Advertisment

Tamil News Today : தமிகத்தில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா தொற்று

Latest Tamil News : சென்னையில் கொரோனா விதிகளைப் பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனி நபர்களுக்குக் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும்

author-image
WebDesk
New Update
Tamil News Today : தமிகத்தில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா தொற்று

Tamil News Live : 30-ம் தேதி துணைவேந்தர்களுடன் தமிழக ஆளுநர் ஆலோசனை

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், வரும் 30-ம் தேதி காலை 11 மணி அளவில், தமிழகத்தில் உள்ள துணை வேந்தர்கள், உயர்கல்வித் துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்துகிறார். அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஆலோசனைக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த பேரறிவாளன், உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்காகக் கடந்த மே மாதம் பரோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். கொடுக்கப்பட்ட அந்த பரோல் இன்றுடன் நிறைவடைவதாலும் உடல்நிலை இன்னும் சீரடையாமல் இருப்பதாலும் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது 5-வது முறையாகப் பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா விதிகளை மீறினால் கட்டாயம் அபராதம்

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் நெருங்கி வரும் நிலையில் கொரோனா விதிகளைப் பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனி நபர்களுக்குக் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனப் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் சர்ச்சை - இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

இஸ்ரேல் நாட்டில் பெகாசஸ் மென்பொருள் மூலமாக நாட்டில் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனை அடுத்து இம்மனுவின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.104.83-க்கும், டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.100.92-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:18 (IST) 27 Oct 2021
    தமிகத்தில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1,315 பேர் குணமடைந்த நிலையில், தொற்று பாதிப்புக்கு 12 பேர் மரணமடைந்துள்ளனர்.



  • 20:17 (IST) 27 Oct 2021
    தீபாவளி பண்டிக்கைக்கா நியாயவிலை கடைகளுக்கு கூடுதல் பணி

    தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1ம் தேதியிலிருந்து நவம்பர் 3ம் தேதி வரை நியாய விலை கடைகளுக்கு கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது



  • 19:25 (IST) 27 Oct 2021
    இது தலைவர் திருவிழா : ரஜினிக்கு தனுஷ் புகழாரம்

    அண்ணாத்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ் இது தலைவர் திருவிழா - என்று ரஜினிகாந்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.



  • 19:22 (IST) 27 Oct 2021
    "இல்லம் தேடி கல்வி" - முதல்வர் திட்டம்

    "இல்லம் தேடி கல்வி" பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் * "இது கட்சியின் ஆட்சி இல்லை, இனத்தின் ஆட்சி" - என்று முதல்வர் கூறியுள்ளார்.



  • 17:20 (IST) 27 Oct 2021
    இல்லம் தேடி கல்வி திட்டம் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் - முதல்வர்

    இல்லம் தேதி கல்வி திட்டத்தை உருவாக்கிய பள்ளிக்கல்வித்துறை மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இல்லம் தேடி கல்வி திட்டம் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், நூற்றாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை திண்ணை பள்ளிகள் மூலம் கொண்டு சேர்த்தது ஆரம்ப கால திராவிட இயக்கம் என்று கூறினார்.



  • 16:29 (IST) 27 Oct 2021
    பேருந்து டயர்களுக்கு கடும் தட்டுப்பாடு என்ற தகவலுக்கு போக்குவரத்துத்துறை மறுப்பு

    தீபாவளி பண்டிகையின் போது அனைத்து தடப் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளை சீராக இயக்க முடியும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மேலும், டயர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியான செய்திக்கு போக்குவரத்துத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.



  • 15:53 (IST) 27 Oct 2021
    பலத்த சூறை காற்று - மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

    வங்கக் கடலின் தென்பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 14:55 (IST) 27 Oct 2021
    அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் - வானிலை மையம்

    அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். அக்டோபர் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



  • 14:54 (IST) 27 Oct 2021
    அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் - வானிலை மையம்

    அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். அக்டோபர் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



  • 14:13 (IST) 27 Oct 2021
    பிரதமருடன் ரஜினிகாந்த் சந்திப்பு

    மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.



  • 13:56 (IST) 27 Oct 2021
    சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • 13:55 (IST) 27 Oct 2021
    சசிகலா பற்றிய ஓபிஎஸ் கருத்து சரியே - ஜே.சி.டி.பிரபாகர்

    சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரியே என அதிமுக அமைப்புச்செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார்.



  • 13:53 (IST) 27 Oct 2021
    சசிகலா பற்றிய ஓபிஎஸ் கருத்து சரியே - ஜே.சி.டி.பிரபாகர்

    சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரியே என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார்



  • 13:52 (IST) 27 Oct 2021
    சசிகலா பற்றிய ஓபிஎஸ் கருத்து சரியே - ஜே.சி.டி.பிரபாகர்

    சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரியே என அதிமுக அமைப்புச்செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார்.



  • 13:42 (IST) 27 Oct 2021
    அறநிலையத் துறை ஊழியர்களை கோவில்களுக்கு அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்

    இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களை கோவில்களுக்கு அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க முடியாது. கோவில் பணிகள் மற்றும் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு பாதிக்கும் என்பதால் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.



  • 13:41 (IST) 27 Oct 2021
    அறநிலையத் துறை ஊழியர்களை கோவில்களுக்கு அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்

    இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களை கோவில்களுக்கு அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க முடியாது. கோவில் பணிகள் மற்றும் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு பாதிக்கும் என்பதால் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.



  • 12:53 (IST) 27 Oct 2021
    உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - 2 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு

    தெற்கு வங்கக் கடலின் மத்தியப்பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 3 நாள்களுக்குள் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் 29,30 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:39 (IST) 27 Oct 2021
    கடப்பாக்கம் அரசுப் பள்ளியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

    விழுப்புரம் கடப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்ததோடு, மதிய உணவு சமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார்.



  • 12:30 (IST) 27 Oct 2021
    ஜெ.மருத்துவமனை சிகிச்சை விவரங்கள் 10,000 பக்கங்களுக்கு உள்ளது - அப்போலோ

    ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறுதி நாட்கள் வரை அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் 10,000 பக்கங்களுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • 11:54 (IST) 27 Oct 2021
    புதுச்சேரியில் நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

    புதுச்சேரியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்கள் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பலாம். ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:42 (IST) 27 Oct 2021
    தலைமை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? இது குறித்து தமிழக தலைமை செயலாளர் 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 11:27 (IST) 27 Oct 2021
    அரசு பணி - சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி

    புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.



  • 11:27 (IST) 27 Oct 2021
    ஓ.பி.எஸ். சரியாகத்தான் பேசியிருக்கிறார் - தினகரன்

    ஓ.பி.எஸ். எப்போதும் நிதானமாகதான் பேசுவார், சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்று அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்ப்பது குறித்த ஓ.பி.எஸ். கருத்து தொடர்பாக தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பேட்டியளித்துள்ளார்.



  • 10:45 (IST) 27 Oct 2021
    முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை

    முல்லைப்பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து இருப்பதாக கூறி புதிய அணையை கட்டுவதற்கு அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அணைக்கான திட்ட அறிக்கையை வருகிற டிசம்பர் மாதம் மத்திய நீர்வள ஆணையத்திடம் ஒப்படைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.



  • 10:44 (IST) 27 Oct 2021
    ரஜினிக்கு வைரமுத்து வாழ்த்து

    ரஜினிகாந்துக்கு பால்கே விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து, ரஜினியை வாழ்த்தி வைரமுத்து ட்வீட் செய்திருக்கிறார்.



  • 10:11 (IST) 27 Oct 2021
    நாட்டில் இதுவரை 10 பேருக்கு புதியவகை கொரோனா உறுதி

    இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஏ.ஒய்.4.2 உருமாறிய கொரோனா தொற்றின் தன்மை குறித்து ஆய்வு செய்துவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 10 பேருக்கு புதியவகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொரோனா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் ஆபத்தானது இல்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.



  • 10:09 (IST) 27 Oct 2021
    தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெ.டன் யூரியா ஒதுக்கீடு

    மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியாவை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.



  • 10:06 (IST) 27 Oct 2021
    பள்ளிகளுக்கான மானியத்தொகை 50% விடுப்பு

    தமிழகத்தில் 1-8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டவுள்ள நிலையில் பள்ளிகளுக்கான மானியத்தொகை 50% விடுப்பு செய்யப்பட்டிருக்கிறது. அரசு தொடக்கப்பள்ளி & நடுநிலைப்பள்ளி மானியத்தொகை ரூ.77.9 கோடியில் 50% விடுவித்து பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



  • 09:32 (IST) 27 Oct 2021
    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - சிறப்பு நீதிமன்றம்

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



  • 09:31 (IST) 27 Oct 2021
    ஐந்து நாட்களுக்கு கனமழை

    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. மேலும், வரும் 29-ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளனர்.



  • 09:30 (IST) 27 Oct 2021
    பட்டாசுகள் வெடித்து தீவிபத்து - 6 பேர் உயிரிழப்பு

    கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் தீபாவளி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. கட்டடங்கள் சிதறி விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீக்காயம் அடைந்த மேலும் பலருக்கு சிகிச்சை. பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.



Tamilnadu Stalin Pegasus Spyware
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment