Advertisment

Tamil News Today : ரஜினிகாந்த் நலம்பெற கமல்ஹாசன் வாழ்த்து!

Latest Tamil News : திருவாரூர், தஞ்சை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : ரஜினிகாந்த் நலம்பெற கமல்ஹாசன் வாழ்த்து!

Tamil News : முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து 2 மதகுகள் வழியாக தற்போது உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 13 மதகுகளில் 3 மற்றும் 4-வது மதகுகள் 35 சென்டிமீட்டர் உயர்த்தப்பட்டு அணையிலிருந்து வினாடிக்கு 534 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டும்போது 13 மதகுகளிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்படும். 152 அடி கொள்ளளவு கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 2014, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

24 கோடியே 62 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,74,495 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 24,62,45,186-ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா பாதிப்புக்கு 49,95,890 பேர் உயிரிழந்துள்ளனர். 22,31,34,984 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 1,81,14,312 பேர் கொரோனா பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

தீபாவளிக்கு முன்பே அபாய அளவை தாண்டிய காற்று மாசு

 

நாட்டின் தலைநகரான டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்படுவது வழக்கம். தீபாவளி நெருங்குவதால் பட்டாசு வெடிப்பதன் மூலம் காற்று மாசு மேலும் அதிகரிக்க அதிகளவில் வாய்ப்புள்ளது. இந்தக் காரணத்தினால், கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி, டெல்லியில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்பனை செய்யவும் 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால், தீபாவளி கொண்டாட்டம் துவங்குவதற்கே முன்பே டெல்லியில் காற்றின் மாசுபாடு அபாய அளவை தாண்டி உள்ளது. டெல்லியின் காற்றின் தரம் மேலும் அடுத்த இரண்டு நாட்களில் 'மோசமான' வகைக்கு சென்றடையக்கூடும் என்றும் காற்று தரம் மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு எச்சரித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.105.43-க்கும் டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.101.59-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:22 (IST) 29 Oct 2021
    கனமழையால் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு அக். 30ம் தேதி விடுமுறை

    கனமழையின் காரணமாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை அக்டோபர் 30ம் தேதி விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார்.



  • 21:32 (IST) 29 Oct 2021
    ரஜினிகாந்த் நலம்பெற கமல்ஹாசன் வாழ்த்து!

    உடல் நலக் குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது நண்பர் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டும் என கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் கமல்ஹாசன், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • 19:49 (IST) 29 Oct 2021
    மூளைக்கு ரத்தம் சப்ளை சரி செய்யப்பட்டது: ரஜினிகாந்த் ஹெல்த் ரிப்போர்ட்

    ரஜினிகாந்த்க்கு மூளைக்கு ரத்தம் விநியோகம் செய்யும் குழாயை சரி செய்யும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த்துக்கு மூளைக்கு இரத்தம் சப்ளை செய்யும் செயல்பாட்டை சரி செய்யும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், ரஜினிகாந்த் விரைவாக குணமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த அக்டோபர் 28ம் தேதி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவமனை தெரிவித்தது. ரஜினிகாந்த், மருத்துவ நிபுணர்கள் குழுவினரால் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டார். அவர்கள், அவருக்கு கார்டாய்டு ஆர்டரி ரிவாஸ்குலரைசேஷன் செய்ய அறிவுறுத்தப்பட்டது என்று காவேரி மருத்துவமனை ( மூளைக்கு ரத்த விநியோகத்தை சரி செய்யும் சிகிச்சை) வெளியிட்டுள்ள மருத்துவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ரஜினிக்கு இந்த அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு அவர் நலமுடன் உள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனையின் இணை நிறுவனரும் செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:28 (IST) 29 Oct 2021
    நாடு முழுவதும் சரவெடிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

    தீபாவளி பண்டிகையொட்டி நாடு முழுவதும் சரவெடி வெடிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.



  • 17:45 (IST) 29 Oct 2021
    புனீத் ராஜ்குமார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

    புனீத் ராஜ்குமார் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். “அன்பு தம்பி புனீத் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்துவாடு குடும்பத்தினருக்கும், கன்னடத் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



  • 17:39 (IST) 29 Oct 2021
    கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமார் திறமைக்காகவும் ஆளுமைக்காகவும் வருங்கால தலைமுறையினரால் நினைவு கூறப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



  • 17:18 (IST) 29 Oct 2021
    நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

    அமைச்சர் அன்பில் மகேஷ்: “நவம்பர் 1ம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் காலை முதல் மாலை வரை முழு நேரம் வகுப்புகள் நடைபெறும். ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். ஆன்லைன் வழியில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் படிக்கலாம். மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியது கட்டாயம் இல்லை; பெற்றோர்கள் விருப்பத்துடன் பள்ளிக்கு வரலாம். பள்ளிகளில் வழக்கம் போல் சத்துணவு வழங்கப்படும்.” என்று கூறினார்.



  • 16:41 (IST) 29 Oct 2021
    புதிய கல்வி கொள்கை: ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க சுற்றறிக்கை திரும்பப் பெற உத்தரவு

    புதிய கல்வி கொள்கை திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற உத்தரவு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், சுற்றறிக்கை அனுப்பிய இணை இயக்குநர் தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



  • 16:05 (IST) 29 Oct 2021
    கீழடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற இடத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் * முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 16:03 (IST) 29 Oct 2021
    தீபாவளி பண்டிகை : பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

    தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், பொதுப்போக்குவரத்தில் பட்டாசுகளை எடுத்து செல்ல அனுமதி இல்லை என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.



  • 16:02 (IST) 29 Oct 2021
    கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மரணம்

    திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டதான அறிவிக்கப்பட்டு்ளளது. தற்போது 46 வயதாகும் புனித், கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த ராஜகுமாரின் இளையமகன் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 14:57 (IST) 29 Oct 2021
    சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறார் ரஜினி : காவேரி மருத்துவமனை

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கரோடிட் ஆர்டரி ரிவாஸ்குலரைசேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சிகிச்சை இன்று வெற்றிகரமாக செய்யப்பட்டதாக மருத்தவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் சிகிச்சைக்கு பின் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும், அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும் கூறியுள்ள மருத்தவர்கள் சில நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் கூறியுள்ளனர்.



  • 14:16 (IST) 29 Oct 2021
    முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சசிகலா மரியாதை

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.



  • 14:15 (IST) 29 Oct 2021
    தீபாவளி பண்டிகை : புதுச்சேரியில் அரசு விடுமுறை

    புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 2 மற்றும் 3-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



  • 14:14 (IST) 29 Oct 2021
    தீபாவளி பண்டிகை : புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிப்பு

    புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 2 மற்றும் 3-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



  • 13:55 (IST) 29 Oct 2021
    நடிகர் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி

    நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 13:47 (IST) 29 Oct 2021
    முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக அரசு விளக்கம்

    முல்லைப் பெரியாறு அணை நிலையான வழிகாட்டுதலின் படி இயக்கப்பட்டு வருகிறது என்று விளக்கம் அளித்துளள தமிழக அரசு அணை பாதுகாப்பு குறித்து பரவும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது.



  • 13:26 (IST) 29 Oct 2021
    கனமழை எச்சரிக்கை

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, குமரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்யக்க்கூடும் என்றும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது



  • 13:09 (IST) 29 Oct 2021
    நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 12:37 (IST) 29 Oct 2021
    ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மரண வழக்கு

    ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மரணம் அடைந்த வழக்கில் அவரது உறவினர் ரமேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



  • 12:09 (IST) 29 Oct 2021
    பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் - முன்னாள் காவல் உயரதிகாரிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. நவம்பர் 1ம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று விழுப்புறம் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது



  • 12:07 (IST) 29 Oct 2021
    எஸ்.கே.எம் நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை

    ஈரோட்டில் உள்ள எஸ்.கே.எம் நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை. சென்னையில் இருந்து சென்றுள்ள அதிகாரிகள், 11 குழுக்களாக பிரிந்து மூன்றாவது நாளாக சோதாஇ நடத்தி வருகின்றனர்.



  • 12:02 (IST) 29 Oct 2021
    வழக்கறிஞர்கள் வில்லியம்ஸ், பாசில் ஆகியோர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை

    பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற வழக்கறிஞர்கள் வில்லியம்ஸ், பாசில் ஆகியோர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு



  • 11:23 (IST) 29 Oct 2021
    மதுரை முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சசிகலா மரியாதை

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 59 குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார்.



  • 10:49 (IST) 29 Oct 2021
    ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் மெட்டா - மார்க் ஜூக்கர்பெர்க்

    உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை கொண்ட ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனத்தின் FACEBOOK INC என்கிற பெயரை மாற்றி மெட்டா என்ற புதிய பெயரை சூட்டியுள்ளார் அதன் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்.



  • 10:41 (IST) 29 Oct 2021
    ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி

    இன்று முதல் நவம்பர் 2-ம் தேதி வரை ஜி 20 உச்சி மாநாடு, பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி மற்றும் பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி டெல்லியில் இருந்து நேற்றிரவு தனி விமானம் மூலம் அவர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.



  • 09:49 (IST) 29 Oct 2021
    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் நீட்டிப்பு

    ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, 2018-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.



  • 09:45 (IST) 29 Oct 2021
    கீழடி பணிகளை ஸ்டாலின் ஆய்வு

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.12.21 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அகழ் வைப்பகம் கட்டுமான தொல்லியல் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.



  • 09:43 (IST) 29 Oct 2021
    அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

    இன்று முதல் நவம்பர் 1 வரை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம். அறிவித்துள்ளது.



  • 09:42 (IST) 29 Oct 2021
    உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மகிழ்ச்சியோடு ஏற்கிறோம்

    கோயில் நகைகளை சரிபார்க்கும் பணியே நடைபெறாமல் இருந்தது என்றும் நகைகள் கணக்கிடும் பணி முடிவடைய ஓராண்டு ஆகும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மகிழ்ச்சியோடு ஏற்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.



Coronavirus Stalin Mullaiperiyaru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment