Advertisment

News Highlights: சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு; தீவிர சிகிச்சை

tamil news today l: தந்தையான பிறகு முதல் தொடர் சென்னை வந்தார் விராட் கோலி

author-image
WebDesk
New Update
News Highlights: சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு; தீவிர சிகிச்சை

Tamil News Today Live thai poosam : பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

நேற்று இரவு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு நாட்களுக்குப் பிறகு சசிகலாவிற்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து மாறுபட்டு வருவதாகவும், அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முருகனின் மூன்றாம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர் தைப்பூசத் திருநாளை ஒட்டி இன்று ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை பார்வையிட உயர்நீதிமன்ற தனிநீதிபதி அனுமதி மறுத்த உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு ஸ்செய்துள்ளது.

நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கும் ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லம்' இன்று திறக்கப்படுகிறது.

Live Blog

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil



























Highlights

    07:45 (IST)29 Jan 2021

    சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை!

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக ,ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து மாறுபட்டு வருவதாகவும், அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    19:43 (IST)28 Jan 2021

    விவசாயிகளை அப்புறப்படுத்த உத்தரவு: காஜியாபாத் எல்லையில் பதற்றம்

    இன்று இரவுக்குள் போராட்ட இடங்களில் வெளியேற வேண்டும் என்று காஜியாபாத் நிர்வாகம் உத்தரவிட்டதையடுத்து, டெல்லி-உ.பி. எல்லையில் பதற்றம் நிலவுகிறது. தோளில் தோட்டாக்கலைத் தாங்க தயாராக இருப்பதாக பாரதிய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார். காவல் படையும், விரைவு அதிரடிப் படையும்  இடத்தை முற்றுகையிட்டுள்ளனர். 

    19:25 (IST)28 Jan 2021

    இறுதி உடன்பாடு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் - ராகேஷ் டிக்கைட்

    பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு எட்டப்படும் வரை எங்கள்  உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடருவோம். எக்காரணத்தையும் முன்னிட்டு இடத்தை காலி செய்ய மாட்டோம். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு நிர்வாகம் நீக்கியுள்ளது. இருப்பினும், கிராமங்களிலிருந்து நாங்கள் குடிநீர் பெறுவோம் என பாரதிய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.   

    18:31 (IST)28 Jan 2021

    முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்

    காங்கிரசில் இருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்

    18:23 (IST)28 Jan 2021

    தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தார்

    தில்லி கரியப்பா மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தார்.  

    18:07 (IST)28 Jan 2021

    மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம்

    மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   

    18:06 (IST)28 Jan 2021

    முதல்வர் குற்றச்சாட்டை திமுக தலைவர் மு க ஸ்டாலின் மறுத்துள்ளார்

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பதை எதிர்த்து வழக்கு போட்டு தடுத்ததாக தம்மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள குற்றச்சாட்டை திமுக தலைவர் மு க ஸ்டாலின் மறுத்துள்ளார்.

    17:33 (IST)28 Jan 2021

    அனைத்து மக்களும் சீரோடும், சிறப்போடும் மகிழ்ச்சியாக வாழ முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை சிறப்பித்துக் கொண்டாடும்தைப்பூசம் தமிழக அரசால் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதை மகிழ்வோடு பகிர்ந்துகொண்டு, இத்திருநாளில் அனைத்து மக்களும் சீரோடும், சிறப்போடும் மகிழ்ச்சியாக வாழ முருகப்பெருமானை வணங்கி வேண்டிக்கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டரில் பதிவிட்டார்.   

    16:46 (IST)28 Jan 2021

    ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றம் - தமிழக அரசு

    உயர்கல்வித்துறை வசமிருந்த சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. 

     

    16:21 (IST)28 Jan 2021

    குடியரசுத் தலைவர் உரை புறக்கணிப்பு- விசிக அறிவிப்பு

    29 ம் தேதியன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க விசிக முடிவு. 

     

    16:20 (IST)28 Jan 2021

    நான்கு நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு உட்பட்ட ஒருசில இடங்களில் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு லேசான மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    15:48 (IST)28 Jan 2021

    ஆந்திர மீனவர்களுக்கு டிடிவி.தினகரன் கண்டனம்

    தமிழக மீனவர்கள் 180 பேரை சிறைபிடித்த ஆந்திர மீனவர்கள் அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    15:45 (IST)28 Jan 2021

    13 வயது சிறுமிக்கு எச்.ஐ.வி தொற்று

    மதுரையில் வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    15:43 (IST)28 Jan 2021

    வரும் தேர்தலில் தனித்து போட்டி -சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

    ஒரு சீட்டு அல்லது இரண்டு சீட்டுகளுக்காக அரசியலில் இருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

    15:10 (IST)28 Jan 2021

    புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் - முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ள முதல்வர் நாராயண சாமி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் முடிவு செய்வார் என தெரிவித்துள்ளார்.

    15:08 (IST)28 Jan 2021

    குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க முடிவு

    குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் முடிவு முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    13:58 (IST)28 Jan 2021

    விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு

    கிருஷ்ணகிரியில் பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியின் போது விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    13:57 (IST)28 Jan 2021

    சீர்காழி கொள்ளையர்கள் ஆஜர்

    சீர்காழியில் நேற்று இரட்டை கொலை செய்து, 16 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரில் 3 குற்றவாளிகள் ஆஜராகியுள்ளனர்.

    12:50 (IST)28 Jan 2021

    தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு பெயர் மாற்றம்

    காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு 'ஜெயலலிதா வளாகம்' என பெயர் சூட்டி திறக்கப்பட்டுள்ளது.

    12:49 (IST)28 Jan 2021

    ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு

    ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறித்துள்ளார்.

    12:48 (IST)28 Jan 2021

    ஜெயலலிதாவுக்கு ஓ. பன்னீர்செல்வம் புகழாரம்

    மாநில மக்களுக்காக தொலைநோக்கு திட்டத்தை தீட்டியவர் ஜெயலலிதா- ஓ. பன்னீர்செல்வம்

    12:48 (IST)28 Jan 2021

    தேசிய மாணவர் படை நிகழ்வில் பிரதமர்

    காரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார்.

    12:13 (IST)28 Jan 2021

    மருத்துவ கலந்தாய்வு நீட்டிப்பு !

    117 எம்.பி.பி.எஸ் மற்றும் 459 பி.டி.எஸ் இடங்களை நிரப்புவதற்கு அவகாசம் கோரிய தமிழக அரசின் மனு மீது உச்சநீதிமன்றம் மருத்துவ கலந்தாய்வு நீட்டித்து உத்தரவு. 

    12:11 (IST)28 Jan 2021

    மெரினாவில் முழு உருவ ஜெயலலிதா சிலை!

    சென்னை மெரினாவில் முழு உருவ ஜெயலலிதா சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். ஜெயலலிதா சிலை திறப்பில் நடிகர் அஜித் உதவியுடன் வடிவமைத்த ட்ரோன் ஈடுப்படுத்தப்பட்டது கூடுதல் தகவல். 

    12:10 (IST)28 Jan 2021

    பிப். 24ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழா!

    மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள்  பிப். 24ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

    11:31 (IST)28 Jan 2021

    டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்!

    டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக எப்.ஐ.ஆரில் இடம்பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ். குற்றம்சாட்டப்பட்டவர்களின் பாஸ்போர்டுகளை முடக்கவும் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 

    11:30 (IST)28 Jan 2021

    ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லம்!

    ஜெயலலிதா உருவ படத்திற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை. அதனைத்தொடர்ந்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் 

    10:48 (IST)28 Jan 2021

    20 விவசாயிகளுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்!

    டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாயிகளுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் . பேரணி விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியது ஏன்? என விளக்கம் கேட்டு, 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ். 

    10:45 (IST)28 Jan 2021

    சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி இல்லை!

    சசிகலாவுக்கு, தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை .சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் த்கவல். 

    10:22 (IST)28 Jan 2021

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை!

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது .முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட உள்ளது . சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என தகவல்.

    tamil news today : வேதா நிலையம் தமிழக அரசு முறையீடு வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை. நாளை தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரிக்கப்படுகிறது

    தண்டனை பெற்றவருக்கு நினைவிடம்; திறந்து வைப்பவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்'' ஜெயலலிதா நினைவிடம் திறப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பேச்சு .

    17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை. வழங்கப்பட்டுள்ளது.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment