Advertisment

Tamil News : பத்திரப்பதிவு அலுவலகத்தில் முதியவர்களுக்கு சிறப்பு சலுகை

Latest Tamil News : தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் குடும்பம் வீடு திரும்பினர். அவர்களை நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

author-image
WebDesk
New Update
Tamil News : பத்திரப்பதிவு அலுவலகத்தில் முதியவர்களுக்கு சிறப்பு சலுகை

Tamil news live : உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று வேகமாகப் பரவுகிறது. தமிழ்நாட்டில் இப்போது வரை, ஒமிக்ரான் தொற்றுக்கு 34 பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் தொடங்கவிருக்கும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உட்படப் பல அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Advertisment

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார்

சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தரப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இவர் மீது மோசடி புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பண மோசடி புகார் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பின் தீவிரம் லேசானது

டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பின் தீவிரம் லேசானது தான் என்று இங்கிலாந்து நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 27.84 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 24.91 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது மற்றும் 6,429 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெட்ரோல் - டீசல் விலை

சென்னையில் 50-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:43 (IST) 24 Dec 2021
    கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - விஜயபாஸ்கர்

    தமிழக்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



  • 19:52 (IST) 24 Dec 2021
    அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று : முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கடைகள் வணிக வளாகங்கள், திரையரங்குள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதால், கொரோனா ஒமைக்ரான் தொற்று பரவுதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முககவசம் கட்டாயம் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.



  • 19:49 (IST) 24 Dec 2021
    அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று : முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கடைகள் வணிக வளாகங்கள், திரையரங்குள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதால், கொரோனா ஒமைக்ரான் தொற்று பரவுதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முககவசம் கட்டாயம் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.



  • 18:58 (IST) 24 Dec 2021
    பத்திரப்பதிவு அலுவலகத்தில் முதியவர்களுக்கு சிறப்பு சலுகை

    பத்திரபதிவு அலுவலகத்தில் 70 வயதை கடந்தவர்கள் வரிசையில் காத்திருக்காமல் பத்திரப்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்று வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.



  • 18:56 (IST) 24 Dec 2021
    பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிப்பு

    முன்னாள் பிரதமர் ராஜூகாந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சிறுநீரக கோளாரால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 8 மாதங்களாக பரோலில் இருந்து வருகிறார். இந்நலையில் தற்போது அவரது பரோல் மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளது.



  • 18:15 (IST) 24 Dec 2021
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது,

    சென்னை, பெரியார் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது, வைகோவுக்கு 'பெரியார் ஒளி' விருதும் வழங்கப்பட்டது.



  • 18:14 (IST) 24 Dec 2021
    வசூலை குவிக்கும் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்

    ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் இந்தியாவில் 146 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகளவில் 6000 கோடி வசூல் செய்துள்ள இந்த படம், இந்த ஆண்டின் ஹாலிவுட் வெற்றிப்பட வரிசையில் முன்னணியில் உள்ளது.



  • 17:20 (IST) 24 Dec 2021
    மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் பணியிடை நீக்கம்

    கோவை வெள்ளலூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் விஜய் ஆனந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • 16:52 (IST) 24 Dec 2021
    தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த உயர்சாதி மாணவர்கள்!

    உத்தரகாண்ட் மாநிலம் சாம்பவத் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் சில உயர்சாதி மாணவர்கள், தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் உயர்வகுப்பை சேர்ந்த வேறொரு பெண்ணை சத்துணவு பணிக்கு நியமித்தது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • 16:34 (IST) 24 Dec 2021
    பாலியல் தொல்லை.. மாணவர்கள் போராட்டம் எதிரொலி.. ஆசிரியர் சஸ்பெண்ட்!

    பாலியல் தொல்லை தருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியதன் பேரில், கோவை வெள்ளலூர் அரசு பள்ளி ஆசிரியர் விஜய் ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



  • 16:26 (IST) 24 Dec 2021
    இந்தியாவில் 358 பேருக்கு ஒமிக்ரான் தொற்று!

    இந்தியாவில் தற்போதுவரை 17 மாநிலங்களில் 358 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 114 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 16:21 (IST) 24 Dec 2021
    லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை: மத்திய இணையமைச்சருக்கு கொலை மிரட்டல்!

    வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட லக்கிம்பூர் விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவுக்கு கொலை மிரட்டல் விடுத்த,5 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.



  • 15:51 (IST) 24 Dec 2021
    நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி!

    பிரபல காமெடி நகர் வடிவேலு படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 15:47 (IST) 24 Dec 2021
    பாலியல் தொல்லை: அரசுப்பள்ளியில் கணினி ஆசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

    கோவை வெள்ளலூர் அரசு பள்ளியின் கணினி ஆசிரியர் ஆபாசமாக பேசுவதாக குற்றம்சாட்டி அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆசிரியருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • 15:39 (IST) 24 Dec 2021
    கூட்டுறவு வங்கியில் மோசடி: வங்கி காசாளர்கள் இருவர் கைது

    புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த வழக்கில் வங்கி காசாளர்கள் இருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.



  • 15:38 (IST) 24 Dec 2021
    ஒமிக்ரான் பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை!

    தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் 10% நெருங்கும் நிலையில், ஊரடங்கு அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள்ள் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என கூட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.



  • 15:10 (IST) 24 Dec 2021
    ஒமிக்ரான் பரவல்.. கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்.. சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

    தமிழகத்தில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. எனவே கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்துதலை விரைவுப்படுத்துமாறு அதிமுகவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 15:10 (IST) 24 Dec 2021
    டெல்லியில் 100% முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி!

    டெல்லியில் 100% முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



  • 15:02 (IST) 24 Dec 2021
    ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு!

    இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.



  • 14:45 (IST) 24 Dec 2021
    ட்விட்டரில் வைரலாகும் விஜய்-யுவன் புகைப்படம்!

    தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் உற்சாகமுடன் இருக்கும் புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்திருகிறார். தற்போது இது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வைரலாகிக்கொண்டு வருகிறது. அதேசமயம், விஜய்யின் ‘விஜய் 66’ அல்லது ‘விஜய் 67’ படத்தில் யுவன் பணியாற்றுகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.



  • 14:19 (IST) 24 Dec 2021
    நெல்லை பள்ளி விபத்து : 4 ஆசிரியர்களுக்கு சம்மன் !

    நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விபத்து நடந்த போது சம்பவ இடத்தில் இருந்த 3 உடற்கல்வி ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:03 (IST) 24 Dec 2021
    விழுப்புரம் ஆண் குழந்தை மர்ம மரணம் - குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்!

    விழுப்புரத்தில் 4 வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். குழந்தையை தூக்கிவந்த 2 நபர்கள் யார்?, செல்போன் சிக்னல், சம்பவ இடம், பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் எண்களை என போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



  • 13:45 (IST) 24 Dec 2021
    ஓமிக்ரான் தொற்று பரவல்: உ.பி.யில் ஊரடங்கு உத்தரவு

    இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயர்மட்டக் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் கோவிட்-19 நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.



  • 13:25 (IST) 24 Dec 2021
    ஈசா யோகா ஆய்வு - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

    "ஈஷா யோகா எங்களுக்கு கொடுத்த அறிக்கையின்படி ஒரு சென்ட் நிலம் கூட ஆக்கிரமிப்பு இல்லை என்று தெரிய வருகிறது. சர்வே குழு மற்றும் அதிகாதிகள் கொண்ட குழு மீண்டும் ஈசா யோகா இருக்கும் இடத்தை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். குரங்கு, மயில், காட்டெருமை போன்ற விலங்குகளால் விவசாயிகளுக்கு பல வகையில் பிரச்சனை ஏற்படுகிறது. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு 1 மாத காலத்திற்குள் இப்பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்யப்படும்" என செய்தியாளர் சந்திப்பில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



  • 12:57 (IST) 24 Dec 2021
    பன்னீர் செல்வம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் - டிடிவி பதில்

    தவறு செய்தவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். பன்னீர் செல்வம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏற்கனவே தவறு செய்தவர்கள் தான் காவல்துறையினரை கண்டால் ஓடிக் கொள்கின்றனர் என்று டிடிவி குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.



  • 12:27 (IST) 24 Dec 2021
    ஆசிரியர் கைது

    பரமக்குடி அருகே பெருமாள்கோவில் அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றோரு ஆசிரியர் ஆல்பர்ட் வளவனை காவல்துறை தேடி வருகிறது.



  • 12:25 (IST) 24 Dec 2021
    இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருமா? துவங்கியது ஆலோசனை கூட்டம்

    தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர், அதிகாரிகளின் கூட்டம் தற்போது நடத்தி வருகிறார். புதிய கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவது போன்றவை குறித்து ஆலோசனை



  • 11:54 (IST) 24 Dec 2021
    உ.பி. தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? தேர்தல் ஆணையம் ஆலோசனை

    ஒமிக்ரான் தொற்று அிகரித்து வருகின்ற நிலையில் உபி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்த நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.



  • 11:39 (IST) 24 Dec 2021
    இரவு நேர ஊரடங்கு

    ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கை அறிவித்துள்ளது உ.பி. மாநில அரசு.



  • 11:36 (IST) 24 Dec 2021
    ராஜேந்திர பாலாஜி : கடலோரா கண்காணிப்பை அதிகரிக்க தீவிரம்

    கடல்மார்க்கமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தப்பிச் செல்வதை தடுக்க கடலோரங்களில் கண்காணிப்பை அதிகரிக்க காவல்துறை திட்டம். ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 கோடி மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியை தேடி வருகிறது காவல்துறை.



  • 11:28 (IST) 24 Dec 2021
    ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பு : வார் ரூம்களை அறிவிக்க முதல்வர் அறிவுறுத்தல்

    ஒமிக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மாவட்ட வாரியாக வார் ரூம் அமைக்கும் பணிகளை தொடங்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருங்கிணைந்த வார் ரூம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



  • 11:26 (IST) 24 Dec 2021
    ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ராசாக்கண்ணு மனைவி பார்வதி

    காவல் நிலைய விசாரணையின் போது கொல்லப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு தமிழக அரசு வழங்கிய மனையில் வீடு கட்டித்தர உத்தரவு பிறப்பித்தார். ஸ்டாலினை நேரில் சந்தித்து இதற்காக நன்றி தெரிவித்தார்.



  • 11:26 (IST) 24 Dec 2021
    ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ராசாக்கண்ணு மனைவி பார்வதி

    காவல் நிலைய விசாரணையின் போது கொல்லப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு தமிழக அரசு வழங்கிய மனையில் வீடு கட்டித்தர உத்தரவு பிறப்பித்தார். ஸ்டாலினை நேரில் சந்தித்து இதற்காக நன்றி தெரிவித்தார்.



  • 11:23 (IST) 24 Dec 2021
    ஒமிக்ரான் பரவல் கட்டுப்பாட்டு நெறிமுறைகள்

    ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த உத்தரகாண்ட் அரசு நெறிமுறைகளை அறிவித்து வருகிறது. இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல், திருமண நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் கூடக் கூடாது என கட்டுப்பாடுகள் அறிவிப்பு



  • 10:37 (IST) 24 Dec 2021
    அறநிலையத்துறை சார்பில் ஊக்கத் தொகை

    அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர், ஓதுவார், இசை மாணவர்களுக்கு ரூ.3,000 ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.



  • 10:36 (IST) 24 Dec 2021
    எம்.ஜி.ஆரின் நினைவு தினம் - ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை

    எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினதையொட்டி மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்.



  • 10:05 (IST) 24 Dec 2021
    இங்கிலாந்தில் ஒரே நாளில் 1.19 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிப்பு

    இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக ஓரே நாளில், ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



  • 10:03 (IST) 24 Dec 2021
    மதமாற்ற தடை சட்டம் ஒப்புதல் பெற்றது

    மதமாற்றத்திற்கு தடை விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு கர்நாடக சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.



  • 10:03 (IST) 24 Dec 2021
    சசிகலா மற்றும் அமமுகவுக்கு அனுமதி மறுப்பு

    எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு சசிகலா மற்றும் அமமுக கட்சியை சேர்ந்தோருக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 09:56 (IST) 24 Dec 2021
    பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

    பெரியாரின் 48-வது நினைவு நாளையொட்டி, சென்னை சிம்சனில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.



Stalin Omicron
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment