Advertisment

Tamil News Highlights : உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி; அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest Tamil News : கொடநாடு கொலை. கொள்ளை வழக்கில் 4-வது குற்றவாளியான ஜம்சீர் அலியிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை காவல்துறையினர் நடத்தியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி; அதிகாரபூர்வ அறிவிப்பு

Tamil News Highlights : கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக  உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள், 4-வது குற்றவாளியான கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த  ஜம்சீர் அலியிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை  நடத்தினர். பங்களாவின் ஜன்னல் கதவை உடைத்து நுழைந்த 4 நபர்களில் இவர் ஒருவர் என்பதால், பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட விபரங்கள் குறித்து காவல்துறையினர் மிகத் தீவிர  விசாரணை நடத்தி அதனை வீடியோ பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய, வாளையார் மனோஜின் ஜாமினில் தளர்வுகள் கேட்டு அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையை  உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்ஜய் பாபா இன்று விசாரிக்கவுள்ளார்.

Advertisment

இந்தியப் பிரதமருடன் அமெரிக்க அதிபர் பைடன் வரும் 24-ம் தேதி ஆலோசனை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 24-ம் தேதி வெள்ளை மாளிகையில் நேரடியாக ஆலோசனை நடத்தவுள்ளார். குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நாடுகளுக்கிடையில் உறவை வலுப்படுத்துவது, கொரோனா தொற்றை ஒன்றாக எதிர்கொள்வது, பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானியர்களுக்கு உறுதுணையாக இருக்க இந்தியா தயார்

ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஆப்கானியர்களுக்கு எப்போதும் போலவே தற்போதும் உறுதுணையாக இருக்க இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உதவி வழங்க முன்வருவோரைத் தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்றும் சமுதாயத்தில் அனைத்து பிரிவினருக்கும் பாரபட்சமின்றி நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக இந்தியா 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டு இருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:50 (IST) 14 Sep 2021
    உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி; அதிகாரபூர்வ அறிவிப்பு

    9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



  • 20:14 (IST) 14 Sep 2021
    வாணியம்பாடி மஜக பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி சரண்

    வாணியம்பாடி மஜக பிரமுகர் வசீம் அக்ரம் படுகொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் சிவகாசி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் சரணடைந்தார்



  • 19:52 (IST) 14 Sep 2021
    அண்ணாத்த பட போஸ்டர் மீது இரத்த அபிஷேகம்; ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்

    அண்ணாத்த பட போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்வது போன்று சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ரசிகர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



  • 19:28 (IST) 14 Sep 2021
    டெல்லியில் 2 தீவிரவாதிகள் உட்பட 6 பேர் கைது

    டெல்லியில் 2 தீவிரவாதிகள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான 6 பேரில் 2 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். இந்த தீவிரவாதிகள், நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாக டெல்லி போலீஸ் தகவல்



  • 19:26 (IST) 14 Sep 2021
    தமிழகத்தில் மேலும் 1591 பேருக்கு கொரோனா தொற்று; 27 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் மேலும் 1591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 18:23 (IST) 14 Sep 2021
    சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்: முதல்வர் அறிக்கை

    உயிர் காக்கும் மருத்துவ படிப்பிற்காக தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்



  • 18:04 (IST) 14 Sep 2021
    1- 8 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை

    அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 1- 8 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்தோம். எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்து ஆலோசித்தோம். பள்ளிகள் தோறும் மருத்துவ குழு சென்று மாணவர்கள் உடல்நிலை குறித்து சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் வர விருப்பமில்லை என்றால் வீட்டிலேயே இருக்கலாம். 1-8 முதல் வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்



  • 17:16 (IST) 14 Sep 2021
    நீட் பயத்தால் மாணவி கனிமொழி தற்கொலை; கடும் மன உளைச்சலையும்வேதனையையும் தருகிறது - உதயநிதி

    நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் - வேதனையையும் தருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 16:29 (IST) 14 Sep 2021
    ஜெய்பூரில் ரூ.35 லட்சத்துக்கு நீட் வினாத்தாள்; தமிழகத்தில் அப்பாவி மாணவர்கள் உயிரிழப்பு - கமல்ஹாசன் வேதனை

    ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.



  • 16:28 (IST) 14 Sep 2021
    இந்தியைப் பயன்படுத்தினால்தான் நாடு முன்னேறும் மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்துக்கு ராமதாஸ் கண்டனம்

    இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்று கூறுவதில் ஏராளமான பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு... அவ்வாறு கூறக்கூடாது - உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 15:42 (IST) 14 Sep 2021
    நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகம் 100 கி.மீ வரை அதிகரித்த மத்திய அரசின் அறிவிப்பு ரத்து - ஐகோர்ட்

    காஞ்சிபுரம் சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவர் இழப்பீடு கோரிய வழக்கில், நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ வரை அதிகரித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. வாகனங்களுக்கு 60 முதல் 100 கி.மீ-க்குள் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை மேம்பாடு, இன்ஜின்களின் செயல்பாட்டை உயர்த்த வேகம் அதிகரிப்பு என மத்திய அரசு அளித்த விளக்கத்தை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.



  • 15:24 (IST) 14 Sep 2021
    நீர்நிலை ஆக்கிரமிப்பு -உயர்நீதிமன்றம் வேதனை

    பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே கால்வாய் பற்றிய பதிவுகள் இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தியுள்ளது. குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது.



  • 15:23 (IST) 14 Sep 2021
    நீர்நிலை ஆக்கிரமிப்பு -உயர்நீதிமன்றம் வேதனை

    பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே கால்வாய் பற்றிய பதிவுகள் இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தியுள்ளது. குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது.



  • 14:26 (IST) 14 Sep 2021
    மஜக பிரமுகர் கொலை- 6 பேர் நீதிமன்றத்தில் சரண்

    வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.



  • 14:08 (IST) 14 Sep 2021
    வாக்காளர் சிறப்பு முகாம்

    தமிழகத்தில் நவம்பர் 13,14,27,28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம், சேர்த்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.



  • 13:33 (IST) 14 Sep 2021
    அவசரமாக தரையிறங்கிய விமானம் நான்கு நபர்கள் பலி

    14 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் ரஷ்யா சென்ற சிறிய ரக விமானம் இயந்திர கோளாறு காரணமாக சைபீரியாவில் உள்ள காட்டில் அவசரமாக தரையிறங்கிய போது விபத்து ஏற்அட்டு அதில் 4 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.



  • 13:33 (IST) 14 Sep 2021
    அவசரமாக தரையிறங்கிய விமானம் நான்கு நபர்கள் பலி

    14 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் ரஷ்யா சென்ற சிறிய ரக விமானம் இயந்திர கோளாறு காரணமாக சைபீரியாவில் உள்ள காட்டில் அவசரமாக தரையிறங்கிய போது விபத்து ஏற்அட்டு அதில் 4 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.



  • 13:10 (IST) 14 Sep 2021
    மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

    என்.வி.என். சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.



  • 12:55 (IST) 14 Sep 2021
    துப்பாக்கிச்சூடு வீரர் தற்கொலை

    இந்திய துப்பாக்கிச் சுடும் வீரரான நமன்வீர் சிங் பிரார் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவி கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 12:49 (IST) 14 Sep 2021
    பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்

    செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அப்பாவி பயணிகளின் நலனை கருதி உரிய திருத்தம் கொண்டு வரும் என சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.



  • 12:27 (IST) 14 Sep 2021
    இந்தி பேச ஏன் வெட்கம்? - உள்துறை அமைச்சர் இந்தி திவாஸ் வாழ்த்து

    சர்வதேச அளவில் பிரதமர் மோடியே இந்தியில் பேசும் போது நாம் எதைப்பார்த்து வெட்கப்படுகிறோம்? இந்தியில் பேசுவது கவலை அளிக்கிறது என்று யோசித்த காலம் எல்லாம் போய்விட்டது என்று இந்தி திவாஸ் நாளான இன்று வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.



  • 12:04 (IST) 14 Sep 2021
    நீட் தேர்வை ரத்து செய்வதில் முதல்வர் வெற்றி பெறுவார்

    நீட் தேர்வை ரத்து செய்வதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று அவருடைய சகோதரியும், திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.



  • 11:52 (IST) 14 Sep 2021
    தமிழகத்தில் மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகள் உள்ளன

    440 கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 1,51,870 உள்ளன. 1.39 லட்சம் மாணவர்களுக்கு தரவரிசை மதிப்பெண் வெளியீடு செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளது.



  • 11:28 (IST) 14 Sep 2021
    பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்கின் பேரன்

    இந்தியாவின் 7-வது குடியரசுத் தலைவரும் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருந்த கியானி ஜெயில் சிங்கின் பேரன் இந்திரஜித் சிங் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.



  • 10:43 (IST) 14 Sep 2021
    25,404 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,89,579 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 10:42 (IST) 14 Sep 2021
    பள்ளி திறப்பு ஆலோசனை கூட்டம்

    1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.



  • 09:41 (IST) 14 Sep 2021
    நேரில் ஆஜராவதிலிருந்து ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு விலக்கு

    அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 09:41 (IST) 14 Sep 2021
    ராணுவ தலையீடு அதிகரிக்க வாய்ப்பு

    இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார அவசர நிலை அங்கு ராணுவத்தின் தலையீட்டை அதிகரிக்கக் கூடும் என ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிசெல் பேஷெலெட் கவலை தெரிவித்துள்ளார்.



  • 09:40 (IST) 14 Sep 2021
    ரஷ்யா - பெலாரஸ் ராணுவம் இணைந்து போர் ஒத்திகை

    ZAPAD-2021 என்ற பெயரில் ரஷ்யாவில் இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில், இரு நாட்டு வீரர்களும் எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து நவீன ஆயுதங்களை கொண்டு பயிற்சி மேற்கொண்டுள்ளனர். ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ராணுவம் இணைந்து மேற்கொண்டு வரும் இந்த போர் ஒத்திகையை ரஷ்ய அதிபர் புதின் நேரில் பார்வையிட்டார்.



  • 09:36 (IST) 14 Sep 2021
    பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

    பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1.40 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியாக மதிப்பெண்களை அறியலாம். மேலும், http://tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



  • 09:34 (IST) 14 Sep 2021
    நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை

    அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதியின் இரண்டாவது மகள் கனிமொழி, நாமக்கல் கீரீன் கார்டனில் 12 -ம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்று 93 சதவீதம் முடித்த நிலையில் தஞ்சாவூரில் தாமரை இன்டர் நேஷனல் பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கனிமொழி தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.



  • 08:56 (IST) 14 Sep 2021
    முதலமைச்சர் வாழ்த்து!

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், ராஜ்பவனில் இருந்து விடைபெற்று பஞ்சாப் புறப்பட்ட அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.



Corona Stalin Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment