Advertisment

News Highlights: தமிழ் வழியில் படித்தால் அரசுப் பணியில் முன்னுரிமை; அரசாணை வெளியீடு

Latest Tamil News மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்று, ரூ.900.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
News Highlights: தமிழ் வழியில் படித்தால் அரசுப் பணியில் முன்னுரிமை; அரசாணை வெளியீடு

Tamil news today : தமிழ்நாட்டில் கொரோனா 2-ம் அலை பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ன்று முதல் தமிழ்நாட்டின் அனைத்து கல்லூரிகள் மற்றும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில்,  மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி கிருமிநாசினி, மாஸ்க் பயன்பாடு உள்ளிட்டவற்றைக் கட்டாயமாக்கி உள்ளனர்.

Advertisment

சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

வீ்ட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்று, ரூ.900.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஆகஸ்ட் 17-ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.875.50க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.285 உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.75 உயர்ந்து ரூ.1831.50-க்கு விற்பனை செய்யவுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வட மாநிலங்களில் ஓயாத கனமழை

தற்போது அசாம் மற்றும் மகாராஷ்டிராவை கனமழை புரட்டிப்போட்டுள்ளதை அடுத்து, டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அசாமில் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம்பேர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ரூ.99.08-க்கும் டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து ரூ.93.38-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:00 (IST) 01 Sep 2021
    தமிழ் வழியில் பயின்றால் அரசுப்பணியில் முன்னுரிமை - அரசாணை வெளியீடு

    தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்த பிறகே இடஒதுக்கீட்டில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:04 (IST) 01 Sep 2021
    கேரளாவில் உயரும் கொரோனா பாதிப்பு; அண்டை மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை

    கேரளாவில் கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதால், அண்டை மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டுள்ளார். மேலும், கேரள எல்லையில் அமைந்துள்ள பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.



  • 19:21 (IST) 01 Sep 2021
    தமிழ்நாட்டில் இன்று புதியதாக 1,509 பேருக்கு கொரோனா; 20 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று புதியதாக 1,509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே நேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 1,719 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.



  • 18:23 (IST) 01 Sep 2021
    கச்சா எண்ணெய் குறைவு... ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸ் ஆட்சியில் ரூ.71.50 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, பாஜக ஆட்சியில் ரூ.101 ஆக அதிகரித்துள்ளது; சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 17:18 (IST) 01 Sep 2021
    முதல்வர் ஸ்டாலின் - நடிகர் சிரஞ்சீவி நேரில் சந்திப்பு

    தமிழகத்தில் திமுக ஆட்சி குறித்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சியின் நிறுவனருமான பவன்கல்யாண் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த நிலையில், தற்போது நடிகர் சிரஞ்சீவி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.



  • 17:12 (IST) 01 Sep 2021
    புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பின் கட்டிட தரம் குறித்து 2 வாரத்தில் அறிக்கை

    புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பின் கட்டிட தரம் குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், 11 பேர் கொண்ட நிபுணர் குழு கட்டிடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்ய உள்ளது என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.



  • 16:43 (IST) 01 Sep 2021
    ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு ஆளுநர் இரங்கல்

    தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், மனைவி விஜயலட்சுமி இன்று மரணமடைந்த நிலையில், அவரமு மறைவுக்கு அரசியல் தலைவர்கள்பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில் தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 15:56 (IST) 01 Sep 2021
    ஆப்கானிஸ்தானில் இராணுவ விமானங்களை செயலிழக்க செய்த அமெரிக்க படைகள்

    ஆப்கானஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய நிலையில், இராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்களை செயலிழக்கச் செய்து விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதாகவும், இதுேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 15:30 (IST) 01 Sep 2021
    வெளிநாட்டு மாணவர்களின் விவரங்கள் சேகரிப்பு

    இந்தியாவிலுள்ள வெளிநாட்டை சேர்ந்த அனைத்து மாணவர்களின் விவரங்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் வழங்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



  • 14:20 (IST) 01 Sep 2021
    பட்டினப்பாக்கத்தில் மிகப் பெரிய வணிக வளாகம் - அமைச்சர் முத்துச்சாமி அறிவிப்பு

    சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியுடன் 25 ஏக்கரில், பட்டினப்பாக்கத்தில் மிகப் பெரிய வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி அறிவித்துள்ளார். மேலும் ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலைகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



  • 14:11 (IST) 01 Sep 2021
    ஆகஸ்ட் மாத‌த்திற்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,12,020 கோடி

    நாட்டின் ஆகஸ்ட் மாத‌த்திற்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,12,020 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாத‌த்துடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வருவாய் 30% அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 13:46 (IST) 01 Sep 2021
    திருநங்கைகளை காவல்துறையினர் துன்புறுத்தக்கூடாது- உயர் நீதிமன்றம் உத்தரவு

    திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 13:17 (IST) 01 Sep 2021
    மாணவர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் - புதுவை முதல்வர் அதிரடி

    புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில், மாணவர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று பேரவையில் புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என்றும் அறிவிப்பு.



  • 13:02 (IST) 01 Sep 2021
    சீமான் இரங்கல்

    முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கடி துணைத்தலைவருமான ஓ. பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமின் இன்று மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

    முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து நேரில் சென்று ஐயாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்றேன். pic.twitter.com/Pma4q8MD1S

    — சீமான் (@SeemanOfficial) September 1, 2021


  • 13:02 (IST) 01 Sep 2021
    வானிலை அறிக்கை

    நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 12:54 (IST) 01 Sep 2021
    அண்ணா சாலையில் கலைஞருக்கு சிலை

    சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கருணாநிதி சிலை அமைக்க சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.



  • 12:48 (IST) 01 Sep 2021
    புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் 2 மாடிக்கு மேல் இருந்தால் மின்தூக்கி அவசியம்

    மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் மாற்று திறனாளிகளுக்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என்றும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் 2 மாடிக்கு மேல் இருந்தால் மின்தூக்கி அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • 12:48 (IST) 01 Sep 2021
    பன்னீர் செல்வத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய சசிகலா

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார். கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வந்த நிலையில் சசிகலா நேரில் சென்று ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்.



  • 12:40 (IST) 01 Sep 2021
    மேம்பால விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

    மதுரை மேம்பால விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த ஆகாஷ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எ.வ. வேலு அறிவித்துள்ளார்.



  • 12:23 (IST) 01 Sep 2021
    64.51 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 64.51 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் தற்போது 5.21 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.



  • 12:04 (IST) 01 Sep 2021
    குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்

    குடிசை மாற்று வாரியம் இனி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 11:52 (IST) 01 Sep 2021
    தமிழ்நாட்டில் 9 இடங்களில் 6000 குடியிருப்புகள் கட்ட திட்டம்

    உலக வங்கி நிதியுடன் ரூ. 950 கோடி செலவில் 9 இடங்களில் 6000 குடியிருப்பு பகுதிகளை கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று வீட்டு வசத் வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் இடம் பெற்றுள்ளது. திண்டுக்கல், சேலம் ,நாமக்கல் மாவட்டங்களில் குடியிருப்புகள் அமைக்க திட்டம்.



  • 11:49 (IST) 01 Sep 2021
    மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

    ரூ. 393 கோடி செலவில் வண்டலூர் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் இடம் பெற்றுள்ளது.



  • 11:11 (IST) 01 Sep 2021
    செப்டம்பரில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

    செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.



  • 10:02 (IST) 01 Sep 2021
    ஓ.பி.எஸ்-ன் மனைவி மரணம்

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ன் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பலனின்றி இன்று மரணமடைந்தார்.



  • 09:30 (IST) 01 Sep 2021
    கால நிலை மாற்றத்தால் ஜிடிபி பாதிக்கக் கூடும் - கனிமொழி

    காலநிலை மாற்றத்தால் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி பாதிக்கக் கூடும் என்பதால், மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.



  • 09:28 (IST) 01 Sep 2021
    3.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

    திமுக ஆட்சிக்கு வந்து 116 நாட்களில் 2 கோடியே 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது என்றும் அதிமுக அரசு 100 நாட்களில் போட்ட தடுப்பூசிகளை விட திமுக அரசு 100 நாட்களில் 2 மடங்கு தடுப்பூசி போட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், 3.5 கோடி பேருக்கு அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மற்றும் 21.28 லட்சம் பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.



Stalin School Reopening
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment