Advertisment

News Highlights: ஒமிக்ரான் பாதிப்பு; இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

Tamilnadu News Live : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
News Highlights: ஒமிக்ரான் பாதிப்பு; இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

Latest Tamil News : கொரோனாவை தொடர்ந்து உலகம் முழுவதும் ஒமைக்ரான் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தச் சூழலில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களையும் நோய் பரவலிலிருந்து காப்பாற்றும் வகையில் அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான மாத்திரையைத் தயாரித்துள்ளது. இந்த மாத்திரை, வேகமாகப் பரவும் ஒமைக்ரான் திரிபுக்கு எதிராகவும் ஆற்றலுடனும் செயல்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

டிசம்பர் 31-க்குள் வருமான வரிக்கைக்குத் தாக்கல் செய்ய வேண்டுதல்

கடந்த 2020-21ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை இதுவரை 4 கோடி பேர் மின்னணு முறையில் தாக்கல் செய்துள்ளனர். இப்போது, வருமான வரிக்கைக்குத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் உரியவர்கள் வரிக்கைக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் - இன்று தொடங்கிவைக்கிறார் ஸ்டாலின்

மக்கள் துணிப்பைகளுக்குத் திரும்பும் வகையில் ஓர் அரசாணையைத் தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், 'மீண்டும் மஞ்சப்பை' என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து, அதற்கு மாற்றாகத் துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தத் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:47 (IST) 23 Dec 2021
    ஆயுள் கைதிகளின் முன்விடுதலைக்கு குழு அமைத்த முதல்வர் ஸ்டாலின்

    ஆயுள் கைதிகளின் முன்விடுதலைக்கு குழு அமைத்துள்ளதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட இந்த குழு ஆயுள் கைதிகளின் தண்டனையை குறைத்து, முன்விடுதலைக்கு குழு பரிந்துரைக்கும் மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவக்கல்வி இயக்குநர், மூத்த வழக்கறிஞர் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெறுவர் மனிதாபிமான, நல்லெண்ண அடிப்படையில் ஆயுள் கைதிகளின் தண்டனையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டு்ளளார்.



  • 20:36 (IST) 23 Dec 2021
    அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று : பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

    இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இணையாக ஒமைக்ரான் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ நெருங்கி வரும் நிலையில், ஒமிக்ரான் பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • 20:35 (IST) 23 Dec 2021
    இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இணையாக ஒமைக்ரான் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 200 – ஐ கடந்துள்ளது. இந்நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துங்கள் என்று மாநில அரசுக்கு மத்திய சுகதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



  • 20:32 (IST) 23 Dec 2021
    தமிழகத்தில் வெளிநாடு செல்லாத 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

    இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இணையாக ஒமைக்ரான் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 200 – ஐ கடந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வெளிநாடு செல்லாத 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்தாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    மேலும் தமிழகத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் சிகிச்சை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.25 லட்சம் படுக்கைககள் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.



  • 19:22 (IST) 23 Dec 2021
    வீரர்களுடன் கபடி விளையாடிய சபாநாயகர் தவறி விழுந்ததால் பரபரப்பு

    ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் அமுதாலவலசை பகுதியில் நடத்தப்பட்ட முதல்வர் கோப்பை கபடி போட்டியில் இந்த போட்டியை தொடங்கி வைக்க வந்த சபாநாயகர் சீதாராம் வீரர்களுடன் களமிறங்கி விளையாடினார். அப்போது புள்ளி சேகரிக்க ஒரு முனையில் இருந்து மறுமுனைககு ஓடிய சீதாராம் நிலை தடுமாறி கீழே விழுநதார். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.



  • 17:55 (IST) 23 Dec 2021
    சிவாகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை வெளியிட இடைக்கால தடை

    சிவாகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை தயாரித்துள்ள 24 ஏ.எம் நிறுவனம் பெற்ற 5 கோடி கடனை திருப்பி செலுத்த கோரி டேக் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அயலான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 17:22 (IST) 23 Dec 2021
    அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் மரணம்

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம் உடல்நலககுறைவால் இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி்யுள்ளார்.



  • 16:43 (IST) 23 Dec 2021
    ஒமிக்ரான் பாதிக்கப்பட்டு குணமடைந்த 3 பேர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, ஒமிக்ரான் பாதிக்கப்பட்டு குணமடைந்த 3 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுவரை 4275 பேருக்கு ஒமிக்ரான் பரிசோதனை நடத்தியுள்ளோம். அனைவருக்கும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. தமிழகத்தில் 34 பேர் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். வீடு திரும்பியவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது



  • 16:08 (IST) 23 Dec 2021
    எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதா? – ஈபிஎஸ் கண்டனம்

    எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதா? என கேள்வி எழுப்பியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுங்கட்சியினரை தடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்தது ஜனநாயக படுகொலை, எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதை ஆளுங்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்



  • 15:58 (IST) 23 Dec 2021
    கர்நாடகாவில் மேலும் 12 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

    கர்நாடகாவில் மேலும் 12 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடகாவின் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 31ஆக உயர்ந்துள்ளது



  • 15:55 (IST) 23 Dec 2021
    வேலூரில் சில இடங்களில் லேசான நில அதிர்வு; ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு

    வேலூரில் சில இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 15:53 (IST) 23 Dec 2021
    கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

    கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவின் மொத்த பாதிப்பு 29ஆக உயர்ந்துள்ளது



  • 15:43 (IST) 23 Dec 2021
    காஞ்சிபுரத்தில் கத்தி முனையில் 80 சவரன் நகைகள் கொள்ளை

    காஞ்சிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கமும் அடங்கும். முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்



  • 15:41 (IST) 23 Dec 2021
    விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் - பிரதமர் மோடி

    விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும். மண்ணையும், மக்களையும் பாதுகாக்க இயற்கை விவசாயம் அவசியம். இயற்கை விவசாயம் வேளாண்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்



  • 15:31 (IST) 23 Dec 2021
    ஒமிக்ரான் பரவல்; இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

    ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது



  • 15:15 (IST) 23 Dec 2021
    உத்திரபிரதேசத்தில் புதிய திட்டங்கள் தொடக்கம்

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.870 கோடி செலவில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்



  • 14:50 (IST) 23 Dec 2021
    கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்!

    இன்று பிற்பகல் 2.16 மணி நேரத்தில், கர்நாடகாசிக்கபல்லாபுராவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 22 அன்று மாவட்டத்தில் 2.9 மற்றும் 3.0 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகின.



  • 14:25 (IST) 23 Dec 2021
    பள்ளிகளுக்கு டிச.25 முதல் ஜன., 2 வரை அரையாண்டு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ்!

    நடப்பாண்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு. அதன்படி வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



  • 14:20 (IST) 23 Dec 2021
    உரிமம் இல்லாமல் இறைச்சிக் கடைகள் நடத்துவோர் மீது நடவடிக்கை!

    உரிய உரிமம் இல்லாமல் இறைச்சிக் கடைகள் நடத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதியை அமல்படுத்த சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப ஊரக வளர்ச்சி இயக்குனருக்கு ஆணை பிறப்பித்த நீதிமன்றம், விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்க எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.



  • 14:15 (IST) 23 Dec 2021
    பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழப்பு: பள்ளிக்கல்வி இயக்குனருக்கு மனித நேய ஆணையம் உத்தரவு!

    திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி கழிவறை சுவர் இடிந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, மனத நேய ஆணையம் தாமாக வந்து வழக்குத் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், மாவட்ட ஆட்சியர் 4 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 14:11 (IST) 23 Dec 2021
    பஞ்சாப் நீதிமன்றம் வெடிவிபத்து.. குற்றவாளிகள் பிடிபடுவார்கள்: முதல்வர் பேட்டி!

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சட்டப் பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், சில தேச விரோத சக்திகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என கூறினார்.



  • 14:10 (IST) 23 Dec 2021
    பஞ்சாப் நீதிமன்றத்தில் வெடிவிபத்து!

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வெடி விபத்து நிகழ்ந்தது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3வது தளத்தில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் சிலர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



  • 13:48 (IST) 23 Dec 2021
    யூடியூபர் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து: நீதிமன்றம் உத்தரவு!

    பெண் பத்திரிக்கையாளர்கள், தலைவர்கள் மீது அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி மீது, பெண் பத்திரிக்கையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், கிஷோர் கே.சாமியை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.



  • 13:42 (IST) 23 Dec 2021
    பஞ்சாப் நீதிமன்றத்தில் வெடிவிபத்து!

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வெடி விபத்து நிகழ்ந்தது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3வது தளத்தில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் சிலர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



  • 13:25 (IST) 23 Dec 2021
    பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு!

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3வது தளத்தில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் சிலர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் நிலவுகிறது.



  • 13:23 (IST) 23 Dec 2021
    பஞ்சாப் நீதிமன்றத்தில் வெடிவிபத்து!

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வெடி விபத்து நிகழ்ந்தது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3வது தளத்தில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் சிலர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



  • 13:16 (IST) 23 Dec 2021
    திமுக அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மரணம்!

    திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் துரை மகாலிங்கம் (89) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த இருக்கிறார்.



  • 12:58 (IST) 23 Dec 2021
    நளினிக்கு ஒரு மாதம் பரோல்

    நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது



  • 12:53 (IST) 23 Dec 2021
    வேகமான ஆட்சி மட்டுமல்ல விவேகமான ஆட்சியும் கூட - முதல்வர்

    முதல்வர் தனது அறையில் அமர்ந்தபடியே அரசின் அனைத்து திட்டங்களின் நிலை குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு தகவல் பலகை அவரது அலுவலகத்தில் துவங்கப்பட்டது



  • 12:26 (IST) 23 Dec 2021
    திருப்பதி வந்தார் இலங்கை பிரதமர் ராஜபக்சே

    2 நாள் சுற்றுப்பயணமாக திருப்பதி வந்தார் இலங்கை அமைச்சர் ராஜபக்சே. ரேணிகுண்டா விமான நிலையத்தில் துணை முதல்வர் நாராயணசாமி, மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன் ஆகியோர் அவரை வரவேற்றனர்



  • 12:14 (IST) 23 Dec 2021
    ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்

    பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு காவல்துறை இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது



  • 11:54 (IST) 23 Dec 2021
    ஒமிக்ரான் தொற்று - தமிழகத்தில் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

    இதுவரை சென்னையில் 27 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும், திருவண்ணாமலையில் 2 நபர்களுக்கும் மதுரையில் 4 பேருக்கும் கொரோனாவின் ஒமிக்ரான் மாறுபாடு பரவியுள்ளது



  • 11:52 (IST) 23 Dec 2021
    திருப்பதி ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்

    திருப்பதி கோயிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டின் ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் துவங்க உள்ளது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு



  • 11:33 (IST) 23 Dec 2021
    மீனவர் வலையில் சிக்கிய குட்டித்திமிங்கலம்

    விசாகப்பட்டினம் கடற்கரையில் மீனவர் வலையில் சிக்கிக் கொண்ட குட்டி திமிங்கலத்தை பத்திரமாக மீட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளது.



  • 11:15 (IST) 23 Dec 2021
    மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்

    சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழிகளுக்கு பதிலாக துணிப்பை பயன்பாட்டை மக்கள் அதிகரிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் துவங்கி வைத்தார்.



  • 10:58 (IST) 23 Dec 2021
    பிரிட்டனில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா

    பிரிட்டனில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் நேற்று ஒரே நாளில், 1 லட்சத்துக்கு 6 ஆயிரத்து 122 பேருக்கு பரவியதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஏழு நாட்களில் மட்டும், அங்கு சுமார் 6 லட்சத்து 43 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.



  • 10:56 (IST) 23 Dec 2021
    மது அருந்துவோருக்கான வயது வரம்பு குறைப்பு

    மது அருந்துவோருக்கான வயது வரம்பை 25-ல் இருந்து 21-ஆக குறைத்து கலால் திருத்த மசோதா 2021-ஐ சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது ஹரியானா அரசு.



  • 10:56 (IST) 23 Dec 2021
    தடுப்பூசி சான்றிதழ் இருந்தால்தான் சம்பளம்

    அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.



  • 10:33 (IST) 23 Dec 2021
    ஒமிக்ரான் பரவல் - 3-வது இடத்தில் தமிழகம்

    உலகளவில் வேகமாகப் பரவி வரும் ஒமிக்ரான், தமிழகத்தில் 34 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மஹாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகம் அதிக பாதிப்பு எண்ணிக்கையை கொண்டுள்ளது.



  • 10:12 (IST) 23 Dec 2021
    41.21 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

    'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் இதுவரை 41.21 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 10:11 (IST) 23 Dec 2021
    அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆறுதல்

    நெல்லையில் கழிவறை சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆறுதல் கூறினார். மேலும், விபத்து ஏற்பட்ட சாஃப்டர் பள்ளியையும் ஆய்வு செய்தார்.



  • 10:09 (IST) 23 Dec 2021
    மின்னணு தகவல் பலகையை திறந்து வைக்கும் ஸ்டாலின்

    முதல்வரின் அலுவலக அறையில் இருந்தே அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் மீதான நடவடிக்கையை கண்காணிக்க ஏற்பாடு செய்யும் வகையில் மின்னணு தகவல் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.



  • 10:07 (IST) 23 Dec 2021
    மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று

    தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.



  • 09:41 (IST) 23 Dec 2021
    ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்படுமா?

    பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 09:38 (IST) 23 Dec 2021
    பள்ளிகளின் தரம் குறித்த முழு அறிக்கை

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெறப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் பள்ளிகளின் தரம் குறித்த முழு அறிக்கை தயார் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



  • 09:26 (IST) 23 Dec 2021
    தமிழ்நாட்டில் இருவருக்கு ஒமிக்ரான் பரிசோதனை

    துபாயில் இருந்து கும்பகோணம் வந்த நபர் மற்றும் லண்டனில் இருந்து பட்டுக்கோட்டை வந்த நபர் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒமிக்ரான் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • 09:17 (IST) 23 Dec 2021
    வாரணாசி செல்லும் பிரதமர் மோடி

    உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க இன்று வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி.



  • 09:16 (IST) 23 Dec 2021
    ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் 15 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Stalin Omicron
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment