை இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு



  • 16:11 (IST) 31 Dec 2021
    பிடிவாரண்டை பிறப்பிக்காத பெண் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை!

    குடும்ப வன்முறை வழக்கில் பிடிவாரண்டை செயல்படுத்தாத, ஆய்வாளர்கள் தனலட்சுமி, செல்வி ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் ஊதியத்தை திரும்ப வசூலிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:04 (IST) 31 Dec 2021
    மோடி 2வது முறையாக பிரதமர் ஆனதற்கு உ.பி. மக்களே காரணம்: அமித்ஷா!

    உத்தரப்பிரதேசம் மாநிலம் கபிர் நகரில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து, மோடி 2வது முறையாக பிரதமரானதற்கு உத்தர பிரதேச மாநிலத்தின் 22 கோடி மக்களின் ஆசிர்வாதம் மட்டுமே காரணம் என கூறியுள்ளார்.



  • 15:49 (IST) 31 Dec 2021
    சென்னையில் 2வது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை!

    சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக இன்று, பாரிமுனை, சேப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேனி, மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.



  • 15:43 (IST) 31 Dec 2021
    ஒமிக்ரான் பரவல்.. குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியத்தில் பார்வையிட தடை!

    டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், அங்கு பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பும் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை கருதி , டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சிகத்தில் நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.



  • 15:42 (IST) 31 Dec 2021
    கேரளாவில் இன்று மட்டும் புதிதாக 44 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு

    கேரளாவில் இன்று மட்டும் 44 பேருக்கு புதிதாக உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு மட்டும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது.



  • 15:42 (IST) 31 Dec 2021
    தமிழக ஆளுநருடன், அதிமுக சட்ட ஆலோசனைக்குழு சந்திப்பு

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன், அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் இன்று சந்திக்கின்றனர். தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிகிறது.



  • 15:35 (IST) 31 Dec 2021
    தமிழக ஆளுநருடன், அதிமுக சட்ட ஆலோசனைக்குழு சந்திப்பு

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன், அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் இன்று சந்திக்கின்றனர். தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிகிறது.



  • 15:28 (IST) 31 Dec 2021
    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 15:27 (IST) 31 Dec 2021
    லஞ்ச வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல இயக்குனர் கைது!

    ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல இயக்குனர் அகில் அகமது மற்றும் அவருடன் தொடர்புடைய 3 பேர் கைதாகினர். சமீபத்தில் இயக்குனர் அகில் அகமது மற்றும் அவருக்கு நெருக்கமான 3 பேர் வீடுகளில் சிபிஐ நடத்திய திடீர் சோதனையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.



  • 15:18 (IST) 31 Dec 2021
    டெல்டா கொரோனா வைரஸ் இடத்தை பிடித்த உருமாறிய ஒமிக்ரான்!

    இந்தியாவில் பரவியிருந்த உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் இடத்தை தற்போது உருமாறிய ஒமிக்ரான் பிடிக்கத் தொடங்கியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 15:16 (IST) 31 Dec 2021
    மும்பையில் ஜனவரி 15-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு!

    மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ஜனவரி 15-ஆம் தேதி வரை, மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிகழ்வில் 50 நபர்களும், இறுதி சடங்கு நிகழ்வில் 20 நபர்களும் மட்டுமே அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 15:14 (IST) 31 Dec 2021
    டெல்டா கொரோனா வைரஸ் இடத்தை பிடித்த உருமாறிய ஒமிக்ரான்!

    இந்தியாவில் பரவியிருந்த உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் இடத்தை தற்போது உருமாறிய ஒமிக்ரான் பிடிக்கத் தொடங்கியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 15:14 (IST) 31 Dec 2021
    போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது எந்த வழக்குப்பதிவும் இல்லை!

    முதுநிலை மருத்துவப்படிப்புக்கான கவுன்சிலிங் 2022 ஆம் ஆண்டு, ஜனவரி 6ம் தேதிக்கு முன்பாக தொடங்கும். மேலும் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது எந்த வழக்குப்பதிவும் இல்லை என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.



  • 15:01 (IST) 31 Dec 2021
    கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை வழக்கில கல்லூரி மாணவர் கைது

    திருவள்ளூரில் மாநில கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்கொலை வழக்கில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை திருவள்ளூர் ரயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகினறனர்.



  • 15:01 (IST) 31 Dec 2021
    மும்பையில் ஜனவரி 15-ம் தேதி வரை 144 தடை உத்தரவு

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி 15-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரை மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை கடற்கரை, திறந்தவெளி மைதானங்கள், பூங்கா போன்ற பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 14:40 (IST) 31 Dec 2021
    விரைவில் நிலைமை சீரடையும் என முதல்வர் ஸ்டாலின் ட்விட்

    நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



  • 14:38 (IST) 31 Dec 2021
    கன மழையை கணிக்கத் தவறியது ஏன்? -புவியரசன் விளக்கம்

    கன மழையை கணிக்கத் தவறியது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள" வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், நிலப்பகுதியில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியை கணிக்கத் தவறிவிட்டோம்" "மேகம் ஒரே இடத்தில் நிலையாக நின்றுவிட்டால், நம்மால் எதையும் துல்லியமாக கணிக்க முடியாது" என்று கூறியுள்ளார்



  • 14:33 (IST) 31 Dec 2021
    சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையில் மீண்டும் போக்குவரத்து

    சென்னை பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையில் இன்று காலை மழைநீர் தேங்கியிருந்த நிலையில், தற்போது முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.



  • 14:01 (IST) 31 Dec 2021
    தஞ்சையில் பழமையான பச்சை மரகதலிங்கம்

    தஞ்சையில், தொன்மையான கோயில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட போது சாமியப்பன் என்பவரிடம் பழமையான பச்சை மரகதலிங்கம் இருப்பது தெரியவந்தது இதனைடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங் தலைமையில் அதிகாரிகள் அந்த சிலையை மீட்டனர்.



  • 13:57 (IST) 31 Dec 2021
    ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

    ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5% முதல்12% ஆக உயர்த்தும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வரி உயர்வு தொடர்பாக பிப்ரவரி மாதம் நடைபெறும் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 13:56 (IST) 31 Dec 2021
    புத்தாண்டையொட்டி இன்று மாலை 6 மணி முதல் 144 தடை

    ஒமைக்ரான் தொற்று மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடகாவில் கடந்த 28-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,புத்தாண்டு தினத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படத்தப்பட உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது



  • 13:54 (IST) 31 Dec 2021
    கலந்தாய்வு கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி - அண்ணா பல்கலைகழகம்

    ஜனவரி 3-ம் தேதி முதல் முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில், கலந்தாய்வு கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.



  • 13:17 (IST) 31 Dec 2021
    காற்றின் ஈரப்பதம், வெப்பநிலையை பொறுத்தே மழைப்பொழிவு - வானிலை ஆய்வு மையம்

    சென்னையில் திடீரென நேற்று இரவு கனமழை பெய்த நிலையில், சென்னை மக்களின் இயல்பு வாழ்பை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காற்றின் ஈரப்பதம், வெப்பநிலையை பொறுத்தே மழைப்பொழிவு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.



  • 12:51 (IST) 31 Dec 2021
    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு

    செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததன் விளைவாக ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது ஏரியின் இரண்டு மதகுகள் வழியாக நொடிக்கும் 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது



  • 12:40 (IST) 31 Dec 2021
    மதுரை பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

    தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் நடைபெற இருக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார்.



  • 12:14 (IST) 31 Dec 2021
    தமிழக மீனவர்களுக்கு 13ம் தேதி வரை இலங்கையில் சிறை

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வரும் 13ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு - ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு



  • 11:58 (IST) 31 Dec 2021
    மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுப்பு

    சென்னையில் கனமழை பெய்ததன் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பெரும்பாலான சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



  • 11:41 (IST) 31 Dec 2021
    7 கோவில்களில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 7 கோவில்களில் முதலுதவி மையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அதனை திறந்து வைத்தார்



  • 11:24 (IST) 31 Dec 2021
    கடலைப் போல் காட்சி அளிக்கும் அசோக் நகர்

    நேற்று பெய்த கனமழையால் சென்னை அசோக் நகர் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள காட்சிகள்

    Tamil Nadu: Waterlogging in several parts of Chennai in aftermath of heavy rains; earlier visuals from Ashok Nagar pic.twitter.com/gBwn9trFOH

    — ANI (@ANI) December 31, 2021


  • 11:23 (IST) 31 Dec 2021
    நேரில் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வர வேண்டாம் - முதல்வர்

    அரசின் கட்டுப்பாடுகளை நீங்கள் கடைபிடிப்பதே எனக்கு நீங்கள் வழங்குகின்ற சிறப்பான புத்தாண்டு பரிசு. எனவே ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1ம் தேதி அன்று என்னை சந்திப்பதற்காக நேரில் வருவதை தவிருங்கள் என்று முதல்வர் வேண்டுகோள்



  • 11:11 (IST) 31 Dec 2021
    சுரங்கப் பாதையில் போக்குவரத்து துவக்கம்

    சென்னை, பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையில் நேற்று பெய்த கனமழை காரணமாக தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது



  • 11:02 (IST) 31 Dec 2021
    மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    சென்னை, தி.நகர் பகுதிகளில் மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னையில் மழைநீர் தேங்காதபடி அடுத்த மழைக்காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.



  • 10:59 (IST) 31 Dec 2021
    ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து

    ஆங்கிலப் புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், நல்லிணக்கம், அமைதி உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 10:57 (IST) 31 Dec 2021
    வைகோவின் புத்தாண்டு வாழ்த்து

    புத்தாண்டில் சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும் என்று ம‌திமுக தலைவர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 10:56 (IST) 31 Dec 2021
    நின்று கொண்டிருந்த லாரியில் திடீர் தீ விபத்து

    பவானிசாகரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் லாரியில் இருந்த அட்டை கோன்கள் முழுவதுமாக எரிந்து சேதமானது. லாரியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 10:54 (IST) 31 Dec 2021
    முதலமைச்சரே கட்டுப்பாடுகளை மீறியிருப்பது வேதனையளிக்கிறது - ஓபிஎஸ்

    கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக சமுதாய, கலாசார, அரசியல் மற்றும் அரசு விழாக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருச்சியில் மாநாடு போன்ற கூட்டத்தை கூட்டி முதல்வர் உரையாற்றி இருப்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் போட்ட கட்டுப்பாடுகளை அவரே மீறியிருப்பது வேதனையளிக்கிறது என்றும் முதலமைச்சரே கட்டுப்பாடுகளை மீறினால் மக்கள் எப்படி மீறாமல் இருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 10:37 (IST) 31 Dec 2021
    இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

    இந்தியாவில் நேற்று 961-ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,270-ஆக அதிகரித்துள்ளது.



  • 10:35 (IST) 31 Dec 2021
    சுற்றுலா தலங்களுக்கு 2-ம் தேதி வரை தடை

    ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வரும் 2-ம் தேதி வரை தடை விதித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்திருக்கிறார்.



  • 10:34 (IST) 31 Dec 2021
    ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை

    தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்யவுள்ளார்.



  • 09:51 (IST) 31 Dec 2021
    இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி தரும் சீன நிறுவனம்

    உரங்களை நிராகரித்த விவகாரத்தில் இலங்கை மீது பொருளாதார தடைகள் விதிக்க சீன நிறுவனம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 09:49 (IST) 31 Dec 2021
    நள்ளிரவில் வெள்ளம் பாதித்த இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

    சென்னையில் நேற்று பெய்த கனமழை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து, நள்ளிரவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார்.



  • 09:46 (IST) 31 Dec 2021
    நாடாளுமன்ற கட்டடத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

    ஆஸ்திரேலியாவில் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பழைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு தீ வைத்தனர்.



  • 09:45 (IST) 31 Dec 2021
    ஆக்சிஜன் தயார் நிலை குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

    நாடெங்கும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆய்வு செய்தார்.



  • 09:44 (IST) 31 Dec 2021
    சென்னையில் 4 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை

    சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் ஆகிய 4 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.



Stalin Rain In Tamilnadu Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment