Advertisment

Tamil News Highlights : ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ.51,000 கோடி முதலீடு செய்ய இலக்கு - அமித்ஷா

Latest Tamil News : 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகள் அங்கீகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கட்டட உறுதித்தன்மை சான்று இல்லாத பள்ளிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Amit Shah says Uneducated people burden on India, Uneducated people never become good citizen, படிப்பறிவில்லாத மக்கள் நாட்டிற்கு சுமை, படிப்பறிவில்லாத மக்கள் நல்ல குடிமனாக மாற முடியாது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமித் ஷா, Amit Shah, PM Narendra Modi, Amit Shah interview

Tamil News Today : சென்னையில் தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலை ஏற்றத்துக்குக் காரணம் மத்திய அரசின் பேராசைதான் எனக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வரிவிதிப்பு என்பது ஒரு எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, ஒரே பொருளின் மீது 33 சதவிகித வரியை விதிப்பது தவறானது என்றும் குறிப்பிட்டார். பல காரணங்களால் உலக வர்த்தகம் முடங்கியுள்ள நிலையில், மக்களின் கடன் சுமை அதிகரித்திருப்பதும், தனிமனித சேமிப்பு குறைந்திருப்பதும் நாட்டுக்கே ஓரு எச்சரிக்கை மணி என்றும் தெரிவித்தார்.

Advertisment

பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றபின் முதல் முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் மாநிலத்தின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் ரவி. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் பிரதமருடன் தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்குமெனப் பிரதமர் உறுதியளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகள் அங்கீகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கட்டட உறுதித்தன்மை சான்று இல்லாத பள்ளிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஒன்று முதல் 8-ம் வகுப்புகளுக்கு வரும் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார்ப் பள்ளிகளில் போதிய இருக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் கல்விக் கட்டணம் தொடர்பான பட்டியல், தகவல் பலகையில் வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:23 (IST) 24 Oct 2021
    மாலிக் காஷ்மீர் கவர்னராக இருந்தபோது போடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலும் விசாரணை தேவை

    சத்ய பால் மாலிக் காஷ்மீர் கவர்னராக இருந்தபோது போடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலும் விசாரணை தேவை என மூத்த பாஜக தலைவர் ராம் மாதவ் கூறியுள்ளார்



  • 20:31 (IST) 24 Oct 2021
    மருத்துவர் சாந்தி சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமனம்

    மகளிர்- மாணவர் உரிமைக்காகப் போராடும் மருத்துவர் சாந்தியை சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • 20:30 (IST) 24 Oct 2021
    மருத்துவர் சாந்தி சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமனம்

    மகளிர்- மாணவர் உரிமைக்காகப் போராடும் மருத்துவர் சாந்தியை சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்



  • 20:29 (IST) 24 Oct 2021
    மருத்துவர் சாந்தி சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமனம்

    மகளிர்- மாணவர் உரிமைக்காகப் போராடும் மருத்துவர் சாந்தியை சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்



  • 20:21 (IST) 24 Oct 2021
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,124 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 20:21 (IST) 24 Oct 2021
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,124 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 18:20 (IST) 24 Oct 2021
    அண்ணாத்த படத்தின் 4 ஆவது பாடல் வெளியீடு

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் 4 ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. வா சாமி என தொடங்கும் பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.



  • 18:09 (IST) 24 Oct 2021
    ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ.51,000 கோடி முதலீடு செய்ய இலக்கு - அமித்ஷா

    ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் ரூ.51,000 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்



  • 18:08 (IST) 24 Oct 2021
    ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ.51,000 கோடி முதலீடு செய்ய இலக்கு - அமித்ஷா

    ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் ரூ.51,000 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்



  • 17:20 (IST) 24 Oct 2021
    லடாக்கில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

    லடாக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.



  • 17:20 (IST) 24 Oct 2021
    லடாக்கில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

    லடாக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.



  • 17:11 (IST) 24 Oct 2021
    பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம்

    பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் G20 உச்சி மாநாட்டிலும், உலகத்தலைவர்களின் COP26 உச்சி மாநாட்டிலும், பங்கேற்கிறார்.



  • 17:09 (IST) 24 Oct 2021
    பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம்

    பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.



  • 17:08 (IST) 24 Oct 2021
    பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம்

    பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் G20 உச்சி மாநாட்டிலும், உலகத்தலைவர்களின் COP26 உச்சி மாநாட்டிலும், பங்கேற்கிறார்.



  • 16:57 (IST) 24 Oct 2021
    ஆஷிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

    லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.



  • 16:08 (IST) 24 Oct 2021
    தாதா சாகேப் பால்கே' விருதினை பெற நடிகர் ரஜினிகாந்த் டெல்லி பயணம்

    தாதா சாகேப் பால்கே' விருதினை பெற டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த்க்கு நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள விக்யன் பவனில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு விருதினை வழங்கவுள்ளார்



  • 16:05 (IST) 24 Oct 2021
    திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    ஆரணியாறு அணையில் இருந்து நாளை உபரி நீரை திறக்கவுள்ளதால் 70 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.



  • 15:22 (IST) 24 Oct 2021
    அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேட்டி

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.



  • 15:21 (IST) 24 Oct 2021
    பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம் பயணம்

    உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் வாரணாசியில் ₨5,200 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம் பயணம் மேற்கொள்கிறார்.



  • 14:18 (IST) 24 Oct 2021
    விருதை பெற டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த்

    நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள விக்யன் பவனில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினிகாந்திற்கு 'தாதா சாகேப் பால்கே' விருதினை வழங்கவுள்ளார்



  • 13:46 (IST) 24 Oct 2021
    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ஓபிஎஸ்

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



  • 12:56 (IST) 24 Oct 2021
    உள்ளூர் தயாரிப்புகளை வாங்கினால் பண்டிகையுடன் ஏழை தொழிலாளர்களின் வாழ்வும் பிரகாசிக்கும் - மோடி உரை

    100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற மைல் கல்லை கடந்து புதிய சக்தியுடன் நாடு முன்னேறிக்கொண்டு உள்ளது. பண்டிகை காலங்களில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்போம். நீங்கள் உள்ளூர் தயாரிப்பு பொருட்களை வாங்கினால், உங்கள் பண்டிகையுடன் ஏழை தொழிலாளர்களின் வாழ்வும் பிரகாசிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.



  • 12:28 (IST) 24 Oct 2021
    8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:16 (IST) 24 Oct 2021
    67வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67 ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 120 அடி கொள்ளவு கொண்ட மேட்டூர் அணைக்கு 28,650 கனஅடி நீர்வரத்து வருவதாகவும், பாசனத்திற்காக 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தமிழக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • 12:00 (IST) 24 Oct 2021
    ரஜினி மகள் உருவாக்கிய செயலி நாளை வெளியீடு

    தன் மகள் சௌந்தர்யா உருவாக்கியுள்ள 'HOOTE' என்னும் புதிய செயலியை நடிகர் ரஜினிகாந்த் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இந்த செயலி மூலம் குரலிலேயே எந்த மொழியிலும் கருத்துக்களை பதிவிடலாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.



  • 11:45 (IST) 24 Oct 2021
    எண்ணற்ற தன்னம்பிக்கை கதைகள் உள்ளன

    81-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வரும் பிரதமர் மோடி, 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது என்றும் 100 கோடி தடுப்பூசிக்கு பின் எண்ணற்ற தன்னம்பிக்கை கதைகள் அடங்கியுள்ளன என்றும் கூறினார்.



  • 10:52 (IST) 24 Oct 2021
    தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி - நடிகர் ரஜினிகாந்த்

    மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் விருது பெறும் இந்த நேரத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது என்றும் நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.



  • 10:50 (IST) 24 Oct 2021
    ஈரானில் ஆளுநரை கன்னத்தில் அறைந்த நபர்

    ஈரானில் புதிதாக பொறுப்பேற்ற ஆளுநரை பதவியேற்பு விழா மேடையில் ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



  • 10:19 (IST) 24 Oct 2021
    பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு

    தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசால் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காயப் பிரிவு தயார் நிலையில் இருப்பதாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



Narendra Modi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment