Advertisment

Tamil News Updates: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

Tamil News , Petrol price today, TNEA 2022 Rank List, Chennai bank smuggling, MK Stalin: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
EPS OPS

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் இன்று(ஆகஸ்ட் 17) உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறார் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்,

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

சென்னை வங்கிக் கொள்ளை

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில், கடந்த 13 ஆம் தேதி, 31.7 கிலோ அடமானம் வைக்கப்பட்ட நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது., இதுதொடர்பாக, பாலாஜி, சந்தோஷ், செந்தில்குமரன், முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் 3 நபர்களை தேடி வருகின்றனர்.

விசாரணையில் முதல் கட்டமாக 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 8.50 கோடி ஆகும். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்த எல்லை பகுதியில் இரு நாடுகளில் படைகளும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம்.

அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலமாகும். இந்நிலையில், சுதந்திர தினத்தன்று மாலை இந்த எல்லைப் பகுதியில், வீரர்கள் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வினை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:30 (IST) 16 Aug 2022
    டெல்லி சென்றார் மு.க.ஸ்டாலின்; புதன்கிழமை குடியரசு தலைவர், பிரதமரை சந்திக்க திட்டம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். குடியரசு தலைவர், பிரதமரை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.



  • 21:51 (IST) 16 Aug 2022
    மக்கள் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றத் தயார் - அரவிந்த் கெஜ்ரிவால்

    அரசுப் பள்ளிகளின் தரமற்ற நிலையைப் பற்றிக் கூறிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடு முழுவதும் உள்ள சுமார் 17 கோடி குழந்தைகள் அரசுப் பள்ளிகளை நம்பியுள்ளனர் என்றும், அனைத்து அரசுகளும் 130 கோடி மக்களும் சேர்ந்து அதை சரி செய்ய முடியும் என்றும் கூறினார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை அரசியலை ஒதுக்கி வைத்து, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முழு நாட்டையும் மேம்படுத்த ஆம் ஆத்மி அரசு மற்றும் பிற முற்போக்கான மாநில அரசுகளின் நிபுணத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார். இதுபோன்ற சேவைகளை இலவசம் என்று அழைக்க வேண்டாம் என்றும் அவர் பாஜகவை கேட்டுக் கொண்டார்.

    “நமது இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு நான் வழங்குகிறேன்; பொதுமக்களின் நலனுக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூறிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வாழ்நாளில் தனது ஒரே கனவு இந்தியாவை உலகில் முதல் நாடாக உருவாக்குவதுதான் என்று கூறினார்.



  • 21:22 (IST) 16 Aug 2022
    அமைச்சர் கார் மீது காலணி வீச்சு - கைதான 3 பாஜக பெண் தொண்டர்களுக்கு 30ம் தேதி வரை சிறை

    மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். கார் மீது காலணி வீசிய வழக்கில், திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் இருந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வயானை ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஆகஸ்ட் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • 20:27 (IST) 16 Aug 2022
    பாஜக உடன் குறைந்தபட்ச சமரசம் கூட இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு

    மு.க. ஸ்டாலின்: “பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தைக்கூட திமுக செய்துகொள்ளாது; ஒன்றிய அரசு - மாநில அரசு இடையேயான உறவு மட்டுமே இங்கே உள்ளது. டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கை கட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல; கலைஞர் பிள்ளை நான்” என்று கூறியுள்ளார்.



  • 20:24 (IST) 16 Aug 2022
    சிறப்பு எஸ்.ஐ.க்கள், எஸ்.ஐ.க்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை - அரசாணை வெளியீடு

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தபடி சிறப்பு எஸ்.ஐ.க்கள், எஸ்.ஐ.க்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை அளிக்க தமிழ்நாடு உள்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டாம் நிலை, முதல் நிலை மற்றும் தலைமை காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.



  • 19:29 (IST) 16 Aug 2022
    இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை

    இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை செப்டம்பர் 10ஆம் தேதி அமைச்சர் பெரியசாமியால் திறக்கப்படுகிறது.



  • 19:08 (IST) 16 Aug 2022
    கனியாமூர் வன்முறை: மேலும் இருவர் கைது

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது. இந்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.



  • 18:48 (IST) 16 Aug 2022
    உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு

    இலவசங்களுக்கு எதிரான மனுவில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுவில், ‘ஒன்றிய அரசு பெரும் முதலாளிகளுக்கு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. சமூக நீதியை நிலை நாட்டவே மக்கள் நலத்திட்டங்கள் இலவசங்கள் இடம் பெறுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



  • 18:24 (IST) 16 Aug 2022
    உருவக் கேலியை கண்டித்த ஹீமா குரேஷி

    நடிகை ஹீமா குரேஷி உருவக் கேலியை கடுமையாக கண்டித்துள்ளார். இது ஒருவரின் நம்பிக்கையை சிதைத்துவிடும் என்றார்.

    நடிகை ஹீமா குரேஷி ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமாருடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 18:01 (IST) 16 Aug 2022
    குரங்கு அம்மை பெயர் மாற்றம்?

    குரங்கு அம்மை பெயரின் காரணமாக பல இடங்களில் குரங்குகள் மனிதர்களால் கொல்லப்படுவதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் குரங்கு அம்மையின் பெயரை மாற்ற உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 17:41 (IST) 16 Aug 2022
    புதுக்கோட்டை ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி

    2020ல் டெண்டர் முறைகேடுப் புகார் தொடர்பாக புதுக்கோட்டை ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ஜல் ஜீவன் திட்டம் குறித்த புகாரில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    முறையான டெண்டர் ஒப்பந்தம் கோராமல் மனுதாரருக்கு பணி ஆணை வழங்கியது எப்படி? என்றும் கேட்ட நீதிமன்றம், மாவட்ட திட்ட அலுவலக முகமை இயக்குனர் உள்பட 6 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது



  • 17:17 (IST) 16 Aug 2022
    அ.தி.மு.க பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு; நாளை தீர்ப்பு என தகவல்

    அ.தி.மு.க பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தனர்



  • 16:53 (IST) 16 Aug 2022
    'சாதி-மதமற்றவர்' சான்றிதழை வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

    'சாதி-மதமற்றவர்' சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்று வழங்க வேண்டும் என அம்பத்தூர் தாசில்தாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனோஜ் என்பவர் தனது மகனுக்கு "சாதி - மதம் இல்லை" என சான்றிதழ் வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது



  • 16:30 (IST) 16 Aug 2022
    பால் விலையை உயர்த்தியது அமுல் நிறுவனம்

    அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது



  • 16:14 (IST) 16 Aug 2022
    கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது - ஐகோர்ட் மதுரை கிளை

    கருணை அடிப்படையிலான பணியை தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்பது அத்திட்டத்திற்கு எதிரானது. அதனை உரிமையாக கோர முடியாது. இது இறந்தவரின் குடும்பத்திற்கான உடனடி பொருளாதார தீர்வுக்கு தான். இதை வெகுகாலம் காத்திருப்பில் வைக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.



  • 15:24 (IST) 16 Aug 2022
    பேருந்து விபத்து - 7 வீரர்கள் உயிரிழப்பு

    ஜம்மு - காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்து

    ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 7 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு - 8 பேருக்கு தீவிர சிகிச்சை



  • 14:54 (IST) 16 Aug 2022
    Cold Coffee -ஐ அறிமுகம் செய்கிறது ஆவின்

    Cold Coffee -ஐ அறிமுகம் செய்கிறது ஆவின்

    Cold Coffee, பலாப்பழ ஐஸ்கிரீம், பாஸ்ந்தி உள்பட 10 புதிய பால் பொருட்களின் விற்பனையை ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் அமைச்சர் நாசர்.



  • 14:51 (IST) 16 Aug 2022
    பால் பொருட்களின் விலையை உயர்த்தியது அமுல்

    குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமுல் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தியதுடன் பால் பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.



  • 14:48 (IST) 16 Aug 2022
    இனி டெங்கு பாதிப்பே ஏற்படக்கூடாது: அமைச்சர்

    2017இல் ஏற்பட்டதைப் போல் இனி ஒருபோதும் டெங்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. தமிழகத்தில் விரைவில் 709 புதிய மருத்துவமனைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • 14:20 (IST) 16 Aug 2022
    கோயில் திருவிழா - போலீஸ் அனுமதி தேவையில்லை

    சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற்றால் போதுமானது - நீதிபதி

    கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை - உயர் நீதிமன்ற மதுரை கிளை

    வலையபட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவு



  • 13:32 (IST) 16 Aug 2022
    பேருந்து விபத்து - 2 வீரர்கள் உயிரிழப்பு

    ஜம்மு - காஷ்மீர்: பஹல்காம் பகுதியில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் 6 எல்லை காவல் படை வீரர்கள் உயிரிழப்பு அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 39 எல்லை காவல் படை வீரர்களுடன் பயணித்த பேருந்து விபத்து



  • 13:32 (IST) 16 Aug 2022
    உணவில் புழு - அதிகாரிகள் ஆய்வு

    சென்னை: அண்ணா நகரில் உள்ள பிரபல மாலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு உணவில் புழு இருந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு



  • 13:31 (IST) 16 Aug 2022
    அரும்பாக்கம் வங்கி கொள்ளை - மேலும் 10 கிலோ தங்கம் மீட்பு

    அரும்பாக்கம் வங்கி கொள்ளை - மேலும் 10 கிலோ தங்கம் மீட்பு . ஏற்கனவே 18 கிலோ தங்கம் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10 கிலோ தங்கம் மீட்பு கைதான சூர்யாவின் நண்பன் வீட்டிலிருந்து 10 கிலோ தங்கம் பறிமுதல் இதுவரை 28 கிலோ தங்கம் மீட்பு .



  • 12:30 (IST) 16 Aug 2022
    நடிகர் விஜய் வழக்கு- நீதிமன்றம் உத்தரவு

    நடிகர் விஜய்க்கு ₨1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 16ம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்



  • 11:57 (IST) 16 Aug 2022
    20ம் தேதி முதல் கலந்தாய்வு தொடக்கம்

    பொறியியல் படிப்புகளில் சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் வரும் 25ம் தேதி முதல் பொதுப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு.



  • 11:56 (IST) 16 Aug 2022
    9,981 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000- அமைச்சர் பொன்முடி

    “9,981 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000“ நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் மாதம் ரூ.1000 திட்டத்தின் கீழ் 9,981 மாணவிகள் பயனடைவர் - அமைச்சர் பொன்முடி



  • 11:03 (IST) 16 Aug 2022
    பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

    தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசைப் தரவரிசைப் பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்



  • 10:42 (IST) 16 Aug 2022
    தங்கம் விலை

    சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ. 39,008க்கு விற்பனையாகிறது.



  • 10:41 (IST) 16 Aug 2022
    கல்லூரி பேருந்து மோதி மாணவன் பலி

    ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டியில், தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 5ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் உயிரிழந்தான்.



  • 10:12 (IST) 16 Aug 2022
    இன்றைய நிகழ்ச்சிகள்

    பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி அரசு இன்று காலை 11.30 மணிக்கு தனது முதல் அமைச்சரவை விரிவாக்கத்தைக் காணவுள்ளது.

    தெலுங்கானா அரசு’ இன்று மாநிலம் முழுவதும் ‘தெலுங்கானா ராஷ்ட்ர சமூஹிக ஜதீய கீதா ஆலாபனா’ (தேசிய கீதத்தை வெகுஜனமாகப் பாடுதல்) நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

    வேலைவாய்ப்பு தொடர்பான தேசிய கொள்கையை வலியுறுத்தி டெல்லியில் பல சிவில் சமூக அமைப்புகள் திரங்கா அணிவகுப்பை நடத்தவுள்ளன.

    முதல் கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீக் 16 வயதுக்குட்பட்டோர்’ புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் ஆகஸ்ட் 16-23 தேதிகளில் நடைபெற உள்ளது.

    ஆசியாவின் பழமையான கால்பந்து போட்டியான டுராண்ட் கோப்பையின் 131வது பதிப்பு கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    பார்சி சமூகம் ஆகஸ்ட் 16 அன்று பார்சி புத்தாண்டைக் கொண்டாடுகிறது, இது நவ்ரோஸ் என்று அழைக்கப்படுகிறது, இது ஜோராஸ்ட்ரிய நாட்காட்டியின் முதல் நாளைக் குறிக்கிறது.



  • 10:12 (IST) 16 Aug 2022
    இன்றைய நிகழ்ச்சிகள்
  • பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி அரசு இன்று காலை 11.30 மணிக்கு தனது முதல் அமைச்சரவை விரிவாக்கத்தைக் காணவுள்ளது.
  • தெலுங்கானா அரசு’ இன்று மாநிலம் முழுவதும் ‘தெலுங்கானா ராஷ்ட்ர சமூஹிக ஜதீய கீதா ஆலாபனா’ (தேசிய கீதத்தை வெகுஜனமாகப் பாடுதல்) நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
  • வேலைவாய்ப்பு தொடர்பான தேசிய கொள்கையை வலியுறுத்தி டெல்லியில் பல சிவில் சமூக அமைப்புகள் திரங்கா அணிவகுப்பை நடத்தவுள்ளன.
  • முதல் கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீக் 16 வயதுக்குட்பட்டோர்’ புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் ஆகஸ்ட் 16-23 தேதிகளில் நடைபெற உள்ளது.
  • ஆசியாவின் பழமையான கால்பந்து போட்டியான டுராண்ட் கோப்பையின் 131வது பதிப்பு கொல்கத்தாவில் தொடங்குகிறது.
  • பார்சி சமூகம் ஆகஸ்ட் 16 அன்று பார்சி புத்தாண்டைக் கொண்டாடுகிறது, இது நவ்ரோஸ் என்று அழைக்கப்படுகிறது, இது ஜோராஸ்ட்ரிய நாட்காட்டியின் முதல் நாளைக் குறிக்கிறது.


  • 09:52 (IST) 16 Aug 2022
    இன்றைய நிகழ்ச்சிகள்

    பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி அரசு இன்று காலை 11.30 மணிக்கு தனது முதல் அமைச்சரவை விரிவாக்கத்தைக் காணவுள்ளது.

    தெலுங்கானா அரசு’ இன்று மாநிலம் முழுவதும் ‘தெலுங்கானா ராஷ்ட்ர சமூஹிக ஜதீய கீதா ஆலாபனா’ (தேசிய கீதத்தை வெகுஜனமாகப் பாடுதல்) நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

    வேலைவாய்ப்பு தொடர்பான தேசிய கொள்கையை வலியுறுத்தி டெல்லியில் பல சிவில் சமூக அமைப்புகள் திரங்கா அணிவகுப்பை நடத்தவுள்ளன.

    முதல் கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீக் 16 வயதுக்குட்பட்டோர்’ புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் ஆகஸ்ட் 16-23 தேதிகளில் நடைபெற உள்ளது.

    ஆசியாவின் பழமையான கால்பந்து போட்டியான டுராண்ட் கோப்பையின் 131வது பதிப்பு கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    பார்சி சமூகம் ஆகஸ்ட் 16 அன்று பார்சி புத்தாண்டைக் கொண்டாடுகிறது, இது நவ்ரோஸ் என்று அழைக்கப்படுகிறது, இது ஜோராஸ்ட்ரிய நாட்காட்டியின் முதல் நாளைக் குறிக்கிறது.



  • 09:03 (IST) 16 Aug 2022
    இலங்கை துறைமுகம் வந்த சீன உளவுக் கப்பல்

    இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி, சீன உளவுக் கப்பல் 'யுவான் வாங் 5' இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் சென்றடைந்தது.



  • 08:31 (IST) 16 Aug 2022
    முக்கிய குற்றவாளி கைது

    சென்னை, அரும்பாக்கம் வங்கியில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சூர்யாவை காவல்துறை கைது செய்தது.



  • 08:24 (IST) 16 Aug 2022
    மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

    மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம், இன்று டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூற உள்ளார்.

    பின்னர், பிரதமர் மோடியை சந்தித்து, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார.



  • 08:24 (IST) 16 Aug 2022
    தரவரிசைப் பட்டியல் வெளியீடு

    தமிழகத்தில் 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி இன்று காலை 10:30 மணிக்கு வெளியிடுகிறார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது.



  • 08:23 (IST) 16 Aug 2022
    இந்திய கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்

    விதிகளை மீறி செயல்பட்டதாக, அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து, ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியை இடமாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.



  • 08:23 (IST) 16 Aug 2022
    காலணி வீச்சு.. மேலும் 3 பெண்கள் கைது

    பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய வழக்கில், பாஜக மகளிர் அணியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி மற்றும் தெய்வானை என்ற 3 பெண்களை தனிப்படை காவல்துறை கைது செய்தது. ஏற்கெனவே 7 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.



  • Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment