Advertisment

News Highlights: அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு

தமிழக திரையரங்கில் 100 % இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
News Highlights: அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு

Tamil News : தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் ரூ.2,500 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருவாரூர் மன்னார்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்

Advertisment

சேலம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டதை தொடர்ந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீர் நெஞசுவலி காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக இருப்பதாக அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை முதல் வரும் 7ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என மாணவர்கள், பெற்றோர்களிடம் இன்று முதல், இந்த வாரம் இறுதி வரை கருத்துக்கேட்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 7-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Tamil Live Udates :  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.



























Highlights

    21:24 (IST)04 Jan 2021

    நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 96. 9 சதவீதத்தை எட்டியுள்ளது

    கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்திற்கும் அதிகமான கோவிட் நோயாளிகள் குணமடைந்திருப்பதை அடுத்து, நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 96. 9 சதவீதத்தை எட்டியுள்ளது

    20:09 (IST)04 Jan 2021

    ஜனவரி 16ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

    கோவிட்-19 காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்திருந்தது. இதனையனடுத்து, ஜனவரி .14ல் அவனியாபுரத்திலும், 15ல் பாலமேட்டிலும், 16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

    எருதுவிடும் நிகழ்ச்சியில் 150-பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். 50 சதவீத அளவிற்கே பார்வையாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    20:05 (IST)04 Jan 2021

    திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத அனுமதி - கடம்பூர் ராஜு

    திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

    19:38 (IST)04 Jan 2021

    அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் அறிவிப்பு

    பொங்கல் பண்டிகையையொட்டி சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    19:24 (IST)04 Jan 2021

    புதிய வகை கொரோனா தொற்றால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

    இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றால் இது வரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அனைத்து நபர்களும் மருத்துவ மையங்களில் உள்ள தனி அறைகளில் தொடர்புடைய மாநில அரசுகளால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் நெருங்கிய தொடர்புகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பயணம் செய்தவர்கள், குடும்ப தொடர்புகள் மற்றும் இதர நபர்களை கண்டறிவதற்காக விரிவான தொடர்பு கண்டறிதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதர மாதிரிகளின் வரிசைப்படுத்தலும் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தது.

    18:21 (IST)04 Jan 2021

    சாபத்தில் நம்பிக்கை இல்லை ஆனால், கோபத்தில் நம்பிக்கை உண்டு - கமல்ஹாசன்

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (58).பயிர்கள் சேதமானதால் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், "பிள்ளையார்நத்தம் விவசாயி நாராயணசாமியின் தற்கொலை உளம் நடுங்கச்செய்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விவசாயிகளின் நிலைமை இதுதான். சாகடிக்கப்படுவதை தற்கொலை என்றா சொல்வது? எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை ஆனால், கோபத்தில் நம்பிக்கை உண்டு. சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது" என்று பதிவிட்டார்.  

    18:16 (IST)04 Jan 2021

    அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 8ம் தேதி நடைபெறும்

    புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் - விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று புதுடெல்லியில் நடைபெற்ற 7-வது சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.        

    18:10 (IST)04 Jan 2021

    கடந்த 11 நாட்களில் மட்டும் ஒரு கோடி கொவிட் பரிசோதனைகள்

    கடந்த 11 நாட்களில் மட்டும் ஒரு கோடி கொவிட் பரிசோதனைகள்மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது . இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 17.5 கோடியைக் (17,56,35,761) கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,35,978 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன

    18:06 (IST)04 Jan 2021

    விசிக தேர்தல் பணிக்குழு நியமனம்

    எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குரிய அடிப்படையான தேர்தல் பணிகளை மேற்கொள்ள பணிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

     

    16:53 (IST)04 Jan 2021

    ரவிக்குமார் எம்.பி கோரிக்கை

    உலக அளவில் பின்பற்றப்படும் பரிசோதனைகள் முழுமையடைவதற்கு முன்பே கோவேக்ஸின் என்ற கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு பயன்பாட்டுக்கு அனுமதித்திருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதைத் தமிழ்நாட்டில் இப்போதைக்கு அனுமதிக்கமாட்டோம் எனத் தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.  

    16:21 (IST)04 Jan 2021

    மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.

    16:18 (IST)04 Jan 2021

    ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - ஸ்டாலின்

    ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. மூன்று வருடங்களாக அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இதுவரைக்கும் இல்லை.

    தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரின் மரணமே மர்மமாக உள்ளது. நான்கு மாதங்களில் நாம் ஆட்சிக்கு வரப் போகிறோம். வந்தவுடன் முதலில் இதனை விசாரித்து மக்கள் முன்னால் அவர்களை நிறுத்தி, சட்டரீதியான தண்டனை வாங்கித் தருவது தான் என்னுடைய முதல் வேலையாக இருக்கும். இந்த ஸ்டாலினுடைய முதல் வேலை அதுதான்.

    16:13 (IST)04 Jan 2021

    தடுப்பூசியை மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாமா? சு.வெங்கடேசன்

    இவ்வளவு அவசரமாக அறிவிக்கப்படும் தடுப்பூசியை மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாமா? என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.    

    16:11 (IST)04 Jan 2021

    திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி - முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் சிலம்பரசன்

    எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த, தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி என நடிகர் சிலம்பரசன் தெரிவித்தார்.   

    15:40 (IST)04 Jan 2021

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி

    கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ: “கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்த வாத்துகளை பரிசோதித்ததில் பறவைக் காய்ச்சல் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவ்த்துள்ளார்.

    15:00 (IST)04 Jan 2021

    எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: “எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜாதகம் சிறப்பாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

    14:54 (IST)04 Jan 2021

    கொரோனா தடுப்பூசி: வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

    கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் அத்தியாவசிய பணியாளர்களில் வழக்கறிஞர்களை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கறிஞர்களை சேர்க்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    14:44 (IST)04 Jan 2021

    குற்றாலம் அருவியில் குளிக்க தடை

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    14:42 (IST)04 Jan 2021

    தமிழக அரசியல் திரையுலகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது - ஹெச்.ராஜா

    பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா: “தமிழக அரசியல் திரையுலகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; தமிழ்நாட்டில் முட்டாள்கள் அதிகமாகி விட்டனர். திராவிடக் கட்சிகளால் இளைஞர்களின் மூளையில் அழுக்கு படிந்துள்ளது. இன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக பொய்ப்பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. சினிமா, நாடகங்கள் மூலம் பாஜகவின் கொள்கைகள், சித்தாந்தங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்; இதற்கு பாஜகவில் உள்ள திரையுலக பிரபலங்கள் உதவ வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

    14:41 (IST)04 Jan 2021

    ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு - தேசிய தேர்வு முகமை கடிதம்

    நாடு முழுவதும் ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு தேசிய தேர்வு முகமை கடிதம் சார்பில் கடிதம் எழுதியுள்ளது.

    14:39 (IST)04 Jan 2021

    அரசியல் சண்டையை அரசியல் ரீதியில் சந்திக்க வேண்டும் - நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

    அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, அரசியல் சண்டையை அரசியல் ரீதியில் சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    13:40 (IST)04 Jan 2021

    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவு; மருத்துவமனயில் அனுமதி

    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மேல்விஷாரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    13:03 (IST)04 Jan 2021

    ஜனவரி 20ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ: “திட்டமிட்டபடி ஜனவரி 20ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

    12:42 (IST)04 Jan 2021

    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    12:24 (IST)04 Jan 2021

    தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் திரையரங்கில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நடிகர் விஜய் மற்றும் சிம்பு ஆகியோா் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து திடீர் திருப்பமாக, தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

    11:36 (IST)04 Jan 2021

    என் ரசிகர்கள் விஜய் படத்தை பாருங்கள் - நடிகர் சிம்பு

    வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள மாஸ்டர், சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் ஆகிய படங்கள் ஒன்றாக வெளியாகும் நிலையில், என்படத்தை விஜய் ரசிகர்கள் பாருங்கள், எனது ரசிகர்கள் விஜய் படத்தை பாருங்கள் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

    11:33 (IST)04 Jan 2021

    விவசாயிகள் மீது வழக்குப்பதிவு - ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி

    டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில், ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பஞ்சாபில் 1,500 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது.

    11:30 (IST)04 Jan 2021

    விவசாயிகள் போராட்டத்தில் 60 விவசாயிகள் உயிரிழந்ததாக தகவல்

    வேளாண் சட்டத்திற்கு எதிரான டெல்லியில் நடைபெற்று வரும், போராட்டத்தில் இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழக்கிறார், இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

    11:26 (IST)04 Jan 2021

    திரைத்துறைக்கு விஜய் செய்யும் மரியாதை - நடிகர் சிம்பு

    பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள படம் மாஸ்டர். இந்த படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிட வேண்டும் என உறுதியாக இருந்தது, நடிகர் விஜய் திரைத்துறைக்கு செய்யும் மரியாதை என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

    11:18 (IST)04 Jan 2021

    தமிழ் மொழிக்கு அகாடமி - டெல்லி அரசுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு

    இந்திய தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவிய டெல்லி அரசை பாராட்டுகிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார் மேலும் மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா இருவருக்கும் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    உதவி ஆட்சியர், டி.எஸ்.பி., தீயணைப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவி ஆணையர் ஆகிய பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

    Tamil News Live Update
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment